சனி, 16 மார்ச், 2013

அன்றைய காங்கிரசுக்காரர் நெடுமாறன்

அய்யா நெடுமாறன் செல்லும் பேசும் இடங்களில் எல்லாம் ராஜபக்சேவையும் ,அவருக்கு துணை போகும் சோனியா காங்கிரசு அரசையும் தாக்கி பேச  மறந்து விடுகிறார்.ஆனால் அவரின் அரசியல் எதிரி கருணாநிதியை மட்டும் தாக்கி பேச மறப்பதில்லை.
இப்போதைய மாணவ்ர்கள் போராட்டத்தில் பேசும்போது தீர்மானத்தை ஆதரிக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.மாணவர்கள் போராட காரணமான  தீர்மான ஆதரவை காங்கிரசு அரசு தெரிவிக்க வே ண்டும்  வற்புறுத்தவில்லை.
மாறாக அப்போது ஆட்சியில் இருந்தும் ஈழத்தமிழர் பிரச்னையில் கருணாநிதி ஒன்றும் செய்ய வில்லை.அதற்காக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மட்டுமே ஆவேசமாக முழங்கியுள்ளார்.
இது போன்ற தனது அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் ஈழப்போராட்டத்தின் திசையையே நெடுமாறன் மாற்றி விடுகிறார்.அதன் வீரியத்தையே தனது உள்ளடி உள்ளூர் அரசியல் மூலம் நீர்த்து விடச்செய்கிறார்.
திமுகவில் நெடுமாறன் அரசியல் கற்றுக்கொண்ட நாள் முதலாக கருணாநிதிக்கும் அவருக்கும் உள்ள அரசியல் மோதலின் வெளிப்பாடுதான் இவைகள்.
இல்லை என்றால் விடுதலிப்புலிகள் இந்தியாவின் எதிரிகள்.பிரபாகரனை கைது செய்ய வே ண்டும்,அவரை கைது செய்து நிறுத்துவேன் என்றதுடன் ஈழ இறுதிப்போரின் ஆரம்பத்தில் இதே ஜெயலலிதா தமிழர்கள்,மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வந்தததும்"போர் என்றால் பொதுமக்கள் உயிர் இழப்பு சாதாரணமான துதானே "என்ற  ஜெயலலிதா இன்றுவரை அவரும் ,சீமானும்,வைகோவும் இது போன்றன்மன்னிப்புகளை கேட்கச்சொல்லாததன் மர்மம் என்ன?
மன்னிப்பு கேட்கச்சொல்லாததுடன் மட்டுமல்ல .அவரை காவிரியிந்தாய் போல் ஈழத்தின் தாய் என்றும் துதி பாடுகிறார்கள்.
அது மட்டுமல்ல இன்றைய மாணவ்ர்கள் போராட்டத்தை அமுக்கி வைக்க பரவும் மாணவர் ஆவேசத்தை தடுக்க கல்லூரிகளுக்கே விடுமுறை விட்டு வரும்,டெசோ "தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தி  "நடத்திய வேலை நிறுத்தத்தையே சிதறடித்து மத்திய அரசின் நிம்மதியை காப்பாற்றிய முதல்வர்" ஜெயலலிதாவால் மட்டும்தான் முடியும் "[you can amma]என்று சிலர்  பதாதைகளை தூக்கி காண்பித்தார்களாம்.
இப்போதும் இந்திய அரசை ஐ.நா.வில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத்தில் நடந்து கொள்ள டெசோ அறிவித்த முழு அடைப்பு  போராட்டத்தை அனைத்து பிரிவினரும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெறச்செய்திருந்தால் இந்திய மன்மோகன் சிங் காங்கிரசு அரசின் நிலை மாறி இருக்கும் .ஆனால் அதை வைகோ,சீமான்,நெடுமாறன்,ஜெயலலிதா கூட்டம் தானே நீர்ர்த்துப்போக வைத்தது.அது இந்திய அரசின் நிலைக்கு சார்பாக மாற்றி விட்டார்களே.
இன்றும் கர்நாடகாவில் வாட்டாள்,பாஜக,காங்கிரசு எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தாலும் காவிரி பிரச்னை என்று வந்தால் எவ்வாறு ஒரே குரலில் பேசுகிறார்கள் ,கேரளாவிலும் முல்லைப்பெரியாறு பிரச்னையில் தமிழக ம் பக்கம் வலுவான உண்மை இருந்தாலும் காங்கிரசு,பாஜக,மார்க்சிஸ்ட், கட்சிகள் தங்கள் அரசியலை மறந்து ஒரே முறையில் போராடினார்கள்.
இந்த ஒற்றுமை நம் தமிழத்தில் மின்சாரம் பெறுவதில் இருந்து காவிரி,முல்லை பெரியாறு,ஈழம் என்று ஒரு பிரச்னையில் இல்லாதது தமிழத்தின் அரசியல் சாபக்கேடு.
காரணம் தன்னால்தான் இந்த பிரச்னை முடிந்தது என்று ஆதாயம் தேடும் அரசியல்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் கட்டாயத்தால் அரசிதழில் காவிரி தீர்ப்பு வெளியானதையெ தங்களின் மாபெரும் சாதனை என்று தன்னை பாராட்டி தானே விருது வழங்கும் விளம்பர தான் என்றதற்பெருமை  மோகத்தில் மூழ்கியுள்ள மாநிலம் இது.
கல்லுரி மாணவர்கள் ஈழப்போராட்டத்தையே தங்கள் கட்டுக்குள் கொன்டுவர முயற்சிகள் செய்கிறார்கள்.தங்கள் எதிரணியினர் போராட்டத்தை பாராட்டி பேச வந்தால் கூட கொஞ்ச பேர்கள் இருந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இது மாணவர்கள் போராட்டத்தையே  திசைமாற்றி வலுவிஹ்ழ்க்கச்செய்யும் என்பதை உணராத அளவு இருக்கிறார்களா?அல்லது அதுதான் இவர்களின் நோக்கமா?
மாணவர்களை பாராட்டி பேச வேண்டிய வர்  அவர்கள் போராட்டத்தை சரியான முறையில் கொண்டு செல்ல அறிவுரைகளை வழங்க வேண்டியவர் நெடுமாறன் ,வைகோ,சீமான் போன்றோர் அந்த மேடையை தங்கள் அரசியலுக்கு மட்டுமே பயன் படுத்துவது மிகத்தவறு.நடந்த கதைகளை மட்டுமே மீண்டும் ,மீண்டும்  கூறி முன்னெடுத்து செல்ல வெண்டிய திசையை நேர்மாறாக மாற்றுவது மாணவர்களின் கவனத்தையே திசை திருப்பி விடும்.இவர்களையும்உங்கள் ஆவேச பேச்சின் மூலம்  தீக்குளி ப்பதுதான் இப்பிரச்னைக்கு தீர்வு என்கிற அளவு கொண்டு செல்ல வே ண்டாம்.
இன்றையை நிலைக்கு என்ன தேவை என்று சிந்தித்து செயல்பட வையுங்கள்.வீண் ஆவேசம் இங்கு இப்போது செல்லாது .அது தேவையும் அல்ல.
மற்றவர்களை தூண்டி விடும் இந்த போராளிகள் தலைவர்கள் யாராவது  இதுவரை தீக்குளித்து வைத்தார்களா? அல்லது சாகும் வரை உண்ணா நிலை போராட்டம்தான் செய்தார்களா.வாழ்த்தி பேச வந்து தனது உள்ளூர் அரசியலையும் உணர்ச்சியை தூன்டுவதையும் மட்டுமே பேசிவருகிறார்கள்.இப்போது ஈழத்தமிழர் பிரச்னை ஊள் ளூர் அரசியல் இல்லை.உலக அளவில் எடுத்து சென்று நிவாரணம் செய்ய வே ண்டிய பிரச்னை.
அதை கருணாநிதி சரியான முறையில் டெசோ மூலம் செய்து வர முயற்சிக்கிறார் .அதை நெடுமாறன்,வைகோ  ,ஜெயலலிதா திசை மாற்றுவது சரியான செயல் அல்ல.
கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது நடந்த முறை அவர் அப்போது மேற்கொண்ட முயற்சி தவறான எதிர் விளைவுகளை தந்திருக்கலாம் .
அவரால் பொறுப்பில் இருந்தும் படுகொலைகளை தடுக்கமுடியாமல் போனது தவறாக கருதப்படலாம்.
ஆனால் அப்போது மட்டும் அவர் என்ன செய்தாலும் இந்த படுகொலை களை தடுத்திருக்க முடியுமா?முடியாது.இது அடுத்த நாட்டில் நடந்த பிரச்னை.ஒரே இந்தியாவில் இருந்து கொண்டெ இங்குள்ள காவிரி பிரச்னையை தீர்க்க முடியவில்லை .முல்லைப்பெரியார் அணை போன்ற வற்றில் நமது மாநிலத்துக்கு கிடைக்கக் வேண்டிய உரிமையையே பெற மத்தியா,அண்டை மாநிலத்துடன் போராடியும் ஒன்றும் நடக்காத நிலை.
இதில் அந்நிய நாட்டில் கருணாநிதி என்ன செய்யா முடியும்?பதவி விலகலாம்.அது மட்டும் தான் செய்ய முடியும்.அதைத்தானே இவர்களும் எதிர் பார்த்தார்கள்.
இன்று  எதிர்கால வாழ்விற்கு இருக்க இடமும்,உன்ன உணவும் இன்றி துன்பத்தில் உழலும் ஈழ மக்களுக்கு இன்றைய நிவாரணத்தை பக்ஷே அரசு செய்ய அழுத்தம் தர வேண்டும் .அதற்குத்தான் தீர்மானம் .அதை இந்திய அரசு  ஆதரிக்க வே ண்டும் இலங்கை அரசை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும் .அதற்குத்தான் மானவர்கள் போராட்டம்,டேசொவின் கதவடைப்பு போராட்டம் .ஆனால் இன்னமும் மாவீரன் பிரபாகரன் வருவார் ஆயுதம்தாங்கி போராடி தனி ஈழம் மலரும்.பாலாறு ம்,தேனாறும் ஓடும் என்பதுதான் நெடுமாறன்,வைகோ,சீமான் கனவு.அந்த கனவிலேயே இன்றைய யதார்த்த நிலையை மறந்து இன்றைய ஈழத் தமிழர்கள் அவலத்தை தீர்க்கும் முறை மறந்து திரிகிறார்கள்.
இப்போதைய நிலைக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெ வைத்துக் கொள்ளலாம்.
அவரின் மன்னிப்பு மூலம் இழந்த ஈழவர் உயிர் திரும்பிடுமா?தமிழிழம்தான் மலர்ந்திடுமா?
கடந்த காலத்தில் காலத்தில் கருணாநிதி செய்த வை அவரை பொறுத்தவரை சரி என்றுதான் அவருக்கு படுகிறது.ஆனால் நெடுமாறன் பார்வைக்கு அவை தவறு என்று படுகிறது .அவ்வளவுதான்.கடந்த காலத்தில் நெடுமாறன் இதே காங்கிரசில் செயல் வீரராகஇருந்தாரே அதற்காக அவர் என்ன செய்யப்போகிறார்?அதற்கு பிராயச்சித்தம் தான் என்ன? கருணாநிதி அப்போது துரோகம் செய்தார் என்றும் ,ஜெயலலிதா ஈழத்தாயாகிறார் என்றும்  திரும்ப திரும்ப சொல்லி வருபவை ஊடகங்களிடையே ஒரு மர்மக்கயிறு தொடர்பாக இருப்பதை உணர் முடிகிறது.ஊடகங்கள் பெயர்களை மட்டும் சொல்லிவிடலாம்தான்.தினமலர்,தினமணி,துக்ளக்,ஆனந்த விகடன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிபோர்ட்டர்,என்டிடிவி,இந்தியா டுடே .
இதற்கு முன்னர் விடுதலை புலிகள் பிரச்னைக்காவே இரண்டு முறை தனது அரசை பலி கொடுத்தாரே அதற்கு அன்றைய காங்கிரசுக்காரர் நெடுமாறன் என்ன செய்யப்போகிறார்?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்ம ஊரு பரவாயில்லை .

வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் நாம் 100 டிகிரி 105 டிகிரி வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறோம். பொதுவாகவே ஆசிய நாடுகளில் வெயில் அதிகம். ஆ...