bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 5 ஏப்ரல், 2014


சனி, 5 ஏப்ரல், 2014

மிஸ்ஸாகி விட்டது





ஜெயலலிதாவை பற்றி இந்தியா முழுக்க பிரதமராகும் தகுதி உள்ளவர் என்ற பொய் பரப்பு செய்யப்படுகிறது.
உண்மையில் அவருக்கு அத்தகுதி உள்ளதா?என்று கொஞ்சம் அதை பரப்புகிறவர்கள் உட்கார்ந்து யோசித்தால் உடனேயே தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுவார்கள்.

suran

ஒரு கருத்தில் நிலையாக இருக்கும் பழக்கமே ஜெயாவுக்கு .கிடையாது அவர் அமைச்சர்களை நியமிப்பதும் தூக்கி விடுவதும் ஆதாரம்.அது மட்டுமல்ல மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியலை அவர் எப்போதாவது சரியாக அறிவித்து ள்ளாரா?இவ்வளவுக்கும் உளவுத்துறை ,கட்சியினர் இவற்றுக்கு மேலாக ஜாதகம் வைத்துத்தான பட்டியலையே தயாரிக்கிறார்.
அப்படியலின் லட்சணம் இரு நாட்களிலேயே அம்மணமாகி விடுகிறது.அவருக்கு தெரியாமலேயே பட்டியல் தயாரிக்கப்பட்டத்தாக ஊடகங்களின் சிங்கிகள் வேறு .
அதுமட்டுமல்ல நம்பகத்தன்மையும் துளியும் கிடையாது.திமுக கூட்டணி கட்சிகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ,அதிமுகவின் அணுகு முறையும் உலகறிந்த விடயம்.சமீபத்திய எடுத்துக்காட்டு மார்க்சைவிடவும்,லெனினை   கண்டுக்காமல் ஜெயலலி தாவை புகழ்ந்து பரணி பாடிய தா.பாண்டியன்,ஜி,ராமகிருஷ்ணன் கட்சியினரை காக்க வைத்து கழுத்தறு த்தது,[இன்னமும் தா.பாண்டியன் தங்களை சேர்க்காததால் ஜெயலலிதா பிரதமராவது எங்களை கூட்டணியில் சேர்க்காததால்  மிஸ்ஸாகி விட்டது என்று மேடையில் புலம்பியது தனி காமடி]கண்டிப்பாக நிறைவேற்ற வெண்டும் என்று இரண்டு தேர்தல் அறிக்கைகளில் வெளியான சேது சமுத்திரத் திட்டத்தை இன்று நிறைவேற்ற கே கூடாது தடுத்து நிறுத்துவேன் என்று மேடைதோறும் திட்டுவது.

suran

நிர்வாகத்திறமை என்று பார்த்தாலும் அதிலும் ஜெயலலிதா பூஜ்யம்தான்.அதற்கு மூண்றாண்டுகளாக கொஞ்சம் கூட சரிப்படுத்தப்படாத மின் தடை..ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்ட விலைவாசிகள்.பால் விலை உயர்வு.பேருந்துக் கட்டணம் உயர்வு.இவ்வுயர்வுகளை பட்ஜெட்டில் அறிவிக்காமால் அவ்வப்போது தன்னிச்சையாக உயர்த்தியது.
உயர்த்தக் காரணம் கருணாநிதி ஐந்து ஆண்டுகளாக உயர்த்தாததால் கருவூலமெ காலி.அரசை நடத்த இயலவில்லை என்பது அவரின் வாக்குமூலம்.அதற்கு தா.பா.இவ்விலைவாசி உயர்வுக்கு காரணம் கருணாநிதிதான் என்ற பக்கப்பாட்டு வேறு .
இலவச தொலைக்காட்சி வழங்கி வந்ததுடன் தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் பேருந்து ,மின் கட்டணங்கள் ,பால் விலை உயர்த்தாதது கருணாநிதியின் நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.அவர் ஆட்சியை விட்டு இற ங்கும் போது கருவூலம் பணத்துடன்தான் இருந்து.
ஆனால் இன்று?
அம்மா உணவகங்கள் நடத்த நிதி ஒதுக்கப் படவே இல்லை.இப்போது அந்தந்த மாநகராட்சிகள் செலவை தாக்குப் பிடிக்க முடியாமல் நடத்தி வருகிறது.மாநகராட்சி நிர்வாக செலவிற்கு நிதி இல்லாமால் தவிக்கிறது.குடி நீரை பத்து ரூபாய்க்கு விற்பது போக்குவரத்துக் கழகம் .அதற்கும் இதே நிலைதான் குடிநீர் விற்க ஆள் இல்லாமல் அலுவலர்க்களை பயன்படுத்தி நிர்வாக சீகெட்டில் உள்ளது.ஏற்கனவே போக்குவரத்துக் கழக நிர்வாக சிறப்பு உலகறிந்தது.
இவ்வளவு விலைவாசிகளை உயர்த்திய பின்னரும்,டாஸ்மாக் பணத்தை கொட்டியபோதும் கருவூலம் காலி.அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் தட்டுப்பாடு.இலவச மின் விசிறி போன்றவைகள்,மடிக்கணினி வழங்க பணம் இல்லை.ஏற்கனவே மின்விசிறி,மிக்சி,கிரைண்டர் வழங்கிய நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கப்பட வில்லை.பாக்கி.அவர்கள் மேலும் தயாரிக்க மறுப்பு என்று செய்திகள் அவரை ஆதரிக்கும் ஊடகங்களிலேயே வருகிறது.இவை எல்லாமும் முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.அது மட்டுமல்ல தொடர்ந்து அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கு கடை பிடிப்பதால் காவிரி நீர் முதல் முல்லைப்பெரியார் வரை முட்டல்  மோதல்கள்.
இவையே பிரதமரானால் பாகிஸ்தான்,சீனா என்று இருக்கும். 
அமைச்சரவை மாற்றங்கள் சொல்லவே வேண்டாம் .
காலில் விழாத அமைச்சர் சரத் பவரோ ,பருக அப்துல்லாவோ நிச்சயம் மாற்றம் என்றால் அமைச்சரவை நடப்பு என்ன ஆக்கத்தில் இருக்கும் ,நிர்வாகம் எப்படி இருக்கும்,
suran
போயஸ் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு கோட்டைக்கு சென்று அறையிலேயே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கொப்புகளை பார்த்து விட்டு [இவை அனைத்துமே குளிர் சாதன வசதியில் நடக்கிறது.]ஒரு மாதமானதும் கோட நாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையாருக்கு டெல்லி பணிகள் எப்படி இருக்கும்.

இங்காவது தமிழ் நாட்டு பிரச்னைகள் மட்டும்தான்.அங்கோ இந்தியாவில் உள்ள அனைத்துப் பிரச்னைகளும் தாண்டி உலக நடப்புகளும் உண்டு.அம்மா உடல் நிலை  என்ன ஆகும்?.இங்கோ திமுகவுக்குத்தான் பதில் சொல்ல வேண்டும் .அதையும் இங்குள்ள ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.ஆனால் அங்கோ ...?அங்கு உட்கார்ந்ததும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறந்து விட்டு விடுவாரா/முல்லைப்பெரியாரை தமிழகத்திற்கு தாரை வார்த்து விடுவாரா?சேது சமுத்திரம் போன்ற ஒரு திட்டத் திற்கே ஒரு நாளுக்கு ஒன்று பேசுபவர் எத்தனை திட்டங்களை எதிர் கொள்ள வேண்டும் ,
சரி.இன்னமும்  ஜெயலலிதா பிரதமர் பொறுப்புக்கு தகுதியானவர் என்று நினக்கிறீர் களா? சொல்லுகிறீகளா?உங்களை திருத்தவே முடியாது.அதிமுக காரனே  இப்போது  அம்மாதான் பிரதமர் என்று சொல்லுவதை விட்டு விட்டான்.தா.பாண்டியன் மட்டும்தான் ஆங்காங்கே "ஜஸ்ட் மிஸ்ட் "என்று சொல்லி வருகிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியல்வா [ வியா]திகள்
"மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி ஈழத்தை ஆதரிக்க மாட்டோம். ஒரு தேசிய கட்சி பிரிவினையை எப்படி ஆதரிக்க முடியும்? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை என்று கூறியுள்ளார் பாஜக தலைவர்களில் ஒருவராகிய வெங்கையா நாயுடு
.ஆனால், அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, பாமக அந்த கூட்டணி அமைய தரகுவேலை பார்த்த தமிழருவி மணியன் போன்றவர்கள் தனி ஈழம் ஒன்றுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும் என்று கூறி வருகின்றனர்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் “தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு- பொது வாக்கெடுப்பு தேவை” என்ற தலைப்பில் தமிழ் ஈழம் என்ற லட்சிய நோக்கத்தை நிறைவேற்ற ஐ.நா. மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்திட இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மறுமலர்ச்சி திமுக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தமிழ் ஈழத்தை ஆதரிக்க மாட்டோம் என்கிறார்.
ஆனால், மோடி அலை வீசுகிறது. அடுத்தபிரதமர் மோடிதான் என்று வீதிவீதியாக முழங்கி வரும் வைகோ தமிழ் ஈழம் அமைய இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என்கிறார்.
தப்பி தவறி மோடி பிரதமர் ஆகிவிட்டால், அவர் வெங்கையா நாயுடுபேச்சைக் கேட்பாரா? அல்லது வைகோ பேச்சைக் கேட்பாரா?மோடி பிரதமரானால் தனி ஈழத்தை பெற்றுத் தருவார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். அவ்வாறு வாங்கித் தருவதாக அன்புமணியிடம் மோடி வாக்குறுதி எதுவும் அளித்துள்ளாரா?
அது வெங்கையா நாயுடுவுக்கு தெரியாதா?தில்லி வழக்கறிஞர் மாநாட்டில் மோடியை வைத்துக் கொண்டு பேசிய வைகோ, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை. அதே அணுகுமுறையை மோடியும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார். ஆனால், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சுகன்யா என்ற போர்க்கப்பலை இலங்கைக்கு வாஜ்பாய் கொடுத்ததாக தி.க. தலைவர் கி.வீரமணி சுட்டிக்காட்டியுள்ளார்.(ஜூனியர் விகடன்) இதே அணுகுமுறையைத்தான் மோடியும் பின்பற்ற வேண்டுமென வைகோ கூறுகிறாரா?
suran
சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர நான் தான் காரணம் என்று வைகோ ஊர் ஊராகச் சென்று முழக்கமிட்டார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளதாக மாற்றிப் பேசுகிறார். ஏன் இந்த தடுமாற்றம்? பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்று பேசிய பாஜக தலைவர் எச். ராஜாவை வைகோ கண்டிக்கவில்லை. மோடி என்ற அலையில் தமிழகத்தின் குப்பை கூளங்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிடும் என்று வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் போன்றோர்களை மனதில் வைத்து பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியசாமியையும் இவர்கள் யாரும் கண்டிக்கவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தன்மானம், சுயமரியாதை என்பதையெல்லாம் ஒட்டுமொத்தமாக எடைக்குப் போட்டுவிட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்றுவிட்டார்கள் போலிருக்கிறது.
இந்த வைகோ ,தமிழருவி போன்ற அரசியல் வியாதிகளுக்கு கருணாநிதியை ஈழப் பிரச்னையில் குற்றம் சொல்ல என்னத்குதி பாக்கி யிருக்கிறது.ஈழ மக்கள் இங்கு இப்போது நடக்கும் ஈழ வியாபாரிகள் அரசியலைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.காங்கிரசை எதிர்ப் பதாக கூறி வீணத் தமிழன் சீமானும் ஈழ எதிர்ப்பாளர்கள் மோடி கூட்டத்தையும் ,திடீர் ஈழத்தாய் ஜெயாவையும் ஆதரித்து பரப்புரை செய்கிறாராம்.
மொத்தத்தில் இந்த மூவெந்தர்களின் பிழைப்பு ஈழத்தை வைத்தும் கருணாநிதியை எதிர்த்தும்தான் .
அதை இங்குள்ள தமிழர்களும்,உலகமெங்கும் உள்ளத் தமிழர்களும் உணர்ந்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...