bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 29 டிசம்பர், 2012



கமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ரூ.95 கோடி வரை செலவிட்டுள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 11-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் முன்பே தெரிவித்திருந்தார்.

இதற்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். கமல் இதற்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
எனினும், டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிடுவதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.
இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று, கமல் கூறியதாவது, விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ்  ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து,
suran
  சென்னையில் அவர் அளித்த பேட்டி: 
'ஏர்டெல்,சண் , ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன.
டி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
எங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.

கமலின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...