bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது.?

கடந்த வாரம் இரசாயன ஆயுதத்தாக்குதல் என கூறப்படும் குற்றச்சாட்டு கூற்றை அடுத்து அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிராகப் போரைத் தொடுக்க விரைவாக செயற்படுகின்றன. நாட்டை அடிபணிய வைப்பதற்கான ஏவுகணை தாக்குதல்கள் சில நாட்களுக்குள் தொடங்கலாம். மற்றொரு மக்கள் ஆதரவற்ற போரை மக்களை ஏற்கவைப்பதற்கு, செய்தி ஊடகத்தில் இருந்து வரும் பிரச்சார முயற்சிகள் அதிஉயர் வேகத்திற்கு திருப்பப்பட்டுவிட்டன.

நீண்ட காலத்திற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு, உடனடித் தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ காரணங்களாக, போலிக்காரணங்களினதும் மற்றும் ஆதாரமற்ற பொய்களின் ஒரு தொகுப்பு கொடுக்கப்படுகின்றன.
suran
இச்சமீபத்திய போருக்கான உண்மையான காரணங்களை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின், மற்றும் முழு உலக ஏகாதிபத்திய அமைப்பின் பூகோள-அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் தான் புரிந்து கொள்ள முடியும்.

முதலாவது: ஒரு பூகோள-அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, சிரியாவிற்கு எதிராக நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுள்ள போர், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர், தனது உலக மேலாதிக்கத்தை இராணுவ பலத்தின் மூலம் உறுதிப்படுத்த, வாஷிங்டனின் நடத்தும் பிரச்சாரத்தில் மற்றொரு நடவடிக்கை ஆகும். ஒருகாலத்தில் உலகப் பொருளாதாரத்தில் அது கொண்டிருந்த மேலாதிக்க நிலையின் நீடித்த சிதைவை எதிர்கொள்ளும் அமெரிக்கா, அதன் மேலாதிக்க நிலையை ஸ்தாபிக்க இராணுவ பலத்தை வழிவகையாகக் காண்கிறது. 1992 இன் ஆரம்பத்திலேயே பென்டகனுடைய பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி, அமெரிக்கக் கொள்கை, அமெரிக்காவிற்கு ஒத்த முறையில் போட்டி நாடாக எந்த சக்தி வெளிப்படுவதையும் தடுக்கும் நோக்கத்தை கொண்டது எனக் கூறியது. 2002ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்கா இதை அடையவதற்கு முன்கூட்டியே தாக்கும் போரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.

அமெரிக்க இராணுவவாதத்தின் உலக வெடிப்புத் தன்மையின் மத்திய கூறுபாடு, மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல், யூரேசிய நிலப்பகுதி முழுவதிலும் ஒரு மேலாதிக்க நிலையைப் பெறுவது என்னும் வாஷிங்டனின் உந்துதலாகும். சமீபத்திய ஆண்டுகளில் 19ம் நூற்றாண்டுக் கடைசி, மற்றும் 20ம் நூற்றாண்டு ஏகாதிபத்திய மூலோபாயவாதி சேர் ஹால்போர்ட் மக்கிண்டெருடைய (Sir Halford Mackinder) படைப்புக்கள் மீண்டும் அடிப்படை நூல்களாக வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் CIA இல் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான நூல்களாக ஆகிவிட்டன. ஏராளமான நூல்களிலும், கணக்கிலடங்காக உயர்கல்வி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலும், மக்கிண்டெரால், ஜேர்மனியின் கிழக்கு எல்லையில் இருந்து சீனாவின் மேற்கு எல்லை வரை பரந்துள்ள “உலகத் தீவு” என அழைக்கப்படுவது, அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகின்றது.

ஒரு சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துவதாவது: “யூரேசிய நிலப்பகுதிகள் மேற்கின் மூலோபாய முயற்சிகளின் கவனம்செலுத்தும் முனையாக இருக்க வேண்டும்… மேற்கத்தைய சரிவின் ஆரம்ப நிகழ்ச்சிப்போக்கு நிறுத்தப்பட்டுப் பின்நோக்கி திருப்ப வேண்டும் என்றால், யூரேசியாவின் பூகோள-அரசியல் முக்கியத்துவம் குறித்த நல்ல விளக்கம் தேவை. அதற்கான போராட்டமும், அதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமானது.” [ The World Island: Eurasian Geopolitics and the Fate of the West, by Alexandros Petersen] அனைத்து ஏகாதிபத்திய உலக மேலாதிக்க மூலோபாயங்களைப் போலவே இதிலும் அதை அடைவதற்குத் தடைகளாக உள்ளன எனக்கருதப்படும் சக்திகளுடனான போராட்டம் இன்றியமையாததாகிறது. யூரேசியாவின் மீது மேலாதிக்கம் என்பது ரஷ்யா, சீனாவுடனான மோதலாக தவிர்க்கமுடியாதபடி விரிவாக்கம் அடையும்.
suran
1990களில் இருந்து பால்கன்களில், மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எவரும் சவால் விடக்கூடாது எனக் கருதும் செயற்பட்டியலின் ஒரு பகுதி ஆகும். உலக மேலாதிக்கம் என்பது நூற்றுக்கணக்கான மில்லியன் உயிர்களைப் பறிக்கும் போர்களை நடத்தாமல் சாதிக்க முடியாது. ஒருவேளை அவை பூமியையே அழிப்பதாக இருந்தாலும் வாஷிங்டனை அதை நோக்கிச் செல்லும் உந்துதலில் இருந்து தடுக்கவில்லை.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்னும் இந்த மூலோபாயம் கிறுக்குத்தனமாக இருக்கலாம், ஆனால் அப்படித்தான் ஹிட்லரும் இருந்தார். அவருடைய பூகோள-அரசியல் நோக்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் சிறிய அளவு எனத் தோன்றும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியை முன்கூட்டிக் கண்ட ட்ரொட்ஸ்கி 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்: “ஜேர்மனிக்கு இது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும் பிரச்சினை’ ஆக இருந்தது. ஐக்கிய அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டும்.

ஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை, தற்போதைக்கு அவை தங்கள் சொந்த ஏகாதிபத்திய முனைவுகளை பென்டகனுடைய சிறந்த வருங்காலத்தில் பிணைத்துக் கொள்வதின் மூலம் அடைந்துவிடலாம் எனக் காண்கின்றன. அமெரிக்கப் போர்களின் கொள்ளையில் தாம் பங்கு பெறலாம் என அவை நம்புகின்றன. இந்த வழிவகையில் ஆபிரிக்காவில் பிரான்சின் போர்களைப்போல் தங்கள் சொந்த கொள்ளைச் செயல்களையும் நியாயப்படுத்துகின்றன.

இரண்டாவது: பொருளாதார ரீதியாக, உலக முதலாளித்துவம் அதன் பெருமந்த நிலைக்குப் பிந்தைய காலத்தில் ஐந்தாவது ஆண்டாக ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இது பொருளாதார தேக்கம், பரந்த வேலையின்மை, இடைவிடாத வாழ்க்கத்தர சரிவுகளை உருவாக்கியுள்ளது. அதிக நம்பிக்கையற்ற பொருளாதார நிலைமை, ஆழ்ந்த கடன்கள், மதிப்பிறக்கப்பட்ட நாணயங்கள், உக்கிரமான சர்வதேசப் போட்டிகள் மேலும் பொறுப்பற்ற மற்றும் வன்முறையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கின்றன.

1930களின் பெருமந்த நிலை இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நோய்களுக்கு தீர்வாக ஏகாதிபத்திய சக்திகள் போரை காண முற்பட்டன. 2008ல் தொடங்கிய பெருமந்த நிலை, குறையும் அடையாளத்தை இன்னும் காண்பிக்கவில்லை என்பதோடு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கிறது. உலக நிதியமயமாகுதல் நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடைய சமூகத்தின் ஒரு சிறு பிரிவின் செல்வக் கொழிப்பு, பெரும் அளவில் சூறையாடுதல் மூலம் சாதிக்கப்படும் பொருளாதார ஒட்டுண்ணித்தன வடிவங்கள் அதன் இயல்பான இணைப்பை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. அது அதன் இலக்குகளை குற்றம் சார்ந்த வன்முறை மூலம் அடைய முற்படுகிறது.
suran

குறிப்பாக பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா மற்றும் சீனா தடுப்பதிகாரங்களைக் கொண்டுள்ளதால், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையை ஒதுக்கித்தள்ளி ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல்கூட இல்லாமல் போருக்குத் தயாராகிறது. இவ்வகையில்தான் நாடுகளின் கழகம் (League of Nations) 1935ல் இத்தாலி  அபிசீனியா மீது படையெடுத்தபின் சரிந்து போயிற்று.

மூன்றாவது: அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எப்போதும் இல்லாத மோசமான சமூக நெருக்கடியை முகங்கொடுக்கின்றன. இவை வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் மக்களில் செல்வந்த 10 வீதத்தினர் கிட்டத்தட்ட நாட்டின் முக்கால் பகுதி செல்வத்தை உடமையாகக் கொண்டுள்ளனர். உயர்மட்ட 1 வீதத்தினர் அதில் பாதியை ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் இடையறாமல் தாக்கப்படுவதால் நகரங்கள் திவால்தன்மைக்கு தள்ளப்படுகின்றன.

ஐரோப்பாவில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே எழும் அழுத்தங்களால் ஐரோப்பிய ஒன்றியம் சிதைவுற்றுக் கொண்டிருக்கிறது. வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள் கிரேக்கத்தின் சமூக பேரழிவு மூலம் சித்தரிக்கப்படுகின்றது. பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கிடையே எவ்வளவிற்கு கசப்பான, அடக்க முடியாத மோதல்கள் இருக்கின்றனவோ அந்தளவிற்கு அவை இன்னும் அதிகமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு திரும்புகின்றன. அது ஒன்றுதான் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கொள்கையாகும்.

ஏகாதிபத்திய சக்திகள் பெருகிய முறையில், தங்கள் மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படுவதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக போரை காண்கின்றன. தற்போதைய போரின் நேரம், தெளிவாக எட்வார்ட் ஸ்னோவ்டேன் ஏராளமான, சட்டவிரோத ஒற்றாடல்கள் உளவுத்துறை அமைப்புக்களால் அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுடைய மக்களுக்கு எதிராக செய்யப்பட்டது வெளிப்படுத்தப்பட்டதால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடியுடன் தொடர்புபட்டது. ஏகாதிபத்திய இராணுவ வாதம், அத்துடன் பயனற்ற ஆனால் அழிவு தரும் போர் வழிவகைகளும் சமூக அழுத்தங்களை வெளிநோக்கி தள்ளிவிடும் அடிப்படை வழிவகையாக ஆளும் உயரடுக்கால் பார்க்கப்படுகிறது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை முதலாளித்துவத்தின்  திவாலில் இருந்து தப்பிக்கொள்ள இராணுவ வாதம் என்னும் சூதாட்ட மேசையில் வெற்றியைத்தான் நம்பியிருந்தன என்பதைக் கற்பிக்கிறது. ஆனால் இது பின்னர் வரலாறு அவர்களுக்கே எதிரானதாக போனதையும், அவர்கள் சில மோசமான பந்தயங்களை கட்டியிருந்தனர் என்பதையும் காட்டுகிறது.


ஈராக், ஆப்கானிஸ்தானிய போர்களைப் போன்றே, சிரியப் போரும் பெருமளவிலான இறப்புக்களையும் இடர்களையும் உருவாக்குவதுடன், உலகப் பொருளாதார, அரசியல் நெருக்கடியைத் தீவிரமாக்கி மனிதகுலத்தை பேரழிவிற்கு அருகே இட்டுச்செல்லும்.

மற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப்போரைத் தொடக்குதல் என்பது, அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்தன்மையை மட்டும் இல்லாமல் சுரண்டல், கொள்ளை அடித்தல் இவற்றைத் தளமாக கொண்டுள்ள முழு உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் திவால் தன்மையையும் காட்டுகிறது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குருதி கொட்டும் முட்டுச் சந்தில் இருந்து வெளியேற ஒரே வழி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் உலக சோசலிசப் புரட்சி வெற்றி அடைவதுதான்.
By David North and Alex Lantier
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...