bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 19 ஜனவரி, 2015

2014 உலகம். சின்ன பார்வை

உலகில் மூன்றாம் உலக நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளில் பசி, பட்டினி இறப்புகள் அதிகரித்து கொண்டிருக்க, மற்றொரு புறம் உலகளவில் வீணாகும் உணவுப்பொருட்களின் அளவுகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. 
  வீணாகும் உணவுப்பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 
இதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம். இல்லையெனில் ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் உணவுப்பொருட்கள் வீணாகிக் கொண்டிருக்கும்.
தொழில்வளம் பெருகிய நாடுகளில் நுகர்வு கலாசாரம் அதிகம் இருக்கிறது. அவர்கள் நுகவர்வதில் 30 சதவீதத்தை வீணடிக்கின்றனர். 
 இந்த 2014 ஆண்டு முடிவில் உணவு  பொருட்கள் வீணான கணக்கு அதிர வைக்கிறது.
உணவு உற்பதியில் 30% அதாவது  28.6 கோடி டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.
வீணாகும் தானியம் 76,300 கோடி பெட்டி பாஸ்தா[மேல் நாட்டு உண]வுக்கு சமம்.

உணவுப்பொருட்களில் அதிகம் வீணடிக்கப்படுவது பழங்கள், காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் தான். விளையும் காய்கறிகள், பழங்களில் ஏறக்குறைய பாதியை வீணடிக்கிறோம்.இது 3.7 லட்சம் கோடி ஆப்பிள்களுக்கு சமம்.
ஒவ்வொரு ஆண்டும் 22 சதவீதம் அளவுக்கு எண்ணெய் வித்துகளையும், பருப்பு வகைகளையும் வீணடிக்கிறோம்.வீணடிக்கும் எண்ணெய் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுத்தால் 11 ஆயிரம் நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

வட அமெரிக்கா மற்றும் ஓசானியா பகுதியில் 58 லட்சத்து 14 ஆயிரம் டன் கிழங்கு வகைகள் வீணடிக்கப்படுகின்றன.இது 100 கோடி உருளை கிழங்கு மூட்டைகளுக்கு சமம்.

ஐரோப்பாவில் மட்டும் 2.9 கோடி டன் பால்பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணடிக்கப்படுகின்றன.
இது 57 ஆயிரத்து 400 கோடி முட்டைகளுக்கு சமம்.

உலகளவில் 8 சதவீத இறந்த மற்றும் காயமடைந்த மீன்கள் மீண்டும் கடலிலேயே கொட்டப்படுகின்றன.

வீணடிக்கபடும் கடல் உணவுகள் 300 கோடி அட்லாண்டிக் சால்மோன் மீன்களுக்கு சமம்.

உலகளவில் ஆண்டுதோறும் 26.3 கோடி டன் இறைச்சி விற்பனைக்கு வருகின்றன. 
இதில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக வீணடிக்கப்படுகின்றன.
இது 7.5 கோடி மாடுகளுக்கு சமம்.

இப்படி வீணாகும் பொருட்கள் பணக்காரர்கள் வழங்கும் ஐந்து நட்சத்திர ஓட்டல் விருந்துகளில் மற்றும் வளர் நாடுகளில் பணக்கார மற்றும் மேல் தட்டு மக்களால்தான்,அவர்களின் ஆடம்பர விருந்துகளால்தான்  அதிக அளவில் உள்ளதாம்.
=======================================================================

2014 ம் ஆண்டு உலக திரைப்படங்கள் பற்றி சின்ன பார்வை.



ஆர்சினிக்கின் கதை!


ஆர்சினிக் நிலத்தடி நீரிலுள்ள விஷத் தன்மையுள்ள ஒரு பொருள் .

 இதன் விஷத்தன்மை காரணமாக வங்க தேசம், இந்தியாவிலும் வேறு சில நாடு களிலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். 

மனித வரலாறு மற்றும் பண்பாட்டுமாற்றங்களின் பல்வேறு கட்டங் களில் ஆர்சினிக்கும் அதன் கூட்டுப் பொருட்களும் முக்கியப் பங்கினை (அதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு) ஆற்றியிருக்கின்றன.

பாறைகள், மண், தண்ணீர், காற்று ஆகியவற்றில் இயற்கையிலேயே காணப் படும் தனிமங்களில் ஒன்றுதான் ஆர்சினிக்.
 குறிப்பாக, தீப்பற்றக்கூடிய - எளிதில் உருவமும் குணமும் மாறக்கூடிய பாறைகளில் ஆர்சினிக் அடங்கிய தாதுப்பொருட்கள் மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றன. 
ஆர்சினிக் இப்படிக் கிடைப்பது. பழங் கால மனிதர்களுக்கே தெரிந்திருந்தது. 

கி.மு. 4-ம் நூற்றாண்டிலேயே சான் டாரக் (ஆர்சினிக் ட்ரைசல்பைட்) என்றதாதுப்பொருளைப் பற்றி அரிஸ்டாட் டில் குறிப்பிடுகிறார்.
 எனினும், ஒரு தனிமமாக அது 13-ஆம் நூற்றாண்டில்தான் அடையாளம் காணப் பட்டது.
ஆர்சினிக் தயாரிப்பில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய தத்துவவியலாளர் ஆல் பெர்டஸ் மாக்னஸ், 17-ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த பிரான்ஸ் தேசத்து வேதியியலாளர் நிகோலாஸ் லெமெரி, ஜெர்மானிய மருத்துவர் ஜோஹன் ஷ்ரோடர் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. 

மரக்கரியை வைத்து ஆர்சினிக் ஆக்சைடை எரித்தால் ஆர்சி னிக் கிடைக்கிறது என்று ஜோஹன்ஷ்ரோடர் 1641-ல் தனது மருத்துவக் குறிப்பில் எழுதினார்.

18-ம் நூற்றாண்டில் ஆர்சினிக்கின் பல கூட்டுப் பொருட்கள் சோதனைச்சாலையில் தயாரிக்கப் பட்டன. 

அதன் பல்வேறு வேதியியல் குணங்களை மக்கள் அறியத் தொடங்கினர். மஞ்சள், கருப்பு, சாம்பல் நிறம் ஆகிய மூன்று வண்ணங்களில் அது கிடைத்தாலும் வெண்சாம்பல் வண்ணத்தில் எளிதில் உடையக்கூடிய, படிகப் பொருளாகக் கிடைக்கும் பொருளே ஸ்திரத் தன்மை உடையது. 

காற்றில் திறந்து வைத்திருந்தால் அதன் பிரகாசம் மங்கிவிடுகிறது.
மனிதர்களைக் கொல்லக் கூடிய விஷமாக கொலைகாரர்களால் ஆர்சினிக் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 
ஆர்சினிக்அடங்கிய கூட்டுப்பொருட்கள் அழகு சாதனப் பொருட்களாகவும் காயங்களை ஆற்றுவதற்கான மருந்து களாகவும் பழங்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டன. 
1860ஆம் ஆண்டி லிருந்து மிகப் பிரபலமான பூச்சிக்கொல்லி மருந்தாக ஆர்சினிக் பயன்படுத்தப்பட்டு வந்தது. னுனுகூயும் இயற்கை வேளாண் பூச்சி மருந்து களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதுநின்றது.

மானோசோடியம் மெதிலார்சனேட் போன்ற ஆர்சினிக் வேதிப்பொருட்கள் வயல்களில் பயிர்க ளுக்கு ஊடே வளரும் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. 

ஈயம்,தாமிரம் போன்றவற்றுடன் இணைத்துஉலோகக் கலவைகள் செய்யஆர்சினிக் உலோகம் பயன்படுத்தப் படுகிறது.

 அமில பாட்டரிகளில் சிறிதளவு ஆர்சினிக் சேர்ந்த ஈயம்-ஆன்ட்டிமனி உலோகக் கலவை பயன்படுகிறது.

 மிகச் சுத்தமான ஆர்சி னிக் மின்னணுத் துறையில் செமி கண்டக்டர்கள், எல்ஈடி பல்புகள் போன்றவற்றைச் செய்யப் பயன் படுகிறது.
1980-களில் மேற்கு வங்கத் தில் நிலத்தடிநீரில் இருந்த ஆர்சினிக்கின் காரணமாக தோல் புண்களும்நோய்களும் பரவியது கண்டுபிடிக் கப்பட்டது. 

70க்கும் மேலான நாடுகளில் உள்ள 13.7 கோடி மக்கள் குடிநீரில் உள்ள ஆர்சினிக்கின் விஷத்தன்மை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக 2007ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

 வங்கதேசம், இந்தியா, கம்போடியா, சீனா, நேபாளம்,பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு நாளும் 10 கோடிபேர் பாதிக்கப்படுவதாக ஒரு மதிப்பீடுகூறுகிறது. 

நிலத்தடி நீரை அளவுக்கதிக மாக உறிஞ்சி எடுப்பதின் காரணமா கவே நிலத்தடி நீர் இப்படி மாசு படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆர்சினிக் இல்லாத நிலத்தடி நீரைப் பெறுவதற்கான எளிமையான தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் தற்போது உருவாக்கியுள்ளதால் இப் பிரச் சனையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

"மம்மிகளை கதி வீச்சு மூலம் பரிசோதனை செய்ததில் ஆர்சனிக் போன்ற இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் உடலில் செலுத்தியோ அல்லது உடல்களை இவ்விரசாயனப் பொருட்களில் புதைத்தோ பதப்படுத்தியோ உடல்கல் பாதுகாக்கப்பட்டிருப்பதாக  ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "

.தீக்கதிரில் இருந்து.(நன்றி : 2014 அக்டோபர் ட்ரீம் 2047 இதழில் பிரதீப் குமார் சென்குப்தா எழுதிய கட்டுரை)
===========================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...