உலகத்தின் முதல் பணக்காரர் மெக்சிக்கன் கார்லோஸ் சிலிம்
உலகத்தின் பணக்காரர்களை பட்டியலிடும் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்த ஆண்டும் உலகத்தின் முதலாவது பணக்காரர் என்ற பட்டத்தை மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த ரெலிகொம் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் பெற்றுக் கொண்டார். இவருடைய வருடாந்த வருமானம் 72 மில்லியன் டாலர்களாகும். இவரை அடுத்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அமெரிக்கரான பில் கேய்ட்ஸ்சின் கடந்த வருட வருமானம் 56 மில்லியன் டாலர்களாகும், பங்குச் சந்தை வீரன் வாரன் புபேற் 50 மில்லியன் டாலர்கள் உழைத்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். இணையத்துறையில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியும் கடும் போட்டிகளும் பில் கேய்ட்சை தொடர்ந்து பின்னடைவு காணச் செய்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக