bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ஆதார்

ஒரு முழுமையான பார்வை
1999-இல் ஏற்பட்ட கார்கில் போருக்குப்பிறகு பாதுகாப்பு ஆலோசகர் சுப்ரமணியம் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கார்கில் மறுபார்வைக் குழுதேசிய பாதுகாப்பினை உறுதிசெய்ய எல்லைப்புற ம்ராமங்களில் உள்ளவர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தது. 
அதன்பிறகு எல்லைப்புற மாநிலங்கள் அனைத்திற்கும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தலாமென எல்.கே.அத்வானி தலைமையிலான குழு பரிந்துரைத்தது. 
பாஸ்போர்ட் வழங்கும்பொழுது ஏற்படும் சிக்கல்களைக் களைய வெளியுறவுத்துறைநாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டையை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்ம்யது. 
இதன்படியேஆதார் அட்டை திட்டம் துவங்கப்பட்டது.ஆதார் எனும் இந்திமொழிச் சொல்லுக்கு அடிப்படை என்று பொருள். 
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க அடையாள எண் அளிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் வகையில்2009-ஆம் ஆண்டில் தேசிய முற்போக்கு கூட்டணி அரசினால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் இந்திய அரசினால் வழங்கப்படும் சேவைகளில் ஏற்படும் முறைகேடுகளைக் களைவதுடன் தகுதியான நபர்களுக்கு உரிய சலுகைகள் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் நோக்கமும் இருந்தது. 
இந்த அடையாள எண்ணை வழங்க ஒவ்வொரு நபரின் கைரேகைகள்கருவிழிப்படல ரேகைகள்புகைப்படம் ஆம்ய தகவல்கள் பெறப்பட்டுபதிவுசெய்து சேமிக்கப்படும் இந்த தகவல்கள் ம்இந்திய தனித்துவ அடையாள ஆணையம்ம் எனும் சட்டரீதியான ஆணையத்தால் சேமித்து வைக்கப்படும். இந்த தனித்துவ எண்ணில் பயனரின் பயோமெட்ரிக் தகவல்களான புகைப்படம்விரல்ரேகைகருவிழிப்படல பதிவு ஆம்யவையும் பொதுவான தகவல்களான பெயர்வயதுமுகவரி போன்றவையும் இடம் பெற்றிருக்கும். 
உலக வங்கியின் கூற்றுப்படி இது உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாளத்திட்டமாகும். 2017 டிசம்பர் நிலவரப்படி 119 கோடி நபர்கள் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளனர். இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கான அடையாள அட்டை மட்டுமே. குடியுரிமை அல்ல. இந்த அட்டை எந்தவொரு சிறப்பு சலுகையையும் அளிப்பதில்லை. 
ஆனால் இதனை அடிப்படையாகக்கொண்டே சில அரசு சேவைகளைப் பெற இயலும். முதலாவது ஆதார் அட்டை 2010 செப்டம்ர் 29 அன்று மகாராஷ்டிராவின் ரந்தர்பார் பகுதியைச் சார்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
UIDAI – Unique Identification Authority of India.
ஜனவரி 2009-இல் புதுடெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் தனித்துவ அடையாளங்களை (பயோமெட்ரிக் + டெமாம்ராபிக்) விவரங்களையும் சேமித்து அவர்களுக்கு பிரத்யேக எண்ணை வழங்கும்றது. 
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரகத்தின் கீழ் செயல்படும். இவ்வமைப்பிற்கு புதுடெல்லி பெங்களூர்சண்டிகர்கௌஹாத்திஐதராபாத்,லக்னோமும்பை மற்றும் ராஞ்சி ஆம்ய எட்டு மண்டல அலுவலகங்கள் உள்ளன. 
இதுதவிர கர்நாடக மாநிலம் ஹெப்பல்ஹரியாணா மாநிலத்தின் மனேசர் ஆம்ய இரு இடங்களில் தகவல் மையங்களைக் கொண்டுள்ளது.
அரசு ஆணையின்படி துவங்கப்பட்ட இவ்வமைப்பிற்கு, 2016-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள்பயன்கள் மற்றும் சேவைகள் ஆம்யவற்றை உண்மையான பயனாளிகளுக்கு வழங்குதல் சட்டம் –2016 (ஆதார் சட்டம் – 2016)-ன்படி சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
ஆதார் சட்டம் – 2016 : (நிதி மற்றும் பிற மானியங்கள்பயன்கள் மற்றும் சேவைகள் ஆம்யவற்றை உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவதற்கான சட்டம்)
ஆதார் திட்டத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்த்து வழங்கும் நோக்ம்ல் பண மசோதாவாக நிறைவேற்றப்பட்ட ஆதார் மசோதா 2016 ஜூலை 12 அன்று நடைமுறைக்கு வந்தது. 
அரசின் மானியங்கள்நிதிச்சேவைகள் மற்றும் பயன்கள் ஆம்யவற்றை தகுதியான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு 12 இலக்க ஆதார் எண்ணை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளலாம் என இந்தச் சட்டம் வரையறுக்ம்ன்றது.
ஆரம்பத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்கெனக் கொண்டுவரப்பட்ட ஆதார் திட்டம்நாளடைவில் நிதிச் சேவைகள்,அரசு மானியங்கள்வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புவங்ம்க்கணக்கு துவங்குதல்செல்போன் சிம்கார்டுவங்ம்ப் பணப் பரிவர்த்தனைவருமான வரி தாக்கல்சமையல் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களுக்கான மானியம்கல்வி நிலையங்கள்அரசுப்பணி என நாளுக்குநாள் விரிவடைந்து வரும்ன்றது.
நேரடி பணப்பலன் பரிமாற்றம் (Direct Benefit Transfer – DBT)

அரசின் மானியங்கள்நிதிச் சேவைகள் மற்றும் பணப்பலன்கள் போன்றவை தகுதியான நபர்களுக்கு விரைவாகச் சென்றடையும் நோக்ம்ல் 2013 ஜனவரி 1 முதல் தகுதியான பயனாளர்களின் வங்ம்க் கணக்குகளுக்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்ய வழிவகை செய்யும் நேரடிப் பணப்பலன் பரிமாற்ற திட்டம் (DBT) துவங்கப்பட்டது. 
இத்திட்டத்தினை அமல்படுத்த ஜன்தன் வங்ம்க் கணக்கு – ஆதார் எண் – மொபைல் எண் என்ற ஒருங்ம்ணைக்கப்பட்ட ஏற்பாடு (JAM) மிகவும் பலனளிக்ம்றது. துவக்கத்தில் பல்வேறு உதவித்தொகைகள் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட இத்திட்டம் பிறகு மானியங்கள்நிதிச்சேவைகள் போன்றவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. 
2017 டிசம்பர் நிலவரப்படி சுமார் 20 அமைச்சரகங்களின் 100 திட்டங்கள் இந்த நேரடி பணப்பலன் பரிமாற்ற முறையின்படி செயல்படுத்தப்படும்ன்றன.
தனிநபர்  ரகசியங்கள் பகிரங்கமாதல் 
இந்தியாவிலுள்ள அனைத்து நபர்களின் பயோமெட்ரிக் மற்றும் டெமாம்ராபிக் தகவல்களைக்கொண்ட ஆதார் எண்களை வழங்குவதை நோக்கமாகக்கொண்டு அரசு செயல்பட்டுவரும் நிலையில்இத்திட்டம் குறித்த பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. 
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் ம்தகவல்களே மூலதனம்ம் எனும் நிலையில்100 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களைக்கொண்டுள்ள ஆதார் தகவல் சேமிப்பகங்கள் போதுமான பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கொண்டவையல்ல எனவும் விமர்சிக்கப்படும்றது. 
இதனை உறுதிபடுத்தும் வகையில் சில தனிநபர்கள் மிகக்குறைந்த தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆதார் தகவல் சேமிப்பகத்தில் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர்களின் அந்தரங்க பாதுகாப்பு அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகக் கருதப்படும் என உச்சநீதிமன்றம் 2017 ஆகஸ்ட் மாதம் உறுதிபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களை எளிதில் கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்திலிருந்து பெறப்பட்ட கைரேகைகளை ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்ட கைரேகையுடன் ஒப்பிட்டு எளிதாகக் குற்றவாளிகளைப் பிடித்துவிட முடியும். 
எனவேஆதார் தகவல்களைத் தங்களுக்கும் அளிக்க வேண்டுமெனப் பல்வேறு மாநில காவல் துறைகள் UIDAI அமைப்பை நாடின. 
ஆனால்,தங்களிடமுள்ள தகவல்களை நிதிச்சேவைபாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள சட்டம் வழிவகுக்ம்றது எனவும் அதனை வேறு எவருடனும் பம்ர்ந்துகொள்வது சட்ட விரோதம் எனவும் UIDAI பதிலளித்தது. இப்பிரச்சனை உச்சநீதிமன்றம் வரை சென்றும் கூட UIDAI தனது நிலையில் உறுதியாக இருந்ததால் இதுவரை தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத் தகவல்கள் பம்ர்ந்துகொள்ளப்படவில்லை.
 அதேபோல் விரல்ரேகைகருவிழிப்படலம் ஆம்யவற்றை ஒப்பிடும்பொழுது 0.057ரூ என்ற விம்தத்தில் தவறு நேரிட வாயப்புள்ளதால் ஒரு குறிப்பிட்ட கைரேகையை ஆதார் தகவல் தளத்திலுள்ள சுமார்100 கோடி பேரின் கைரேகைகளுடன் ஒப்பிடுகையில் ஆயிரக்கணக்கானோரின் கைரேகைகள் ஒத்துப்போக வாய்ப்புள்ளது.
ஆதார் திட்டத்தினைப்போலவேநாட்டிலுள்ள அனைத்து குடிமக்களின் விவரங்களையும் கொண்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) திட்டமும் நடைமுறையில் உள்ளது. 
சற்றேறக்குறைய ஒரேமாதிரியான தகவல்களைத் திரட்ட இருவேறு திட்டங்கள் தேவையா என்ற வாதமும் எழுந்துள்ளது. அதேபோல் சில விதிமுறைகளுக்குட்பட்டு ஆதார் தகவல் தளத்தினை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. 
இவ்வாறு தனியார் நிறுவனங்களுடன் பம்ர்ந்து கொள்ளப்படும்பொழுது தனிநபர் அந்தரங்கத் தகவல்கள் பாதுபாப்பு கேள்விக்குறியாம்றது.
ஆதார் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில்அவ்வாறு விரிவுபடுத்தப்பட்டால்,ஒரு தனிநபர் எவ்வளவு பணம் வைத்துள்ளார்
எதற்கெல்லாம் செலவு செய்கிறார்
யாருடன் செல்போனில் பேசும்றார்?
 என்ன பேசுகிறார்?
 அவருடைய விருப்பு வெறுப்புகள் என்ன என்பது வரை ஒட்டுமொத்த தகவல்களையும் திரட்டிவிட முடியும். 
இது சுதந்திரமான ஜனநாயக நாடு என்பதிலிருந்து நெருங்கி கண்காணிக்கும் ஜனநாயக நாடு எனும் நிலைக்கு வந்துவிடும். ஆனால்இதனால் ஏற்பட்டுள்ள பலன்களும் மிக அதிகம். 
இதுவரை ஆதார் திட்டத்தினால் அரசுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவிற்கு மீதமாம்யுள்ளது. 
மொத்ததத்தில் ஆதார் திட்டமானது அதனைக் கையாளும் அரசைப் பொறுத்தது. 
தவறான முறையில் கையாண்டால் கட்டுப்பாடான ரகசியங்கள் பிறர்  கண்காணிக்கும் வசதியுள்ள ஒரு நாடாக இந்தியாவை மாற்றிவிடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...