bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 9 நவம்பர், 2017

அண்டப்புளுகன் !

ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி!!
துணிந்து பொய்சொல்வது; அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது. உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முதன்மையான குணாம்சங்களில் சில.
பார்ப்பனர்களின் சூது-வாது குறித்து தனது ஆரிய மாயை நூலில் கீழ் வருமாறு எழுதுகிறார் அண்ணாதுரை.
அண்ணாவின் ஆரியமாயை
பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வண்கன நாதா போற்றி!
கொடுமை குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தாய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை இதோ,போற்றி! போற்றி!!
ஏத்தினேன் போற்றி! போற்றி!!
-அறிஞர் அண்ணாதுரை, ஆரிய மாயை.
பார்ப்பனியத்தின் புளுகுனித்தனங்களுக்கும் காவாலித்தனங்களுக்கும் எடுப்பான உதாரணங்களை அடுக்கி மாளாது. இந்த நூற்றாண்டை மட்டும் எடுத்துக் கொண்டாலும் கூட, செத்துப் போன பெரிய சங்கராச்சாரியில் துவங்கி இன்றைக்கும் உள்ள பெரிய மற்றும் சிறிய ஊத்தை வாயர்கள், சோ ராமசாமி என பட்டியல் அனுமார் வாலாக நீளும். சமீபத்திய உதாரணம் ஆர்.எஸ்.எஸ் “சித்தாந்தவாதி” எஸ்.குருமூர்த்தி.
சோ.ராமசாமி செத்துப் போனதை அடுத்து, அவரால் நடத்தப்பட்டு வந்த ’ஆண்மைக் குறைவு மருத்துவர்களின் விளம்பரங்களுக்கு மத்தியில், பார்ப்பனக் கொழுப்பைக் கடைபரப்பி விற்கும்’ துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் குருமூர்த்தி. கார்ப்பரேட் உலகில் கக்கத்தில் லெதர் பேக் வைத்துக் கொள்ளாமல் உலவும் புரோக்கராகவும் செயல்படுகிறவர். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் போட்ட புழுக்கைகளில் ஒன்றான “சுதேசி ஜாக்ரன் மன்ச்” அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் குப்பை கொட்டுகிறார்.

மேற்படி டிப்டாப் ஆசாமி இந்தியப் பொருளாதாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் விஞ்ஞான ஆய்வுகளை நடத்திக் களைத்துப் போன தருணங்களில். ட்விட்டரில் அவிழ்த்து விடும் பொய்கள் பிரசித்தமானது. பலரால் பலமுறை அவரது பொய்கள் சுட்டிக்காட்டப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட பின்னும் அந்தப் பொய்ச் செய்திகளை நீக்காமல் வைத்திருக்கும் குருமூர்த்தியின் நெஞ்சழுத்தம் மிகவும் பிரசித்தமானது. சமீப காலத்தில் மேற்படியாரின் புளுகுனி கீச்சுகள் குறித்து ஆல்ட் நியூஸ் இணையதளம் ஒரு சிறிய பட்டியலை வெளியிட்டுள்ளது. நமது வாசகர்களின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு வருகிறோம்.

  1. கடந்த நவம்பர் 2 -ம் தேதி அங்கோலாவில் இசுலாமிய மதம் தடைசெய்யப்பட்டு விட்டதாக ஒரு அண்டப்புளுகை பகிர்ந்த குருமூர்த்தி. இதற்கு இந்தியாவில் உள்ள தாராளவாதிகளின் எதிர்விணை என்னவாக இருக்குமோ? எனக் கேட்டிருந்தார். இந்த வதந்தி 2013 -ம் ஆண்டிலிருந்தே சுற்றில் இருந்து வருவது தான். இது உண்மையல்ல என்பதையும், வதந்தி என்பதையும் அம்பலப்படுத்தி இணையத்தில் பலர் எழுதிவிட்டனர்; பி.பி.சி இணையதளத்தில் இதற்காகத் தனியே கட்டுரையே வெளிவந்துள்ளது.
  1. அடுத்து அதே நவம்பர் 2 -ம் தேதி ராகுல் காந்தியின் வெட்டி ஒட்டப்பட்ட பேட்டி ஒன்றை வெளியிட்டு… இந்த வீடியோ மட்டும் உண்மையென்றால் இந்த நபர் காங்கிரசை அழித்தே விடுவார் என்றும், அப்படி ஒரு கட்சி இருப்பது தான் இந்தியாவின் இருகட்சி ஜனநாயகத்துக்கு நல்லது என்றும் முதலைக் கண்ணீர் விட்டிருந்தார். 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோக் காட்சியின் இறுதியில் தெளிவாக அது வெட்டி ஒட்டப்பட்டது தானென்பது தெரிகிறது.
  1. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 -ம் தேதி 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் -சிப் இருப்பதாக யாரோ ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி பகிர்ந்தார். பின்னர் அது பொய் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியபின், இப்போது வெளியாகி உள்ள 2000 ரூபாய் நோட்டில் அந்த வசதி இல்லை தான்.. ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போகிறார்களாக்கும் என அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டார்.
  1. அடுத்து கடந்த ஜூன் பத்தாம் தேதி தான் மாட்டுக்கறி தின்பதில்லை என்றும். தனது தாயார் ஒரு இந்து என்றும் தனது தாயாரைப் பார்த்தே வளர்ந்ததாக் பசுவைத் தானும் தெய்வீக விலங்காக கருதுவதாகவும் ஏ.ஆர். ரகுமான் சொல்வதைப் போன்ற ஒரு செய்தியை வெளியிட்டார்.
  1. மேலே உள்ளவற்றைக் கூட ஏதோ ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இப்போது வருவது ஒரு பெசல் ஐட்டம். Theonion.com என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பகடி (Satire) இணையதளம். இவர்கள் பொதுக்கருத்தாக இருப்பதையோ அல்லது அந்தந்த சமயத்தில் பரபரப்பாக இருக்கும் ஏதாவது ஒரு செய்தியையோ எடுத்துக் கொண்டு அதைக் கிண்டல் செய்தோ அல்லது அந்த செய்தியைத் தலைகீழாக மாற்றியோ வெளியிடுவார்கள். சமீபத்தில் அந்த இணையதளம் “பண்டைய கிரேக்கர்கள் என்பவர்கள் சும்மா கற்பனை” என ஒரு விவாதத்தை வெளியிட்டிருந்தனர். நம்ம ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி அதையும் துணிந்து பகிர்ந்துள்ளார்.
இதையெல்லாம் தெரியாமலோ அறியாமலோ செய்யவில்லை; மாறாக தவறு என்று நன்றாகத் தெரிந்திருந்தும் துணிந்து வெளியிடுகிறார் குருமூர்த்தி. ஒவ்வொரு முறை அவர் பொய்யான செய்திகளை வெளியிடும் போதும் பொதுவானவர்கள் அதைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. என்றாலும், தன்னை ட்விட்டரில் தொடரும் ஆர்.எஸ்,எஸ் கும்பல் மாங்கா மடையர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள குருமூர்த்தி, தொடர்ந்து புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்.
கட்சிக்குள் இந்த லட்சணத்தில் ஆட்களை வைத்துக் கொண்டுதான் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தாமல் தன் ஆவி போகாது என அக்கா தமிழிசை சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.
நன்றி:வினவு 
மேலும் :
  • The curious case of S Gurumurthy and Hoaxes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...