bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 5 டிசம்பர், 2018

12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !

அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 
கடந்த 2011-ஆம் ஆண்டு 5 ரோந்துக் கப்பல்களை ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்க, ‘பிபாவவ்’ என்ற பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. 


 ஆனால், 2016-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தையே அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ விலைக்கு வாங்கியது. 
இதனால், கடற்படையின் ஒப்பந்தம் இயல்பாகவே ரிலையன்ஸ் டிபென்ஸ் வசம் வந்தது.

‘பிபாவவ்’ ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தப்படி, ரோந்துக் கப்பல்களை 2015-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கடற்படையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனம் ரிலையன்ஸ் வசம் சென்றபிறகும் பணிகள் முடிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரோந்துக் கப்பல் தயாரித்து அளிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்த வங்கி உத்தரவாதத்தொகையை ரொக்கமாக மாற்றி, இந்திய கடற்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

எனினும் ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ள கடற்படைத் தலைவர் அட்மிரல் லான்பா, அதுபற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு நெருக்கமான ரிலையன்ஸ் நிறுவனம் மீதான, கடற்படையின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
====================================================
 
பந்தளத்தில் 12 ஓட்டு ! 
போராட்டத்தில் 2 பேர் !
 கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !



பரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. 

பாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12. 


 ஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக!

 கடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது.



 இது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

 தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா?” என பதிவிட்டிருந்தார்.


 
Rabin @lazybanker
Replying to @yehlog
Im convinced Kerala keeps BJP around for its entertainment value.

Khushboo Singh. @khush_boozing
BJP keeps the Kerala's troll page high.They are the prime source for their content.😂😂🤣🤣
2
Twitter Ads info and privacy
See Khushboo Singh.'s other Tweets
 சிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா? எனவும் வினவினர்.
 பலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.

“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவின் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.

 கேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

 லை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
வாழ்க்கை கலையை பிரதிபலிக்கிறது
மேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.




BeeGee @joBeeGeorgeous
Art imitates life.
Life imitates art.

(Another Malayalam Art film. Watch silently) https://twitter.com/BJP4Keralam/status/1069165840879149056 
37
Twitter Ads info and privacy
See BeeGee's other Tweetsபலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.
சபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...