bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 20 மார்ச், 2018

சமூக முதலீடு தரும் மகிழ்வு.

உலகின் மகிழ்ச்சிகரமான பத்து நாடுகள்  .

  1. பின்லாந்து
  2. நார்வே
  3. டென்மார்க்
  4. ஐஸ்லாந்து
  5. ஸ்விட்சர்லாந்து
  6. நெதர்லாந்து
  7. கனடா
  8. நியூஸ்லாந்து
  9. சுவீடன்
10.ஆஸ்திரேலியா
இதுதான் அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.இந்த பட்டியலில் முதலாவது இடம் பின்லாந்துக்கு. 
சென்ற  ஆண்டு இந்தப் பட்டியலில் பின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.நார்வே முதல் இடத்தில் இருந்தது. 
பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. 
துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் மக்கள் மகிழ்ச்சியில்  காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையில்தான்  இருக்கிறது இந்தியா.
 இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பின்லாந்து. எப்படி முதலிடம்? பின்லாந்தில் வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களும்  சொந்த நாட்டில் இருந்ததைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது  ஐ.நா அறிக்கை.

பின்லாந்து காரர் ஒருவர்  மகிழ்ச்சியில் தன நாடு முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும் நாங்கள்  இதே மகிழ்ச்சி மனநிலையில்தான் இருப்போம் ."என்றார்.
எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு பின்லாந்தில் கொட்டிக்கிடக்கிறது. அதுதான் மக்கள்  அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். 
மேலும் இரண்டாவது உலக போரில் சிறிது அரசியல் நெருக்கடி உண்டானது அதன்  பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. பின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எந்த நாட்டுடனும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக உள்ளது.






பின்லாந்தில் வேலையின்மை சிறிது கூட கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் மக்கள் அனைவருக்கும் நிச்சயம்.ஓய்வு நேரங்களை இங்குள்ள மக்கள்  இசை, குடும்பம், விளையாட்டு என  விருப்பமானவற்றில் செலவிடுகிறார்கள். இவையெல்லாம் கூட மக்கள்  மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவைப் போல் கல்வி கார்பரேட்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை. இலவச கல்வியையும், இலவச தரமான மருத்துவ வசதியையும் அரசே வழங்கும் பின்லாந்து  மக்கள் நல வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும்  மக்கள் நலம் நாடும் ஆட்சி அங்கு . 
பின்லாந்து மக்கள்  யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் சம  வாய்ப்பு வழங்கப் படுகிறது. இவையெல்லாம் மக்களை  மகிழ்சியாக வைத்துள்ளது.

மேலும் இந்த மகிழ்ச்சி ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து வந்து பின்லாந்தில்  குடியேறியவர்களும் அங்கு  மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பின்லாந்து அதிகாரி ஒருவர் " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு பின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ.
 அது அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் மகிழ்வாக இருக்கிறார்கள். ஒருசெயல் சம்பந்தப்பட்ட ஒருவரை மகிழ்ச்சியில் வைக்கிறது  என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (பின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.
மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு  மூலக்காரணம் அரசு வழங்கும் இலவசமாக வழங்கும் தரமான  கல்வியும், நிறைவான  சுகாதார வசதியும்தான் காரணம்.
மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை உணர்வு . ஆனால் அதுதான் மனிதனை நலமுடனும்,வளமுடனும் வாழவைக்கிறது. என்று குறிப்பிட்டார்.
நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில்  நானோ தொழிற்நுட்ப ஆய்வை செய்து  வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர்  பின்லாந்தைப்பற்றி குறிப்பிடுகையில் 
"நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில்,மகிழ்ச்சியில்  வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான் ஐ.நாவின்  மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடங்களில் , நார்டிக் நாடுகள் இருக்கின்றன.
மக்களை நிறைவாக மகிழ்சியாக  வைத்திருப்பதற்காக அரசு  செலவிடும் தொகையை செலவாக இந்திய அரசு போல் சுமையாக  நார்டிக் நாடுகளின் அரசுகள் கருதுவதில்லை. 
அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகள் உருவாகும்.அதன் மூலம் நாடு நலமாக,வலமாக அமைதியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. செயல்படுகின்றன.வெற்றியடைகின்றன.

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை.

வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதையும் இலவசமாக.எல்லா மொழிகளையும் சமமாகக் கருதுகிறார்கள்.யார் மீதும் தங்கள் மொழியை திணிப்பதில்லை.
அனைத்தையும், அனைவரையும் அதாவது எல்லா இனம்,மொழி,மதம் உள்ளடக்கிய சமூகமாக ஒற்றுமையாக  இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். 
இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான். 
 அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நார்டிக் நாடுகள் இருப்பது எந்த வியப்பும் இல்லை."
என்கிறார் மகிழ்சியாக விஜய்சங்கர்.
இப்போது தெரிகிறதா ஒரு நாட்டின்  மக்களுக்கு அவர்கள் அரசு வழங்கும் தரமான கல்வி,சுகாதாரம்தான் அந்நாட்டின் மக்களை மகிழ்சியாக வாழ வைக்கும். அந்நாடு தனது என்ற உணர்வை உண்டாக்கும்.அதன் மூலம் நாடே வளமாக இருக்கும் என்பது. 
கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றை கர்ப்பரேட்கள் கையில் கொடுப்பதாலும் ,வங்கியில் சிறுக சேர்த்த மக்கள் பணத்தையும் சேவைக்கட்டணம் என்று சுரண்டினால் மக்கள் எங்கே மகிழ்வாக உணர்வார்கள்.?
இந்தியாவில் மகிழ்சியாக உணர்வது போலி சாமியார்களும்,கார்பரேட்களும்தான்.

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...