bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 10 ஆகஸ்ட், 2011

இம்மாதப் புத்தகம்


அமெரிக்காவை கலக்கிய புதினம்
மயிலைபாலு
                                      http://www.estantedelivros.com/wp-content/uploads/2010/01/estante_ananunes_4.jpg                                           
2009 ஆண்டில் நாடெங்கும் இதே பேச்சு ‘பொருளாதார மந்தநிலை’ இதனால் அதிகம் அடிவாங்கியது பொருளாதார அடியாளான அமெ ரிக்காதான். வங்கிகள் திவால்; அற்ப விலைக்கு வீடுகள் ஏலம்; மந்தநிலை யிலிருந்து மீண்டுவர ஆண்டுகள் பல ஆகலாம் என்றெல்லாம் பேசப்பட் டது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்குள்ள வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட் டவை என்பதால் திவாலாகாமல் தப்பித்தன.

இப்படியான சமூக அரசியல் நிகழ்வுகள் இங்கே வெறும் செய்தி களாகத் தோன்றி மறைந்து விடுகின் றன. பொருளாதார மந்தநிலை என் பதே மகத்தானதாக இருந்தது. 1930 களில் இந்திய அரசியலில் - பொரு ளாதாரத்தில் இதனைக் குறிப்பிடாத வர்களே இல்லை. அந்த கிரேட் டிப்ர ஷன் மக்களை எப்படி வாட்டி வதைத்து; வீடுகளிலிருந்து விரட்டி அடித்தது; வெளியேற்றியது என் பதைப் பதிவு செய்திருக்கும் புதினம் “தி கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்”

1939 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதினம் 70 ஆண்டுகளுக்குப்பின் ஏற் பட்ட பொருளாதார மந்தநிலைக் கும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தப் புதினம் வெளிவந்த காலத்தில் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2500 பிரதிகள் விற்றுத் தீர்ந்தனவாம். மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருந்த காலம் இது என்பதையும் ஒப் பிட்டுப் பார்த்தால் விற்பனையின் வீச்சு புரியும். 10 மாதங்களுக்குள் 5 லட்சம் பிரதிகள் விற்பனையாயின. இப்போதும் விற்பனையில் இருக் கும் இந்தப் புதினம் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பிரதிகள் விற் றுள்ளனவாம்.

அமெரிக்காவின் ஓக்ல ஹாமா நகரில் புழுதிப்புயல் வீசி விளை நிலங்கள் எல்லாம் நாசமடைகின் றன. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இய லாத நிலை ஏற்படுகிறது. வங்கிக ளோ நிலங்களை ஜப்தி செய்து கொள்கின்றன. அடுத்தவேளை உண வுக்கும் வழியில்லாத மக்கள் தங்க ளின் குடியிருப்புகளை காலி செய்து கொண்டு புறப்படுகிறார்கள்.

புலம் பெயர்ந்து செல்வோர் துன்ப துயரங்களோடு துணிமணி களையும் தட்டுமுட்டுச் சாமான் களையும் சுமந்து செல்ல இயலுமா? கால்நடைகளை ஓட்டிச் செல்ல இயலுமா? முதியவர்களை உடன ழைத்துச் செல்ல முடியுமா? இயன்ற வரை... இயன்றவரை.. தான் எல் லாமே.

இயன்றவரை கொண்டு செல்லப் பட்ட பின் கால்நடைகள் ஆதரிப் பாரின்றியும், உணவின்றியும் மடிகின் றனர். முதியவர்கள் பயணவழியி லேயே இறந்து மடிகின்றனர் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊர் செல்லும் மக் களின் இன்றைய அவலங்கள் இந்தப் புதினத்தில் நிழலாடுகின்றன.

டாம் ஜோட் என்ற கதாபாத்தி ரத்தின் வழியாகவே கதை சொல்லப் படுகிறது. ஏற்கெனவே குற்றச் செயல் களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டு, பரோலில் வெளியே வந்தவன் டாம் ஜோட். இவன் முன்னாள் மதபோதகர் ஜிம் கேசியைச் சந்திக்கிறான். அவன் போதனைப்பணியை விட்டுவிட்ட தாகச் சொல்கிறான். புனித ஆவி என் பது அன்பில் தான் இருக்கிறது. கட வுளை - ஏசுவை நேசிப்பது அல்ல புனிதம் - அனைத்து மனிதர்களையும் நேசிப்பதுதான் புனிதம் என்ற மாற்று போதனையை முன்வைக்கி றான். அணியாகத் திரட்டப்படும் மதச் செல்பாடுகளை அவன் சாடு கிறான்.

இப்படியாக நாவலின் தொடக் கமே கருத்து மோதல்களோடு அமைகிறது. புதினத்தின் உள்ளேயும் இந்த மறைவாள் வீச்சு தொடர்கிறது.

டாம் ஜோடும் ஜிம் கேசியும் உறவினர்களைத் தேடிச்செல்வது; அவர்களை ஊரில் காணாததால் ஏமாற்றமடைவது; அடுத்து அவர் கள் செல்லக்கூடும் என்ற கணிப்பில் இன்னொரு ஊருக்குப் பயணப்படு வது; இந்தப் பயணத்துக்கு இடையே காணப்படும் சோகக்காட்சிகள் நாவலில் விரிகின்றன.

உண்ண உணவின்றி நோய்வாய்ப் பட்டு இறப்பதும்; பழையமாடல் கார் ஒன்றில் தட்டுமுட்டுச்சாமான் களை ஏற்றிச் செல்லும் போது அச்சு முறிவதும்; அடுத்து என்ன செய்வ தென்று புரியாமல் விழிப்பதும்.. கதை அமெரிக்காவில் நடப்பது போலவும் இல்லை 1940 ல் நடப்பது போலவும் இல்லை இன்றைக்கும் வறுமையில் புலம் பெயர்ந்து செல்வோரின் பாடு பெரும் பாடுதானே!

சோகக்காட்சிகளுக்கிடையே கருவுற்ற ஒரு பெண்ணும் வருகிறாள். அவளின் குழந்தை இறந்து பிறக் கிறது. அந்தத் துயரத்தோடு செல்லும் போது வழியிலே இன்னொரு துயரம். ஒரு சிறுவன் உடல் நலம் குன்றிய தன் தந்தையோடு இருக்கிறான். பல நாட்கள் பட்டினி கிடந்ததால் திட உணவை உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான். திரவ உண வுக்கு எங்கே போவது? குழந்தை யைப்பறி கொடுத்த அந்தத் தாய் முன் வருகிறாள். முதியவருக்கு மார்பு கொடுக்கிறாள்.

1930 களில்ஏற்பட்ட கிரேட் டிப்ர ஷன், அதனால் மக்கள் அனுபவித்த சோகத்தையெல்லாம் சாறு பிழிந் தாற் போல் கொடுத்த ‘தி கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்’ வழக்கம்போல் ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஆளா னது. இந்தப் புதினத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிட் டனர்; கம்யூனிசக் கருத்துகளை பிரச் சாரம் செய்வதாக கூப்பாடு போட்ட னர். கலிஃபோர்னியா மாகாண அவையிலே கூட இந்தப்புதினம் பற்றி விவாதிக்கப்பட்டது.

நோயால் பாதிக்கப்பட்டவனுக்கு ஏழைத்தாய் மார்பு கொடுத்ததை ஆபாசக் காட்சி என்று சாடியவர் களும் உண்டு. இதுபோன்ற காட்சிப் படுத்தல் களாலேயே நூல் விற்பனை அதிகரிக்கிறது என்றாரும் உண்டு.

ஒருபக்கம் இந்த நாவல் எரிக்கப் பட்டது; மறுபக்கமோ நூலகங்கள் இதனை வாங்க வரிசையில் காத்து நின்றன. இந்த முரண் ஆளும் வர்க்கத் துக்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான முரணாக வெளிப் பட்டது.

உண்மைகளை உரத்துப் பேசிய இந்த நாவலை எழுதிய ஜான் ஸ்டீன்பெக் ஒரே எட்டில் அமெரிக்க எழுத்தாளர்களில் புகழின் உச்சிக்குச் சென்றார். இவர் 1902 ஆம்ஆண்டு பிப்ரவரி 27 அன்று கலிஃபோர்னியா மகாணம் சாலினாசில் பிறந்தார். தந்தை ஒரு அரசு ஊழியர். தாயின் மூலமே கலை இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார் ஸ்டீன்பெக். எழுத்தாள ராக வேண்டும் என்று இளம் வயதி லேயே விரும்பினார். “கப் ஆஃப் கோல்ட்” என்ற இவரது முதல் புதி னம் முழுமை பெறாமல் போனது; எனினும் முயற்சியில் பின்வாங்காமல் கிராமப்புற விவசாயிகளை மையமா கக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதை கள் தொகுப்பைக் கொண்டு வந்தார். நிலத்துக்கும், மனிதர்களுக்கும் இடை யேயான உறவை வலுவாக எடுத் துரைப்பது “அறியப்படாத ஒரு கட வுளுக்கு” என்ற புதினம்.

இரண்டாவது உலகப்போரின் போது வெளிநாட்டு நிருபராகப் பணி புரிந்த ஸ்டீன் பெக், இந்த அனு பவங்களைத் தொகுத்தும் வெடி குண்டுகளுக்கும் எதிராகவும் 1942 ஆம்ஆண்டில் ஒரு புதினம் எழுதி னார். இலக்கியப் பணிகளுக்காக புலிட்சர் விருதும், நோபல் பரிசும் பெற்ற ஸ்டீன் பெக் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 20ல் காலமானார்.

சமூக அரசியல் நிகழ்வுகளை - இலக்கிய வடிவங்களில் பதிவு செய்து வைத்தால் பல ஆண்டுகள் ஆனபிற கும் அசைபோட முடியும்; கடந்து வந்த பாதையைக் கணிக்க இயலும் என்பதற்கு ஸ்டீன் பெக்கும் அவரது படைப்புகளும் சான்றுகளாக விளங்குகின்றன.
                               
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...