bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

பொருளாதார கொள்(கை)ளை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11,360 கோடி ரூபாய் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்திய அரசு, இந்திய வங்கிகளில் 2012க்குப் பிந்தைய  காலகட்டத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி அதிர்ச்சி தரும் தரவுகள் அதிகம்.
2012-2016 இடையிலான காலக்கட்டத்தில் மட்டும் நடந்த மொத்த  முறைகேடுகள் 22,743 கோடி ரூபாய்கள் 

ஆனால் 2017 ,2018 முறைகேடுகள் அதைவிட அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது.
பொது மக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் பணத்துக்கு வட்டி கொடுத்த நிலை மாறி ,பொதுமக்கள் சேமித்துள்ள பணத்தை ஏதாவது கரணம் சொல்லி வங்கிகள் எடுத்துக்கொள்வதும்,அபணத்தையே பெரும் நிறுவனங்கள் ,தொழிலதிபர்களுக்கு வராக்கடனாக கொட்டிக்கொடுப்பதும்,அவர்கள் ஏப்பம் விடுவதும் அவர்கள் பிரதமர் மோடிக்கு,பாஜகவுக்கு வேண்டியவர்களாக இருப்பதும் தற்போதைய பாஜக பொருளாதார கொள்கைளையாக  உள்ளது. 
 2017 ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில், 455 முறைகேடான பரிவர்த்தனைகள் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
அதுபோல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா-வில் 429 பரிவர்த்தனைகளும், ஸ்டேண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் 244 பரிமாற்றங்களும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 237 பரிவர்த்தனைகளும் முறைகேடாக நடந்துள்ளது.
இந்த முறைகேடான பரிவர்த்தனைகளில் பெரும்பாலானவை வங்கி ஊழியர்களின் துணையுடனே நடந்துள்ளது.
இந்தியாவின் 5 மிகப்பெரிய வங்கி முறைகேடுகள்:
2011 
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், மற்றும் ஐ.டி.பி.ஐ அகிய வங்கிகளின் நிர்வாகிகள் 10 ஆயிரம் போலி கணக்குகளை உருவாக்கி 1,500 கோடி ரூபாய் அளவிற்கு அந்த போலி கணக்குகளுக்கு கடன் வழங்கி உள்ளனர் என்று 2011 ஆம் ஆண்டு, சி.பி.ஐ ஒரு விசாரணை நடத்தி இந்த முறைகேட்டினை வெளிக் கொண்டுவந்தது.
2014 
வைப்புத் தொகையில் 700 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என பல பொதுத் துறை வங்கிகளுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு 9 வழக்குகளை பதிவு செய்தது மும்பை போலீஸ். அதே ஆண்டு, கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் பிபின் வோஹ்ரா, போலியான ஆவணங்கள் கொடுத்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,400 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது.
இதற்கு மத்தியில், அதே ஆண்டில், சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்கே ஜெயின் லஞ்சம் பெற்று ரூபாய் 8,000 கோடி கடன் கொடுத்தார் என்ற தகவல் வெளியே வந்தது.
விஜய் மல்லையாவை கடனை திரும்ப செலுத்தாதவர் என பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் அறிவித்தன.
2015 
2015 ஆம் ஆண்டு வெளிநாட்டு பரிவர்த்தனை ஊழலுக்கான ஆண்டு. வெவ்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் ஹாங்காங்க் கார்ப்பரேஷன் உட்பட வெளிநாட்டில் உள்ள பல போலியான நிறுவனங்களுடன் பரிவர்த்தனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய தொகை 6000 கோடி ரூபாய்.
2016 
சிண்டிகேட் வங்கியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை வெளியே எடுத்து செல்வதற்கு நான்கு மோசடிப் பேர்வழிகள் ஒன்றாக இணைந்தனர். 380 போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, போலி காசோலைகள், புரிந்துணர்வுக் கடிதங்கள், எல்.ஐ.சி. பாலிசிகள் மூலம் இந்த போலி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டன.

2017 
2017ஆம் ஆண்டின் சிறப்பு, விஜய் மல்லையா மீதான வழக்குதான். 9,500 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, விஜய் மல்லையா மீது வழக்கு பதிந்தது சிபிஐ. அவர் 2016ஆம் ஆண்டே நாட்டைவிட்டு தப்பிச் சென்று இருந்தார். இப்போது, இங்கிலாந்தில் வசித்து வரும் அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இதே ஆண்டு, அடுத்த சில மாதங்களில், வின்சம் டைமண்ட்ஸ்க்கு எதிராக 7,000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சிபிஐ இந்த நிறுவனத்திற்கு எதிராக ஆறு வழக்குகள் பதிவு செய்தது.
கொல்கத்தா தொழிலதிபர் நிலேஷ் பரேக், குறைந்தது 20 வங்கிகளை ஏமாற்றி அவர்களுக்கு இழப்பு உண்டாக்கியதாக 2017 ஆம் ஆண்டு சி.பி.ஐ-யினால் கைது செய்யப்பட்டார். வங்கிகளை ஏமாற்றிப் பெற்ற கடன் தொகையை ஹாங்காங்க், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு மடைமாற்றினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கில், பேங்க் ஆஃப் மஹாராஷ்ட்ராவின் முன்னாள் மண்டலத் தலைவர் மீதும், சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீதும், 836 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
2018
நீரவ் மோடியின் 11,360 கோடிகளுடன் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள்  பாஜக கட்சியின் மோடி ஆட்சியில்தான் அதிகம் என்பதும்.பெருந்தொழில் அதிபர்கள்,கார்பரேட்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடை களில் 86% பாஜவுக்குத்தான் என்பதும் தற்செயல்கள்தான்.
==========================================================================================
பிடல் காஸ்ட்ரோ 
அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சர்வாதிகாரியான படிஸ்டாவின் பிடியிலிருந்து கியூபாவை விடுவித்து அமெரிக்காவின் எதிர்ப்பையும் சதிகளையும் தாண்டி பொதுவுடைமைப் பாதையில் கியூபாவை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2016 நவம்பர் 25, அன்று தனது 90-ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து 100 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள கியூபாவில் அமெரிக்க ஆதரவுடன் கொடுங்கோலாட்சி புரிந்து வந்த சர்வாதிகாரியான படிஸ்டாவை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோ மற்றும் ஆருயிர் தோழர் சேகுவேரா ஆகியோரின் துணையுடன் கொரில்லா போர் புரிந்து1959-இல் வீழ்த்திய ஃபிடல், கியூபாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். 

துவக்கத்தில் அமெரிக்காவைத் தனது எதிரியாக கருதாத ஃபிடல், நாளடைவில் அமெரிக்காவும் அந்நாட்டு நிறுவனங்களும் கியூபாவை சுரண்டி வருகின்றன என்பதையறிந்து அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தார்.
குறிப்பாக ஏழைகளைச் சுரண்டிய அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். 
இதனால் இரு நாடுகளிடையே பிணக்கு ஏற்பட்டு
1961-இல் இருநாடுகளும் தங்களின் தூதரக உறவினை முறித்துக் கொள்ளுமளவுக்கு பகையாக வளரத் துவங்கியது. அப்போது முதல் கியூபாவைச் சீர்குலைக்க அமெரிக்கா பல்வேறு நாசவேலைகளைப் புரியத் துவங்கியது.
ஆனால் திறன்மிக்கத் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ அவற்றினைத் தவிடுபொடியாக்கி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார்
. இவருக்கு சோவியத் யூனியனின் பரிபூரண ஆதரவு இருந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின்படி நிலச்சீர்திருத்தத்தினை மேற்கொண்டு நிலங்களை அனைவருக்கும் சமமாகப்  பங்கிட்டளித்த இவரின் அரசு, கல்வி, மருத்துவ சேவைகள், வீடு என மக்களின் அடிப்படைத் தேவைகளை விலை குறைவாகவோ அல்லது இலவசமாகவோ வழங்கி மனிதவளக் குறியீட்டெண்ணில் கியூபாவை பல்வேறு வளர்ந்த நாடுகளைவிட முன்னணியில் இடம்பெறச் செய்தது.
அமெரிக்காவின் ஏகாதிபத்திய சித்தாந்தத்திற்கு நேரெதிர் சித்தாந்தத்தைக் கொண்டு நல்லாட்சி புரிந்து வந்த ஃபிடலைக் கவிழ்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்த அமெரிக்கா ஏற்கனவே கியூபாவின் மீது கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
அவற்றையும் மீறி கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற
ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்காவின் உளவுப்படைகள் 638 முறை முயற்சி செய்தன. இந்த அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கி சிறந்த பொதுவுடைமைவாத நாடாக கியூபாவை மாற்றிய இவர், பனிப்போர்க் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக விளங்கிய அணிசேரா நாடுகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
மூன்றாம் உலக நாடுகளுக்கு கியூபாவை ஒரு முன்னுதாரண நாடாக்கிய இவர் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தேர்ந்த வழிகாட்டியாகவும் விளங்கினார். தனது வாழ்நாள் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கெதிராக தீரமுடன் போராடி வந்த இவர் உலக நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் எங்கெல்லாம் ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டனரோ அங்கெல்லாம் தனது ஆதரவுக் கரத்தினை நீட்டி அவர்களின் துயரைத் துடைத்தார்.
1992-இல் சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அமெரிக்காவின் நெருக்கடியால் தீவிர

இன்னலுக்குள்ளாகிய கியூபாவை பல்வேறு வழிகளிலும் அனைத்து துறைகளிலும் முன்னேற்றினார். 1959 முதல் 2006 வரை கியூபாவை  மிக நீண்ட காலம் வழி நடத்திய அவர், அதன் பிறகு அதிகாரங்களை தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்துவிட்டு
2008-ஆம் ஆண்டில் பதவி விலகினார்.
அதன் பிறகு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவிற்குள்ளான ஃபிடல் 2016 நவம்பர் 25-இல் மறைந்தார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களையும் பொருளாதாரத் தடைகளையும் முறியடித்து கியூபாவில் சோஷலிசத்தினை நிர்மாணிப்பதில் வெற்றி கண்ட காஸ்ட்ரோ, உலக அளவில் பொதுவுடைமைவாதிகளுக்கு உற்சாகமளிக்கக் கூடியவராக விளங்கினார்.
விடிவெள்ளியான அவரின் மறைவு பொதுவுடைமைவாதிகளுக்கும், சோஷலிசத்திற்கும், அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...