bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 8 மார்ச், 2013

இந்தியாவுக்கு தெரிந்தே நடந்துள்ளது."இலங்கையின் இனப்படுகொலைகள் நடந்தபோது அதுகுறித்த அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்கு தெரிந்தே இருந்தது என்றும், அதற்கு இந்திய அரசும் உடந்தையாக இருந்தது என்றும்  "
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டினார்.
இவர் முன்பே இக்கருத்தை கூறியுள்ளார். இப்போது தனது குற்ற சாட்டை மக்களவையிலேயே பதிவு செய்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் வியாழனன்று நடந்த இலங்கை தமிழர் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப்பேசியபோது யஷ்வந்த் சின்ஹா இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இலங்கையின் இனப்படுகொலைகள் நடந்தபோது அதுகுறித்த அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்கு முழுமையாக தெரிந்தே இருந்தது என்று பல்வேறு செய்திகள், பேட்டிகள், அரசு அறிக்கைகள், புத்தகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் புலனாய்வு அறிக்கைகளிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விரிவாக மேற்கோள் காட்டிப்பேசியுள்ளா ர்.
“துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் என்ன நடந்தது என்று இந்தியாவுக்கு அப்போதே முழுமையாக தெரிந்திருந்திருந்தும் இந்தியா அமைதியாக இருந்தது மட்டுமல்ல, இலங்கை தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாகயும் இருந்தது. இதற்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் நான் அளித்து விட்டேன். இதை இலங்கையைச்சேர்ந்தவர்களும் கூட உறுதிப்படுத்திவிட்டார்கள். இந்தியா தரப்பிலும் உறுதிப்படுத்திவிட்டார்கள்”.
ஐநா தீர்மானத்தை இந்தியா கொண்டுவந்திருக்க வேண்டும் 
ஜெனீவாவில் நடந்துவரும் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் வார்த்தைகள் மற்றும் வாசகங்கள் இறுதியானபிறகு அதைப்பொறுத்து இந்தியா தனது நிலையை எடுக்கும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் அந்த தீர்மானத்தின் வாத்தைகளைப்பொறுத்து அதை ஆதரித்து வாக்களிப்பதா இல்லையா என்பதை முடிவெடுப்போம் என்று கூறியிருக்கிறார். அது சரியான அணுகுமுறையல்ல. இந்தியாவே அந்த தீர்மானத்தை வடிவமைக்கவேண்டும், அந்த தீர்மானத்தை ஐநா மன்றத்தில் நிறைவேற்றுவதில் இந்தியா முழு முயற்சி எடுக்கவேண்டும்,”
இலங்கையின் இறுதிப்போரின்போது நடந்த இனப்படுகொலைகள் குறித்து இலங்கைக்கு வெளியில் இருக்கும் நிபுணர்களைக்கொண்டு சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும்.  அந்த குற்றங்களுக்கு காரணமானவர்களை தண்டிப்போம் என்று இலங்கை அரசு இப்போதே வெளிப்படையான உறுதிமொழி ஒன்றை அளிக்கவேண்டும் .
இலங்கை ராணுவம் நாட்டின் வடபகுதியிலிருந்து உடனடியாக விலக்கிகொள்ளப்பட வேண்டும்.
 போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆனநிலையில் இனியும் நாட்டின் வடபகுதியின் அன்றாட நிர்வாகத்தில் ராணுவம் நடத்தத் தேவையில்லை .
வட இலங்கையின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை உள்ளூர் காவல்துறையிடம் கையளித்துவிட்டு ராணுவம் உடனடியாக தமது நிலைகளுக்கு திரும்பவேண்டும்.ராணுவம் அங்கே அரச நிர்வாகத்தை தொடர்ந்து நடத்துவதால் அவர்களின் மனித உரிமை மீறல்களும் அங்கே தொடருகிறது.
இலங்கை அரசு அமைத்த எல் எல் ஆர் சி எனப்படும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் படிப்பினைகளுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் . இந்திய அரசிடம் தொடர்ந்து ஒப்புகொண்டபடி 13வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு அதிகமான அதிகார பரவலை இலங்கை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும்..
சீன பூச்சாண்டி
மேலும் இந்தியா இலங்கையை பகைத்துக்கொண்டால் அங்கே சீனா புகுந்துவிடும் என்று கூறப்படும் வாதத்தை ஏற்கமுடியாது .அது இந்தியா தனது தரப்பை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் சொத்தை  வாதம்.
 இலங்கை விவகாரத்திலாகட்டும், இந்தியா இலங்கைக்கிடையிலான உறவிலாகட்டும், இந்தியாவின் அண்டை நாடுகளோ அல்லது மற்ற சர்வதேச நாடுகளோ தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது என்பதை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இந்தியா தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரை, இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடு என்று கூறும் குர்ஷித் அந்த அண்டை நாடான  இலங்கைக்கு அறிவுரை கூற இந்தியாவுக்கு உரிமையும் தகுதியும் இருக்க வேண்டும் .அங்கு ஏற்படும் குழப்பங்கள நம்மையும் பாதிப்பதால் நாம் நிச்சயம் அறிவுரைகளை கண்டிப்புடன் கூற உரிமை இருக்கிறது.
இலங்கையுடன் நமக்கு நட்புறவு இருக்கிறது. அதே சமயம் நாமும் அவர்களும் அண்டை நாட்டுக்காரர்கள். எனவே அவர்களுக்கு கோரிக்கை வைக்கவும், அறிவுரை கூறவும், அவர்களை கண்டிக்கவும், அவர்களுடன் விவாதிக்கவும் தகுதியும் தேவையும் இந்தியாவுக்கு இருக்கிறது. அந்த உரிமையை இந்திய அரசு பயன்படுத்தவேண்டும்."
-இவ்வாறு இன்றைய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மூளையில் உறைக்கும் படி முன்னாள் அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா மக்களவையில் பேசியுள்ளார்.
இதில் உள்ள நியாயங்களை இன்றைய காங்கிரசு அரசு உணருமா?
இல்லாவிடில் இன்னமும் பழிவாங்கும் உணர்ச்சியில் இலங்கைக்கு ஆதரவாகவே பேசுமா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோழர் "ஹியூகோ சாவேஸ்"இறுதி ஊர்வலம்! 
 தேசம் செலுத்திய அஞ்சலி.!
படங்கள்: நன்றி.reuters.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...