bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 26 செப்டம்பர், 2018

ஒளரங்கசீப் முன் மண்டியிட்ட கிழக்கிந்திய கம்பெனி

1603ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபிறகு தொடர் வெற்றிகளை பதிவு செய்தது. 
ஒரு வந்தேறி நிறுவனம், உலக சரித்திரத்திலேயே முதல்முறையாக நாட்டையே பிடித்த வரலாற்று நிகழ்வை நிகழ்த்திக் காட்டியது.
ஆனால் அதற்காக ஆங்கிலேயர்கள் எடுத்த முயற்சியில் இறுதியில் வெற்றியடைந்தாலும், பல அவமானகரமான தோல்விகளையும் சந்திக்க நேர்ந்தது.
தோல்விகளை மறைப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதை நிரூபிப்பதில் வெற்றியும் கண்டது.

சிராஜ் உத் தவ்லா மற்றும் திப்பு சுல்தானை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், கிழக்கு இந்தியா கம்பெனி முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பிற்கு எதிராக போரிட முயன்று படுதோல்வியை எதிர்கொண்டது.
பிறகு, பிரிட்டனின் தூதர்கள் கைவிலங்குகளால் பிணைக்கப்பட்டு, முகலாய அரசவையில் ஒளரங்கசீப் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தங்கள் வர்த்தக மையங்களைத் தோற்றுவித்த கிழக்கிந்திய கம்பெனி, உலக அளவிலான வர்த்தகத்தை விரிவுபடுத்தியது.
இந்தியாவின் மேற்கு கடற்கரையில் பாம்பே, சூரத் நகரங்கள், கிழக்கு கடற்கரையில் சென்னை மற்றும் கல்கத்தாவில் இருந்து 20 மைல் தொலைவில், கங்கை நதியில் அமைந்துள்ள ஹூக்ளி மற்றும் காசிம் பஜார், ஆகிய வர்த்தக மையங்கள் கிழக்கத்திய கம்பெனியின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களாக விளங்கின.
இந்தியாவில் இருந்து பட்டு, வெல்லம், துணி மற்றும் கனிமத்தை பிரிட்டானியர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்தார்கள். குறிப்பாக டாக்காவின் மல்மல் ரக துணிக்கு இங்கிலாந்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.
பிரிட்டானியர்களின் வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்படாமல், பொருளின் மொத்த மதிப்புக்கு மூன்றரை சதவிகித வரியை விதித்தது முகலாய பேரரசு.
அந்த சமயத்தில், ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, போர்த்துகீசியர்களும், டச்சு வணிகர்களும், பல தனியார் வர்த்தகர்களும் இந்த பகுதியில் தீவிரமான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். முகலாய அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்ட அவர்கள், ஆங்கிலேயர்களிடம் இருந்த வணிக உரிமைகளை சொந்தமாக்க முயன்றனர்.
லண்டனில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி அலுவலகத்தின் தலைமையகத்திற்கு இந்த செய்தி கிடைத்ததும், நிறுவனத்தின் தலைவர் ஜோஜாயா சைல்டுக்கு கோபம் தலைக்கேறியது. தங்களது லாபத்தை வேறு யாரும் பங்கு போட்டுக்கொள்வதை அவர் விரும்பவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் ஜோஜாயா எடுத்த முடிவுமுட்டாள்தனமானது மட்டுமல்ல, பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என்றே சொல்லலாம். 
அரேபிய கடலிலும், வங்காள விரிகுடாவிலும் பயணிக்கும் முகலாயர்களின் கப்பல்களை வழிமறிக்கவும், அந்தக் கப்பல்களை கொள்ளையடிக்கவும் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இது மட்டுமல்லாமல், 1686 ஆம் ஆண்டில், பிரிட்டனில் இருந்து இரண்டு படைவீரர்களின் தொகுப்பை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார். இந்தியாவில் இருக்கும் படையின் உதவியுடன் சிட்டகாங்கை கைப்பற்றவேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

ஜங்-ஏ-சைல்ட்.
அவருடைய பெயரிலேயே இந்த சண்டை 'ஜங்-ஏ-சைல்ட்' என்று அழைக்கப்படுகிறது.
இதை சைல்டின் அறியாமை என்று அழைப்பதா அல்லது 308 வீரர்களின் உதவியுடன் உலகின் சக்தி வாய்ந்த, பணக்கார அரசருக்கு எதிராக போர் தொடுக்க கொண்ட வீரமாக கருதுவதா என்று தெளிவாக கூறமுடியவில்லை.
ஒளரங்கசீப் இந்தியாவில் பேரரசராக திகழ்ந்த அந்த சமயத்தில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை இந்தியா வழங்கியது. பொருளாதார ரீதியாக, அமெரிக்கா இன்று இருக்கும் வலுவான நிலையில் அன்று இந்தியா இருந்தது.
ஒளரங்கசீப்பின் ஆட்சி காலத்தில், முகலாய பேரரசு காபூலில் இருந்து டாக்கா வரையிலும், காஷ்மீர் முதல் பாண்டிச்சேரி வரை என 40 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரவியிருந்தது. அது மட்டுமல்ல, தக்காண சுல்தான்கள், ஆப்கானியர்கள், மராட்டியர்கள் என பல்வேறு விதமான சேனைகளை எதிர்த்து போராடி வெற்றிக் கொண்ட அனுபவமிக்க முகலாய ராணுவம், உலகின் எந்த ராணுவத்தையும் எதிர்த்து போராடக்கூடிய திறனை பெற்றிருந்தது.
டெல்லியின் படைகள் ஒருபுறம் என்றால், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கானின் படைகள் மறுபுறம் இருந்தன. முகலாய சம்ராஜ்ஜியத்தின் மொத்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதில், இந்தியர்கள், அரபியர்கள், ஆப்கானியர்கள், இரானியர்கள், ஐரோப்பியர்கள் என பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணி புரிந்தனர்.
லண்டனில் இருந்து மொகலாயர்களுக்கு எதிரான போர் அறிவிக்கப்பட்டதும், மும்பையில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் வீரர்கள் முகலாயர்களின் சில கப்பல்களை கொள்ளையடித்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முகலாயர்களின் அல்பஹர் சிதீ யாகூத், சக்திவாய்ந்த கடற்படையை கொண்டு மும்பை கடற்கரையில் ஆங்கிலேயர்களை முற்றுகையிட்டார்.
அந்தச் சமயத்தில், பம்பாயில் இருந்த அலெக்ஸாண்டர் ஹாமில்டன் என்ற ஆங்கிலேயர், பிற்காலத்தில் எழுதிய தனது ஒரு புத்தகத்தில் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
"20 ஆயிரம் படையினருடன் அல்பஹர் சிதீ தாக்குதல் நடத்தினார். நள்ளிரவில் அவர் ஒரு பெரிய துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தபோது, ஆங்கிலேயர்கள் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தனர். அரைகுறை ஆடையில் இருந்த பெண்கள், குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்" என்று அவர் அந்தப் போரை பதிவு செய்துள்ளார்.
"சிதீ யாகூத், கோட்டைக்கு வெளியே இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இடங்களை அபகரித்துக் கொண்டு, அங்கு முகலாயக் கொடியை பறக்கவிட்டார். சண்டையிட வந்த ஆங்கிலேய படைவீரர்களை, முகலாய படை வீரர்கள் வெட்டித் தள்ளினார்கள். பலரை பிடித்து சங்கிலியால் பிணைத்து மும்பையின் தெருக்களில் நடத்தி அழைத்துச் சென்றனர்" என்கிறார் அலெக்ஸாண்டர்.
அந்த காலகட்டத்தில் மும்பையின் பெரும்பாலான பகுதிகள் போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் பேரரசர் போர்த்துகீசிய இளவரசியை மணந்து கொண்டபோது, மும்பை துறைமுகப் பகுதி, திருமணப் பரிசாக கொடுக்கப்பட்டது. அங்கு வலுவான கோட்டையை கட்டிய ஆங்கிலேயர்கள், தங்கள் வணிகத்தைத் தொடங்கினார்கள்.

14 மாத முற்றுகை
படிப்படியாக, இங்கிலாந்து நாட்டின் வர்த்தகர்கள், வீரர்கள், மத போதகர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் நிபுணர்கள் என கடல் கடந்து வந்தவர்களும், இந்தியாவில் இருந்தவர்களும் மும்பையில் குடியேறத் தொடங்கினார்கள். எனவே கோட்டையில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தது.
முகலாயர்களின் முற்றுகையின்போது கோட்டையில் அனைவரும் தஞ்சமடைய, அதனை முற்றுகையிட்டார் சிதீ யாகூத். கோட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விரைவிலேயே தீர்ந்து போயின.
மறுபுறமோ, நோய் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டனர். அதோடு, மும்பையின் தட்பவெட்பநிலை ஒத்துக் கொள்ளாத பிரிட்டானியர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர்கள் சிலர், ரகசியமாக தப்பிச் சென்று சிதீ யாகூத்தை சந்தித்தனர். அவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக ஹெமில்டன் கூறுகிறார்.
முகலாய தளபதி விரும்பியிருந்தால், கோட்டை மீது தாக்குதல் நடத்தி, அதை கைப்பற்றியிருக்கலாம். ஆனால், 'கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்' என்ற எண்ணத்தில் அவர் முற்றுகையிட்ட பிறகும் வெகுதொலைவில் இருந்தே துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதேபோன்ற சம்பவம், நாட்டின் கிழக்குப் பகுதியிலும் நடந்தது. முகலாயர்களை தாக்க திட்டமிட்டால் அவர்கள் சும்மா இருப்பார்களா? ஹூக்ளி நகரத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கோட்டையை வங்காளத்தின் சுபேதார் ஷாயிஸ்தா கான் முற்றுகையிட்டார். கோட்டையில் இருந்து செல்லும் அனைத்து வழிகளையும் அவர் மூடிவிட்டார்.
இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதால் ஹூக்ளி கோட்டையின் முற்றுகை விரைவில் முடிந்துவிட்டது, ஆனால் பாம்பேயில் 15 மாதங்கள் வரை முற்றுகை தொடர்ந்தது. இறுதியில் வேறு வழியே இல்லை என்ற நிலையில் கிழக்கிந்திய கம்பெனி தனது தூதர்கள் இருவரை ஒளரரங்கசீப்பின் அரசவைக்கு அனுப்பியது. முற்றுகையை முடித்துக் கொள்வதற்காக ஒளரங்கசீப் விதிக்கும் நிபந்தனைகளை கேட்க அனுப்பப்பட்ட தூதுவர்கள் அவர்கள்.
ஓளரங்கசீப்பின் அரசவை
ஜார்ஜ் வெல்டன் மற்றும் அப்ராம் நாவார் ஆகிய அந்த இரண்டு தூதர்களுக்கும், பல மாத முயற்சிகளுக்கு பிறகு, 1690ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் முகலாய பேரரசர் ஒளரங்கசீப்பின் அரசவைக்கு செல்ல அனுமதி கிடைத்தது.
கைகளிலும் விலங்கிடப்பட்ட தூதர்கள் இருவரும் குற்றவாளிகளைப் போல் அழைத்துச் செல்லப்பட்டனர். தலை வணங்கி மண்டியிட்டிருந்த அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு ஒரு நாட்டின் பிரதிநிதிகளைப் போல தோன்றவில்லை, யாசகம் கேட்க வந்தவர்களைப் போல் தோன்றியது.
தூதர்கள் இருவரும் ஒளரங்கசீப்பின் முன் அழைத்துச் செல்லப்பட்டு, அருகில் சென்றதும், தரையில் நெடுங்கிடையாக வணங்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது.

தூதர்களை கடுமையாக சாடிய பேரரசர் ஒளரங்கசீப், அவர்களது விருப்பம் என்ன என்று கேட்டார்.
முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் குற்றத்தை ஒப்புக் கொண்ட தூதர்கள், அதற்காக மன்னிப்பு கோரினார்கள். பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வணிக உரிமம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும், பாம்பே கோட்டை முற்றுகையை முடித்துக் கொள்ளவேண்டும் என்றும் மேலிடத்தின் விருப்பங்களை எடுத்துரைத்தனர்.
இந்த போருக்காக முகலாய அரசுக்கு ஆன செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தரவேண்டும், இனிமேல் முகலாய அரசுக்கு கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் கோட்டையை முற்றுகையில் இருந்து விடுவிக்க பேரரசர் ஒளரங்கசீப் ஒப்புக்கொண்டார்.
மேலும், கிழக்கிந்திய கம்பெனியின் தலைவர் ஜோஜியா சைல்ட் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அவர் இந்தியாவிற்கும் இனி காலடி எடுத்து வைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஒளரங்கசீப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, வேறு வழி எதுவும் இல்லாத நிலையில், நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், 14 மாத முற்றுகையில் இருந்து விடுதலை பெற்றது.
முற்றுகைக்கு முன்பு கோட்டையில் 700 முதல் 800 பேர்வரை இருந்ததாகவும், தொற்று நோய்க்கும், முகலாயர்களின் வாளுக்கும் இரையாகாமல் எஞ்சியிருந்தவர்களின் எண்ணிக்கை அறுபதாக குறைந்துவிட்டது என்று ஹாமில்டன் தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
முகலாய பேரரசால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியைப் பற்றிய தகவல் பிரிட்டன் மக்களை சென்றடையக்கூடாது என்பதற்காக கிழக்கிந்தியா கம்பெனி பல்வேறு முயற்சியையும் மேற்கொண்டது.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் முகலாயர்களின் போர் பற்றி ஜான் ஆவுங்கடின் என்பவர் எழுதிய போது, இதில் கிழக்கிந்திய கம்பெனியின் தோல்வியின் காரணம் முகலாயர்களின் ஏமாற்றுவேலை என்று எழுதப்பட்டது. இதற்காக அவருக்கு 25 பவுண்டு 'பரிசுத்தொகை' வழங்கப்பட்டது. அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது புத்தகத்தில் பிரிட்டானிய படைவீரர்களின் வீரத்தைப் பற்றிய கதைகளை பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் ஜான் ஆவுங்கடின். பத்து மடங்கு பலம் கொண்ட எதிரிகளின் ராணுவத்துடன் மோதிய ஆங்கிலேயர்கள் வீரத்தை எடுத்துக் காட்டினார்.
போரில் வென்றது பிரிட்டானியர்களே, முகலாயர்கள் அல்ல என்றும், தோற்கடிக்கப்பட்டது சிதி யாகூத் என்றும் பதிவு செய்திருக்கிறார். கிழக்கிந்திய கம்பெனியின் தூதர்கள் முகலாய அரசவைக்கு சென்று மன்னிப்புக் கோரியதையும், அங்கு ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தைப் பற்றிய தகவல்களையே அவர் மறைத்துவிட்டார்.

ஹேமில்டன் உண்மையான தகவல்களை தனது புத்தகத்தில் எழுதினார், ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் புத்தகம் வெளியானது என்பது காலத்தின் மிகப்பெரிய சோகம். வரலாற்று நிகழ்வுகள் மறைக்கப்படுவதும், அழுத்தப்படுவதும் திருத்தப்படுவதும்கூட சரித்திரத்தின் ஏடுகளில் பதிவாகிறது என்பதையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய தோல்வியைப் பற்றி சொல்லப்பட்ட புத்தகம் வெளிவந்தபோது, அது அதிக மிகவும் முக்கியத்துவம் பெற முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டது என்பது காலத்தின் கோலமா? திட்டமிடப்பட்ட சரித்திர மறைப்பா?
ஒளரங்கசீப் பிரிட்டனை மன்னித்து, அவர்களின் வணிக உரிமத்தை புதுப்பிக்காமல், இந்தியாவை விட்டு வெளியேற்றியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற ஆர்வமூட்டும் கேள்வி மனதில் பிரம்மாண்டமான கேள்வியாக விஸ்வரூபம் எடுக்கிறது. 
அப்படி நடந்திருந்தால், இந்தியா வரலாறு மட்டுமல்ல, உலக வரலாறும் வேறு மாதிரி ஆகியிருக்கும் அல்லவா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்துக்களை ஒளரங்கசீப் வெறுத்தாரா?
வரலாற்றாசிரியர் ஆண்ட்ரி ட்ரஷ்கே. தமது 'ஒளரங்கசீப்-தி மேன் அண்ட் தி மித்' (Aurangzeb: The Man and the Myth) என்ற புத்தகத்தில், இந்துக்களின் மீது கொண்ட வெறுப்பால்தான் ஒளரங்கசீப் ஆலயங்களை அழித்ததாக கூறுவது தவறு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். 

ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சிகாலம் 20 ஆண்டுகள் குறைவாக இருந்திருந்தால் நவீன வரலாற்றாசிரியர்கள் அவருடைய வரலாற்றை வித்தியாசமாக புரிந்து கொண்டிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறார் ஆண்ட்ரி ட்ரஷ்கே.
பிபிசி.தமிழோசை 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

ரபேல் ஊழல்

இந்தியாவில் போர் விமானங்களின் தேவை குறித்து அவ்வபோது ஆய்வு செய்யப்படுவதும், அதற்கான முதலீட்டில் இறங்குவதும் வாடிக்கையான ஒன்று. 
இந்திய விமானப் படையில் கடைசியாய் சேர்க்கப்பட்ட போர் விமானம் 1996ல் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட சுகோய் விமானம் ஆகும். அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு போர் விமானங்களையும் இந்தியா பெறவில்லை.

காங்கிரஸ் ஆட்சி ஒப்பந்தம்


போர் விமானங்களின் தேவை உணரப்பட்ட பின்பு 126 போர் விமானங்களை வாங்குவதற்காக ஏற்பாடு செய்தது மன்மோகன் சிங் அரசு. இதற்காக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளை பட்டியலில் வைத்திருந்தது இந்திய அரசு. பின்னர் 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
126 போர் விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டாலும் அதில் 18 விமானங்களை மட்டுமே பிரான்ஸ் நாடு பறக்கும் நிலையில் தயாரித்து இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் மீதம் இருக்கும் 108 விமானங்களையும் இந்தியாவில் தயாரிப்பதற்காக தொழில்நுட்ப விபரங்களை இந்தியாவிற்கு தர வேண்டும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
108 விமானங்களை தயாரிப்பதற்கு ஏற்ப இடங்கள் மற்றும் இதர தொழில் நுட்ப வசதிகள் அனைத்தையும் முன்னேற்பாடாக செய்து வைத்திருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட். இதனால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், பாதுகாப்புத் தொழில்நுட்பத் துறையில் மற்றொரு மைல் கல்லினை எட்டுவதற்காகவும் தயார் நிலையில் இருந்தது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட்.
இந்தியாவில் தயாராக இருந்த 108 விமானங்களையும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் தயாரிப்பதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.  2014ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய பாஜக ஆட்சி அமைத்தது.
 மோடியின் (பாஜக) அரசு  போட்ட முறைகேடான ரபேல்  ஒப்பந்தம்
2015ம் ஆண்டு அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து அறிவித்தார்.
புதிதாக ஒப்பந்தம் ஒன்றிற்கு கையெழுத்திட்டார் மோடி. அதன்படி 18 விமானங்களுக்கு பதிலாக பறக்கும் நிலையிலேயே சுமார் 36 விமானங்களை பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்க இருப்பதாக கூறினார்.
பறக்கும் நிலையில் விமானங்கள் வாங்கப்பட்டாலும் அதனுள் பல்வேறு தொழில் நுட்பக் கருவிகளை பொருத்தும் பணியையும் அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் பணியையும் இந்தியா மேற்கொள்ளும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸல்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கு தர வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தாத நிலையில் ரிலையன்ஸ் டிபன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறது டஸ்ஸல்ட் நிறுவனம்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள் நாட்டிலேயே விமானங்களை தயாரிக்காமல் எப்படி அனைத்து விமானங்களையும் பறக்கும் நிலையிலேயே வெளியில் இருந்து வாங்க கூடும் என்று கேள்வி எழுப்பினர்.

பல்வேறு ஆண்டுகளாய் அனுபவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனம் இருக்கும் போது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
58,000 கோடி ரூபாய் என்பது அதிக பட்ச விலை என்றும், காங்கிரஸ் கட்சி இறுதி செய்து அறிவித்த தொகையை விட 3 மடங்கு அதிக பணம் இதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.  மக்களின் வரிப்பணத்தையும் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் நடைபெற்றிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான். ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் ஹோலண்டே

ரபேல்  ஊழல் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்கோய்ஸ் ஹோலன்டே ”எங்களுக்கு ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தினை தேர்வு செய்வதைத் தவிர வேறெந்த வாய்ப்புகளையும் இந்திய அரசு தரவில்லை” என்று குறிப்பிட்டு பேசினார். 
இதுவரை தொடர்ந்து “டஸ்ஸல்ட் நிறுவனம் தனக்கான ஆஃப்செட் பார்ட்னர்களை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது” என பாஜகவினர் கூறிவந்தனர்.
ஹோலண்டேவின் கருத்து வெளியானதும் “காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மோடியை திருடர் என்றும், நம் நாட்டு ராணுவத்தினரின் ரத்தம் அவமதிக்கப்பட்டது என்றும்” ட்விட்டரில் கருத்து கூறினார்.
இந்நிலையில் நேற்று, ரபேல் ஒப்பந்தம் மற்றும் ரபேல் ஊழல் குறித்து முறையான முழுத் தகவல்களையும் விசாரணையையும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மனு ஒன்று வைக்கப்பட்டது. மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரபேல் ஊழல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு என்ன ?

ரிலையன்ஸ் நிறுவனம் பல வருடங்களாக பாதுகாப்புத் துறையில் இருந்து வருகிறது என்று ஒரு வாதம் முன் வைக்கப்பட்டாலும், 2015ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி தான் தன்னுடைய ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனத்தை துவங்கியது. சற்றே சரியாக சொல்லப் போனால் நரேந்திர மோடி ப்ரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான்.
2016ம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் ஃபரான்கோய்ஸ் ஹோலண்டே.  அதே சமயத்தில் ஹோலண்டேவின் காதலி ஜூலி கயேத் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் அறிவித்தது.
பிரான்கோய்ஸ் ஹோலண்டேவின் காதலியை வைத்து படம் தயாரித்த ரிலையன்ஸ்.
ஏப்ரல் 2015ம் ஆண்டு பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.  அதில் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது. இதனை அறிவிக்கும் போது அம்பானி பிரான்ஸில் இருந்தார் .அதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டிற்கான குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்தார் ஃபரான்கோய்ஸ் ஹோலண்டே.  அதே சமயத்தில் ஹோலண்டேவின் காதலி ஜூலி கயேத் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாக ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் அறிவித்தது.
2016ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் பிரான்ஸ் அதிபரின் காதலியை கதாநாயகியாக கொண்டு, ரோக் இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறியது. ஜனவரி 26, 2016ல் இந்தியாவும் ஃப்ரான்ஸூம் 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கையெழுத்திட்டது.
ரபேல் போர்  விமானங்கள் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணி  கையெழுத்தான பின்பு,  எட்டு வாரங்கள் கழித்து ரிலையன்ஸ் தயாரித்த பிரெஞ்ச் படமானது 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது.
டவுட் லா ஹௌட் என்ற தலைப்பில் வந்த அந்த படம் அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்டோவியா ஆகிய நாடுகளில் வெளியானது.  98 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ், ரோக் இண்டர்நேசனல் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்களிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.
அதற்கு அடுத்த வருடம் ரபேல் விமானங்களை தயாரிக்க உள்ள டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணியை தொடங்கியது ரிலையன்ஸ் டிபென்ஸ். அதில் 51% பங்கினை ரிலையன்ஸ் நிறுவனமும் 49% பங்கினை டஸ்ஸால்ட் நிறுவனமும் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
டஸ்ஸால்ட் ஏவியேசன் செயற் தலைவர் எரிக் ட்ராப்பியர் மற்றும் அம்பானி இடையே
DRAL (Dassault Reliance Aerospace Ltd) ஒப்பந்தம் நாக்பூரில், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லே மற்றும் இந்தியாவின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் தேவிந்தர ஃபட்னாவிஸ் முன்னிலையில் கையெழுத்தானது. 
2016ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி ரிலையன்ஸ் எண்டெர்டைன்மெண்ட் பிரான்ஸ் அதிபரின் காதலியை கதாநாயகியாக கொண்டு, ரோக் இண்டெர்நேசனல் நிறுவனத்துடன் இணைந்து பிரெஞ்ச் படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக கூறியது. ஜனவரி 26, 2016ல் இந்தியாவும் ஃப்ரான்ஸூம் 36 போர் விமானங்களை வாங்குவதற்காக கையெழுத்திட்டது.
ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன்பு தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனமே உருவாக்கப்பட்டது...
ரபேல் போர்  விமானங்கள் தயாரிக்கும் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் DRAL (Dassault Reliance Aerospace Ltd) என்ற கூட்டணி  கையெழுத்தான பின்பு,  எட்டு வாரங்கள் கழித்து ரிலையன்ஸ் தயாரித்த பிரெஞ்ச் படமானது 2017 டிசம்பரில் வெளியிடப்பட்டது.
டவுட் லா ஹௌட் என்ற தலைப்பில் வந்த அந்த படம் அமீரகம், தைவான், லெபனான், பெல்ஜியம், எஸ்டோனியா, மற்றும் லட்டோவியா ஆகிய நாடுகளில் வெளியானது.  98 நிமிடம் ஓடும் இந்த படம் இந்தியாவில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டோஷாப் நிலவு.
சென்னையில்23 செப்டம்பர்  இரவு நிலவில் திடீரென ஒரு முகம் தோன்றியதாகவும், சற்று சாய்ந்து பார்ப்பதுபோல் அம்முகம் இருப்பதாகவும் பரபரப்பு கிளம்பியது. 
அதுவும் எல்லோரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில் இரண்டு கண்கள், மூக்கு, காது மற்றும் உதடு மிகவும் தெளிவாக தென்பட்டதாக வாட்ஸ் அப்களிலும் இதர சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரவின.
இதைக் காண இரவு முழுவதும் பொதுமக்கள் வீதியிலும், வீட்டு மாடியிலும் குவிந்தனர். 

மேலும் அந்த முகத்தை பார்த்ததாக சிலரும், ‘அப்படி எதுவும் இல்லையே?’ என பலரும் கூறினர் . 
கற்பனையால்  நிலவில் தோன்றிய முகம்  சாய் பாபா உடையது  என்று சிலரும்,  அது இயேசு முகம்தான் என்று சிலரும் சண்டையில்  இறங்கினர்.
ஆனால் நிலவில் அப்படி முக உருவ அமைப்பு தோணறவில்லை என  வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பாட்டி வடை சுட்டுவது போன்ற கற்பனை முகம்தான் அது என்றும்  முகம் இருப்பது போல வெளியான நிலா படங்கள் அனைத்தும் போட்டோஷாப் செய்யப்பட்டவைதான்  என்றும் கூறினர்.
போட்டோஷாப் வல்லுநர்கள் பாஜகவினர்தான் என்றால் சாய் பக்தர்களும் போட்டிக்கு வருகின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 12 செப்டம்பர், 2018

பொருளாதார மேதை

 மோ(ச)டி...!
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை தான் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றி பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் வெளியிட்ட அறிக்கையில்  தகவல் வெளியாகியுள்ளது. 

இது பிரதமர் மோடிக்கு அடுத்த கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளின் வசூலிக்கப்படாத வாராக்கடனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக நலிவடைந்துள்ளது. ரூ.4 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகையானது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 


இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் கருத்தைக் கேட்டிருந்தது முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு.

அதற்கு பதிலளித்திருந்த ரகுராம் ராஜன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளின் பட்டியலை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியல் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
ஆனால் இதுவரை அந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இன்று தனது ட்விட்டரில், “ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016 ஆம் ஆண்டு வங்கி மோசடியாளர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அதன் மீது இப்போது வரை மோடி நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலில் இப்போது வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோர் பெயரும் உள்ளது. இதன் மூலம் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர் ரகுராம் ராஜன்.

“நெருக்கடியான காலத்தில், வங்கிகள் நடவடிக்கை எடுப்பதில் மந்த போக்கில் செயல்பட்டுள்ளன. அப்போதுகூட கடன்களை வாராக்கடன்களாக அறிவிப்பதைவிட அவற்றை மாற்றியமைப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டின. 
இருந்தும் கடனாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் போனதன் விளைவாக, வாராக்கடன் இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. 
பொதுத் துறை வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக திறனை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தலையீடுகளை பொதுத்துறை வங்கிகளில் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பண மோசடியை குறைப்பதே ஒரே தீர்வாக இருக்கும்” என்றும் தான் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.
=========================================================================================
இந்திய  மதிப்பிழக்க நடவடிக்கை :
 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. 
ஆனால் அதன் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. 
2017-18ம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை மோடியின் இத்திட்டத்தை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
நல்ல காரணத்திற்காகத் தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. நல்ல காரணத்திற்காகத் தான் என்றும் கூற முடியாது.
காரணம் பண மதிப்பிழக்க நீக்கத்திற்கு முன்பு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பட்சத்தில் அப்படி கூறுவதும் இயலாது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இந்திய அரசு ஆர்.பி.ஐக்கு 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை ஒன்றை அனுப்பியது. 
ஆர்.பி.ஐக்கு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றி ஆராய ஆர்.பி.ஐக்கு கால அவகாசமே தரவில்லை. அடுத்த நாள் நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதன்மை நிதி அலோசகர் அச்சமயத்தில் கேரளாவில் இருந்தார். முறையாக அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மத்திய அமைச்சகத்திடமும் இது குறித்து ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

பண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வி. எங்கே?


பண மதிப்பிழக்க நடவடிக்கை கறுப்புப் பணத்தினை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழகத்தினை தடுப்பதற்காகவும், பொருளாதார தீவிர வாதத்தினை ஒழிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது. 
ஆனால் இந்த இலக்குகள் எதையுமே எட்டாமல் தோல்வியுற்றது பண மதிப்பிழக்க நடவடிக்கை.
புதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. கள்ள நோட்டுகளும் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் இருந்து தான் வருகிறது. 
அதே போல் பொருளாதார தீவிரவாதமும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே தான் இருக்கிறது.

கேஷ்லெஸ் எக்கானமி :

இந்தியாவில் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தி கேஷ்லெஸ் இந்தியாவினை உருவாக்குவதும் மிக முக்கியமான இலக்காக இருந்தது இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கையில். 
அக்டோபர் 28, 2016ம் ஆண்டு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பண மதிப்பானது ரூபாய் 17,54,022 கோடியாகும் . 

ஆகஸ்ட் 17, 2018 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பண மதிப்பானது ரூபாய் 19,17,129 ஆகும். 
ஆகவே இந்த இலக்கினையும் எட்டவில்லை பண மதிப்பிழக்க நடவடிக்கை.

இந்தியர்களும் கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும்

  • இந்திய மக்கள் பணத்தினை அதிகம் நம்புகிறார்கள். 
  • 2016ல் இருந்ததை விட தற்போது மக்கள் அதிகமாக பணத்தினை உபயோகிக்கிறார்கள்.
  • வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. 
  • ஆனால் தற்போதோ அந்த சேமிப்பின் மதிப்பு 8.1ல் இருந்து 7.1ஆக குறைந்தது.
  • வீட்டின் சேமிப்பு மதிப்பு குறைவானதால் க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்தது.
  • க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்ததால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டது .
  • நிலைமை இப்படியாக இருக்க பணமதிப்பிழக்க நடவடிக்கை வெற்றியின் பாதையில் பயணிக்கிறது என்று தங்களுக்குள் கொண்ஆடிக் கொண்டிருக்கிறார்கள். 
  • இதனால் தான் வருமான வரி அதிகமாக வந்திருக்கிறது என்று கூறிவருகிறார்கள் உண்மை.
  • சுமார் 5.42 கோடி இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஃபைல் ஆகியுள்ளது. ஆனால் சுமார் 1 கோடி ஃபைலர்ஸ் ‘நில்’ என்றும் வருமான வரி ரிட்டர்னஸ் தாக்கல் செய்துள்ளனர்.  பல்வேறு போலி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெரிவித்திருக்கிறது. 
  • ஆனால் இதற்கெல்லாம் முடிவு எப்போது எட்டப்படும்?
  • அடுத்தது, இணையம் மூலமாக பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 
  • ஆனால் கடந்த நான்கு வருடங்களில் 14.3, 10.7, 9.1, 24.4 மற்றும் 12 என்ற ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்பட்டு வருகிறது.
  • இவை அனைத்தைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று 15,31,000 கோடி ரூபாய் பணமும் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்.பி.ஐ ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. 
  • பண மதிப்பிழக்க நடவடிக்கை மூலம் தன்னிடம் இருந்த அனைத்து கறுப்புப் பணத்தினையும் வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டார்கள். 
  • மோடியின்  பண மதிப்பிழக்கநடவடிக்கைகளால்தான்  இதெல்லாம்  நடந்தது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  09/09/2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். 

சனி, 8 செப்டம்பர், 2018

பாசிசம் என்றால் என்ன?

`பாசிஸ்ட்` மற்றும் `பாசிசம்` ஆகியவை சாதாரண வார்த்தைகள் போல தெரிந்தாலும், அது கல்வியாளர்களிடையே பெரிய ஆழமான, பெரிய கருத்து மோதலை உருவாக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து ஆறு தசாப்தங்களை கடந்துவிட்ட நேரத்தில், நாசி ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் அதை சுற்றி நடந்த விஷயங்களுடன் தொடர்புப்படுத்தியே இன்று வரை ` பாசிசம்` பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் 1922இல் இருந்த முசோலினியின் கருப்புச்சட்டை குழுவே முதன்முதலில் அதிக அதிகாரத்தை கையில் பெற்ற `பாசிஸ்ட்` இயக்கமாகும். அவர்களின் இயக்கத்தை தேசியவாதிகள் என்றும், அதிகாரவாதிகள் என்றும் நிச்சயமாக கூற முடியும்.
அரசியல் அதிகாரத்திற்காக நடத்தப்படும் சண்டையில் வன்முறை வெடித்தால் அதை அவர்கள் ஏற்பவர்களாக இருந்தார்கள் என்றாலும், அந்த குழுவின் பிற குணங்கள் என்பது அறிவுசார் கருத்து மோதல்களுக்கு உட்பட்டதே.
`கொடுமை என்னவென்றால். என்னால் இதற்கு சாதாரணமாக ஒரு விளக்கத்தை அளிக்க முடியாது,` என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெவின் பாஸ்மோர். இவர் வரலாற்றுத் துறையை சேர்ந்தவர் என்பதோடு, பாசிசம்: ஒரு மிகச் சிறிய அறிமுகம் (Fascism: A Very Short Introduction) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
`பாசிசம்` என்ற கோட்பாட்டின் கீழ் வரக்கூடிய நம்பிக்கைகளை கொண்டுள்ள ஒருவர் `பாசிஸ்ட்` என்று நீங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்றாலும், அந்த `பாசிசம்` என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை நீங்கள் இன்னமும் விளக்க வேண்டியுள்ளது.
`பொதுவாக பாசிச இயக்கம் என்பது, இத்தாலியில் இருந்த பாசிசத்தை போன்றதா? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் பலருக்கும், `பாசிசம்` மற்றும் `பாசிஸ்ட்கள்` என்ற வார்த்தை என்பது இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியில் நடந்த பாசிசத்தை ஒப்பிடும் வகையிலேயே இருக்கின்றன என்கிறார்.
பாசிசம் முதல் நாசிசம் வரை உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மக்கள் நினைக்கும் அளவிற்கு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்பவை அல்ல. இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக்கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை.
முசோலினி-படத்தின் காப்புரிமைHULTON-DEUTSCH COLLECTION/CORBIS/CORBIS VIA GETTY
ஆகையால், ஒரு குழுவின் சித்தாந்தத்தில் இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை `பாசிஸ்ட்டுகள்` என்று வகைப்படுத்திவிட முடியாது என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
இத்தாலியில் இருந்த பாசிசத்தில் `கார்ப்பரேட்டிசம்` கலந்தே இருந்தது. அரசியல் ரீதியாக அது கலந்திருந்தது. கார்ப்பரேட்டிசம் (கூட்டுழைப்புவாதம்) என்பது, மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது.
இந்த காலத்தில் உள்ள ஜனநாயகத்தைப் பொறுத்தரையில், ஒவ்வொறு தனிமனிதனும், ஒரு அரசியல் குழுவாக உள்ளார். ஆனால், கார்ப்பரேட்டிச முறை என்பது, போட்டியை முன்னிறுத்தாமல், ஒத்துழைப்பை முன்னிறுத்துகிறது.
பாசிசத்தின் மற்றொரு குணாதிசியமாக பார்க்கப்படுவது தன்னிறைவு பெற்ற பொருளதாரம். ஆனால் இந்த காலத்தில் தன்னிறைவு பெற்ற பொருளாதாரங்களை உடைய பல நாடுகள் பாசிச நாடுகளாக பார்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தாலிபனுக்கு கீழ் இருந்தபோது ஆப்கானிஸ்தானை அப்படிச் சொல்லலாம்.
முசோலினிபடத்தின் காப்புரிமைROGER VIOLLET/GETTY IMAGES
பாசிஸ்ட்டுகளை குறிக்கும் குறியீடுகளும் கருத்தியலில் முக்கிய பங்கு வகிப்பவை. பழங்கால ரோமானியத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடான ஒரு கோடாரி மற்றும் இரும்பு குழாய்கள் `பாசஸ்` என்று குறிப்பிடப்பட்டது. அது முசோலினியின் பாசிஸ்ட்டுகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு குறியீடு.
பிறகு நாசிக்கள் ஸ்வஸ்திக்கை பயன்படுத்தினர். இந்த குழுக்களுக்கிடையே சில வகையில் பொதுவான நோக்கங்கள் உள்ளன என்பதை இந்த குறியீடுகள் விளக்கின.
இத்தாலிய பாசிஸ்ட்டுகளின் அரசியல் கொள்கைகளும், ஜெர்மானிய நாசிக்களின் அரசியல் கொள்கைகளும் வெவ்வேறாக இருந்த காரணத்தால் இந்த இரு பாசிச இயக்கத்தின் சிந்தாந்தங்கள் ஒன்று சேரவில்லை. இதுவும், `பாசிஸ்ட்` என்று ஒருவரை முத்திரையிடுவதில் உள்ள அடுத்த பிரச்சனை ஒன்று இருக்கிறது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக பல்வேறு இடங்களின் பல்வேறு சூழல்களுக்காக பயன்படுத்தப்பட்டதே `பாசிஸ்ட்` என்ற வார்த்தைக்கான ஒற்றை விளக்கத்தை தொகுத்தளிக்க முடியாததன் காரணம்.
விரிவாக கூறவேண்டுமென்றால், இது வகைப்படுத்த பயன்படும் வார்த்தையாக இல்லாமல், கண்டனத்தை பதிவிட பயன்பெறும் வார்த்தையாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாசிக்கள் மிகவும் கொடியவர்கள், இந்த வகையில் பார்க்கும்போது, அவர்களின் சித்தாந்தம் அடிப்படையில் பாசிசத்துடன் தொடர்புடையது, அப்படியென்றால், பாசிசம் அடிப்படையில் கொடுமையானது.
` ஒரு அரசியல் இயக்கத்தை பாசிச இயக்கம் போல செயல்படுகிறது என்று சொல்வதற்கு இது முக்கிய கருவியாக உள்ளது` என்கிறார் பாஸ்மோர்.
பாசிஸ்ட்டுகள் என்று வகைப்படுத்தப்பட்ட கட்சி எதுவும் பெரும்பாலும் தங்களை அவ்வாறு குறிப்பிட்டுக்கொள்வதில்லை.
` பாசிசத்தில் உள்ள பல கருத்துகளோடு ஒத்துப்போகும் சூழலிலும், ஏன் தங்களை அவர்கள் பாசிஸ்ட் என்று அழைத்துக்கொள்வதில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், பாசிசத்தில் எதிரான இயக்கங்கள் அனைத்தும், பாசிசத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டே குறிப்பிட்டுள்ளன.`
நாசிக்கள் ஸ்வஸ்திக்படத்தின் காப்புரிமைCORBIS/CORBIS VIA GETTY IMAGES
ஒருவர் செய்யும் செயல்களாலும், அவரை பார்கும்போதும், அவர் ஒரு `பாசிஸ்ட்` என்று அடையாளப்படுத்த முடியும் என சில குறிப்பிடுகிறார்கள். அவர்களை பொருத்தவரையில், எந்த ஒரு தேசியவாத அரசியல் இயக்கம் அதிகாரத்துவத்தை செய்கிறதோ, பேச்சுரிமையை நசுக்குகிறதோ, ஒரு கட்சி கொள்கை அல்லது சர்வாதிகாரத்தில் துணை நிற்கிறதோ, இனவெறி கொண்டவர்களாக அது தெரிகிறதோ, அதை வெளிப்படையாக ` பாசிஸ்ட்கள்` என்று முத்திரை குத்துகிறார்கள்.
ஆனால், இதற்கான துல்லியமான விளக்கம் என்ன என்பதில் இன்னும் விவாதம் தொடர்கிறது.
`மாணவர்கள் இந்த சொல்லுக்கு இதுதான் அர்த்தம் என்பதுபோல எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அந்த பக்கம் நான் என் கருத்தை கொண்டு செல்கிறேன். வார்த்தைகளுக்கான அரத்தம் என்ன என்ற பட்டிமன்றம் தானே வாழ்க்கையும், வரலாறும்.` என்கிறார் பாஸ்மோர்.
                                                                                                                                 நன்றி:பிபிசி.தமிழோசை.

திங்கள், 3 செப்டம்பர், 2018

#'பாசிச பாஜக ஒழிக'#

நேற்று சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். 
விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். 
சோபியா

அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.
விமானம் பயணம் நெடுகசோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். 
பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.
இதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். 
22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார்.
 இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார் என்றும் சோஃபியா அதற்கு மறுத்திவிட்டார் என்றும் அவரது வழக்கறிஞர் அதிசயகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதனால், தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். 
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். 
அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார்.
இதற்குப் பிறகு, சோஃபியா மீது இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். 
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் மீது பதிவுசெய்யப்பட்ட 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதன் பிறகு மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சோஃபியா, வயிற்று வலி என்று கூறியதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை நாளை பிணையில் எடுப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கிடையில் விமான நிலையத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், சோஃபியாவுக்குப் பின்னால் ஏதேனும் அமைப்புகள் இருக்கிறதோ என சந்தேகிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.பாஜக ஆடசி அக்கிரமங்களை,மக்கள் விரோதப்போக்கை பற்றிப்பேசினாலே நக்சல்கள் என்பதும் கைது செய்வதும் இந்துத்துவ தீவிரவாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்களை கொலை செய்வதும் மோடி ஆட்சி நாஜி,பாசிச ஆட்சி என்பதை உறுதி செய்கிறது.
M.K.Stalin
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
4,310 RETWEETS 8,716 LIKES
சோபியா கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சோபியாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கூறியுள்ளார். 
"அப்படிச் சொல்பவர்களையெல்லாம் சிறையில் அடைப்பீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கிறேன், பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன் அந்த பெண் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன.
தற்போது  இந்திய அளவில் 'பாசிச பாஜக_ஆட்சி ஒழிக' என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் டிரண்டாகி வருகிறது.
இது பாஜகவினருக்கு தேவையா?

ஏற்கனவே பெட்ரோல் விலை விவகாரத்தில் அணைத்து தரப்பு மக்களும் கடும் கோபத்தில் மனதுக்குள் குமைந்து வருகின்றனர்.இந்தியாவில் 82 ரூபாய்ய்கு பெட்ரோல் விற்கும் மோடி பாஜக அரசு மேலை நாடுகளுக்கு 34 ரூபாய்க்கு அதே பெட்ரோலை ஏற்றுமதி செய்வது தேசத்துரோகம் அல்லவா?
இந்திய அளவில் #பாசிச பாஜக ஒழிக @ முதலிடத்திலும்,#சோபியாவை விடுவியுங்கள்@ இரண்டாம் இடத்திலும் கேஷ்டாக் இன்று பிரபலம்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...