பொதுவுடமை தத்துவத்தின் பிதாமகன் காரல் மார்க்ஸ் தான் மட்டு மல்ல; தனது
குடும்பம் முழுவதையும் வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அத்தகைய
போராட்டத்தில் மார்க்ஸ் ஏங்கெல்சோடு இணைந்து பங்கேற்றவர் மார்க்சின் இளைய
புதல்வி எலனோர் மார்க்ஸ் ஆவார். இன்று (மார்ச் 31) அவர் மறைந்த
தினம்!எலனோர் மார்க்ஸ் எந்த அளவிற்கு புகழ் பெற்றிருந்தார் என்பதற்கு அவரது
மறைவின் பொழுது வந்த இரங்கல் செய்திகளே சாட்சி! இங்கிலாந்து
முழுவதுமிருந்து மட்டுமல்ல; ஜெர்மனி, பிரான்சு, ஹாலந்து, அமெரிக்கா,
ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா போன்ற
பல நாடுகளிலிருந்து செய்திகள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன.
பல தொழிற்சங்கங்கள் தமது சொந்த கைகளால் நெய்த பதாகைகளை எலனோர் உடல் மீது போர்த்தினர். பிரான்சு தொழிலாளர் கட்சி, ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சி, அமெரிக்க சோசலிஸ்ட் குழுக்கள் ஆகியவை தமது பிரதிநிதிகளை அனுப்பிவைத்தனர்.அஞ்சலிக் கூட்டத்தில் தொழிலாளர் கட்சியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வில் தோர்னே பேசும் பொழுது, “எழுதப் படிக்க தெரியாத எனக்கு ஆரம்பக்கல்வி ஊட்டியது மட்டுமல்ல; நான் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன் என்றால் அதற்கு எலனோர்தான் கார ணம். எலனோர் இல்லையெனில் நான் மட்டுமல்ல;
என்னைப் போன்ற பலரும் இன்று இல்லை” எனக் கூறியபொழுது கதறியழுதார். வர் மட்டுமல்ல; பல தொழிற்சங்க தலைவர்கள் கண்ணீர்விட் டனர்.
பாரிஸ் கம்யூன் உருவாக்கிய தாக்கம்
தொழிலாளிவர்க்கத்தின் முதல் புரட்சி பாரிஸ்கம்யூன் ஆகும்.
பாரிஸ் நகரை கைப்பற்றிய தொழிலாளிவர்க்கம் 72 நாட்கள் ஆட்சி அதிகாரத்தை நடத்தியது. எனினும் அப்புரட்சி தோல்வி அடைந்தது. அதன் பிறகு முதலாளிவர்க்கம் போராளிகளை வேட்டையாடியது.
பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட் டனர். பல போராளிகள் தப்பித்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தனர்.
மார்க்ஸ்ஏங்கெல்ஸ் ஆகியோரின் ஆலோசனைப் படி இப்போராளிகளுக்கு உதவிட ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மிக முக்கிய பங்காற்றினார் எலனோர். பாரிஸ் கம்யூனின் முக்கிய போராளியான லிஸ்ஸாகரே “பாரிஸ் கம்யூன் வரலாறு” என ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தை உருவாக்கினார்.
பல ஆய்வு களை செய்து விவரங்களை அளித்து அந்த ஆவணம் உருவாக்கிட உறுதுணையாக இருந்தார் எலனோர்.
இந்த ஆவணம் புரட்சியாளர்களுக்கு மிக முக்கியமானது என மார்க்ஸ் -ஏங்கெல்ஸ் பாராட்டினர். இந்த ஆவணத்தை உருவாக்கிட எலனோர் உதவிய பொழுது அவருக்கு வயது 20 மட்டுமே! பின்னாளில் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் எலனோர் வெளியிட்டார்.
பெண்ணியத்தின் உந்து சக்தி
எலனோரின் மிகப்பெரிய பங்களிப்பு பெண் உரிமைக்கு அவர் அளித்த முக்கியத்துவம்தான்!
பெண்ணிய இயக்கங் கள் 1970களில் உருவானதாக முதலாளித்துவ சமூகவியலாளர்கள் கூறிக்கொள் கின்றனர். ஆனால் பெண் உரிமைக் கான இயக்கம் 1870களிலேயே ஆரம்பித்துவிட்டது.
அன்றைய பிரிட்டன் தொழில் வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமைஇருக்கவில்லை.
பெண்கள் பல்கலைக் கழகங்களுக்குள் நுழையமுடியாது. பெண்கள் எவ்வித உரிமையும் பெற்றிருக்கவில்லை.1864ம் ஆண்டு நடந்த முதல் அகிலத் தின் கூட்டத்தில் பெண்களையும் உறுப்பினராக்குவது என மார்க்ஸ் முன் மொழிந்தார். அதற்கு பிரான்சு தூதுக்குழு கடுமையாக ஆட்சேபித்தது. சோசலிச இயக்கத் திற்குள்ளேயே பெண்ணுரிமைக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.
கல்விக்காக பல்கலைக்கழகம் செல்லும் உரிமை எலனோர் பெறவில்லை.
எனினும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எனும் இரு பெரிய பல்கலைக்கழகங்களிடமிருந்து அவர் கற்றார்.
அதே சமயத்தில் பெண் ணுரிமைக்காக போராட வேண்டிய அவ சியத்தையும் உணர்ந்தார்.எட்வர்ட் அவலிங்குடன் இணைந்து “சோசலிசத்தின் கோணத்தில் பெண்கள் பிரச்சனை” எனும் நூலை எலனோர் எழுதினார். அந்த காலகட்டத்தில் பெண் ணுரிமைக்காக குரல் கொடுப்போருக்கு இது மிகப்பெரிய ஆயுதமாக பயன்பட்டது மட்டுமல்ல; சோசலிச பெண்ணியத்திற்கு அடிப்படை ஆவணமாக அமைந்தது.
தான் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களிலும் பெண்கள் இணைக்கப்படுவது மட்டுமின்றி அவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வருவதற்காக வும் போராடினார்.
எரிவாயு தொழிற்சங்கத்தில் பெண்களின் தொழிற் சங்கப்பிரிவை தொடங்கி அதனை தொழிற்சங்கத் தலைமை அங்கீகரிக்கவும் வைத்தார். சோசலிச பெண்ணியத்தை உரு வாக்குவதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதிலும் கிளாரா செட்கின், ரோசா லக்ஸம்பெர்க் ஆகியோருடன் எலனோர் ஒருங்கிணைந்து செயல்பட்டார்
. இரண் டாவது அகிலத்தின் மாநாடுகளில் அவர்கள் சோசலிச பெண்ணியத்தை வலியுறுத்தினர்.
கிளாரா செட்கின், ரோசா லக்ஸம்பெர்க், எலனோர் மார்க்ஸ் ஆகிய மூவரையும் பெண்ணியத்தின் பிதா மகர்கள் எனக்கூறினால் மிகையல்ல!
கனலுக்கு நெருப்பு மூட்டிய போராளி
பிரிட்டன் முதலாளிகளை கலங் கடித்த துறைமுக தொழிலாளர்களின் போராட்டத்திலும் எரிவாயு தொழிலாளர் போராட்டத்திலும் இரவு பகலாக எலனோர் பாடுபட்டார். பல்வேறு பட்டதொழிலாளர்களும் தமது பிரச்சனை களுக்காக எலனோரின் உதவியை நாடு வது அதிகரித்தது.
வெங்காயம் உரிக்கும் பெண் தொழிலாளர்கள், கேக் தயாரிப்பில் உள்ள பெண் தொழிலாளர்கள் என பலரும் அவரை நாடினர்.
அவர்களின் ஊதியம், பாதுகாப்பு, குடும்பம் என அனைத்து பிரச்சனைகளையும் எலனோர் தீர்த்து வைத்தார். பிரிட்டனின் முதல் தொழிலாளர் கட்சி உருவாக்கிட அயராது பாடுபட் டார். 1890களில் பிரிட்டனில் அனைவரும் அறிந்த ஒரு அரசியல் போராளியாக அவர் பரிணமித்தார்.
பெண் தொழி லாளர்களுக்கான போராட்டத்தில் எலனோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரும் முற்போக்கு நாடகங்களை உரு வாக்கிய பொழுது அவருடன் இணைந்து பங்களித்தவர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எலனோரை அவரது எதிரிகள் “நெருப் பை கக்குபவர்”, “கேடு கெட்டயூத வந் தேறி”, “பெண் பிசாசு” என்றெல்லாம் வசைபாடினர்.
ஆனால் தொழி லாளர்கள் அவரை “எங்களது தாய்” எனவும் .போராட்ட கனலை எரியூட்டுபவர் ' எனவும் அழைத்தனர்.
அவரது பேச்சை கேட்க ஆயிரக் கணக்கில் உழைப்பாளிகள் திரண்டனர். ஹைட் பூங்காவில் மே தின கூட்டம் பற்றி ஒரு பத்திரிகை நிருபர் கீழ்கண்டவாறு செய்தி எழுதினார்:“பல்லாயிரக்கணக்கான தொழி லாளர்கள் திரண்டுள்ளனர்.
மேடையில் தலைவர்கள் உள்ளனர். வழக்கம் போல தனக்கே உரிய வசீகரத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எலனோர் மார்க்ஸ் உள்ளார். அவரது பேச்சைக் கேட்க தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்”தன் வாழ்நாள் முழுதும் தொழிலாளர் களுக்காக வாழ்ந்த
எலனோர் மார்க்ஸ் 1898ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் நாள் 43 வது வயதில் மரணத்தை தழுவினார்.
அவரது வாழ்வு ஒவ்வொரு பொதுவுடமைப் போராளிக்கும் ஒவ்வொரு பெண்ணியப் போராளிக்கும் பல படிப்பினைகளை கொண்டுள்ளது எனில் மிகை அல்ல!
மார்க்ஸ் ஒரு முறை கூறினார்: “ (மூத்தமகள்) ஜென்னி என்னைப் போல! ஆனால்(இளைய மகள்) டஸ்ஸி நானேதான்!” ஆம்!
அந்த மகத்தான பொதுவுடமை ஆசானின் பெருமை மிக்க புதல்வியாக போராட்ட வாழ்வு வாழ்ந்தார் எலனோர் மார்க்ஸ்.
இன்று எலோனார் மார்க்ஸ் நினைவு நாள்.
==========================================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக