பின்னுக்குச் சென்றது அமெரிக்கா வர்த்தக கடன் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா முதல் முறை யாக பெரும் சறுக்கலை சந்தித் துள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர் கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இது அந்நாட்டின் பொருளாதா ரத்தை மேலும் ஆழமான நெருக் கடிக்கு தள்ளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இது உண் மையே என்று ஒப்புக்கொள்ளும் விதமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெ ரிக்காவில் ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் மோசமானதே என்று கூறியுள்ளார்.
2008ம் ஆண்டில் அமெரிக்கா வில்மையம் கொண்ட பொருளா தார நெருக்கடி அந்நாட்டை மட் டுமின்றி, அமெரிக்கா வரையறுத் துக்கொடுத்த நவீன தாராளமயக் கொள்கைகளை தங்குதடை யின்றி அமல்படுத்திய அனைத்து நாடுகளையும் தாக்கியது. சில நாடு கள் திவாலாகின. நூற்றுக்கணக் கான வங்கிகள் திவாலாகின. தொழில்கள் கடும் நெருக்கடிக் குள்ளாகின. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிக் கப்பட்டு வீதிக்கு விரட்டப்பட் டனர். இதன் தாக்கம் ஐரோப்பிய பொருளாதாரத்திலும் எதிரொ லித்தது. கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடு களும் கடுமையாக முயற்சித்தும், நெருக்கடியிலிருந்து மீள முடிய வில்லை.
இந்தப்பின்னணியில் மீண்டு மொரு கடும் நெருக்கடியை சந் திக்க வேண்டிய ஆபத்து அமெ ரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நாடாளுமன்றத் தில் குடியரசுக்கட்சியும் ஜனநாய கக்கட்சியும் இணைந்து, அமெ ரிக்கப்பொருளாதாரத்தில் பொதுச்செலவினங்களை கடுமை யாக குறைப்பதன்மூலம் நெருக் கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்மானித்தன. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள், கல்வி, சுகாதாரம் உள் ளிட்ட பொதுச்செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கடுமை யாக வெட்டிக்குறைத்து, பெரும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டுவது என்பதே.
நாசகர தாராளமயக் கொள் கையை தீவிரமாக அமல்படுத்திய அமெரிக்க முதலாளித்துவ பொரு ளாதாரம், தனக்குத்தானே ஏற் படுத்திக்கொண்டுள்ள தவிர்க்க முடியாத இந்த நெருக்கடியால் உழைக்கும் வர்க்க மக்களே மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தப்பின்னணியில் சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்கா வுக்கு முதல் முறையாக குறைவான ரேட்டிங் மதிப்பீடு வழங்கப்பட் டுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அந்நாட் டிலுள்ள முதலீட்டாளர்கள் மட் டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கத்துவங்கியுள்ளனர்.
பொருளாதாரக்கொள்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்றிதழ் வழங்கும் ஸ்டாண்டர்டு & பூவர் எனும் நிறுவனம், அமெரிக்க அர சின் சமீபத்திய கடன் கொள் கைகளை ஆய்வு செய்து அறிக் கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர வரிசையில் அமெரிக் காவுக்கு குறைந்த மதிப்பீட்டை அளித்துள்ளது.
சர்வதேச அளவின் பிரபல மான இந்த நிறுவனம் அளித் துள்ள மதிப்பீட்டின்படி, ஹஹஹ தரத்தில் இருந்த அமெரிக்காவின் நீண்டகால பொருளாதாரக் கொள்கையை ஹஹ+ என தரம் குறைத்து நிர்ணயித்துள்ளது.
முதன்முதலாக தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கப் பொரு ளாதாரம் சரிவைச் சந்தித்திருப் பது பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. உலகம் முழுவதிலு முள்ள பங்குச்சந்தைகளில் அமெ ரிக்க நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள் ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக ஆழமான நெருக்கடிக்குள் வேகமாக பய ணித்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இந்திய பங்குச்சந் தைகள் உட்பட ஆசியா, ஐரோப் பாவின் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது.
அமெரிக்காவின் சரிவு, உலக நிதிக்கட்டமைப்பில் கடும் அதிர்வை ஏற்படுத்தும் என்று அந் நாட்டின் பிரபலமான பொரு ளாதார ஏடான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கப்பொருளாதாரத்தின் தரக்குறைவு, உலக நிதிச்சந்தை களை திக்குத் தெரியாத எல்லையில் கொண்டுபோய் நிறுத்தும் என்றும், ஏற்கெனவே நீடிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய நெருக்கடியால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ‘வாஷிங் டன் போஸ்ட்’ ஏடு எழுதியுள்ளது.
அமெரிக்கப் பொருளாதா ரத்தின் தரவரிசை தாழ்ந்திருப்பது குறித்து தில்லியில் சனிக்கிழமை கருத்து தெரிவித்த மத்திய நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி, இது மோசமான நிலைமையை சுட்டிக் காட்டுகிறது என்றும், இந்திய அரசு இதுகுறித்து உடனே ஆய்வு செய்யும் என்றும் கூறினார். எனினும் உள்நாட்டில் எந்த அச்ச மும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
பிரணாப் முகர்ஜியின் கருத் தை, இந்திய பங்குச்சந்தை ஒழுங் காற்று அமைப்பான ‘செபி’யும் எதிரொலித்தது.
ஆனால்,இந்திய ரிசர்வ் வங்கி முரண்பட்ட கருத்தை வெளியிட் டுள்ளது. உலகப்பொருளாதாரம் ஒரு பயங்கரமான சூழலில் சிக்கி யிருக்கும் நிலையில், அதோடு இயைந்து வாழ்வதற்கு இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. (பிடிஐ).
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சறுக்கல் உலகளாவிய பொருளாதார மந்தத்தை நோக்கி மேலும் தீவிரமாக செல்லும் என்றும், இது இந்தியாவையும் கடுமையாக தாக்கக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், அமெரிக்கப்பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் சறுக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் நிதித்துறையில் மத்திய அரசின் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் தோல்வி இந்தியப்பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் ஆபத்து உள்ளது என்றும், இது இந்திய வங்கிக்கட்டமைப்பில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது என்றும் பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

______________________________________________________________________________
ஜீவாவும் டொமினிக் ஜீவாவும் |
-என்.மருத்துவமணி |
கணேஷ் அவர்களைச் சந்தித்ததற்குப் பின்னால் அதே வீட்டில் அதே இடத்தில் இன்னொருவரையும் சந்திக்க முடிந்தது. அந்தச் சந்திப்பு என் வாழ்க் கையை - ஏன் என்னுடைய பெய ரையே மாற்றி அமைத்துவிடும் என அப்பொழுது நான் நினைக்க வில்லை. கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கவில்லை. தோழர் கார்த்திகேசன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பக்கத்தே என்னை இலக் கியத் துறைக்கு அறிமுகப்படுத்திய ராஜகோபாலன் மாஸ்டரும் உடனி ருந்தார். இன்னும் சிலரும் இருந்தனர். பெரீய்.... ய மீசை.... ஸ்டாலின் மீசையைப் படங்களில் பார்த்திருப் பீர்கள் அல்லவா, அப்படிப்பட்ட மீசை. குறும்புத்தன்மை மிளிரும் கண்கள். புன்முறுவல் பூத்த உதடுகள். கதர் பைஜாமா. கதர்ச் சட்டை தோளில் ஒரு துண்டு. சிவப்புத் துண்டு. எளிமை என்றால், மகா எளிமை! “தோழர் வாங்க .... வாங்க.. இருங்க....” நகர்ந்து இடம் தந்து, பக்கத்தே இருத்திக்கொண்டு, தோளில் கை போட்டபடி சுக சேமம் விசாரிக்கிறார். அவர் நிச்சய மாக யாழ்ப்பாணத்தாராக இருக்க முடியாது. காரணம் அவர் தமிழைப் பேசிய விதம். இருந்தும் அந்தத் தமிழ் கொஞ்சி விளையாடியது. உச்சரிப் பில் தனிப்பாசம் தொனித்தது. முன் னர் எங்கேயோ சந்தித்துப் பழகியிருக் கிறோமோ, என்ற நெருக்கத்தை ஏற் படுத்தியது. அன்பை வெளிப்படுத்தி யது. தோழமை என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது. தோழர் எனச் சொல்லப் பயம். ஆனால் அவரே வார்த்தைக்கு வார்த்தை தோழர் என என்னை அழைத்தார். அவருடைய வய தென்ன? என்னுடைய வயதென்ன? நானோ ஒரு பொடியன். நான் மலைத்துப் போய் விட்டேன். அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டி ருந்தேன். சம்பாஷிப்பதே ஒரு கலை யாகத் தெரிந்து வைத்திருப்பவரைப் போல, சூழ்நிலையைச் செம்மைப் படுத்தும் விதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார் அவர். அதில் நகைச்சுவையும் இழையோடி இருந் தது. “இவர் தமிழ் நாட்டுத் தோழர், ஜீவா. ப.ஜீவானந்தம் என்பவர் இவர் தான். இப்ப இவர் இலங்கை வந்தி ருக்கிறார்” எனக் கார்த்தி அறிமுகத் தைத் தொடங்கி வைத்தார். எங் களையெல்லாம் “பார்ப்பதற்காக இலங்கை வந்திருக்கிறார்” உண்மையைச் சொல்லுகின் றேன். அந்த அறிமுகம் எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் பெரிசாகப் பட வில்லை. சும்மா ஒப்புக்கு எனக்கு இவரைப் பற்றித் தெரியும் என்ற விதத்தில் தலை ஆட்டி வைத்தேன். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் கல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் எடுத்த தீர்மானத் தைச் சாட்டாகக் கொண்டு , நேரு அரசாங்கத்தால் கட்சி தடை செய் யப்பட்டுவிட்டது. தலைமறைவாகப் போன தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம், கள்ளத் தோணி மூலம் வல்வெட்டித்துறையூடாக இலங் கைக்குத் தப்பி வந்துவிட்டார். இவ ரைப் பத்திரமாகக் கொண்டு வந்து , கொண்டு போக வழி சமைத்துத் தந் தவர் 1956இல் பருத்தித்துறை நாடாளு மன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய் யப்பட்டிருந்த தோழர் பொன். கந்தையா அவர்கள். அது யுத்த பிற்காலம். கெடுபிடி கள் அதிகம். பிரஜைகள், ஊர் விதா னைகள் மூலம் பதியப்பட்டு அரிசிக் கூப்பன்கள் வீடுவீடாகப் புழங்கப் பட்ட சமயம். அந்தக் கால கட்டத்தில் ஜயம் பிள்ளை என்ற பெயர் பதியப்பட்டு அவருக்கு அரிசிக் கூப்பனும் பெறப் பட்டிருந்தது. நமது தோழர்கள் சமயோஜித புத்தியுடன் இந்த நட வடிக்கைகளை எடுத்திருந்தனர். தோழர் ஜீவானந்தத்தினுடைய புலம் பெயர்ந்த கூப்பனரிசிப் பதிவுப் பெயர் ஜயம் பிள்ளை என்பதாகும். ஜீவா அவர்கள் சில நாட்கள் தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந் தார். அவர் போன இடம், கூட்டம் , வரவேற்பு அத்தனைக்கும் நான் செல்லத் தவறவில்லை. ஒரே நாம பஜனைதான் வழிபாடுதான். என்னுடைய இந்த ஏகலைவப் பக்தியைப் பார்த்து அதிசயித்த ராஜ கோபாலன் மாஸ்டர்தான் எனது இயற்பெயரை விடுத்து, ஜீவா என அழைக்கத் தொடங்கினார். எனக்கும் அது மனசுக்குச் சுகமாக இருந்தது. எனது இயற்பெயர், பதிவுப் பெயர், ஞானஸ்நானப் பெயர், ஜோசப் டொமினிக். டொமினிக் என்ற பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துப் பார்த்தேன் டொமினிக் ஜீவா என ஒரு நாதம் பேசியது. சட்டபூர்வமாகவும் நடவடிக் கையை மேற்கொண்டு பிறப்புப் பத்திரத்தில் பதிவு செய்து எனது முழுப் பெயராக ‘டொமினிக் ஜீவா’ என ஆவணப்படுத்திக் கொண்டேன். பத்திரப் பதிவு செய்து கொண் டேன்” (ஜீவா: கலாசாரத்தின் அரசி யல் அரசியலின் கலாசாரம் நூலிலிருந்து) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக