மணற் துளிகளும்,
கடல் அலைகளும்
எண்ணிக்கையில் மோதின.
கரையோரம் மணற் துளிகள் கால்களை
அலைய நடந்த நான் இரண்டுமே சமம்
என்ற என் முடிவை கூறினேன்.
என்னால்தான் கடலோர மண் அழகு
என்னால்தான் கரையொதுங்கும்
அலையழகு .
மீண்டும் மோதல்.
நான் மவுனித்தேன்.
எதனால் எது அழகு?
முடிவு கரை காணா கடலானது.
அழகு என்பது யாதெனில்
காணும் பொருளின் வடிவமல்ல.
அதை உணரும் மனதின்
முடிவு.
பெண்ணுக்கு ஆணு அழகு.
ஆணுக்கோ பெண் அழகு.
ஆனால் இருவருக்கும் மழலை அழகு.
சிலருக்கு மலர் அழகு.
ஆனால் மந்திக்கு அதை பிய்த்தெறிவதே
அழகு?
மனத்துக்கோ
அதற்கு இன்பம்தரும்
அனைத்தும் அழகு.
உருவத்தால் மட்டுமே அழகல்ல.
மனித செயல்களால் அழகு.
இன்றைய அழகு
நாளை
அதன் செயலால்,வடிவால்
மாறலாம்.
அழகின் வடிவான இளம்பெண்
பேரிளம் பெண்ணான பின்னரும்
பொலிவாளா ?
காலம்தான் அழகை அழகாக்கிறது.
இளம் காலை கடற்கரை அழகு
அதே இளங்காலை
ஆழிப்பேரலையில் போனதெங்கு?
இளம் காதல் கன்னி
நம் கண் மூடி
காதல் போயின் அழகானவளா?
அந்த நேரம்
உணரும் காலங்கள்தான்
அழகை காட்டிக்கொடுக்கிறது.
ஆக
காலம்தான் அழகு.
உணரும் நேரம்தான் அழகு.
அழகை அழகென
உணர்த்திடும் காலம்தான்
காலம்தோறும் அழகு!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக