bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 19 செப்டம்பர், 2011

மூளைக் கோளாறு மாற்றும் மூலிகை.


சர்பகந்தி
 

சம்ஹிதாவில் இதனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஐரோப்பாவில் இதனுடைய பயன் 1785 ஆம் ஆண்டில்தான் தெரிய வந்தது. சர்பகந்தியின் திறன் 1946-ம் ஆண்டிற்குப் பின்னரே நவீன மருத்துவத்தில் பரவ ஆரம்பித்தது. இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம் பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இந்தியாவில் பஞ்சாப், சிக்கிம், பூடான், அஸ்ஸாம் மற்றும் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கிறது.

சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கி வளரும். அதிக குளிரும், அதிக மழையும் இத்தாவரத்திற்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப்பிரியும்.பதினெட்டு மாதங்கள் வளர்ந்த தாவரங்களின் வேர் மருத்துவ பயனுக்காக தோண்டி எடுக்கப்படுகிறது. புதர்செடியான சர்ப்பகந்தாவின் இலைகளும் வேரும் மருத்துவப் பயன் கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருள்

சர்பகந்தியின் மருத்துவ குணத்திற்கான அடிப்படை வேதிப்பொருள் ஒரு இன்டோல் ஆல்கலாய்டு ஆகும். இதனை ரெசர்பைன் என்றும் அழைக்கின்றனர். இத்துடன் அஜ்மலிசைன், டெசர்பிடைன், ரெஸ்சின்னமைன் மற்றும் செர்பென்டைன் ஆகியவையும் உள்ளன. இவற்றுக்கும் ரெசர்பைன் பண்புகள் உள்ள போதிலும் அதைவிட குறைவான செயலாற்றல் கொண்டவை. பக்க விளைவுகள் இல்லாத அரிய மருந்து ரெசர்பைன் ஆகும்.

நரம்பு நோய்களை குணமாக்கும்

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மக்கட் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.

சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய்,மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

ஆப்பிரிக்க மருத்துவத்தில், மேற்கு ஆப்ரிக்காவில் காணப்படும் சிற்றினமான, Rauvolfia vomitoria எனும் தாவரம் தூக்கம் தரும் மருந்தாகவும், பால் உணர்வு தூண்டுவியாகவும், மற்றும் வலிப்பு எதிர்ப்பானாகவும் பயன்படுத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...