bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

விமானக் கொள்ளையன்

                            
% டி.பி. கூப்பர், இந்த பெயரை கேட்டால் அமெரிக்க புலானாய்வு அமைப்பிற்கு (FBI) எரிச்சல் வரும், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விமான கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அமெரிக்க வரலாற்றில் ஒரு விநோத வழக்காக அமைந்துவிட்டது. விமான கடத்தல்காரன், கொள்ளையனை எப்.பி.ஐ.யினர் இன்னும் தேடி ‌வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு செய்தியில்கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் போர்லாண்ட் மாகாணத்திற்கு சொந்தமான வடமேற்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 42 பயணிகளுடன், டான் கூப்பர் என்ற பெயருடன் கொள்ளையன் பயணித்தான். கருப்பு கண்ணாடி , கருப்பு கோட், சூட் என வந்த கூப்பரை அவ்வளவாக யாரும் அடையாளம் காணவில்லை, விமானமும் புறப்பட்டது. சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில்பறந்து கொண்டிருந்தது. பறக்கும் விமானத்தில் சக பயணிகளை மிரட்டி 2 லட்சம் டாலர் கரன்சிகளை கொள்ளையடித்து விமானத்தின் பின்பக்க அவரசர வழியினை உடைத்து பாராசூட் மூலமாக குதித்து மாயமாகிப்போனவன் தான் டி.பி. கூப்பர். இந்த சம்பவம் நடந்து இன்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த எப்.பி.ஐ. இன்னனும் விமான கொள்ளையனை தேடி வருகிறது.
30 நிமிடங்கள் நடந்த இந்த சம்பவத்தின் போது விமானம் அமெரிக்காவின் சீட்டெல் டகோமா விமான நிலையம் இறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது கூப்பர் விமானப்பணி பெண்ணை அழைத்து குடிக்க விஸ்கி கேட்டுள்ளான். அவரும் எடுத்து வருவதற்குள் , சக பயணிகளை நோக்கி தான் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடித்துவிடும் என மிரட்டவே, சக பயணிகள் அலறினர். அவர்களிடம் உள்ள கரன்சிகளை கேட்டு மிரட்டினான். பின்னர் ஒரு சூட்கேசில் சக பயணிகளின் கரன்சிகளை திணித்து கொண்டான். இந்த கரன்சிகளின் மதிப்பு 2 லட்சம் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. நேராக பைலட்டின் கேபின் அறைக்கு சென்று விமானத்தை மெக்சிகோவிற்கு கொண்டு செல்லுமாறு கூறினான். பின்னர் தான் தயாராக வைத்திருந்த 2 பாராசூட் மூலம் விமானத்தின் பின்பக்கமுள்ள அவசர வழியாக குதித்து தப்பியோடினான். இந்த சம்பவம் குறித்து எப்.பி.ஐ.யினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால் 40 ஆண்டுகள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்ளை நடந்த போது விமானத்தில் பதிந்துள்ள கூப்பரின் கைரேகைளை பதிந்து மரபணு சோதனை செய்து இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டவர்களை விசாரித்து உள்ளனர். சக பயணிகள் தெரிவித்த அடையாளத்தை கொண்டு வரைபடத்தினையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் எந்த ஆதாரமும் சிக்கவில்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3-ம் தேதி எப்.பி.ஐ. அலுவலகம் வந்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மார்லாகூப்பர் என்ற பெண் , தனக்கு எட்டு வயதாக இருந்த போது எல்.டி. கூப்பர், டி.பி. கூப்பர் என்ற இரு உறவினர்கள் இருந்தனர் (மாமா) என்றும், அவர்களில் ஒருவர் காணாமல் ‌போய்விட்டதாக எப்.பி.ஐ.யிடம் கூறியுள்ளார். தற்போது இந்த ஆதாரத்தை வைத்து எப்.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை தீவிர விசாரணையி்ல் இறங்கியுள்ளனர்
.
==================================================================================
எவ்வளவு அழகான நீரோடை, இல்லையாங்க>..


 இன்னும் சில,,,,,,,,,,,,                                      


    அனைத்தும் போட்டொ பிளாக்கில் சுட்டவை        
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'கோபம்'_ வராதா? 
இயக்குநர் சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்பட்ட 'கோபம்' படத்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டார்
 விஜய். ஆனால் சீமான் அதே கோபத்தை வேறு நடிகரை வைத்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் படத்திற்கு 'கோபம்', 'பகலவன்' என பலப்பல டைட்டில்கள் கூறப்பட்டன. எந்த டைட்டிலும் உறுதி செய்யப்படாத நிலையில் சீமான் சிறைவாசத்துக்குள்ளானார். சிறைக்குள் இருந்தபடியே 'கோபம்' படத்தின் கதையை எழுதி முடித்த சீமான், சிறையில் இருந்து வெளியே வந்ததும் தேர்தல் பிரசாரத்தில் மூழ்கிவிட்டார்.

இடையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் விஜய்க்கு கதை சொன்ன சீமான், கதை சொல்லிச் சொல்லியே ஓய்ந்து விட்டாராம். இரண்டு மூன்று க்ளைமாக்ஸ்களை சொல்லியும் அதில் விஜய்க்கு விருப்பம்இல்லாம ல், அடுத்தடுத்த பட வேலைகளை தொடங்கி விட்டார்.

 2013 வரை சில படங்களுக்கு விஜய் தனது கால்ஷீட்டை வாரி வழங்கியிருக்கிறார். அதில் கோபம் இடமில்லை என்பதால் கிட்டத்தட்ட கோபத்தை விஜய் கைவிட்டு விட்டதாகவே கூறுகிறார்கள். அதேநேரம் சீமான் மிகக்கோபப்பட்டு வேறு நாயகனை வைத்தோ அல்லது அவரே கதாநாயகனாககோபத்தை வளர்க்கக் கூடும் என்று சீமான் தரப்பில் இருந்து தகவல் கோபமாகவருகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்


செவ்வாய்க்‍ கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுக்‍கு முன்பே சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகமாக கருதப்படும் செவ்வாய்க்‍ கிரகத்தில், தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டனர்.
இருந்த போதிலும், அது உறைந்து இருப்பதாகவே இதுவரை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், செயற்கைக்‍கோள் மூலம் மார்ட்டியன் எரிமலை பகுதியில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரத்தை தற்போது அமெரிக்‍காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிலத்துக்‍கடியில் இருந்த நீரோட்டம் இருப்பதற்கான படிமங்கள் தங்களுக்‍கு கிடைத்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பனிகட்டிகளாக உறைந்து கிடக்‍கும் படுகைகள், பின்னர் வெப்ப காலத்தில் உருகி தண்ணீராக ஒடுவதையும் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதுள்ள இந்த படுகைகள் உருகி தண்ணீராக மாறினால், அது செவ்வாய் கிரகம் முழுவதையும் ஆக்கிரமித்து கடல்போன்று இருக்‍குமென்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இத்தகவல்கள் விஞ்ஞான ஆராயச்சி குறித்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...