bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 21 செப்டம்பர், 2013

"ஜெ " [‘இந்திய ] சினிமா 100’ விழா


suran

ஜெ தலைமையில் நடைபெறும் ‘இந்திய சினிமா 100’ விழா பற்றி தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்- இயக்குநர் பீ.லெனின்.
“கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்து விட முடியுமா? 
இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை. 

அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார். 
ான், பாலு மகேந்திர உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார். தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ்சினிமா மறந்து போனது? சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான “பராசக்தி”, திரைப்படம் எங்கே போனது? கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை. கலைஞரின் மூலமே சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்த வித்தக கவிஞர் என்கிற பா.விஜய் இந்நேரம் எங்கே போனார்? அப்துல் ரகுமான், வைரமுத்து, என்று ஒரு பெரிய பட்டாளமே கலைஞரால்தான் இங்கே நிலையான இடத்தை அடைந்தது. கலைஞரின் படத்தை திரையிடாதது கண்டு ஏன் இவர்கள் வெகுண்டெழவில்லை?”
திரை உலக நூற்றாண்டு விழா அம்மா புகழ் பாடும் விழாவாகத்தான் நடக்கிறது.சும்மாவா மக்கள் வரிப்பணத்தில் 10 கோடிகளை அன்பளிப்பாக [?]வழங்கியிருக்கிறாரே.
பராசக்தி மூலம் புராணப் படங்கள் ,பாடல்களுக்காகவே திரைப்படம் என்றிருந்ததை தனது வசனத்தின் மூலம் புதிய வழியை ஏற்படுத்திய கலைஞர் கருணாநிதி,கிராமத்து மின்னலை திரையில் கொணர்ந்து ஸ் டுடியோ க்களில் முடங்கிக் கிடந்த படப்பிடிப்புகளை கிராமங்களில் வர வைத்த பாரதிராஜா,பாலுமகேந்திரா ,பாக்கியராஜ்,விஜய்காந்த்,விஜய் போன்றோர்களின் பங்கேற்பை தவிர்த்த விழா நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படாத ஜெ ஆதரவு மாநாடுதான் .இந்த திரைப்பட நூற்றாண்டு விழா க் குழு நிச்சயம் அடிமைகளின் குழு வாகத்தான் உள்ளது.ஜெயலலிதாவுக்கு பிடித்தவர்,பிடிக்காதவர் என பாகுபடுத்தும் விழா திரையுலக நூற்றாண்டு விழாவாகவே கருத்தப்பட முடியாது.
முதல்வர் ஜெயலலிதா விழாவுக்கு வரும்  தவிர்த்து இவர்களை பெருமைப்படுத்தலாமே.இவர்களை அழைக்காமல் தவிர்க்கும் விழாக்குழுவினர் நிச்சயம் கொத்தடி மைகள்தான்.

கலைஞர்  வசனம் பேசித்தான் திரை உலகில் ஆர்வத்துடன் வந்ததாகக் கூறும் அல்லது கூறிய கமல்ஹாசன் போன்றோர் இது போன்ற சார்பு விழாவில் கலந்து கொள்வது இருக்கட்டும்.இது போன்ற மீறல்களை மேடையில் கூறுவார்களா?
கலைஞர் காலத்தில் நடந்த விழாவில் தகிரியமாக பேசிய அசி த் அதற்கு கைதட்டி பாராட்டிய ஆண்மை ரசினி இந்த விழாவில் இருக்குமிடம் தெரியும்படி இது போன்ற குறைகளை தகிரியமாக பேசுவார்களா?
[பேசினால் கருணாநிதி போல் ஜெயா சும்மா இருப்பாரா?ஆரம்பத்துக்கு கட்ட காலம் ஆரம்பமாகிவிடாதா?]
--------------------------------------------------------------------------------------------------------------
போபால் கொலைகாரனை கையூட்டு வாங்கிக்கொண்டு தப்பவிட்ட ராஜீவ் கட்சியினர் அமெரிக்க அணு உலை க்காரர்களிடமும் இழப்பீடை வாங்க இயலாதவாறு ஒப்பந்தம் போடுவதில் என்ன வியப்பு இருக்கிறது?
அவர்களுக்கு தேவை டாலர்களில் சுவிஸ் வங்கி கணக்கு அதிகரிப்பதுதானே ஒழிய இந்திய அப்பாவி வாக்களிக்கும் எந்திரங்களின் உயிர் பற்றிய கவலை அல்ல.!
அணுஉலை விபத்து இழப்பீடு விவகாரத்தில், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிவது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை அவமதிப்பதுடன், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரானது .
இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, இந்தியாவில் அணு மின்னுற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விஷயத்தில்,நாட்டின் நலனுக்கு எதிராகவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட இருப்பதாக சர்ச்சை மூண்டுள்ளது.
அணுமின் உற்பத்திக்காக, அயல்நாட்டு நிறுவனங்களின் கூட்டுடன் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் மின் நிறுவனத்திடமிருந்து அணு உலைகள் மற்றும் உதிரிபாகங்களை வாங்க, மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அணுமின் வாரிய நிறுவனம் (என்.பி.சி.ஐ.எல்.) ஒப்பந்தம் செய்துகொள்ளவுள்ளது.
suran


இதுபோல் அயல்நாட்டு நிறுவனங்களின் அணு உலைகள் இந்தியாவில் நிறுவப்பட்டு, அவற்றில் விபத்து ஏற்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய நஷ்டஈட்டை அணுஉலை மற்றும் உதிரிபாகங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்பதை, 2010-இல் கொண்டுவரப்பட்ட அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு உறுதி செய்கிறது.
இதனால், போபால் விஷவாயு சம்பவத்தைப்போல, இந்தியாவில் நிறுவப்படவிருக்கும் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நேர்ந்தால், அதற்குப் பெருமளவு நஷ்டஈட்டுத் தொகையைத் தர வேண்டுமே? என அமெரிக்க நிறுவனம் கவலைப்படுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஜி.ஈ. வாஹன்வதி, அணு விபத்து பொறுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவை செயல்படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பதை அணுமின்நிலையத்தை நடத்தும் இந்திய நிறுவனத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின்போது அணு விபத்து பொறுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலும், அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் வகையிலும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் என்.பி.சி.இ.எல். நிறுவனம் மேற்கொள்ளும் எந்தவோர் ஒப்பந்தமும், இந்தியச் சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என அணுசக்தித் துறை (டி.ஏ.இ.) வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக்குழு வரும் 24-ம் தேதி விவாதிக்கும் எனத் தெரிகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மருதநாயகம்  கமல்?
 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம்.

18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல்.
suran
அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.

ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல்.
இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கு! -விநோதம்!!-ஜெயலலிதா!!

கேள்வி :- ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங் அவர்களே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே திரும்பத் திரும்ப பல முயற்சிகளில் ஈடுபடுகிறாரே?

பதில் :- கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் 23-8-2013 அன்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், விசாரணையின்போது பின்பற்றப் பட வேண்டிய நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழக்கறிஞரை, அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப் பட்டது.
suran
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையில், அரசு வழக்கறிஞர் பதவி யிலிருந்து பவானி சிங்கை நீக்கிவிட்டதாக, கர்நாடக மாநிலச் சட்டத் துறைச் செயலாளர் நாகராஜா 25-8-2013 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் """"ரிட்"" மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சவுஹான் மற்றும் போப்படே ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றபோது, நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை நியமனம் செய்ய அனுமதி வழங்கியதுடன், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து, 7-9-2013 அன்று உத்தரவிட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு சார்பாக ஆஜராக வலியுறுத்த வேண்டாம் என்று 10-9-2013 அன்று கர்நாடக அரசு கூறியது. 
அதை எதிர்த்து ஜெ. தரப்பில் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் 11ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
 கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதி மன்றம் ஏற்று, பவானி சிங் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், சொத்துக் குவிப்பு வழக்கி லிருந்து வக்கீல் பவானி சிங்கை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒப்புதலோடு முறைப்படி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு மனுக்களை நேற்றையதினம் (18-9-2013) தாக்கல் செய்திருக்கிறார். 
அதாவது, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்றும், புதிய நீதிபதியை நியமிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும், பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்றும் ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.
நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு திரு. மல்லிகார்ஜுனய்யா அவர்களும், வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்த போது, அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும்
திரு. பாலகிருஷ்ணா அவர்களே தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்? அதுபோலவே அரசு வழக்கறிஞராக திரு. ஆச்சார்யா அவர்கள் பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்?
எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டு மென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூமி ‘உயிர் வாழும்’ காலம்  தெரியுமா?

 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது.

suran
 ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது:  பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்கள் பல வகையில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பூமி பற்றிய ஆய்வுகள் முடிவில்லாதவை. ஆனால், எங்கள் கண்டுபிடிப்புகள் பல கட்டங்களில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளன.

எங்கள் முந்தைய கணிப்பு படி, பூமி இன்னும் 325 கோடி ஆண்டுகள் வரை ‘உயிர் வாழும்’ தகுதி படைத்ததாக இருக்கும் என்று தான் மதிப்பிட்டிருந்தோம். ஆனால், வானிலை மாற்றங்கள் கடுமையாக மாறி வருகின்றன; கடல் மட்டம் மாறி வருகிறது; கடல் நீர் அதிவேகமாக நீராவி ஆகி வருகிறது. இப்படி பல வகையான வானிலையில் மிக மோசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால், பூமி ‘உயிர் வாழும்’ காலம் வெகுவேகமாக குறைந்து வருகிறது. அதாவது, எங்கள் இப்போதைய கணிப்பு 175 கோடி ஆண்டுகள் வரை பூமி ‘உயிர் வாழும்’ என்பது தான்.

ஆம், அதுவரை பூமியில், தண்ணீர் இருக்கும்; வெப்பம், மனிதர்களால் தாங்கும் அளவுக்கு இருக்கும். அதன் பின், வெப்பம் மிகவும் கொடூரமாக இருக்கும்.
; மனிதர்கள் பொசுங்கி போவர்; ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் அதிர்ச்சி தரும் வகையில் கோடிக்கணக்கில் மடிந்தும் மறைந்தும் விடும்.  அதனால் மாற்று இடம் தேடி தான் மக்கள் போக வேண்டியிருக்கும். சூரிய மண்டலத்துக்கு வெளியே கிட்டத்தட்ட ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மனிதர்கள் உட்பட உயிரினங்கள் உயிர் வாழ தகுதி இருக்கிறதா என்று ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

 செவ்வாய் உட்பட எட்டு கிரகங்கள் தான் உயிரினங்கள் உயிர் வாழ, வானிலை உட்பட  எல்லா வகையிலும் அருமையாக இருக்கும். அதில் மனிதர்கள் குடியேறலாம். மனிதர்களுக்கு ஏற்ற வகையில் செவ்வாய் உட்பட இந்த கிரகங்களில் இயற்கை வளங்கள், வசதிகள் இருக்கும். இவ்வாறு ஆன்ட்ரூ ரஷ்பி கூறினார்.
suran
* சூரியனின் காலம் இன்னும் 600 கோடி ஆண்டுகள்.
* சூரியனை வைத்து தான் மற்ற கிரகங்கள் உயிர் வாழுகின்றன. அதாவது, பல வகையிலும் உயிர் வாழும் தகுதிகளை படைத்துள்ளன.
* அப்படி பார்த்தால் செவ்வாய் தான் இப்போதைக்கு மனிதர்கள், மற்ற உயிரினங்கள் வாழ தகுதியாக உள்ளதாம்.
* மேலும், பூமிக்கு வெகு அருகாமையில் உள்ளதும் செவ்வாய் தான்.
* பூமி போலவே, வானிலை அருமையாக இருக்கும்; தண்ணீர் போன்ற வசதிகள் இருக்குமாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...