bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 3 மார்ச், 2011

அதிகரித்த கடவுளர்

தனஞ்செழியன் எழுதிய
தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் அவர் கூறியவை.

"இந்த புத்தகத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வரலாற்றை நாம் அறியமுடிகிறது. வரலாற்றுக்கும் புராணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சில சமயங்களில் நாம் குழம்புகிறோம். நம்முடைய வரலாற்றில் திடீரென்று கடவுள்கள் வருவார்கள். அதற்கு காரணம் கடவுள்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுதான். நான் கூட இப்போது நம்புகிறேன். அந்த அளவுக்கு அதிகரித்து விட்டது.

இப்படி அதிகரித்து கடைசியில் கும்பிடவே ஆள் இல்லாமல் போய்டனும் அதுதான் என்னுடைய ஆசை. சினிமா குப்பையா இருக்குன்னு சொல்லி கவலைப்பட்டாங்க. பாலுமகேந்திரா கூட என்னிடம் அடிக்கடி சொல்வார், 'என்ன ஒரே குப்ப படத்திலயா நடிக்கிறீங்களே' என்று. நல்ல விவசாயி நரகல்லை கூட விட்டு வைக்க மாட்டான். அதுபோலதான் நான் விதை இருக்கு அனைத்து நிலத்திலும் போடுவோம். உழுதுக்கலாம். ஆனா மங்கிய புதிர்களாக மட்டும் மாற கூடாது. எந்த மாதிரியான படம் வேண்டும் என்று ரசிகர்களும், விமர்சகர்களும்தான் சொல்ல வேண்டும்.

ஒரு நாட்டில் ஏழையும் இருப்பான். பணக்காரனும் இருப்பான். அதுபோலத்தான் சினிமாவில் நல்லப் படங்களும் வரும். மசாலாப் படங்களும் வரும். ஆனால் இந்த நிலை மாறும். இங்கு ஓடவிட்ட வீடியோவ பார்த்தபோது எனக்கே கொஞ்சம் ஆர்வமா இருந்தது. நான் அதுல இரண்டாவது பாதியில்தான் வரேன். அட இது நல்ல இருக்கே இன்னும் கொஞ்சம் ஓடட்டுமே என்று என்ன தோன்றியது. இன்னும் பத்து வருஷம் ஓடட்டுமே என்று நினைத்தேன். எதிர்கால சினிமா எப்படி இருக்கும் என்று காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது. ஆனால் அது தெரியாததுதான் சுவாரஸ்யம்.

இரண்டு பகுதிகளாக இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. இன்னும் மூன்றாவது பகுதி வெளிவரவேண்டும். அப்போது அதைபற்றி பேச இன்னும் விஷயங்கள் இருக்க வேண்டும் என்று இந்த புத்தகத்தை எழுதிய தனஞ்செழியனுக்கு எனது பாராட்டுக்களை சொல்லி விடைபெறுகிறேன். நன்றி" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...