bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 3 டிசம்பர், 2013

இந்தியா ஏழை நாடா?


உலக அளவு பணமுதலைகள் பட்டியலில் பிரிட்டன் ராணியாரையே தனது சொத்து மதிப்பின் மூலம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் ஏழை நாடு என்னும் களங்கத்தை இந்திய ராணியார் சோனியா துடைத்து ள்ளார்.
suran

 சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா 12 வது இடம்பெற்றுள்ளார்.
இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத் 18 வது  இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது.
இந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர்.

சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை பெற்றுள்ள பிரபலங்கள்

முதல் இடம் : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். (சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)

இரண்டாம் இடம் : தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் (சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,400 அமெரிக்க டாலர்கள்)

7ம் இடம் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் (சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,800 அமெரிக்க டாலர்கள்)

12ம் இடம் : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா (சொத்து மதிப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்,- தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,500 அமெரிக்க டாலர்கள்)
.

16ம் இடம் : சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் (சொத்து மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,000 அமெரிக்க டாலர்கள்)

18ம் இடம் : பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (சொத்து மதிப்பு 400 முதல் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 38,000 அமெரிக்க டாலர்கள்)

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சி தலைவர், பிரிட்டன் ராணி, ஓமன் சுல்தான், சிரியா அதிபர், குவைத் ஷேக் உள்ளிட்டவர்களை முந்தி, சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சோனியா 2 பில்லியன் டாலர்களில் சொத்தை எப்படி சம்பாதித்தார்.?
அவரை இந்த இடத்துக்கு கொண்டுவந்தது  நீங்கள்  தினசரி 35 ரூபாயில் வாழ்வு நடத்தக்கூறும் இந்திய மக்கள் தான் என்பதை இந்த மகிழ்வான நேரத்தில் நினைவு படுத்துகிறோம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று  நினைவுக்கு வரும் அன்றைய சோகம்.
மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும்நச்சு  வாயு 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி கசிந்தது.
போபாலில் விஷ வாயு கசிந்த துயரமான நாள் (டிச.3- 1984)
இதில் 3800 பேர் உடனடியாக மரணம் அடைந்தனர். இதன் பாதிப்பால் 6 ஆயிரத்திறக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.கும்பல்,கும்பலாக பிணங்களை எரித்தனர்.கிட்டத்தட்ட மற்றொரு நாகாசாகியாகத்தான் போபால் அன்று காணப்பட்டது.
இந்த படுகொலையில் ஆளை நிர்வாகம் கவனக்குறைவுதான் காரணம் என்று தெரிந்த பின்னரும் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் கார்பைடு முதலாளி வெளிநாட்டிற்கு தனி விமானம் மூலம் மக்களுக்கு தெரியாமல் தப்ப வைக்கப் பட்டார்.இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை நிவாரணமும் வழங்கப்பட் வில்லை.இன்றைக்கும் இதன் பாதிப்பால் பலர் ஊணமுற்றொர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று ஊனமுற்றோர் நாள் [டிசம்பர் -3]

1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.

பல நாடுகல் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோர்களின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன. அத்துடன், சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...