bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 8 செப்டம்பர், 2018

பாசிசம் என்றால் என்ன?

`பாசிஸ்ட்` மற்றும் `பாசிசம்` ஆகியவை சாதாரண வார்த்தைகள் போல தெரிந்தாலும், அது கல்வியாளர்களிடையே பெரிய ஆழமான, பெரிய கருத்து மோதலை உருவாக்கும் விஷயமாக இருந்து வருகிறது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து ஆறு தசாப்தங்களை கடந்துவிட்ட நேரத்தில், நாசி ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் அதை சுற்றி நடந்த விஷயங்களுடன் தொடர்புப்படுத்தியே இன்று வரை ` பாசிசம்` பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் 1922இல் இருந்த முசோலினியின் கருப்புச்சட்டை குழுவே முதன்முதலில் அதிக அதிகாரத்தை கையில் பெற்ற `பாசிஸ்ட்` இயக்கமாகும். அவர்களின் இயக்கத்தை தேசியவாதிகள் என்றும், அதிகாரவாதிகள் என்றும் நிச்சயமாக கூற முடியும்.
அரசியல் அதிகாரத்திற்காக நடத்தப்படும் சண்டையில் வன்முறை வெடித்தால் அதை அவர்கள் ஏற்பவர்களாக இருந்தார்கள் என்றாலும், அந்த குழுவின் பிற குணங்கள் என்பது அறிவுசார் கருத்து மோதல்களுக்கு உட்பட்டதே.
`கொடுமை என்னவென்றால். என்னால் இதற்கு சாதாரணமாக ஒரு விளக்கத்தை அளிக்க முடியாது,` என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெவின் பாஸ்மோர். இவர் வரலாற்றுத் துறையை சேர்ந்தவர் என்பதோடு, பாசிசம்: ஒரு மிகச் சிறிய அறிமுகம் (Fascism: A Very Short Introduction) என்ற நூலையும் எழுதியுள்ளார்.
`பாசிசம்` என்ற கோட்பாட்டின் கீழ் வரக்கூடிய நம்பிக்கைகளை கொண்டுள்ள ஒருவர் `பாசிஸ்ட்` என்று நீங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்றாலும், அந்த `பாசிசம்` என்பதற்கான அர்த்தம் என்ன என்பதை நீங்கள் இன்னமும் விளக்க வேண்டியுள்ளது.
`பொதுவாக பாசிச இயக்கம் என்பது, இத்தாலியில் இருந்த பாசிசத்தை போன்றதா? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், இந்த வார்த்தைகளை பயன்படுத்தும் பலருக்கும், `பாசிசம்` மற்றும் `பாசிஸ்ட்கள்` என்ற வார்த்தை என்பது இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியில் நடந்த பாசிசத்தை ஒப்பிடும் வகையிலேயே இருக்கின்றன என்கிறார்.
பாசிசம் முதல் நாசிசம் வரை உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மக்கள் நினைக்கும் அளவிற்கு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்பவை அல்ல. இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய புள்ளியாக இருந்தது. ஆனால், இத்தாலியில் இருந்த பாசிசம் என்பது அவ்வாறு ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக்கொண்டு வரையறுக்கும் வகையில் இல்லை.
முசோலினி-படத்தின் காப்புரிமைHULTON-DEUTSCH COLLECTION/CORBIS/CORBIS VIA GETTY
ஆகையால், ஒரு குழுவின் சித்தாந்தத்தில் இனவெறி இருப்பதால் மட்டும் அவர்களை `பாசிஸ்ட்டுகள்` என்று வகைப்படுத்திவிட முடியாது என்பது பல ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது.
இத்தாலியில் இருந்த பாசிசத்தில் `கார்ப்பரேட்டிசம்` கலந்தே இருந்தது. அரசியல் ரீதியாக அது கலந்திருந்தது. கார்ப்பரேட்டிசம் (கூட்டுழைப்புவாதம்) என்பது, மக்கள் தங்களுக்கு இருக்கும் திறமையின் அடிப்படையில் குழுக்களாக இணைந்து செயல்படுவதை வகைப்படுத்தப்படுவது.
இந்த காலத்தில் உள்ள ஜனநாயகத்தைப் பொறுத்தரையில், ஒவ்வொறு தனிமனிதனும், ஒரு அரசியல் குழுவாக உள்ளார். ஆனால், கார்ப்பரேட்டிச முறை என்பது, போட்டியை முன்னிறுத்தாமல், ஒத்துழைப்பை முன்னிறுத்துகிறது.
பாசிசத்தின் மற்றொரு குணாதிசியமாக பார்க்கப்படுவது தன்னிறைவு பெற்ற பொருளதாரம். ஆனால் இந்த காலத்தில் தன்னிறைவு பெற்ற பொருளாதாரங்களை உடைய பல நாடுகள் பாசிச நாடுகளாக பார்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தாலிபனுக்கு கீழ் இருந்தபோது ஆப்கானிஸ்தானை அப்படிச் சொல்லலாம்.
முசோலினிபடத்தின் காப்புரிமைROGER VIOLLET/GETTY IMAGES
பாசிஸ்ட்டுகளை குறிக்கும் குறியீடுகளும் கருத்தியலில் முக்கிய பங்கு வகிப்பவை. பழங்கால ரோமானியத்தில் பயன்படுத்தப்பட்ட குறியீடான ஒரு கோடாரி மற்றும் இரும்பு குழாய்கள் `பாசஸ்` என்று குறிப்பிடப்பட்டது. அது முசோலினியின் பாசிஸ்ட்டுகளாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு குறியீடு.
பிறகு நாசிக்கள் ஸ்வஸ்திக்கை பயன்படுத்தினர். இந்த குழுக்களுக்கிடையே சில வகையில் பொதுவான நோக்கங்கள் உள்ளன என்பதை இந்த குறியீடுகள் விளக்கின.
இத்தாலிய பாசிஸ்ட்டுகளின் அரசியல் கொள்கைகளும், ஜெர்மானிய நாசிக்களின் அரசியல் கொள்கைகளும் வெவ்வேறாக இருந்த காரணத்தால் இந்த இரு பாசிச இயக்கத்தின் சிந்தாந்தங்கள் ஒன்று சேரவில்லை. இதுவும், `பாசிஸ்ட்` என்று ஒருவரை முத்திரையிடுவதில் உள்ள அடுத்த பிரச்சனை ஒன்று இருக்கிறது.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக பல்வேறு இடங்களின் பல்வேறு சூழல்களுக்காக பயன்படுத்தப்பட்டதே `பாசிஸ்ட்` என்ற வார்த்தைக்கான ஒற்றை விளக்கத்தை தொகுத்தளிக்க முடியாததன் காரணம்.
விரிவாக கூறவேண்டுமென்றால், இது வகைப்படுத்த பயன்படும் வார்த்தையாக இல்லாமல், கண்டனத்தை பதிவிட பயன்பெறும் வார்த்தையாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாசிக்கள் மிகவும் கொடியவர்கள், இந்த வகையில் பார்க்கும்போது, அவர்களின் சித்தாந்தம் அடிப்படையில் பாசிசத்துடன் தொடர்புடையது, அப்படியென்றால், பாசிசம் அடிப்படையில் கொடுமையானது.
` ஒரு அரசியல் இயக்கத்தை பாசிச இயக்கம் போல செயல்படுகிறது என்று சொல்வதற்கு இது முக்கிய கருவியாக உள்ளது` என்கிறார் பாஸ்மோர்.
பாசிஸ்ட்டுகள் என்று வகைப்படுத்தப்பட்ட கட்சி எதுவும் பெரும்பாலும் தங்களை அவ்வாறு குறிப்பிட்டுக்கொள்வதில்லை.
` பாசிசத்தில் உள்ள பல கருத்துகளோடு ஒத்துப்போகும் சூழலிலும், ஏன் தங்களை அவர்கள் பாசிஸ்ட் என்று அழைத்துக்கொள்வதில்லை என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், பாசிசத்தில் எதிரான இயக்கங்கள் அனைத்தும், பாசிசத்தை நாசிசத்துடன் ஒப்பிட்டே குறிப்பிட்டுள்ளன.`
நாசிக்கள் ஸ்வஸ்திக்படத்தின் காப்புரிமைCORBIS/CORBIS VIA GETTY IMAGES
ஒருவர் செய்யும் செயல்களாலும், அவரை பார்கும்போதும், அவர் ஒரு `பாசிஸ்ட்` என்று அடையாளப்படுத்த முடியும் என சில குறிப்பிடுகிறார்கள். அவர்களை பொருத்தவரையில், எந்த ஒரு தேசியவாத அரசியல் இயக்கம் அதிகாரத்துவத்தை செய்கிறதோ, பேச்சுரிமையை நசுக்குகிறதோ, ஒரு கட்சி கொள்கை அல்லது சர்வாதிகாரத்தில் துணை நிற்கிறதோ, இனவெறி கொண்டவர்களாக அது தெரிகிறதோ, அதை வெளிப்படையாக ` பாசிஸ்ட்கள்` என்று முத்திரை குத்துகிறார்கள்.
ஆனால், இதற்கான துல்லியமான விளக்கம் என்ன என்பதில் இன்னும் விவாதம் தொடர்கிறது.
`மாணவர்கள் இந்த சொல்லுக்கு இதுதான் அர்த்தம் என்பதுபோல எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு வார்த்தை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறதோ, அந்த பக்கம் நான் என் கருத்தை கொண்டு செல்கிறேன். வார்த்தைகளுக்கான அரத்தம் என்ன என்ற பட்டிமன்றம் தானே வாழ்க்கையும், வரலாறும்.` என்கிறார் பாஸ்மோர்.
                                                                                                                                 நன்றி:பிபிசி.தமிழோசை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...