bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 6 ஆகஸ்ட், 2011

ப்ரூஸ் லீயின் மேலங்கிக்கு 77 ஆயிரம் டாலர்கள்
'77 ஆயிரம் டாலர்களுக்கு விலை போனது'
'
மறைந்த குங் ஃபூ நட்சத்திரம் ப்ருஸ் லீ நடித்த இறுதிப் படத்தில், அவர் அணிந்திருந்த மேலங்கி (கோட்) ஹாங்காங்கில் 77 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் சென்றிருக்கின்றது.
இது தவிர, அவரது கடிதமொன்றும் பெயர் விபர அட்டையொன்றும் அடங்கலாக இன்னும் வேறு 12 பொருட்களும், மொத்தமாக 200 ஆயிரம் டாலர்களுக்கும் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
‘கேம் ஆஃப் டெத்’ என்ற திரைப்படத்தில் ப்ரூஸ் லீ அணிந்திருந்த, மிருகங்களின் தோல் மயிரைக் கொண்டு தைக்கப்பட்ட இந்த கோட்டை எதிர்ப்பார்க்கப்பட்ட விலையை விட 9 மடங்கு அதிக விலைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் வாங்கியுள்ளார்.
1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த ப்ரூஸ் லீ, மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியைத் தொட்டவர்.
பொஸ்னியாவிலுள்ள ப்ரூஸ் லீ சிலை
ப்ரூஸ் லீ சிலை
குங் ஃபூ தற்காப்புக் கலையின் அடையாளச் சின்னமாக உலகெங்கிலும் மதிக்கப்படும் ப்ரூஸ் லீ, 5 முழு நீளப் படங்களில், அவர் ஏற்று நடித்த பாத்திரத்திரங்களுக்காக பெரும் பாராட்டுக்களை பெற்றார். 1973ம் ஆண்டில் தனது 32வது வயதில் உயிரிழந்த ப்ரூஸ் லீ, தற்காப்புக் கலைகளின் ஆர்வலர், பயிற்றுனர், திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களிப்பைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...