bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 6 டிசம்பர், 2016

அஞ்சலி....?


ஜெயலலிதா மரணித்துவிட்டார். 
கோடி கோடியாக அப்பாவி உழைப்பாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, நிழல் உலக மாபியாக்கள் சூழ தமிழகத்தைச் சூறையாடிய ஜயலலிதா, இப்போது அதே மாபியாக்களின் பிடியில் சிக்குண்டு மரணித்துப் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சொத்துக்குவிப்பு, சொத்துகுவித்தாலும் கோடிகளைக் கொட்டி திருமண வைபவம் நடத்தலாம் என்று நடத்திக்காட்டிய ஆணவம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வெறித்தனத்துடன் நடத்திய கொலைகள், ஜனநாயக வாதிகள் மீதான கொலை மிரட்டல் என்ற அத்தனை சொத்தையும் தன்னைச் சுற்றி குவித்துக்கொண்ட ஜயலலிதாவின் மரணம் இறுதி வரை மர்மக்கதை போன்றே தொடர்ந்தது.
அவர் சார்ந்த மாபியாக்களின் ஆதரவோடு மிகப்பெரும் அரசியல் சதி ஒன்று நடைபெற்றிருக்கிறது என்பது இன்று வரை பலரது ஊகத்திற்கும் உட்பட்டதான ஒன்றாக மட்டுமே தொடர்கிறது.
மரணித்த போது அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியாக வாழ்ந்து தமிழகத்தையே சிதைத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆணாதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்ட ஜெயலலிதா அச் சமூகத்தின் பிரதிநிதியாக்வே மாறிப்போய் இன்று மீண்டும் சிதைக்கப்பட்டு வெற்று உடலாக வெளிவந்தமை பல அப்பாவிகளின் அனுதாபத்தை ஈர்த்திருப்பது நியாயமானதே. 
தமிழகத்தின் ஒரு பகுதி அப்பாவிகள் ஜெயலலிதாவின் மரணத்தால் ஆர்ப்பரிக்கின்றனர்.
1991 ஆம் ஆண்டு ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஈழ ஆதரவாளர்களையும், தமிழகத்தில் தங்கியிருந்த ஈழ அகதிகளையும் வேட்டையாடியவர் ஜெயலலிதா. இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது என்றும் அதற்காக நாம் அனுதாபம் காட்ட முடியாது என்றும் ஆணவத்தோடு கூறியவர் ஜெயலலிதா. 
போர் என்றால் அழிவுகளும் வழமைதான் என தனது ‘மனிதாபிமானத்தை’ காட்டிய நமது காலத்தின் இரண்டு பெண்கள் ஹில்லாரி கிளிங்டனும் ஜெயலலிதாவும்.
ஈழத் தமிழர்களும் ஜெயலலிதாவிற்கு கண்ணீர்வடிக்கிறார்கள். மரணித்துப்போன ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் பிணங்களை மிதித்து ஜெயலலிதாவின் மரணத்தை இழப்பாகக் கருதும் நமது சமூகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு நாளாகிவிட்டது என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே தெளிவாகத் தெரிகிறது.
வருமான வரி வழக்கு முதல் சொத்துகுவிப்பு வழக்கு வரை சட்டத்தை வளைத்து ஜெயலலிதாவை காப்பாற்றியவர் மோடி. கரசேவைக்கு ஆளனுப்பியவர் ஜெயலலிதா.
ஹில்லாரியின் இறுமாப்பிற்காக, 
ஜெயலலிதாவின் ஆணவத்திற்காக, 
கோத்தாபய ராஜபக்சவின் துணிவிற்காக அஞ்சலி செலுத்தும் அளவிற்கு நமது சமூகத்தின் மனிதாபிமானம் குழி தோண்டிப் புதைக்கப்படுவிட்டது அவமானகரமானது! 
நான்கு தசாப்தங்கள் ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய சமூகம் போர்குணமற்ற சந்தர்ப்பவாதக் கோழைகளை ஆயிரமாயிரமாய் வளர்த்துவிட்டிருப்பது நமது சாபக்கேடு.


ஈழத்தாய்
“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ
விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும்
நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால்
மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிபடுத்தியது.
உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால்
வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. 
உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக
ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட
ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா
காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள்
ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். 
இப்படி பொய் பார்க்கலாமா? 
அதுஅடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை
செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு
எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா
மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப
பிரச்சனை அல்ல. எது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர்
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்.
யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. 
இப்போது தமிழகத்தில் எனதுதலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில்
சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். 
POTAஇல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்
கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கலாம். 
ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின்
முதலமைச்சருக்கு மனமில்லை. 
எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ,
அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள்
தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”
                                                                                                                                       –  ஜெ. ஜெயலலிதா                                                                                                                            (நமது எம்.ஜி.ஆர் 23.10.2008)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...