bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 11 மார்ச், 2016

வாக்கு வங்கி?



 10 ஆண்டுகளுக்கு முன், கேப்டனின் ரசிகராக இருந்த லட்சக்கணக்கான உறுப்பினர்களை நம்பித்தான், தே.மு.தி.க.,வை ஆரம்பித்தார் விஜயகாந்த். 
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக கட்சி இருக்கும் என சொன்னதோடு மட்டுமல்ல; தனித்துத் தான் போட்டியிடுவோம் என அறிவித்தார். 
 பல தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டவர், கடந்த சட்டசபை தேர்தலில், கூட்டணி என அறிவித்து, அ.தி.மு.க.,வுடன் சென்றார். '
 ஆனால், அ.தி.மு.க.,வை, மூன்றே மாதத்தில் பகைத்து வெளியேறினார். 
அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில், தனித்து களம் கண்டவர், மீண்டும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், தோல்வி மட்டுமல்ல; இருந்த ஓட்டு வங்கியிலும் கடும் சரிவு.
2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., 14 தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 84 சட்டசபை தொகுதிகள். இதில், ஒரு சட்டசபை தொகுதியிலும், அக்கட்சி முதலிடம் பெறவில்லை.ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டாம் இடமும்; 78ல், மூன்றாவது இடமும் பிடித்தது. 
பா.ம.க., எட்டு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. ஒன்றில் வெற்றி பெற்றது. எட்டு லோக்சபா தொகுதிகளில் அடங்கிய, 48 சட்டசபை தொகுதிகளில், 4ல் முதலிடம் பிடித்தது. 11ல், இரண்டாம் இடம்; 28ல், மூன்றாம் இடம்; 5ல், நான்காம் இடம் பெற்றது. கூட்டணிக்கு தலைமை ஏற்ற, தமிழக பா.ஜ., ஒன்பது லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் அடங்கிய, 54 சட்டசபை தொகுதிகளில், 7ல், முதலிடம்; 16ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
ம.தி.மு.க., ஏழு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டது; அதாவது, 42 சட்டசபை தொகுதிகள். அதில், 11ல், இரண்டாம் இடம்; 31ல், மூன்றாம் இடம் பெற்றது.
அந்த தேர்தலில், பா.ஜ., அணியில் போட்டியிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதிகளில் முதலிடத்தை பிடிப்பதில், பா.ஜ., - பா.ம.க.,வை விட, தே.மு.தி.க., பின்தங்கி இருந்ததையே, இம்முடிவுகள் காட்டுகின்றன.
2014 மக்களவை ஓட்டு சதவீதம்
பா.ஜ.,  5.48
தே.மு.தி.க.,  5.13
பா.ம.க.,      -       4.45
ம.தி.மு.க.,  3.50
இனி விஜயகாந்த் கட்சியில் வேட்பாளராக நிற்க பணம் கட்டிய ஒருவரின் புலம்பல்.
"2016 சட்டசபை தேர்தலில் 'கேப்டன் இப்படி காலை வாருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 'தனித்து போட்டி' என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், நாங்கள் விருப்ப மனு கொடுத்திருக்கவே மாட்டோம்; அதைத் தொடர்ந்து கட்சித் தலைமை கேட்ட பணத்தையும் கொடுத்திருக்க மாட்டோம்' என, தே.மு.தி.க., சார்பில், நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் அனைவரும் புலம்புகின்றனர்.
எப்படியும், தி.மு.க., கூட்டணியில் தான் இணைவார் என எதிர்பார்த்ததோடு, அவரிடம் நேர்காணலுக்கு சென்ற கட்சியினர் அனைவரும், 'தி.மு.க., கூட்டணி தான் வேண்டும்' என, தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டோம். 
'நல்ல முடிவாக எடுப்பேன்' என்று சொன்னார். அதை நம்பினோம்; உடனே, தேர்தல் செலவுக்கென்று, கட்சியில் விருப்ப மனு போட்டவர்களிடம், 25 முதல், 50 லட்சங்களை கட்ட சொல்லி,தலைமை வற்புறுத்தியது. 
'தி.மு.க., கூட்டணி வந்து விடும்; சீட் கிடைத்தால் வெற்றி கிட்டிவிடும்' என, பணம் கட்டினோம். இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய், தலைமைக்கு கிடைத்து விட்டது. 

ஆனால், வழக்கம் போல குழப்பமாக முடிவெடுத்து விட்டார். பழையபடியே தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 
தி.மு.க., தரப்பையும், பா.ஜ., தரப்பையும் ரகசியமாக சந்தித்த விஜயகாந்த் குடும்பத்தினர், அவர்களோடு தனித்து போட்டியிடுவது குறித்து தான் பேசினரா?
தனித்து தான் போட்டி என, முடிவெடுப்பதாக இருந்தால், அதைகட்சியினரிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா?
அப்படி சொல்லாததால் தானே, கட்சியினர் பலரும் விருப்ப மனு போட்டனர். விருப்ப மனுவுக்கு ஒரு தொகை என கிட்டத்தட்ட, 4,000 பேரிடம் வசூல் நடத்திய, தே.மு.தி.க., தலைமை, பின், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும், தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியது ஏன்?
இப்பவும் ஒன்றும் பிரச்னையில்லை.
விஜயகாந்த் நேர்மையாளராக இருந்தால், அவர் யாரிடம் இருந்தும் சல்லிக்காசு கூட வாங்குவது இல்லை என, அவரது மனைவி பிரேமலதா, ராயப்பேட்டை மகளிர் அணி பொதுக்கூட்டத்தில், 'முழங்கியது' போல, எங்களைப் போன்ற அப்பாவிகளிடம் இருந்து பெற்ற பணத்தை அவர், நியாயமாக திருப்பித் தர வேண்டும். 
ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்த் தலைவராக இருந்து கட்சி நடத்துவதற்கு, எங்களைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கட்சியினர், சொத்தை இழந்து, வீட்டை இழந்து, மனைவியின் தாலி செயினை விற்று கட்சிப் பணியாற்றி இருக்கிறோம்.

கடைசியாகக் கேட்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை பலரும், வீட்டை விற்றும் சொத்தை 
வழக்கம்போல, தன் பேச்சின் மூலம் மட்டுமல்ல; 
எதிர்கால திட்டத்திலும் விஜயகாந்த் குழப்பினால், விளையும் பலன், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும்.
எனவே, லட்சக்கணக்கான பணத்தை கொடுத்ததோடு, எதிர்காலத்தையே அடமானம் வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களை, விஜயகாந்த் காப்பாற்றப் போகிறாரா அல்லது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும், குழி தோண்டிப் புதைக்கப் போகிறாரா என்பது, அவரது தீர்க்கமான முடிவில் தான் உள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர் அல்லது புலம்பினர்.
ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவிடம் [அவர்தாமே கேப்டனை வழிநடத்துபவர்]சில குறுக்கு வழிகள் இருப்பதாக் கூறப்படுகிறது.
அதாவது தனித்துப் போட்டி என்று முறுக்கிக்கொண்டால் கூட்டணி பேச வரும் பாஜக,ம.ந.கூ க்களிடம் முதல்வர் பதவியையும்,அதிக இடங்களையும்,போதுமான கோடிகளையும் பெறலாம் என்பதுதான் அது.இதன் மூலம் த.மா .கா ,பச்ச முத்து கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணி யாக திமுக திட்டமிட்ட கூட்டனியை தனது தலைமையில் அமைத்து வெல்லலாம் என்பதுதான் அந்த வழி.
பிரேமலதா எதிர்பார்க்கும் கோடிகள் ம.ந.கூட்டணியில் கிடைக்காது .பாஜகவில் அது வசப்படும்.
எனவே விஜய் காந்த் கட்சியின் பந்தா இனி பாஜகவை நோக்கியே இருக்கும்.ஆனால் ம.ந.கூ வுடன் கள்ளத் தொடர்பும் இருக்கும் .
சரியான குழப்பமில்ல முடிவான முடிவை வேட்பு மனுத்தாக்கல் துவக்கத்தை ஒட்டித்தான் விஜயகாந்த் வாயால் பிரேமலதா சொல்லுவார்.
ஆனால் கோடிகளை கொட்டிக் கொடுக்கும் முன்னர் முன்னே குறிப்பிட்ட தேமுதிக வாக்கு வங்கி குறைந்துள்ளதை பாஜக சுட்டிக்காட்டவேண்டும்.
மேலே உள்ள வாக்கு வங்கிக் குறைவு 2014 நிலை அதன் பின்னரும் விஜயகாந்த் குழப்பங்களால் வாக்கு வங்கி மேலும் சரிந்துள்ளது.
அதைத்தான் தற்போது வரும் கருத்துக்கணிப்புகள் காட்டி வருகின்றன.
கீழே உள்ள படத்தையும் தேமுதிக கட்சித் தொண்டர்கள் நிலையையும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
இது ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஒருவர் தலையை சீவ ஆரம்பிக்கும் போது எடுத்த படம்.இடம் இல்லாததால் இங்கு வெளியாகியுள்ளது.
======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...