ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது
தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தத் தகவலை கூறிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே,
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம்
என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை அரசு தாக்கல்
செய்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டப் பிரிவு 377 குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல்
கூறும்போது," தனி நபரின் விருப்ப உரிமை காக்கப்படும் என நம்புவோம் "என்றார்.
பொதுவாகவே பாலுணர்வு அனைத்து மிருகங்களிடமும் [மனிதன் உட்[பட ]
உயிரிகளிடமும் உள்ளது.
ஓரின சேர்க்கை என்பது மன வியாதி,இயற்கைக்கு மாறானது.
ஆணுக்கு பெண்,பெண்ணுக்கு ஆண் என்று இயற்கையிலேயே உருவாக்கம்
எற்பட்டு அதற்காகவே பாலின கவர்ச்சியும் இருபாலாரிடமும் இயற்கையிலேயே உள்ளது.
அப்படி இருக்கையில் ஆணை-ஆணே ,பெண்ணை-பெண்ணெ பாலியல் விருப்புக்கு
உள்ளாக்கி உறவு கொள்வது என்பது இயற்கைக்கு மாறான செயல்தான்.
அது ஒரு மனப்பிறழ்வு .மன வியாதி.
பிறரை கொலை செய்யவதில் ,துன்புறுத்துவதில் மனம் மகிழும் சைக்கோ
வியாதிக் காரர்களுக்கும் இவர்களுக்கும் சிறு வித்தியாசமே உள்ளது.பிறருக்கு கிட்ட
தட்ட துன்பம் இராது.
ஆனால் அதை கூட உறுதியாக சொல்ல இயலாது.
ஊரினாஸ் சேர்க்கைக்கு உடன்படாதவர்களை தாக்கிய,கொலை செய்த வழக்குகள்
இந்தியாவில் அதிகம் உள்ளது.அசிங்கம் என்று வெளிவராதவைகளும் அதிகம் உள்ளது.அதை விட
கொடுமை கொடிய வியாதியாக இன்று உலகை பயமுறுத்தும் எயிட்ஸ் இந்த அளவு பரவ முக்கிய
காரணமே ஓரின சேர்க்கைதான் என்பது உலகறிந்த உண்மை.
இப்போதுள்ள நிலைமை :
இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில்
ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க இந்தச் சட்டத்தில் இடம்
இருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு நடந்து கொள்ளும்
விதம்தான் வேடிக்கையாகவும்-வேதனையாகவும் இருக்கிறது.
ஒரினச் சேர்க்கைக்கு ஆதரவாக ,உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து
சீராய்வு மனு தாக்கல் செய்கிறது சோனியா-மன்மோகன் அரசு.
இந்த விவகாரத்தில் அப்படி என்ன வேகம் இவர்களுக்கு.
போபாலில் உரிய இழப்பீடு கொடுக்காமல் யூ னியன் கார்பைடு
இழுத்தடிக்கிறது .அந்த வழக் கை தீவிரப்படுத்தி அதன் முதலாளிக்கு தண்டனை வாங்கியும்
போபால் பாதிப்பாளர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்று தரவும் வக்கற்று போன ஒரு அரசு
ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் அதிகப்படியான செயல் பாடு ஆட்சியாளர்களின்
நடவடிக்கைகளில் சந்தேகத்தை வரவைக்கிறது அல்லவா?
வாராவாரம் கூடுகின்ற பெட்ரோல் விலை உயர்வை கண்டு கொள்ளாமல் விலை
உயர்வை தனியாரிடம் தள்ளிவிட்ட மத்திய அரசு ,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு
இறக்கத்தை கட்டு படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்காத அரசு,சுவிஸ் வங்கியில்
கு விந்துள்ள கறுப்பு பணத்தை இந்தியா கொண்டு வர சட்ட நுணுக்கங்களை பயன் படுத்தாத
அரசு இதற்கு சட்ட ரீதியாக முனைப்பு காட்டுவது அவர்களுக்கு தனிப்பட்ட வகையில்
ஏதாவது பய ன் இருக்கலாம் என்றே எண்ண வைக்கும் அளவுக்கு கொண்டு செல்கிறது.
மத்திய அரசுக்கு நமது அறிவுரை சேராத இடம்தன் னில் சேர வேண்டாம்
என் பதே .
---------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நோக்கி பயணிக்கும் இந்திய
அரசு
ஆர். எஸ்.
துரைராஜ்,
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கித் துறையில் சில புதிய
விதி முறைகளையும், வழிகாட்டுதல்களையும் அறிவித்துள்ளது. இவை 2014ம் ஆண்டு ஜனவரி
முதல் அமல் படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த
புதிய அறிவிப்பின் படி, இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறு வனங்கள் குறைந்தபட்சம்
500 கோடி முதலு டன் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்படும்.
மேலும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியாவில் கிளைகள் தொடங்குவதற்கும், ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வங்கிகள் அதனை முழுவதும் தனதாக்கப்பட்ட துணை நிறுவனங்களாக மாற்றிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
இந்தத் துணை நிறுவனங்கள் இந்தியாவி லுள்ள மற்ற இந்திய வங்கிகள் போன்று அனைத்து சலுகைகளுடன் பணியாற்றுவதற் கும், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கிளை கள் தொடங்குவதற்கும் அனுமதிக்கப்படும். (ஒரு சில பிரத்தியேக இடங்களில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை). இவ்வங்கிகள் ஏற்கனவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகளை கையகப்படுத்தவும் அனுமதிக்கப்படும்.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள விவாதக் குறிப்பில் இந்திய வங்கி யில் அரசின் பங்கை 51 சதத்திற்கும் கீழே குறைக்கலாம் என்றும், சர்வதேச தரத்திற்கு இந்திய வங்கிகளை உயர்த்துவதற்காக வங்கி களை இணைக்க வேண்டும் என்றும் பரிந் துரைத்துள்ளது.
அரசின் இந்த அறிக்கை இந்தியப் பெரு முதலாளிகள் மக்கள் சேமிப்பை கையகப் படுத்தவும், வெளி நாட்டு வங்கிகள் இந்தியா வில் அதிக சுதந்திரத்துடன் நடமாடவும் வழி வகுக்கும்.
இந்த சூழ்நிலையில் நிதித் துறைக் கான நாடாளுமன்ற நிலைக்குழு நிறுவனங் களையும், வங்கிகளையும் தனித் தனியேதான பார்க்க வேண்டும் என்றும், பெரு நிறுவனங் கள் வங்கி துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.
விளைவுகள் என்ன?
* இந்தியப் பொருளாதாரத்தில் நிதித்துறை ஒரு மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்திய நிதித்துறையில் பொதுத்துறை வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இவை தேசிய பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், நம் நாடு சுய சார்பு எய்துவதற்கும் அடிப்படையாகும். வங்கிகளை தனியார்மயப்படுத்தும் அரசின் இம்முயற்சி இந்திய நிதித்துறையை உலக நிதி மூலதனத்தின் ஒரு பகுதியாக மாற்றும் நிலைக்குத் தள்ளி விடும்.
* வெளிநாட்டு வங்கிகளும், தனியார் பெரு நிறுவனங்களும் இந்தியாவில் வங்கிகளை அதிக அளவிற்கு செயல்பட அனுமதித் தால் அவை தற்போது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை “இணைப்பு, மற்றும் நிர்வாகக் கட்டுப்பாடு” என்ற முறையில் தனியார் வங்கியாக மாற்ற அரசு ஊக்குவிக்கும்.
*இத்தொழில் நிறுவனங்கள் மக்கள் சேமிப்பை தங்கள் நிறுவனத்தின் நலனுக் காகவே செயல்படுத்துவர். மக்களின் சேமிப் புக்கு எந்தவித பாதுகாப்பும் இருக்காது.
*வங்கி சேவையைப் பெற வாடிக்கை யாளர்கள் பெரும் செலவு செய்ய வேண்டி யிருக்கும்.
*மக்கள் சேமிப்பு ஒரு சில குறிப்பிட்ட தனி யார் கையில் சென்றால் அந்த உள்நாட்டு சேமிப்பை நாட்டின் வளர்ச்சிக்கு பயன் படுத்த முடியாத நிலை ஏற்படும்.
*இத்தகைய வங்கிகள் நம் நாட்டு வளர்ச் சிக்கு முக்கியமான விவசாயத் துறை மற் றும் சிறு தொழில் வளர்ச்சிக்கு கடன் வழங்க முன் வராமல், தனியார் முதலாளிகளுக்கு கடன் வழங்குவதற்கே அக்கறை காட்டும்.தேசியமயமும் தாராளமயமும்1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் தான் இந்திய வங்கிகள் ஒரு குறிப் பிட்ட முதலாளி வர்க்கத்திற்கான வங்கி என்ப திலிருந்து அனைவருக்குமான சமூக நலன் சார்ந்த வங்கியாக மாற்றப்பட்டது. தேசியமய மாக்கலுக்குப் பின்னர் தான் வங்கித் துறையில் மிகப்பெரிய அளவிற்கு விரிவாக்கம் ஏற்பட் டது.
கிராமப் புறங்களுக்கு வங்கி சேவையை பரப்புவதிலும், சிறு தொழில் வளர்ச்சிக்கான கடன் உதவி அளிப்பதிலும் தேசிய வங்கிகள் முக்கிய கவனம் செலுத்தி அது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்து வருகிறது.
1990ல் நவீன தாராளமயமாக்கல் கொள் கைகள் அமல்படுத்துவதற்கு முன்பு கிராமங் களில் 58 சதம் வங்கிக் கிளைகள் இருந்தன. 2011ல் இது 37 சதமாகக் குறைந்துள்ளது. வங்கிகளை அணுகுவதும், கடன் பெறுவதும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இன்னும் 80 சதம் கிராமத்து மக்கள் தங்கள் பணத் தேவைக்காக தனியார் வட்டிக்காரர் களை நம்பி இருக்கும் நிலையில் தான் உள்ள னர்.
கந்து வட்டிக் காரர்களிடம் கடன்பட்டு அதனால் ஏழைகள் படும் துயரங்களுக்கு பெருகி வரும் தற்கொலைகளே சாட்சியாகும்.
பின் நோக்கி பயணிக்கும் இந்திய அரசு
இந்தியாவில் பல தனியார் நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங் களை தொடங்கி மக்களின் சேமிப்புப் பணத் தை தங்கள் நிறுவனங்களின் சொந்த நலனுக் குப் பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள் ளையடித்ததன் விளைவாகத்தான் 1956ல் இன்சூரன்ஸ் துறையும், 1969ல் வங்கித் துறை யும் தேசியமயமாக்கப்பட்டன.
இதே காரணத் துக்காகத்தான் பல வளர்ந்த நாடுகளில் பெரு நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இன்று ரிசர்வ் வங்கி யின் அறிவிப்பிற்கு பிறகு வங்கிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள பல நிறு வனங்கள் ஏற்கனவே இப்படி பித்தலாட்டம் நடத்திய நிறுவனங்கள் தான். இந்த அனு பவத்தை மறந்துவிட்டு இந்திய அரசு பின் நோக்கி பயணிக்கும் செயலை செய்து வரு கிறது. அரசின் இந்த செயல்பாடு தேசியமயத் திற்கு முன்பிருந்த மோ
சமான நிலைக்கு இந் திய வங்கிகளை இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளது. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப் படுத்துவது உடனடி சாத்திய மான ஒன்றாக இல்லை. எனவேதான் பெரு நிறுவனங்கள் வங்கிகளை திறப்பதற்கு அனுமதி அளிப்பதும், வெளிநாட்டு வங்கி களுக்கு கதவுகள் அகலமாகத் திறந்துவிடப் படுவதும் நடக்கிறது.
இது பின்வாசல் வழியாக இந்திய வங்கித் துறையை தனியார்மயப் படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை.
அரசின் வாதம்
இந்தியாவில் நிதித் துறையை உள்ளடக் கியப் பொருளாதார வளர்ச்சியில் வங்கித் துறையை தனியார்மயப்படுத்துவது என்பது மிக முக்கியமானது என்று அரசு வாதிடுகிறது. ஒரு பெரும்பகுதி மக்கள் வங்கி நடவடிக் கைகள் பற்றி தெரியாமலே உள்ளனர். 40 சதத் திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.
பெண்களில் 25 சதம் பெண்களுக்கு மட்டுமே வங்கிக் கணக்கு உள்ளது. இந்தியாவில் உள்ள 650000 கிராமங் கள் 36000 கிராமங்களில் மட்டுமே வங்கிகள் உள்ளன. வங்கிகளை தனியார்மயப்படுத் தினால் போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டு இது வரை வங்கிகள் இல்லாத பகுதிகளுக்கும் வங்கிச் சேவைகள் விரிவுபடுத்தப்படும். இது “நிதி உள் ஈர்ப்புக்கு” மிகவும் தேவையான ஒன்று என்று அரசு வாதிடுகிறது. ஆனால், போட்டிச் சூழ்நிலை ஏற்பட்டா லும், தனியார் வங்கிகள் கிராமங்களுக்குச் செல்லாது என்பதற்கு இந்திய இன்சூரன்ஸ் துறையே சாட்சி.
போட்டி ஏற்பட்டால் இன் சூரன்ஸ் கிராமங்களுக்கெல்லாம் பரவும் என்று காரணம் சொல்லப்பட்டு தனியார் இன் சூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் அனு மதிக்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின் னரும் எந்த தனியார் நிறுவனமும் கிராமங் களுக்குச் செல்லவில்லை. இன்றும் கிராமத் திற்கு இன்சூரன்சை விரிவாக்கம் செய்து வருவது எல்ஐசி என்ற பொதுத்துறையே. மக்களின் நிதி சேகரிப்பு என்பது வரு மானம் மற்றும் சேமிப்பிற்காக மக்கள் ஒதுக்கும் தொகையைப் பொறுத்தது.
மக்களின் வரு மானத்தை உயர்த்தவும், வறுமையைப் போக்க வும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் நிதி ஈர்ப்பு பற்றி பேசுவது என்பது அந்தரத்தில் கோட்டை கட்டுவது போன்றதே. இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் இந்திய மக்களின் சேமிப்புத் தொகை உள்ளது. இதைப் பாது காக்க வேண்டுமென்றால், வங்கித் துறையின் கட்டுப்பாடு அரசின் கையில் இருப்பதே சரியாக இருக்கும்.
செய்ய வேண்டியது என்ன?
அனைவர் நலன்களையும் உள்ளடக்கிய நிதி ஏற்பாடு நாட்டு வளர்ச்சிக்குத் தேவை யான ஒன்றே என்பது உண்மை. அதனை அடைய :-
1. சாதாரண மக்களின் வருமானம் அதி கரிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு மற் றும் நிலையான வருமானம் மூலம் சேமிப் பினை அதிகரிக்க வேண்டும்.
2. வங்கிகளில் கணக்கு தொடங்கவும், கடன் பெறவும் ஏழைகளுக்கு வாய்ப்பும் வசதியும் வழங்கப்பட வேண்டும்.
3. பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ள கடன் தொகையை வசூ லிக்க பிரத்தியேக ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. மக்களின் சேமிப்பு மீது அரசுக்கு அதிகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். அதுவே தேசிய வளர்ச்சிக்கு உதவும். இதை விட்டுவிட்டு பெரு நிறுவனங்கள் வங்கி தொடங்க அனுமதிப்பதும், வெளி நாட்டு வங்கிகளுக்கு பட்டு கம்பளம் விரிப்பதுமான அரசு நடவடிக்கை கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

கட்டுரையாளர் : துணைத்தலைவர், நெல்லை
கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக