bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 12 செப்டம்பர், 2018

பொருளாதார மேதை

 மோ(ச)டி...!
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை தான் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாகவும், ஆனால் அதுபற்றி பிரதமர் அலுவலகம் என்ன நடவடிக்கை எடுத்தது என்று தனக்குத் தெரியவில்லை என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் வெளியிட்ட அறிக்கையில்  தகவல் வெளியாகியுள்ளது. 

இது பிரதமர் மோடிக்கு அடுத்த கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளின் வசூலிக்கப்படாத வாராக்கடனால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக நலிவடைந்துள்ளது. ரூ.4 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகையானது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 


இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் கருத்தைக் கேட்டிருந்தது முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக்குழு.

அதற்கு பதிலளித்திருந்த ரகுராம் ராஜன் பல்வேறு நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளின் பட்டியலை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பியுள்ளதாகவும், அந்த பட்டியல் பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறியுள்ளார். 
ஆனால் இதுவரை அந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இன்று தனது ட்விட்டரில், “ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016 ஆம் ஆண்டு வங்கி மோசடியாளர்களின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார். அதன் மீது இப்போது வரை மோடி நடவடிக்கை எடுக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரகுராம் ராஜன் அனுப்பிய பட்டியலில் இப்போது வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்ட நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோர் பெயரும் உள்ளது. இதன் மூலம் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட காரணமாக இருந்தவர் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவர் ரகுராம் ராஜன்.

“நெருக்கடியான காலத்தில், வங்கிகள் நடவடிக்கை எடுப்பதில் மந்த போக்கில் செயல்பட்டுள்ளன. அப்போதுகூட கடன்களை வாராக்கடன்களாக அறிவிப்பதைவிட அவற்றை மாற்றியமைப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டின. 
இருந்தும் கடனாளர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் போனதன் விளைவாக, வாராக்கடன் இந்த அளவிற்கு உயர்ந்துவிட்டது. 
பொதுத் துறை வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு மோசடி செய்யப்படும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

பொதுத்துறை வங்கிகளில் நிர்வாக திறனை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் தலையீடுகளை பொதுத்துறை வங்கிகளில் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் பண மோசடியை குறைப்பதே ஒரே தீர்வாக இருக்கும்” என்றும் தான் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ரகுராம் ராஜன்.
=========================================================================================
இந்திய  மதிப்பிழக்க நடவடிக்கை :
 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழக்கம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது. 
ஆனால் அதன் தாக்கம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. 
2017-18ம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை மோடியின் இத்திட்டத்தை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது.
நல்ல காரணத்திற்காகத் தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த திட்டம் சரியாக செயல்படவில்லை. நல்ல காரணத்திற்காகத் தான் என்றும் கூற முடியாது.
காரணம் பண மதிப்பிழக்க நீக்கத்திற்கு முன்பு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் பட்சத்தில் அப்படி கூறுவதும் இயலாது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி இந்திய அரசு ஆர்.பி.ஐக்கு 500 மற்றும் 1000 ரூபாய் பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை ஒன்றை அனுப்பியது. 
ஆர்.பி.ஐக்கு இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றி ஆராய ஆர்.பி.ஐக்கு கால அவகாசமே தரவில்லை. அடுத்த நாள் நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதன்மை நிதி அலோசகர் அச்சமயத்தில் கேரளாவில் இருந்தார். முறையாக அவரிடமும் ஆலோசனை மேற்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
மத்திய அமைச்சகத்திடமும் இது குறித்து ஒரு அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

பண மதிப்பிழக்க நடவடிக்கை தோல்வி. எங்கே?


பண மதிப்பிழக்க நடவடிக்கை கறுப்புப் பணத்தினை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், கள்ள நோட்டுகளின் புழகத்தினை தடுப்பதற்காகவும், பொருளாதார தீவிர வாதத்தினை ஒழிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது. 
ஆனால் இந்த இலக்குகள் எதையுமே எட்டாமல் தோல்வியுற்றது பண மதிப்பிழக்க நடவடிக்கை.
புதிதாக அச்சிடப்பட்ட பணத்தில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. கள்ள நோட்டுகளும் புதிதாக அச்சிடப்பட்டு புழக்கத்தில் இருந்து தான் வருகிறது. 
அதே போல் பொருளாதார தீவிரவாதமும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே தான் இருக்கிறது.

கேஷ்லெஸ் எக்கானமி :

இந்தியாவில் பணப் புழக்கத்தினை கட்டுப்படுத்தி கேஷ்லெஸ் இந்தியாவினை உருவாக்குவதும் மிக முக்கியமான இலக்காக இருந்தது இந்த பண மதிப்பிழக்க நடவடிக்கையில். 
அக்டோபர் 28, 2016ம் ஆண்டு இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பண மதிப்பானது ரூபாய் 17,54,022 கோடியாகும் . 

ஆகஸ்ட் 17, 2018 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் பண மதிப்பானது ரூபாய் 19,17,129 ஆகும். 
ஆகவே இந்த இலக்கினையும் எட்டவில்லை பண மதிப்பிழக்க நடவடிக்கை.

இந்தியர்களும் கையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளும்

  • இந்திய மக்கள் பணத்தினை அதிகம் நம்புகிறார்கள். 
  • 2016ல் இருந்ததை விட தற்போது மக்கள் அதிகமாக பணத்தினை உபயோகிக்கிறார்கள்.
  • வீட்டில் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. 
  • ஆனால் தற்போதோ அந்த சேமிப்பின் மதிப்பு 8.1ல் இருந்து 7.1ஆக குறைந்தது.
  • வீட்டின் சேமிப்பு மதிப்பு குறைவானதால் க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்தது.
  • க்ராஸ் ஃபிக்ஸ்ட் கேபிடல் ஃபார்மேசன் குறைந்ததால் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து விட்டது .
  • நிலைமை இப்படியாக இருக்க பணமதிப்பிழக்க நடவடிக்கை வெற்றியின் பாதையில் பயணிக்கிறது என்று தங்களுக்குள் கொண்ஆடிக் கொண்டிருக்கிறார்கள். 
  • இதனால் தான் வருமான வரி அதிகமாக வந்திருக்கிறது என்று கூறிவருகிறார்கள் உண்மை.
  • சுமார் 5.42 கோடி இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஃபைல் ஆகியுள்ளது. ஆனால் சுமார் 1 கோடி ஃபைலர்ஸ் ‘நில்’ என்றும் வருமான வரி ரிட்டர்னஸ் தாக்கல் செய்துள்ளனர்.  பல்வேறு போலி வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டிருக்கிறது என்று அரசு தெரிவித்திருக்கிறது. 
  • ஆனால் இதற்கெல்லாம் முடிவு எப்போது எட்டப்படும்?
  • அடுத்தது, இணையம் மூலமாக பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 
  • ஆனால் கடந்த நான்கு வருடங்களில் 14.3, 10.7, 9.1, 24.4 மற்றும் 12 என்ற ஏற்ற இறக்கங்களுடன் தான் காணப்பட்டு வருகிறது.
  • இவை அனைத்தைக் காட்டிலும் மிக முக்கியமான ஒன்று 15,31,000 கோடி ரூபாய் பணமும் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது என்று ஆர்.பி.ஐ ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. 
  • பண மதிப்பிழக்க நடவடிக்கை மூலம் தன்னிடம் இருந்த அனைத்து கறுப்புப் பணத்தினையும் வெள்ளைப் பணமாக மாற்றிவிட்டார்கள். 
  • மோடியின்  பண மதிப்பிழக்கநடவடிக்கைகளால்தான்  இதெல்லாம்  நடந்தது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  09/09/2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...