bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 11 நவம்பர், 2019

ஒரு `நாவல் மரம்' கதை

வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு நம் ஜனநாயத்தில் உருவான எழுச்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததையே குறிக்கிறது டி.என்.சேஷன் அவர்களின் மறைவு.
90களின் முற்பாதியில் கீழ்படியாமல் இருக்கும் அரசியல்வாதிகளின் மனதில் பயத்தை விதைக்கவும், ஏனைய இந்தியர்களின் மனதில் மரியாதையை விதைக்கவும் சேஷன் அவர்களின் பெயர் ஒன்றே போதுமானதாக இருந்தது.

 அவர் இந்திய தேர்தல் முறைகளில் ஏற்படுத்திய மாற்றங்களால் உருவான மகிமையை அவருக்கு பின்னால் வந்த தலைமை தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பெற்றிருக்கின்றோம் என்பதை கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
 ஆனாலும் அவருடன் நாங்கள் எப்போதும் ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
அவருக்கு கீழ் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது லாலு பிரசாத் யாதவின் தொகுதியான தனப்பூருக்கு அனுப்பப்பட்டேன்.
பின்பு ஒரு முறை ஜெயலலிதா வாழ்ந்து வந்த பகுதியான மயிலாப்பூருக்கு நான் அனுப்பப்பட்டேன்.
சேஷன் இவர்கள் இருவரிடமும் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருந்தார்.

அதனால் தான் அங்கு நான் பார்க்க வேண்டிய வேலை இரட்டைப்பளுவாக மாறியது.

1996ம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது சேஷன் என்னிடம் “எதற்கும் பயப்படாதே. ஒன்றும் நடக்காது. உன் முகத்தில் யாரேனும் குண்டு வீசப்படலாம். உன் வயிற்றில் துப்பாக்கி குண்டு துளைக்கலாம்” என்று கூறினார்.

சில மீட்டர்கள் தொலைவில் இரண்டு முறை குண்டு வெடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக என் வயிற்றில் குண்டு துளைக்கமால் உயிருடன் வீடு திரும்பினேன்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் மாவோய்ஸ்ட் பகுதியில் ஒரு முறை நான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன்.
பழங்குடிகள் வாழும் பகுதியை அடைவதற்கு சரியான சாலைகள் இல்லை என்று நான் புகார் அளித்ததோடு, என்னை நகர்புறங்களில் இருக்கும் தொகுதிகளில் பணிக்கு அமர்த்த வேண்டும் என தைரியம் அனைத்தையும் வளர்த்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தேன்.
ஆனால் மொத்தமாகவே தேர்தல் பணியில் இருந்து எனக்கு அப்போது விலக்களிக்கப்பட்டது.
நான் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட போது சேஷனை சந்தித்து வாழ்த்துகளை பெற சென்னை சென்றேன். அப்போது அவருடைய மனைவி எனக்கு சந்தனத்தால் ஆன விநாயகர் சிலை ஒன்றை பரிசாக அளித்தார்.
 ல மாதங்களுக்கு முன்பு தான் தி கிரேட் மார்ச் ஆஃப் டெமாக்ரசி : செவன் டிகேட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எலெக்சன்ஸ் (The Great March of Democracy: Seven Decades of India’s Elections) என்ற புத்தகத்தை நான் வெளியிட்டேன்.
அந்த புத்தகத்தில் இந்திய தேர்தல் ஆணையராக செயல்பட்ட போது சேஷன் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தார் என்பதை எழுதியிருந்தார். அதே போன்று ஃப்ரெஞ்ச் பேராசிரியர் க்ரிஸ்கோப் ஜெஃப்ரெலோட், டி.என்.சேஷன் குறித்து எழுதியிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் முதல் ஆணையர் சுகுமார் சென் மற்றும் டி.என். சேஷன் ஆகியோருக்கு இந்த புத்தகத்தை நான் அர்பணித்ததை மகிழ்ச்சியாக கருதுகின்றேன்.

சேஷன் போன்ற ஒருவரை என் வாழ்நாளில் நான் மீண்டும் பார்க்க  விரும்புகிறேன்,வேண்டுகிறேன்.
(இந்த கட்டுரையை எழுதிய குரேஷி இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்)
 `நாவல் மரம்'

  1960-களில், `ஜாமுன் கா பேட்' என்ற தலைப்பில் சிறுகதை ஒன்றை எழுதினார் கிருஷன்.

இந்தத் தலைப்பின் பொருள் `நாவற் பழ மரம்'. அரசு அதிகாரம், ஊழல், அரசு அலுவல் முறையிலுள்ள சிக்கல், அதிகாரத்தை மத்திய அரசு மையப்படுத்துதல் முதலானவற்றைப் பகடி செய்தது அந்தச் சிறுகதை.
 
2015-ம் ஆண்டு முதல், ஐ.சி.எஸ்.சி கல்வித் திட்டத்தின் பத்தாம் வகுப்புக்கான இந்திப் பாடத்தில் இந்தச் சிறுகதை இடம்பெற்று வருகிறது.
2019 நவம்பர் 4 அன்று, இந்தப் பாடத்தைத் தேர்வுகளிலிருந்து விலக்குவதாகவும், இதிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது.
 இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல."
எனவும் ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 `ஜாமுன் கா பேட்'கதை 

பெருமழைக்குப் பிறகு, அரசுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றின் முன் வளர்ந்த நாவற்பழ மரத்தின் கீழ் சிக்கிக்கொள்கிறார் பிரபல கவிஞர் ஒருவர்.
 கவிஞரைக் காப்பாற்ற வேண்டுமானால், மரத்தை வெட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகிறது.

மரத்தை வெட்டுவதற்காக, தோட்டக்காரர் பியூனிடம் கேட்கிறார்;
பியூன் கிளார்க்கிடம் கேட்கிறார்;
 கிளார்க் அந்தக் கட்டடத்தின் கண்காணிப்பாளரிடம் கேட்கிறார்.
மரத்தை வெட்டுவதற்கான உத்தரவை வனத்துறையிடம் கேட்க, சிக்கிக்கொண்டிருப்பவர் பிரபல கவிஞர் என்பதால், கலாசாரத் துறையைத் தொடர்புகொள்ளுமாறு கூறப்படுகிறது.

 கலாசாரத் துறையில், நாவற்பழ மரத்தை நட்டவர் அண்டைநாட்டுப் பிரதமர் எனக்கூறி, இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறையிடம் தள்ளி விடுகிறது.

அண்டைநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் என வெளியுறவுத்துறையால் நிராகரிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது மரம் வெட்டுவதற்கான கோரிக்கை.
பிரதமர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவர் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர்.

சுற்றுப் பயணம் முடிந்து நாடு திரும்பும் பிரதமர், ஒரு மனிதரின் உயிரைக் காப்பாற்ற மரத்தை வெட்டுவது தவறில்லை எனக்கூறி உத்தரவிடுகிறார்.
பிரதமர் அலுவலகத்தின் உத்தரவு, அரசுக் கட்டட கண்காணிப்பாளரின் கைகளுக்கு வந்து சேரும்போது, மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டிருந்த கவிஞர் உயிரற்றுக் கிடந்தார் என முடிகிறது இந்தச் சிறுகதை.

 இந்தச் சிறுகதை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது அல்ல.என்று இன்றைய அரசு சொல்லக்காரணம்?
பிரதமர் வெளிநாடு சுற்றுப் பயணத்தில் அதிகநாள் இருப்பதாக இருப்பதுதானாம்.
குற்றம் உள்ள நெஞ்சு ......?1960 லேயே ஆப்பு.??
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...