bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 8 நவம்பர், 2019

பணமதிப்பழிப்பு என்ற துல்லிய தாக்குதல் தினம்

மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தங்களின் வருமானம் உயரவே இல்லை என சிறு வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

  2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

 மோடி அரசின் இத்தகைய அறிவிப்பின்போது, சரிந்த சிறுகுறு தொழில்கள் தற்போதுவரை எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. அதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 
இந்நிலையில், சிறு கடைகளின் மூலம் அன்றாட வாழ்க்கை நடத்திவருபவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்தாகக் கூறுகின்றனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதுமே பல தொழிலாளர்கள் தங்களின் வேதனைகளைக் கொட்டுகின்றனர்.

சென்னையின் முக்கிய பகுதியில் சிறு கடை ஒன்றை நடத்தி வருபவர் சண்முகம் என்பவர் கூறுகையில், “ஓரளவு பரபபரப்பான நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பேன். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு எவ்வளவு கூட்டம் வந்தாலும் 10 ஆயிரத்திற்கு மேல் வியாபாரம் நடத்தமுடியவில்லை.


இதனால் எனக்கு கிடைத்துவந்த லாபம் குறைந்தது. அதனால் 5 பேர் இருந்த இடத்தில் 2 பேரை மட்டுமே வேலைக்கு வைத்துள்ளேன்.
என்னிடம் இருந்து சென்றவர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்குதான் வேறு இடத்தில் வேலை பார்க்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

பூக்கடை நடத்திவரும் வயதான பெண்மணி ஒருவர் கூறுகையில், “எந்த படிப்பறிவும் இல்லாததால்தான் தினமும் அலைந்துதிரிந்து பூ வாங்கி விற்று வருகிறேன்.

திடீரென அறிவித்ததால் என்னிடம் இருந்த சேமிப்பு பணத்தில் மாற்ற முடிந்தது போக, 3 ஆயிரத்தை மாற்றமுடியாமல் போனது.

அந்த 3,000 ரூபாய் என்பது எனது ஒருவார உழைப்பு. எல்லாம் வீண் தான்.
சிறிது நாட்களில் சரியாகும் என்று சொன்னார்கள்.

 ஆனால் தற்போது என் குடும்பச்செலவுக்கு பணம் சேர்ப்பதே சிக்கலாகிவிட்டது. என்னுடைய பிழைப்பே மோசமாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், இந்திய அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இங்குள்ள சிறு - குறு வியாபாரிகள் பலரின் வாழ்க்கையும் முற்றிலுமாக சிதைந்துபோய்விட்டது என்பதில் வேறுகருத்து இருக்கமுடியாது.
படிப்பு இல்லை என்றாலும் ஏதாவது மளிகை கடை, சிறுதொழில் செய்து வாழ்கையை நடத்திவிடலாம் என்று என்று நினைத்த ஏழை மக்கள், இன்று அந்த நம்பிக்கை இல்லாமல் விரக்தியில் வாழ்கிறார்கள். அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முக்கிய காரணம்.

அதுமட்டுமல்லாமல், ரொக்க பணப்பரிமாற்றத்தை திடீரென முடக்கிவிட்டு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அவர்களை தள்ளினால் அவர்களால் அதை புரிந்துகொள்ளமுடியுமா?
இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திடீரென தடை செய்தார்கள்.
இவர்களின் அறிப்பால் லட்சக் கணக்கான வியாபாரிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கட்டுவதற்காக தற்போது உழைத்துவௌகிறார்கள்.
இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அவர்களின் மீது ஜி.எஸ்.டியை திணித்துவிட்டார்கள்.” என காட்டமாக தெரிவித்தார்.

இந்த பிரச்னைகளில் இருந்து மீளமுடியுமா என பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் ஆங்கில நாளிதல் ஒன்று பேட்டி எடுத்தது.
 அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “சிறு வியாபாரிகள் இந்தச் சூழலில் மீள்வது என்பது கடினம். அவர்கள் மீள்வதற்கு காலக்கொடு எதுவும் உறுதியாக சொல்லமுடியாது.
பணமதிப்பிழப்பின் போது கடுமையான வீழ்ச்சியை இந்திய பொருளாதாரம் சந்தித்தது.
அந்தக் காலகட்டத்தில் சிறு வியாபாரிகள் வாங்கிய கடன்களை அடைக்க அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால் மேலும் கடன் பெற்று வியாபாரம் செய்தனர்.
அதனை ஈடுகட்ட கஷ்டப்பட்ட காலத்தில் ஜிஎஸ்டி வரி மீண்டும் வருமானத்தை மோசமாக பாதித்துவிட்டது.

இதனால் வங்கியில் பெற்ற கடனை கட்டுவதா?
தங்களின் வாழ்வாதாரத்திற்கு சேர்ப்பதா என சிக்கலான நிலையில் இருக்கிறார்கள்.
 இந்த சூழலில் இருந்து அவர்கள் மீள்வது சிரமம்தான்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

படுதோல்வி அடைந்த பணமதிப்பழிப்பு

”கருப்புப் பணத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லிய தாக்குதல்” என மெச்சப்பட்ட நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை, சொல்லிக்கொள்ளப்பட்ட அந்த நோக்கத்தில் கடுகளவைக்கூட நிறைவேற்ற முடியாமல், கேவலமான முறையில் படுதோல்வி அடைந்துவிட்டது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையின் வழியாக இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது.
பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, அதனை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மைய அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ”காஷ்மீரிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் 4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான கருப்புப் பணம் முடக்கப்பட்டுவிடும்” என ஆணித்தரமாக அறிவித்தார்.

இந்திய அரசு வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நவம்பர் 23, 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், ”2.4 இலட்சம் கோடி ரூபாய் முதல் 4.8 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பணம் வங்கிக்குத் திரும்பாது.
 இந்தப் பணம் முழுவதும் அரசுக்குக் கிடைத்த இலாபமாகக் கருதப்பட்டு, அந்தப் பணம் நாட்டின் அடிக்கட்டுமானப் பணிகள் தொடங்கி பலவற்றிலும் மூலதனமாகப் போடப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

”நாட்டைத் தூய்மைப்படுத்தும் மகாயாகத்தைத் தொடங்கியிருக்கின்றேன்.
இதில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பங்குபெற வேண்டும். இதனால் ஏற்படும் துன்பங்களை எனக்காக, 50 நாட்களுக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார், மோடி.
ஐம்பது நாட்கள் அல்ல, கடந்த பத்து மாதங்களாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் விளைவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களுக்குக் கிடைத்தது என்ன? சமையல் எரிவாயு மானியம் ரத்து, பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்வு, ரேஷன் அரிசியின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும் கத்தி, வங்கி சேவைக் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரிக்கொள்ளை ஆகிய பொருளாதாரத் தாக்குதல்கள்தான் பொதுமக்களுக்குக் கிடைத்த சன்மானம்.

சரி, இது போகட்டும், உள்நாட்டில் புழுங்கும் கருப்புப் பணத்தையாவது மோடி அண்ட் கம்பெனி முடக்கியதா என்றால், அதிலும் படுதோல்வி அடைந்துவிட்ட உண்மை இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது.

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக 15.44 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திலிருந்தன.
அதில், 15.28 இலட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்துவிட்டதாக ஒப்புக் கொள்கிறது, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கை. வங்கிக்குள் நுழைய முடியாமல் தடுக்கப்பட்ட பணம்தான் கருப்புப் பணம் என்ற அளவுகோலின்படி பார்த்தால், வெறும் 16,000 கோடி ரூபாய் பணத்தைத்தான் மோடியின் நடவடிக்கை கருப்புப் பணமாக முடக்கியிருக்கிறது.
மைய அரசின் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமொன்றில், ”2013 – 14 ஆம் ஆண்டு தொடங்கி, வருமான வரித்துறை ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 11,000 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டப்படாத தொகையைக் கண்டுபிடித்து வருவதாக”க் கூறப்பட்டிருக்கிறது.

இதோடு ஒப்பிட்டால், வெறும் 16,000 கோடி ரூபாயைக் கண்டுபிடித்திருக்கும் மோடியின் துல்லிய தாக்குதலை, நமத்துப் போன பட்டாசு என்றுதான் குறிப்பிடமுடியும்.

வங்கிக்கு வராமல் வெளியே இருப்பதாகக் கூறப்படும் இந்த 16,000 கோடி ரூபாயிலும், ஏறத்தாழ 8,000 கோடி ரூபாய் – 1,000 மற்றும் 500 ரூபாய் தாள்களாக இந்தியா வெங்கிலுமுள்ள மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் இருப்பதாகவும், அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவன்றி, இந்தியாவின் அண்டை நாடான நேபாள மத்திய வங்கியிலுள்ள 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களையும் திரும்ப எடுத்துக் கொள்வது தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் முடக்கப்பட்ட கருப்புப் பணம் எனச் சொல்லிக்கொள்ள ஒரு பைசாகூடத் தேறாது என்பதே உண்மை.
’மலையைக் கெல்லி எலியைப் பிடித்த’ பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது.
 அதேசமயம், அவரது சுயதம்பட்ட நடவடிக்கைக்கு விவசாயிகளும், தொழிலாளர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தமது வாழ்க்கையையே விலையாகக் கொடுக்க வேண்டிய நிலைக்கு அல்லவா தள்ளப்பட்டனர்.
பணவரத்து சுருங்கிப் போனதால், விவசாயிகள், தாம் விளைவித்த தானியங்களை விற்க முடியாமல் தெருவில் கொட்டினார்கள். கூட்டுறவு சங்க கடன்களை நம்பி சாகுபடியைத் தொடங்க எண்ணியிருந்த விவசாயிகள் கந்துவட்டிக் கும்பலை நோக்கித் துரத்தப்பட்டார்கள்.
கூலிப் பணம் கொடுக்க வழியில்லாததால், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

திருமணத்திற்கும், மருத்துவத்திற்கும் சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாது போன நிலையில், பலரும் செய்வதறியாது தவித்துப் போனார்கள்.
 ஓய்வூதியப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியாத முதியவர்கள், மருந்துக்கும் சாப்பாட்டுக்கும் வழிதேடி அலைந்தார்கள்.
 நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கி வாசலிலிலேயே உயிரைத் துறந்தார்கள்.
சிறுதொழில்களும், கடைகளும் பணத்தைப் புரட்ட முடியாமல் நசிந்து நின்றன. சிறுதொழில்களும், கட்டிட வேலைகளும் முடங்கியதால், நாடெங்கும் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு சில இலட்சங்களைத் தொட்டது.
பொதுமக்களின் மீது திணிக்கப்பட்ட இத்துணை துன்பங்களை, சித்திரவதைகளை மோடி அரசும், பா.ஜ.க. கும்பலும் அனுதாபத்தோடா எதிர்கொண்டனர்.
 ”தேசத்தின் நலனுக்காக கியூவில் நிற்பதைக்கூடவா பொறுத்துக் கொள்ள முடியாது” என எகிறினார்கள், ”நாட்டின் எல்லைப் பகுதியில் நிற்கும் சிப்பாயின் கஷ்டத்தைவிடவா இதெல்லாம் பெரிது” எனக் கேட்டு அவமானப்படுத்தினார்கள்.
”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணத்தையோ இலஞ்சத்தையோ ஒழித்துவிட முடியாது. காரணம், கருப்புப் பணம் என்பது இந்த அமைப்பு முறையே திரும்பத் திரும்ப உருவாக்கும் பொருளாதார நடவடிக்கை.
 மேலும், மொத்தக் கருப்புப் பணத்தில் 1 சதவீதம் மட்டும்தான் ரொக்கமாகப் புழக்கத்திலுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...