bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 3 மார்ச், 2011

விக்கி பீடியா வயது 10


கலைக்களஞ்சிய இணையதளமான விக்கிபீடியா பிறந்து இன்றோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியாகிறது.

இந்த இணையதளத்தின் பக்கங்கள் கிட்டத்தட்ட மொத்தமுமே தன்னார்வலர்களாலும் பாவனையாளர்களாலும் உருவாக்கப்பட்டது.

உலகத்திலேயே மிக அதிகமானவர்கள் பயன்படுத்தக்கூடிய இணையதளங்களின் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறிய எதிர்பார்ப்புகளுடன் தான் இந்த விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று இந்த கலைக்களஞ்சியத்தில் இரண்டரை கோடிப் பக்கங்கள் இருக்கின்றன.

இதிலே ஆச்சரியம் என்னவென்றால் இந்த இணைய தளம் இலாபநோக்கல்லாத தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இந்த மொத்த இணைய தளமும் வெறும் ஐம்பது ஊழியர்களைக் கொண்டே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில் இருக்கும் கலைக்களஞ்சிய விளக்கங்களை தன்னார்வலர்கள் எழுதிவருகின்றனர்.


இணையம் முழுக்க இலவச மென்பொருட்களின் அபரிமித வளர்ச்சியை நான் அவதானித்து வந்தேன். இணையம் என்பதே இவ்வகையாக இலவசமான தகவல்கள் பெறத்தான் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆகவேதான் விக்கிபீடியா என்ற விஷயம் என் வாழ்க்கையின் முக்கியப் பணியாக மாறியது.

விக்கிபீடியாவின் தோற்றுநர்ஜிம்மி வேல்ஸ்

தற்போது தன்னார்வலர்கள் தருகின்ற நன்கொடைகளை மட்டுமே பயன்படுத்தி விக்கிபீடியா இணையதளம் நடத்தப்பட்டுவருகிறது.

உலக மக்களுக்கான ஒரு இலவச சேவையை வழங்கும் தொண்டு நிறுவனமாகவே இது தொடர்ந்து செயல்படும் என்று ஜிம்மி வேல்ஸ் கூறியுள்ளார்.

நாற்பது கோடி பாவனையாளர்கள் என்ற எண்ணிக்கையை நூறு கோடியாக மாற்றவேண்டும் என்று விக்கிபீடியா திட்டமிடுகிறது. வளர்ந்துவரும் நாடுகளிலும் அதிகம் சென்றடைய அது விரும்புகிறது.

இந்தியாவில் அலுவலகம் ஒன்றை விக்கிபீடியா திறக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...