bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 2 ஏப்ரல், 2018

சாமியே காணாமல் போனால்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம்  தங்கள் தீர்ப்பில் உள்ள "ஸ்கீம் " கும் பொருள் கூறியுள்ளது .
அவர்கள் கூறிய பொருள் மேலும் மத்திய அரசை கால அவகாசம் கேட்க வைக்கும் அளவில் குழப்பம் கொண்டதாகத்தான் உள்ளது.

பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .

எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.


ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


இதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம்.பிடிலுக்குப் பதில் ?


 காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல.  பல கோணங்களில் தீர்க்கும் வகையில் பொருள் கொள்ளலாம் என்று  ஆக்ஸ்போர்ட் அகராதியில் உள்ள 'ஸ்கீம்' க்கான அணைத்து  விளக்கத்தையும் கூறி (?) மேலும் குட்டையை குழப்பி விட்டுள்ளது.

"காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். " என்று கூறி வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இதை சொல்லியே மோடி,எடப்பாடி ஆகியோரின் தமிழக விரோத அரசுகள் இன்னும் சில காலம் இளைப்பாறி விடும்.

பள்ளிக்குழந்தைகள் 


பாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.

ஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..?

காணாமல் போன அமைதியைத்தேடி கோவிலுக்கு செல்கிறோம் அங்கு உள்ள சாமி சிலையே அமெரிக்காவுக்கு விற்பனையானால் நமக்கு மட்டுமல்ல அந்த சாமிக்கும் குறைகளைக்  களைவது யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...