bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 4 மார்ச், 2018

வெற்றியின் ரகசியம்

திரிபுரா பாஜக வெற்றியின் ரகசியம் 

1. 5 ஆண்டுகளுக்கு முன்புவரை பாஜக நுழைய முடியாத அரசியல் பூமியாக விளங்கியது திரிபுரா.
2. 1988ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மிருக பலத்துடன் மத்தியில் ஆட்சி செய்த ராஜிவ் காந்தி,கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக பிரிவி னைவாதிகளோடு கூட்டு சேர்ந்து, அராஜகத் தனமாக பலரை கொன்று, வாக்குச்சாவடி களை கைப்பற்றி ஜனநாயக விரோதமாக வெற்றி பெற்றனர். இதனை கச்சிதமாக சிரமேற் கொண்டு நம் தமிழகத்தை சார்ந்த வரும் அன்றைய உள்துறை இனை அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் செய்து முடித்தனர்.
3. 2013 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் காலூன்றுவதற்காக பாஜகபெருமளவில் பணத்தைச் செலவழித்ததுடன் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கி முயற்சியை மேற்கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பிரிவினைவாத சக்திகளான ஐவிஏஎஃப் கட்சியுடனும் கூட்டணி அமைக்க அது தயங்கவில்லை.
4. யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் திரிபுராவிலும் பாஜக-விற்கு பாதை அமைத்துக் கொடுத்தது.
5. 2013 முதலே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாஜகவில் இணையத் தொடங்கினர்.
6. 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு அதன்வேகம் அதிகரித்தது. 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 2016ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு விலைபோனார்கள் 2017ல் அங்கிருந்து பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.
7. பிரிவினைவாத சக்திகளான டிஎன்வி, ஏடிடிஎஃப், என்எல்எஃப்டி, ஐவிஎஃப்டி ஆகிய இயக்கங்களுக்கு எதிராக சிபிஐ(எம்)மும் இடதுசாரிகளும் நடத்திய நிரந்தரமான கொள்கைப் பிரச்சாரங்களின் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டியதன்மூலமாகும். இம்முயற்சிகளுக்கிடையே இடது முன்னணி நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் தலைவர்களையும்இழக்கநேரிட்டது.
8. பாஜக இரட்டைத் தாக்குதலை நடத்தியது. ஒரு புறம் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைத் தகர்ப்பது, மறுபுறம் பழங்குடியினர்-வங்காளிகள் என பிரிவினையைத் தூண்டுவது எனஇவ்விரு செயல்களையும் பாஜக தொடர்ந்து நடத்தியது.
9. இந்து கோயில்களில் உள்ள விக்ரகங்களைச் சேதப்படுத்தியும், முஸ்லீம் மசூதிகளைச் சேதப்படுத்தியும் மாநிலத்தில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டது. உதய்பூர் சப்-டிவிசனில் உள்ள டெபானியா, ஜாம்ஜூரி, ராஜ் தர்நகர்பெலோனியா சப்-டிவிசனில் உள்ள கபுர்ச்சாரா, சோனாமுரா சப்-டிவிசனில் தன்பூர்ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்களை பாஜக அரங்கேற்றியது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களது திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
10. திரிபுராவில் நடந்த தேர்தலில் காங்கிரஸை சார்ந்த 45 சட்டமன்ற உறுப்பினர்கள்/ தலைவர்கள் பாஜக வில் இணைந்து தங்கள் முன்நாள் தொகுதிகளிலேயே பாஜக சார்பில் போட்டியிட்டு 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
11. ஊடகங்கள் அனைத்தையும் தங்களூடன் கூட்டணி சேர்த்து கொண்டது.
12. தேர்தலன்று இடது முன்னனி ஏஜன்டூகள் பரவலாக தாக்கபட்டது.
13. 3174 வாக்கு இயந்திரங்களில் 519 எந்திரங்கள் (17%) பல மணி நேரம் செயல்படாமல் பழுதாக்கி, பலரை வாக்களிக்க முடியாமல் செய்தது.
14. தேர்தல் விதிமுறைகள் அனைத்தையும் இறுதி வரை தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளாமல் இருந்தது. துனை ராணுவ படைகள் மாநில பிஜேபி தலைவர்களின் கண்ணசை வுக்கு ஏற்ப செயல்பட்டது.
15. முதல் முறையாக வாக்காளர்களுக்கு பணத்தை வெள்ளமென அனைத்து பகுதிகளிலும் விநியோகித்தது.
16. பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியது (இலவச ஸ்மார்ட் போன், வீட்டுக்கு ஒருவருக்கு அரசுவேலை, ஒரு ஆண்டுக்குள் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை, விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக்கப்படும். அனைத்துவகை மாநில ஊழியர்களுக்கும் முதல் கை எழுத்தாக 7வது ஊதிய உயர்வு )
17. கடந்த 2013ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 92% தற்பொழுது 2018ல் 76% மட்டுமே 16சதம் பேர் பிஜேபியின் வன்முறையால் வாக்கு சாவடிக்கே வராமல் தடுத்தது.
இன்னும் பல .....
திரிபுராவில் இடதுசாரி ஒரு தேர்தலை இழந்தனர். ஆனால் அவர்கள் தோற்கடிக்க படவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊடகங்களின் உதவியோடு பிஜேபி கும்பல் செய்யும் பொய் பிரச்சாரம்...//
ப்ரோ, பாத்திங்களா.. பிஜேபி 22 மாநிலங்களில் ஆட்சி செய்யிது..
அப்படியா? அந்த 22 மாநில முதல்வர்களின் பேர் சொல்லு பாக்கலாம்..
அதுவந்து ப்ரோ.. எல்லோரும் பிஜேபி கிடையாது..
அப்படிவா வழிக்கு.. குஜராத், ராஜஸ்தான் போன்ற 8 மாநிலங்களில் மட்டும் தான் பிஜேபி தனி கட்சியாக, பெரும்பான்மையோடு ஆட்சி செய்கிறது... கோவா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் போன்ற 7 மாநிலங்களில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு ஆட்சி செய்கிறது.. ஆந்திரா, காஷ்மீர், பீகார் போன்ற 7 மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சியில் பிஜேபி பங்கெடுத்துள்ளது..
தனி பெரும்பான்மையோடு ஆட்சி செய்யும் அந்த எட்டு மாநிலங்கள் தவிர, மீதமுள்ள பெரும்பாலான மாநிலங்களில், தேர்தல் கமிஷன் உதவியோடு மோசடி & குறுக்கு வழிகளை பயன்படுத்தித்தான் பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது..
எதிர்கட்சிகள் ஜெயிக்கும் வாய்ப்புள்ள இடங்களில், அவர்கள் பெரும்பான்மை பெற முடியாதவாறு தேர்தல் கமிஷன் மூலம் சதி செய்வது.. மத்தியில் இருக்கும் அதிகாரம், பணம் & பதவிகளை கொண்டு ஆசைகாட்டி, சிறு கட்சிகள், சுயேட்சைகளை வளைப்பது.. எதிர்கட்சியில் அதிக உறுபினர்கள் ஜெயித்தாலும், அவர்களை ராஜினாமா செய்யவைப்பது, விலைக்கு வாங்குவது.. இப்படி எல்லாவிதமான முறைகேடுகளை செய்துதான் பிஜேபி பல மாநிலங்களில் ஆட்சி அமைகிறது. கோவா, மணிப்பூர், அருணாச்சல் பிரதேசம்.. இப்படி உதாரணங்களை அடுக்கலாம்.. பீகாரில், எதிர்த்து போட்டியிட்டு தோற்றப்பின்னும், ஒரே ஆண்டில், நித்தீஷ் குமாரோடு மீண்டும் சேர்ந்து ஆட்சியில் அங்கம் வகிக்கும் கேவலம் எங்காவது உண்டா?? தேர்தலின் போது நிதீஷ் குமார் மீது, பீகார் வீதிகளில் மோடி கூவிய நூற்றுக்கணக்கான ஊழல் முறைகேடுகள் என்னவானது??
இப்போதுகூட, திரிபுராவில், பிஜேபி சார்பில் நின்றவர்கள் பெரும்பாலும் முன்னாள் காங்கிரஸ் கட்சியினர், MLAக்களாக இருந்தவர்கள்.. தேர்தலுக்கு முன்பாக பிஜேபிக்கு கட்சிமாறி நிற்கிறார்கள். அதினால் தான், காங்கிரஸ் வாக்குகள் அப்படியே பிஜேபிக்கு சென்றுள்ளது..
மேலும் தெலுங்கு தேசம், சிவசேனை போன்ற கூட்டணி கட்சிகளுடன் பிஜேபிக்கு முட்டலும் மோதலும் உள்ளது.. அவை மீண்டும் கூட்டணி அமைப்பது சந்தேகமே..
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்;
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.
அதற்கு அந்தப் பார்ப் பனர்கள், மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன்.
ஆகவே, திரு மாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல் லையில் தூவிவிட் டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட் டான் என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும் அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக்கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழா யினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சை யினைக் கைப்பற்றின. இதனால்தானே பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கத் துரைத்தனம் கெட்டது என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.
ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண் மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா?
                                                                                                                                 “விடுதலை” 1-10-2011
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...