bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 18 பிப்ரவரி, 2015

முஸ்லிம் பத்திரிகையின் லொள்ளு?




நெதர்லாந்தில் இருந்து வெளிவரும் முஸ்லிம் பத்திரிகை ஒன்று ,
 "பாலியல் கவர்ச்சி" கொண்ட இறைதூதர் முகமது நபி என்று அது வர்ணிக்கும் முகமது நபியின் மற்றொரு பக்கமான அவரது பாலியல் கவர்ச்சி குறித்த ஒரு சிறப்பு பதிப்பை வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளது .
 ஒரே ஒரு முறை வெளியிடப்படவுள்ள பதிப்பு, பாரிஸில் சார்லி எப்தோ இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து இஸ்லாம் குறித்து பரவியிருக்கும் பொதுவான தவறான புரிதல்களை மாற்றும் நோக்கிலானது என்று அந்தப் பத்திரிகையில் பிரசுரகர்த்தர்கள் கூறுகின்றனர்.
முகமது  நபியின் ஆளுமை குறித்த மற்றுமொரு பகுதியை, அதாவது , அவரது பாலியல் கவர்ச்சியை, இந்த வழக்கத்துக்கு மாறான பதிப்பு வெளிக்கொண்டு வரும் என்று இந்தப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் , பிராஹிம் பூரிக் கூறுகிறார்.
"முஸ்லீம்கள், தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாத்தின் உண்மையான செய்தியை பற்றிய நல்ல புரிதலைத் தரவேண்டிய கடப்பாடு உண்டு.அதற்கு இந்த சிறப்பிதழ் உதவும்" என்று பூரிக் சொல்கி றார்.
இந்த பத்திரிகையின் இந்தச் சிறப்பிதழ் ரமலான் நோன்பு மாதத்தை ஒட்டி 2015ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று பத்திரிகையின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
நன்றி:பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...