bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 22 மார்ச், 2013

சோனியா எப்படி ஒத்துக்கொள்வார்

"தி.மு.க.,வின் கோரிக்கைகளை ஒட்டிவரும்  21ம் தேதி ஓட்டெடுப்பு நடக்க இருப்பதால், அதற்குள் மக்களவையில்  தி.மு.க., கேட்ட திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால்மட்டும்  தன் முடிவை மறு பரிசீலனை செய்ய தயார்" என்று  கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால்  சோனியா கடைசி வரை  முடிவை பற்றி வாயை திறக்காமல் இருந்ததால்  தி.மு.க.சோனியா கூட்டணியில் இருந்தும்-மத்திய அமைச்சர்கள்  பதவியில் இருந்தும்  விலகி யுள்ளது.
புலிகள் தடைக்கு ஜெயலலிதா நன்றி.
இலங்கை போர் குற்றம் பற்றி விசாரணையை நடத்த சொல்ல சோனியா எப்படி ஒத்துக்கொள்வார்.அவரின் காங்கிரசு[ இந்திய] அரசின் ஒத்துழைப்புதானே  ஈழத்தமிழர்கள் அழித்தொழிப்பில் ராஜபக்சேக்கு பெருமளவில் கைகொடுத்தது.போர்குற்றம் பற்றி விசாரித்தால் பக்சே தனது வாயை சோனியா அரசுக்கு எதிராக திறப்பாரே.உலக அளவில் மாட்டிக்கொள்ளப் போவது-அசிங்கப்படப்போவது யாராக இருக்கும் என்று உணர முடியாதவர்களாக தமிழர்கள் இ ருக்கிறார்களா?
இதில் பாஜகவும் ராஜபக்சேயின் போர்குற்றம் பற்றி விசார்க்க சொல்வது தேவை இல்லாதது என்று பொன்மொழியை உதிர்த்துள்ளது வேதனை.
"போனால் போகட்டும் போடா ,இந்த பூமியில் நிலையாய் ஆண் டவர் யாரடா?"
  பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, அளித்து வரும் ஆதரவை திரும்பப்   பெறுவது தொடர்பான கடிதத்தை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம், தி.மு.க., நேற்றிரவு அளித்தது. தி.மு.க.
மக்களவை  குழு தலைவர், டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.,க்கள்  நேற்றிரவு, 10:30 மணிக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை, ஜனாதிபதியிடம் அளித்தனர்.
திமுக சார்பில் மத்திய கேபினட் அமைச்சராக மு.க.அழகிரியும், இணை அமைச்சர்களாக 4 பேரும் உள்ளனர். பதவி விலகும் தி.மு.க. அமைச்சர்கள் .அவர்கள் வகிக்கும் இலாகாக்கள் . மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (ரசாயனம் மற்றும் உரம்)
இணையமைச்சர்கள்:
பழநிமாணிக்கம் (நிதித் துறை)
ஜெகத்ரட்சகன் (தொழில் துறை)
காந்திசெல்வன் (சுகாதாரத் துறை)
நெப்போலியன் (சமூக நீதித் துறை)
இதுவரை திமுக காங்கிரசை அதன் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக ஆட்சியில் இருந்து விலகுவதாக ஐந்து முறை மிரட்டல் விடுத்துள்ளது.
 ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது.

* 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது.

* 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தது.
* 2012 மார்ச் - "இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை ஆதரிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, அப்போதும் தி.மு.க., எச்சரித்தது. .

* 2012 மே - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. "விலை உயர்வை குறைக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என அறிவித்தது.
* 2013 மார்ச் - "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலக நேரிடலாம்" என்று இப்போது கடைசியாக  எச்சரித்து வந்தது.
கடைசியாக  நேற்று கூட்டணியிலிருந்து விலகியேவிட்டது .
இது பற்றி ஆனால் கருணாநிதியின் வள,வளப்பை ஸ்டாலின்தான் உறுதியாக்கி மத்திய அரசில் இருந்து விலக வைத்தாராம்.முன்பிருந்தே மத்திய சோனியா அரசின்-ராகுலின் நடவடிக்கைகள் ஸ்டாலினுக்கு பிடிக்க வில்லையாம்.பதவி விலகக் கோரியும் கருணாநிதி 2ஜி ,அழகிரி பிடிவாதத்தால் தான் விலகவில்லையாம்.
இந்த முறையும் கூட கனிமொழி,தயாநிதி மாறன்,அழகிரி,பழனி மாணிக்கம் போன்றவர்கள் கொஞ்சம் பார்த்து பேச்சுவார்த்தை செய்து விட்டுக்கொடுத்து போகலாம் என்று  வழுக்கிக்கொண்டு சென்றிரு க்கிறார்கள்.கருணாநிதியை சமாதனப்படுத்த செய்திருக்கிறார்கள்.
ஆனால் மு.க.ஸ்டாலின்  "பதவியை விட்டு விலகாவிட்டால் தமிழகத்தில் திமுகவுக்கு மரியாதையே இல்லாமல் போ ய் விடும்,ஒவ்வொரு திமுக தொண்டனும் காங்கிரசை வெறுக்கிறார்கள்.கூட்டணியை விட்டு விலகுவதே அவர்களின் விருப்பம்.அதை மீறி கூடணியில் தொடந்தால் அது திமுகவை படுகுழியில் தள்ளி விடும்.நானும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் "என்று  பிடிவாதம் காட்டினாராம்.பேராசிரியர் அன்பழகன்,வீரமணி,சுப.வீரபாண்டியன்  போன்றோர் ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள்.
அவர்கள் கூறியது உண்மை என்பதை ஊர்கள் தோறும் திமுகவினர் காங்கிரசு கூட்டணி முறிவையும்- அமைச்சரவையில் இருந்து விலகுவதையும் வெடி வெடித்து ,இனிப்புகள் கொடுத்து கொண்டாடியது உணர்த்திவிட்டது.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...