bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

ஊழல் எதிர்ப்பு ஊழல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.


டீம் அண்ணா: உப்பிப் பெருக்கப்படும் ஒரு போலிப் புரட்சி!- அருந்ததிராய்
தொலைக்காட்சிகளில் நாம் பார்ப்பதுதான் புரட்சி என்றால், அதுதான் சமீபத்தில் நடந்தவற்றிலேயே தர்மசங்கடமான, தெளிவற்ற புரட்சியாக இருக்க முடியும். ஜன் லோக்பால் மசோதா குறித்த எப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்குள் இப்போது எழுந்தாலும், அதற்கான விடைகள், இப்படியாகத்தான் கிடைக்கும். பெட்டிக்கு நேராக டிக் செய்து கொள்ளுங்கள், அ) வந்தே மாதரம். ஆ) பாரத் மாதாகீ ஜெய். இ) அண்ணாதான் இந்தியா, இந்தியாதான் அண்ணா. ஈ) ஜெய் ஹிந்த்.
முழுக்க முழுக்க வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறைகளில் போராடி வரும் மாவோயிஸ்ட்டுகளுக்கும், ஜன் லோக்பால் மசோதாவுக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது – அது, இந்திய அரசியல் அமைப்பை தூக்கி எறிவது. இதற்காக ஒருதரப்பினர் கீழிருந்து மேலாக, இழப்பதற்கு ஏதுமற்ற வறியவர்களிலும் வறியவர்களான ஆதிவாசி மக்களை இராணுவமயப்டுத்தி ஆயுதமேந்தி போராடுகிறார்கள். மறுதரப்பினர் மேலிருந்து கீழாக, ரத்தம் சிந்தாத காந்திய வழியில், புதிதாக வார்தெடுத்த புனிதரின் தலைமையில், நகர்புற – முக்கியமாக மேட்டுக்குடியினரில் பெரும்பாலானவர்களை உள்ளடக்கிய படையைக் கொண்டு  போராடுகிறார்கள். (இந்த விஷயத்தில் அரசாங்கம்மும் தன்னை தூக்கியெறிவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து துணை நிற்கிறது)
ஏப்ரல் 2011ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அண்ணா ஹசாரே முதல்முறையாக ஆரம்பித்த காலகட்டத்தில், அடுத்தடுத்து வெளியாகிவந்த மிகப்பெரிய ஊழல் செய்திகளால் தனது நம்பகத்தன்மை ஆட்டம் கண்டு வந்ததை உணர்ந்திருந்த இந்திய அரசாங்கம், மக்களின் அதிருப்தியை திசை திருப்ப, அண்ணாவின் குழுவை (டீம் அண்ணா) – இந்த ‘சிவில் சமூக’ குழுவால் தேர்வு செய்யப்பட்ட வணிகச் சின்னம் இது – ஊழலுக்கு எதிரான புதுச்சட்டத்தின் வரைவுக்குழுவில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தது. ஆனால், சில மாதங்களிலேயே இந்த கூட்டு வரைவுக் குழுவை கைவிட்டுவிட்டு, எவ்வகையிலும் பயனில்லாத,  ஓட்டைகள் நிரம்பிய தனது சொந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பிறகு, ஆகஸ்ட் 16ம் தேதி காலையில், அண்ணா ஹசாரே இரண்டாவது முறையாக தனது காலவறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே, சட்டத்துக்கு புறம்பான எந்த நடவடிக்கையிலும் அவர் ஈடுபடுவதற்கு முன்னரே, கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்கான போராட்டம் என்பது, போராடுவதற்கான உரிமை தொடர்பான போராட்டமாகவும், ஜனநாயகத்துக்கான போராட்டமாகவும் உருமாறியது. இந்த ‘இரண்டாவது சுதந்திர போராட்டம்’ தொடங்கிய சில மணித்துளிகளில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். ஆனால், தந்திரமாக சிறையை விட்டு செல்ல மறுத்த அவர், திகார் சிறைச்சாலையின் மரியாதைக்குரிய விருந்தினராக தங்கி, உண்ணாவிரதத்தை ஆரம்பித்து, பொது இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தார். மூன்று நாட்களுக்கு மக்கள் கூட்டமும், தொலைக்காட்சிகளின் வாகனங்களும் சிறைக்கு வெளியே குழுமியிருக்க, அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்புவதற்காக ஹசாரேவின் வீடியோ செய்திகளை ஏந்தியபடி அண்ணாவின் குழுவினர் உயர் பாதுகாப்பு வசதி கொண்ட அச்சிறைக்கு உள்ளும் வெளியிலுமாக மின்னலென பறந்துக் கொண்டிருந்தனர். (வேறு யாருக்கேனும் இந்த பேரின்ப வாழ்வு கிடைக்குமா?)
இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஆணையத்தை சேர்ந்த 250 தொழிலாளர்களும், 15 லாரிகளும் (டிரக்குகள்), 6 கனரக மண் சீராக்கும் வாகனங்களும் கடிகாரத்துக்கு ஓய்வு தராமல் வாரயிறுதியில் நடைபெறவிருக்கும் கண்கவர் காட்சிக்காக ராம்லீலா மைதானத்தை சீர்படுத்திக் கொண்டிருந்தன.
இப்போது உள்ளங்கையும், உள்ளங்காலும் பரபரக்க, பக்தி முற்றிய நிலையில் அண்ணாவின் பெயரை உச்சரிக்கும் கூட்டம் குழுமியிருக்க, வானுயர்ந்த கேமராக்கள் கண்சிமிட்டியபடி படம் பிடிக்க, இந்தியாவின் விலைமதிப்பில்லாத மருத்துவர்கள் பராமரிக்க, மூன்றாவது முறையாக அண்ணா ஹசாரேவின் காலவறையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றே’  தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் நமக்கு சொல்கிறார்கள்.
அண்ணா ஹசாரேவின் போராட்ட வழிமுறைகள் காந்திய வழியாக இருக்கலாம், ஆனால், அவரது கோரிக்கைகள் நிச்சயம் அப்படியானதல்ல. அதிகாரத்தை ஒன்றுகுவிக்காமல் பகிர்ந்தளிக்கச் சொல்லும் காந்தியின் கருத்துகளுக்கு முரணாக ஜன் லோக்பால் மசோதா அரக்கத்தனமான, எதேச்சதிகார, ஒருமுகப்படுத்தப்பட்ட அதிகார மையத்தை கோரும் ஊழல் தடுப்பு மசோதாவாக இருக்கிறது. இதில், கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பூதாகரமான ஜனநாயகத்தை நிர்வகிக்க, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிய, காவல்துறையின் அதிகாரத்துடன் பிரதமர் முதல் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துத் துறை அதிகாரிகள், அரசாங்கத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரை குறித்தும் துப்பு துலக்கி விசாரிக்கவும், கண்காணிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உள்ளது. இதற்கென்று சொந்தமாக சிறைச்சாலைகள்தான் இருக்காது. மற்றபடி சுதந்திர நிர்வாக அமைப்பாக இயங்கி ஏற்கனவே வரைமுறையில்லாமல் ஊதிப் பெருகி, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையற்று இருக்கும் இப்போதைய ஊழல் அமைப்பை எதிர் கொள்ளும் இன்னொரு நிர்வாக அமைப்பாக செயல்படும். அதாவது கட்டுப்படுத்த முடியாத ஒரு விலங்காக இதுநாள்வரை இருந்த ஜனநாயகமற்ற அமைப்பு, இனி இரண்டாக பெருகியிருக்கும்.
இந்த ஜன் லோக்பால் மசோதா மூலம் ஊழல் ஒழியுமா இல்லையா என்பது ஊழலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்தது. ஊழல் என்பது வெறும் சட்ட ரீதியான நிதி ஒழுங்கின்மை – லஞ்சம் சார்ந்ததா அல்லது வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஏற்றத் தாழ்வுமிக்க சமூகத்தில் நடைபெறும் பணப் பரிமாற்றம் வழியாக அதிகாரமானது தொடர்ந்து சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருப்பவர்களின் கரங்களில் குவிந்து வருவதை குறிக்கிறதா?
உதாரணமாக வணிக வளாகங்கள் நிரம்பிய நகரத்தில் தெருவில் கூவிக் கூவி விற்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வோம். தெருவில் கூவி விற்பவர்களின் வாடிக்கையாளர்கள் வணிக வளாகங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும் அளவுக்கு ‘தகுதி’ படைத்தவர்கள் அல்லர். எனவே அவர்களுக்கு தேவையான பொருட்களை தெருவில் விற்பவர்களிடமிருந்து அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த ‘சட்டப்புறம்பான’ வியாபாரத்துக்காக தெருவில் கூவிக் கூவி விற்பவர், நடைபாதை காவலருக்கும் நகராட்சியை சேர்ந்தவருக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார். இது அவ்வளவு பெரிய கொடுமையா? எதிர்காலத்தில் ஜன் லோக்பாலின் பிரதிநிதிக்கும் சேர்த்து அவர் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்குமா? அடித்தட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியாகவே உறைந்துள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதில் அடங்கியிருக்கிறதா அல்லது ஏற்றத்தாழ்வுகளுக்கு கட்டுப்பட்டு இணங்கிப் போகச் செய்யும் இன்னொரு அதிகார அமைப்பை உருவாக்குவதில் இருக்கிறதா?
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தில் இடம் பிடித்திருக்கும் முழக்கங்கள், சைகைகள், நடன அமைப்புகள், தேசிய வெறி, காற்றில் அழகாக அசைந்தாடும் தேசியக்கொடிகள் ஆகியவை அனைத்தும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டங்கள், உலககோப்பை வெற்றி ஊர்வலம், மற்றும் அணுகுண்டு சோதனை வெற்றிக் கொண்டாட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டவை; அவற்றை நினைவுபடுத்துபவை. இவையெல்லாம் அண்ணாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கவில்லையென்றால் நாம் உண்மையான இந்தியர்கள் இல்லையென்று நம்மை நோக்கி எச்சரிக்கின்றன. நாட்டில் இதைத்தவிர வேறு எதுவும் உருப்படியான செய்தி இல்லை என்பதாக 24 மணி நேர செய்தி ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்.
‘இந்த உண்ணாவிரதம்’ சர்வநிச்சயமாக மணிப்பூரில் ஒருவரை சந்தேகப்பட்டாலே இராணுவத்துக்கு அவரை கொல்ல அனுமதியளிக்கும் AFSPA   என்ற அடக்குமுறைச் சட்டத்தை திரும்ப்ப் பெற வலியுறுத்தி 10 வருடங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஜரோம் சர்மிளாவின் போராட்டத்தைப் போன்றதல்ல. (இன்றும் ஐரோம் சர்மிளாவுக்கு பலவந்தமாக உணவு செலுத்தப்படுகிறது). கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பத்தாயிரக்கணக்கில் கிராம மக்கள் தொடர்ந்து வரிசையாக நடத்தி வரும் உண்ணாவிரதம் போன்றதும் அல்ல.
(ஹசாரேவின் உண்ணாவிரதத்தை ஆதரித்து ராம்லீலா மைதானத்தில் குழுமியிருக்கும்) ‘மக்கள்’, ஐரோம் சர்மிளாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் மணிப்பூர் மக்களின் உணர்வுகளை கொண்டவர்களல்ல. ஜெகத்சிங்பூர் அல்லது கலிங்காநகர் அல்லது நியாம்கிரி அல்லது பாஸ்டர் அல்லது ஜெய்தாபூரில் ஆயுதமேந்திய காவலர்களையும், சுரங்கக் கொள்ளையர்களையும் அன்றாடம் எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள் போன்றவர்களுமல்ல. போபால் விஷவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களோ அல்லது நர்மதா அணையினால் இடம்பெயர்ந்த மக்களோ கூட அல்ல. அல்லது நொய்டாவின் விவசாயிகள் போலவோ அல்லது பூனா/அரியானா அல்லது நாட்டின் எந்தபகுதியிலாவது தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடி வரும் விவசாய மக்களும் அல்ல.
‘இந்த மக்கள்’, ரசிகர் பட்டாள மக்கள். தனது ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்கவில்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று ஒரு 74 வயது முதியவர் மிரட்டுவதை கண்குளிர பார்க்கும் கண்களுடன் வந்திருக்கும் ‘மக்கள்’. இயேசு கிறிஸ்து, அப்பத்தையும் மீனையும் பன்மடங்கு பெருக்கி பசித்தவர்களுக்கு உணவளித்தது போல், பல ஆயிரக்கணக்கான மக்கள் நமது தொலைக்காட்சி ஊடகங்களால் பெருக்கி காட்டப்படுகிறார்கள். ‘லட்சக்கணக்கான குரல்கள் ஒலித்தன’ என்கிறார்கள் நம்மிடம். ‘அண்ணாதான் இந்தியா’வாம்.
மக்களின் குரல் என்றும் புதிதாக வார்த்தெடுத்த புனிதர் என்றும் சித்தரிக்கப்படும் இந்த மனிதர் உண்மையில் யார்? விசித்திரம் என்னவென்றால் இதுவரை இவர் இந்த நாட்டில் பற்றி எரியும் எந்தப் பிரச்னை குறித்தும் கருத்து சொல்லி நாம் கேட்டதில்லை. அவரது ஊருக்கு அருகாமையில் நிகழும் விவசாயிகளின்  தற்கொலைகளைப் பற்றியோ அல்லது சற்று தொலைவில் நடக்கும் பசுமை வேட்டைப் பற்றியோ இவர் எதுவும் பேசியதில்லை. சிங்கூரைப் பற்றியோ, நந்திகிராம், லால்கர் அல்லது போஸ்கோ விவசாயிகளைப் பற்றியோ அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்களால் எதிர்காலம் சூன்யமானவர்களைப் பற்றியோ இவர் முணுமுணுத்தது கூட இல்லை. மத்திய இந்தியாவின் வனப் பகுதிகளில் இராணுவத்தை பரவி நிறுத்த அரசு திட்டமிட்டிருந்த நேரத்தில், இந்திய அரசின் நோக்கம் குறித்தெல்லாம் அவர் எந்த கவலைகளும் வெளியிட்டதில்லை.
ஆனால், ராஜ் தாக்கரேவின் இனவெறிக் கொள்கையான ‘மராட்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற மாராத்திய பாசத்தை ஆதரிக்கிறார். குஜராத்தை ‘வளர்ச்சி மாநிலம்’ என்று வியந்தோதியவர், 2002ல் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப்பட்டது குறித்து எதுவும் சொல்லவில்லை. (இதையொட்டி சில கண்டனக் குரல்கள் எழுந்ததும் தனது வார்த்தைகளை அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டாரே தவிர, உண்மையான தனது பாராட்டு மனநிலையை அல்ல)
இவ்வளவு இரைச்சல்களுக்கு இடையிலும் அறிவுத் தெளிவுடைய பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையை எப்படி உணர்ந்து செய்வார்களோ அப்படியே உண்மையான சில பத்திரிகையாளர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால்தான் ஆர்எஸ்எஸ் உடனான அண்ணாவின் பழைய பாசப்பிணைப்புக் கதையை நாம் அறிய முடிகிறது. அண்ணாவின் கிராம சமூகமான ‘ராலேகான் சித்தி’யில் கடந்த 25 வருடங்களாக கிராம பஞ்சாயத்துகளோ அல்லது கூட்டுறவு சங்க தேர்தல்களோ நடைபெற்றதேயில்லை என்று அக்கிராமத்தை ஆய்வு செய்த முகுல் ஷர்மா சொல்வதை கேட்க முடிகிறது. ‘ஹரிஜன்’களை குறித்து அண்ணாவின் மனபாவத்தை அறிய முடிகிறது: ‘ஒவ்வொரு கிராமமும் ஒரு சக்கிலியனை, கொல்லனை, குயவனைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியின் கனவு. அவர்கள் தத்தமது கடமையை செய்துகொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு கிராமம் தன்னிறைவு பெறும். இதைத்தான் ராலேகான் சித்தியில் நாங்கள் நடைமுறைபடுத்தியிருக்கிறோம்’.
‘அண்ணாவின் குழுவினர்’ (டீம் அண்ணா), இட ஒதுக்கீடு திட்டத்தை எதிர்ப்பவர்களான யூத் ஃபார் ஈக்வாலிட்டி என்ற அமைப்பினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? கோகோ – கோலாவினாலும் லேமான் பிரதர்சாலும் மிக தாராளமாக நிதியுதவி செய்யப்பட்ட பல தன்னார்வக் குழுவினர்தான் இந்த பிரச்சார போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள். ‘அண்ணா குழு’வின்  புகழ் பெற்ற நபர்களான, அர்விந்த் கேஜ்ரிவால், மனீஷ் சிசோடியா-வால் நிர்வகிக்கப்படும் ‘கபீர்’ அமைப்புக்காக கடந்த மூன்று வருடங்களில் போர்டு பவுண்டேசனிடமிருந்து 400,000 டாலர்களை பெற்றிருக்கிறார்கள். ‘ஊழலுக்கெதிரான இந்தியா’ பிரச்சாரத்துக்கு நிதி வழங்கியவர்களின் பட்டியல் இன்னும் ஆச்சரியமான அதிர்ச்சியை தரக்கூடியது. சொந்தமாக அலுமினிய சுரங்கங்கள் வைத்திருக்கும் இந்திய நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையகப்படுத்தி இருப்பவர்கள், ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்பவர்கள், பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்குச் சொந்தக்காரர்களான அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர்கள் என்று அனைவரும் அடக்கம். இதில் பலர் மீது ஊழலுக்காகவும்  மற்றும் வேறு சில குற்றங்களுக்காகவும் விசாரணை இப்போதும் நடந்துக்கொண்டிருக்கிறது.
ஜன் லோக் பால் மசோதா சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தை நினைவுபடுத்தி பாருங்கள். உலக அரங்கில் விக்கிலீக்சின் மூலம் அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில், முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், உயர் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் பலர், 2ஜி உள்ளிட்ட பிரமாண்டமான ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் அம்பலப்படுத்தியிருந்தன. அதோடு, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள், பொதுச்சொத்தின் ஆயிரக்கணக்கான கோடிகளை பல்வேறு வழிகளில் கபளீகரம் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்திருந்தன.
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக, தரகு வேலை செய்யும் பத்திரிகையாளர்களின் முகத்திரை கிழிந்ததுடன் கார்ப்பரேட் இந்தியாவின் முக்கிய தலைவர்களும் தண்டிக்கப்படக்கூடிய ஒரு தருணம் நெருங்கி இருந்தது. ஊழலுக்கெதிரான போராட்டத்துக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்குமா என்ன?
அரசாங்கம் தனது கடமைகளிலிருந்து விலகிக்கொள்ள, கார்ப்பரேட்டுகளும் தன்னார்வக் குழுவினரும் அந்த இடங்களில் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் (தண்ணீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு, சுரங்கங்கள், மருத்துவம், கல்வி); தனியாருக்குச் சொந்தமான ஊடகங்கள் தங்களது முழு ஆற்றலையும் செலவழித்து பொது மக்களின் சிந்தனையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இந்த கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், தன்னார்வ குழுவினர்கள் தாமாகவே ஜன் லோக் பாலின் வரம்புக்குள் வருவார்கள் போலிருக்கிறதே என்று நினைத்தோம். ஆனால், அவ்வாறு இல்லையாம். அவர்களுக்கு முழுமையான விலக்கு அளிக்கிறது ஜன் லோக்பால் மசோதா.
அரசின் ஊழலுக்கும், கறைபடிந்த அரசியல்வாதிகளுக்கும் ஆப்படிக்கும் போராட்டத்தில், குற்றவாளிகள், மற்ற எல்லோரையும் விட அதிகமாக குரலெழுப்புவதன் மூலம் தங்களை தாங்களே அதன் பிடியிலிருந்து சாதுர்யமாக விடுவித்துக்கொள்கின்றனர். அதைவிட மோசம் இரண்டாம் கட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் பொது வட்டத்திலிருந்து அரசாங்கம் இன்னமும் பின்வாங்க வலியுறுத்தி அதன் மீது கணைகளை வீசுகிறார்கள். அது நடந்தால்தான் பொது நிறுவனங்கள் மேலும் தனியுடமை ஆகும். பொது கட்டமைப்புகளில் தனியார் இன்னமும் கை வைக்க முடியும். இந்தியாவின் இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய முடியும். அந்தக் கட்டம் வரும்போது, கார்ப்பரேட் ஊழல் நியாயப்படுத்தப்பட்டு சட்டமாக்கப்பட்டுவிடும். அதற்கு ‘தரகு கமிசன்’ என்றும் பெயர் வைக்கப்பட்டுவிடும்.
20 ரூபாயில் தங்கள் அன்றாட வாழ்க்கையை கடத்தும் 83 கோடி மக்களுக்கு, இந்த மசோதாவினால் உண்மையாகவே ஏதும் பயனிருக்கிறதா? இது அவர்களை மேலும் ஏழ்மைக்கும் வறுமைக்கும் போராட்டத்தை நோக்கியும் தள்ளுமே தவிர வேறு எந்த பயனுமில்லை.
மக்களின் சார்பாக கிரிமினல்களும் கோடீஸ்வர அரசியல்வாதிகளுமே நிரம்பியிருக்கும் பாராளுமன்றங்களின் முழுதோல்விதான் இந்த அருவெறுக்கத்தக்க நெருக்கடியை போலியாக உப்பிபெருக்குகிறது. சாதாரண மக்களால் இங்கு ஒரேயொரு ஜனநாயக அமைப்பைக் கூட நெருங்கமுடியாது.
தேசக்கொடி ஒயிலாக அசைவதைப் பார்த்து மனம் மயங்கிவிடாதீர்கள். நமது இறையாண்மையை கார்ப்பரேட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்தப் போகும் யுத்தத்துக்குள் நாம் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த யுத்தம் சொந்த நலனுக்காக ஆப்கானிஸ்தானில் யுத்தபிரபுக்கள் நிகழ்த்திய யுத்தம் போன்ற உக்கிரத்தை கொண்டதாக இருக்கும். இந்தியாவில் இதைதான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
_________________________________________________
- நன்றி: அருந்ததி ராய், தி இந்து (21.8.2011)
தமிழாக்கம்: வேல்விழி, அறிவுச் செல்வன்
நன்றி:’வினவு”
================================================================================

புதன், 24 ஆகஸ்ட், 2011

அமெரிக கனவு


பூலோகத்தின் சொர்கத்தில் இன்றைய தேதியில் இரண்டரை கோடி பேர்களுக்கும் மேல் வேலையில்லாமல் அலைகிறார்கள். சுமார் ஒரு கோடி வீடுகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. 14.3 % மக்கள் வறுமையில் வாடுவதாக அதிகாரப்பூர்வமான கணக்கீடுகளே தெரிவிக்கின்றன; அதாவது ஏழில் ஒருவர் வறுமையில் வாடுகிறார். கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் 2,573 குழந்தைகள் சோற்றுக்கு வழியற்ற ஏழைக் குடும்பங்களில் பிறக்கின்றன. மாணவர்களின் கல்விக்கடன் 40 லட்சம் கோடிகள், நுகர்வோர் கடன் நூறு லட்சம் கோடிகள், கடன் அட்டை வைத்திருப்போரின் கடன் அளவு 800 பில்லியன் – ஆக மொத்தம் தமது அன்றாடத் தேவைகளைக் கூட கடன் வாங்கித் தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற நிலையில் சுமார் 25 கோடி பேர் வாழ்கிறார்கள்.
இப்படி சகல பிரிவு மக்களும் ‘இன்பமயமான’ வாழ்க்கை வாழ்ந்து வரும் இந்த சொர்க்க பூமியில் பிரதி வருடம் சுமார் நாற்பது லட்சம் கோடிகள் மட்டும் தான் இராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. மொத்த மக்கள் தொகையில் 0.076 சதவீதம் பேரின் கையில் மட்டுமே ஆயிரத்து எண்ணூத்தி நாற்பது லட்சம் கோடியளவிலான செல்வம் குவிந்துள்ளது.
மேலே விவரிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தின் பெயர் – அமெரிக்கா.
டபிள் டிப் டிப்ரஷன் - திவால் ஆனது அமெரிக்கா மட்டும்தானா
ஒவ்வொரு தொழிற்சாலையாய் அக்கு அக்காய் பிரித்து சீனத்துக்குக் கப்பலில் அனுப்பிய நிலையில் இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்து நிற்கும் அதே நேரத்தில், பெரும் நிறுவனங்களின் சி.இ.ஓக்களின் சம்பளம் 30% அதிகரித்துள்ளது. 2011-ம் ஆண்டின் முதல் காலாண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் 31 சதவீதத்தை லாப வளர்ச்சி விகிதமாகக் காட்டி அதே 31 சதவீத அளவுக்கு வரி விலக்குப் பெற்றுள்ளன. இன்றைய தேதியில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பை (14.34 Trillion) விட அதனுடைய கடனின் (14.6 Trillion) அளவு அதிகம். அமெரிக்கா செலவிடும் ஒவ்வொரு டாலரிலும் 40 சென்ட் கடன் தொகையாக இருக்கிறது.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?இன்று மொத்த நாடே கடன்காரனாய் உலக அரங்கில் நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில்  அமெரிக்க அரசின் கடன் பெரும் தகுதியை (credit worthiness) S&P எனும் தரநிர்ணய நிறுவனம் குறைத்துள்ளது. அமெரிக்கா போண்டியாகி நிற்பது உலக முதலாளித்துவ கட்டமைவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. உலகம் முழுவதுமுள்ள முதலாளித்துவ பத்திரிகைகள் அச்சத்தில் அலறுகின்றன. பல நாட்டுத் தலைவர்களும் தமது தூக்கத்தைத் தொலைத்து வால் ஸ்ட்ரீட்டை அவதானித்து வருகிறார்கள். அவர்களின் இதயத் துடிப்பு, டோவ் ஜோன்ஸின் குறியீடுகள் எழுந்தால் எழுகிறது – விழுந்தால் விழுகிறது.
இன்றைய இந்தப் பொருளாதார நிலை டபுள் டிப் ரெஷசன் – அதாவது இரண்டாம் பொருளாதார நெருக்கடி – என்று முதலாளித்துவ உலகத்தால் சொல்லப்பட்டாலும், இது 2008-ல் துவங்கிய சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சி தான். இன்னும் சொல்லப் போனால், மூன்றாண்டுகளுக்கு முன் உலகை ஆட்டிப்படைத்த சர்வதேச பொருளாதார நெருக்கடி இன்னும் முடிந்து விடவில்லை என்பதே எதார்த்த உண்மை. இன்றைய அமெரிக்க ஓட்டாண்டித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் 2008-லிருந்து உலகைப் பீடித்து ஆட்டி வரும் பொருளாதார நெருக்கடியையும், தவிர்க்கவியலாமல் அதனை உண்டாக்கிய முதலாளித்துவ கட்டமைப்பின் உள்முரண்பாடுகளையும் புரிந்து கொள்ளவது அவசியம்.
குதியற்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுத்தோம். அவர்கள் திரும்பச் செலுத்தவில்லை எனவே நாங்கள் திவாலாகி விட்டோம்’. ஃப்ரெடி மேக் மற்றும்  ஃபான்னி மே ஆகிய நிதிமூலதன வங்கிகள் மண்ணக் கவ்வியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஒவ்வொரு வங்கியாக திவாலாகத் துவங்கிய போது இவ்வாறு தான் சொன்னார்கள். ‘சந்தை தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்’ ( market will heal itself) எனவே அரசுகள் பொருளாதாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்கவேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் சொன்ன பொருளாதாரக் கோட்பாடுகளையெல்லாம் தூக்கி உடைப்பில் போட்டு விட்டு அரசுக்குக்கு கருணை மனு போட்டு வரிசையில் நின்றார்கள்.
அமெரிக்க நிதிமூலதன நிறுவனங்களை மீட்க பல்வேறு தவணைகளாக அவ்வரசு அழுத மொத்த தொகை மட்டும் சுமார் 8.5 ட்ரில்லியன் டாலர்கள் – 8500000000000$ அல்லது சுமார் 340 லட்சம் கோடி ரூபாய்கள். முதலாளித்துவத்தை படுகுழியில் இருந்து மீட்பதற்காக பாய்ச்சப்பட்ட இந்த பிரம்மாண்டமான தொகை எதார்த்தத்தில் சாதித்தது என்னவென்பதைப் பற்றியும், இன்று தனது கடன்பெறும் தகுதியை அமெரிக்கா இழந்து நிற்பதற்கான காரணங்களையும் பற்றி பார்க்கும் முன், பெருமந்தத்திற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் பற்றி சுருக்கமாகக் கவனிப்போம். விரிவான தகவல்கள் இந்தக் கட்டுரையில் உள்ளது.
என்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகள் துவக்கத்திலும் நாஃப்தா (NAFTA) ஒப்பந்தம் அமுலுக்கு வந்த போது மெக்சிகோவுக்கும், பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் சீனத்துடன் பொருளாதார உறவுகள் சீரடைந்த போது சீனத்துக்கும், தொடர்ந்து சில லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மாற்றிக் கொண்டன. அமெரிக்காவில் ப்ளூ காலர் வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் சம்பளம் மற்றும் இன்னபிற சலுகைகளை ஒப்பிடும் போது இந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைப்புச் சக்தி மிகவும் மலிவானது என்பதும் லாபம் அதிகம் என்பதும் இதற்கான முதன்மையான காரணங்களாக இருந்தன.
இப்படி, படிப்படியாக வெவ்வேறு துறைகளின் உற்பத்தி அலகுகள் மாற்றப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த இடத்தில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் இதை வேறு வகையில் நியாயப்படுத்தக்கூடும். அதாவது, ‘ இப்படிப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டதன் விளைவு தான் இந்தியாவில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படவும் பலருக்கு வேலை கிடைக்கவும் காரணமாக இருந்துள்ளன’ என்பது அவர்களது வாதமாக இருக்கும். ஆனால் இது ஒரு பொய்த்தோற்றம்தான், உண்மையோ நேர்மாறானது.
புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கை உலகை ஒரு பெரும் சங்கிலியால் இணைத்துள்ளது. மூலதனம் தனது தேசிய அடையாளத்தை இழந்து தேச எல்லைகளைக் கடந்து பரவி நிற்கிறது. உலகம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் இப்பொருளாதாரச் சங்கியிலியின் தலைக் கண்ணியாக இருக்கும் அமெரிக்காவின் பங்கு என்பது, பிற நாடுகளில் உற்பத்தி செய்வதை வெறுமனே நுகர்வது மட்டும் தான். அதாவது, உலகப் பொருளாதாரமே மெல்ல மெல்ல அமெரிக்க நுகர்வுக்கான ஏற்றுமதி சார் பொருளாதாரமாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அமெரிக்க நுகர்வில் பங்கம் ஏற்பட்டால் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியும், உழைப்புச் சக்திகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவிலோ உள்நாட்டு வேலைகள் மெல்ல மெல்ல அருகி, ஒரு கட்டத்தில் பலரும் வேலையிழந்து தமது அன்றாடத் தேவைகளுக்குக் கூட கடன்களையே சார்ந்திருக்கச் செய்கிறது. இது ஒருபக்கம் இருக்க, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னிருந்தே நுகர்வுக் கலாச்சாரம் அமெரிக்க சமூகத்தில் மிக வலுவாகவும் கவனமாகவும் முதலாளித்துவத்தால் புகுத்தப்பட்டது. கடன் வாங்கியாவது பொருட்களை நுகரும் ஒரு சமுதாயமாக அமெரிக்கா மாற்றியமைக்கப்பட்டது.
2008-ல் பொருளாதார நெருக்கடியைத் துவக்கி வைத்த ரியல் எஸ்டேட் குமிழியின் வெடிப்புக்கான காரணமும் இதில் தான் ஒளிந்து கிடக்கிறது. நடுத்தர வர்க்கத்தை விடாமல் துரத்தி அவர்கள் தலையில் வீடுகளைத் திணித்தன ரியல் எஸ்டேட் நிறுவனங்கள். இரண்டாயிரங்களின் துவக்கத்திலும் மத்தியிலும் அமெரிக்காவில் வீடுகள் வாங்கியோரில் பெரும் சதவீதத்தினர் வீடு வேண்டும் என்று வங்கிகளை அணுகியவர்கள் அல்ல. நமது ஊரில் கடன் அட்டைக்காக தொலைபேசியில் தொடர்ந்து நச்சரிப்பதைப் போல அங்கே வீடுகளை வாங்கச் சொல்லி பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் காட்டியுள்ளனர்.
இப்படி இவர்கள் தெரிந்தே தான் அனைவருக்கும் கடன் கொடுத்துள்ளனர். இந்தக் கடன்களின் மேல் இருக்கும் நம்பகமற்ற தன்மையை (Risk factor) தவிர்த்துக் கொள்ள அவர்கள் வால் ஸ்ட்ரீட்டை அணுகினர்.  உதாரணமாக, ஒரு வீட்டின் உண்மையான மதிப்பு ஒருலட்சம் என்றால், அதற்குக் கொடுக்கப்பட்ட கடன் பத்திரத்தை சர்வதேச பங்குச் சந்தையில் ஊக பேர சூதாட்டத்தில் சுற்றுக்கு விட்டனர். பல்வேறு கைகள் மாறி மாறி அப்பத்திரங்களின் மதிப்பு நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில், வீடுகளை வாங்கியவர்கள் கட்டமுடியாமல் திரும்ப ஒப்படைக்கிறார்கள். இவ்வாறு foreclosure செய்யப்பட்ட வீடுகளின் தவணைத் தொகையையும் கூட கந்து வட்டிக்காரன் போல் விடாமல் துரத்தி வசூலித்தன வங்கிகள். பலரும் திவால் நோட்டீஸ் கொடுக்கிறார்கள் – மேலும் ஒழுங்காக தவணை கட்டிக் கொண்டிருந்த பலரும் வருமானம் குறைந்து கட்டமுடியாத சூழலில் வீடுகளைத் திரும்ப ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டவுடன், இந்த மாயக் குமிழி மொத்தமும் வெடித்துச் சிதறுகிறது.
இதற்குள், இந்தச் சூதாட்டப் பணம் பல நாட்டு பங்குச் சந்தைகளிலும் பாய்ந்திருந்தது. தமது அஸ்திவாரம் ஆட்டம் கண்டதும் வெளியே சுழன்று கொண்டிருந்த பணத்தை ஒன்று பதுக்கினார்கள் அல்லது உள்ளிழுத்துக் கொண்டார்கள். இதனால் வால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட நடுக்கம், உலகெங்கும் அதிர்வலைகளை அனுப்பியது. இந்தியா சீனா ஐரோப்பா ஜப்பான் என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அனைத்து பங்குச் சந்தைகளின் குறியீடுகளும் படுபாதாளத்தில் வீழ்ந்தன. ரியல் எஸ்டேட் மட்டுமல்லாது, கட்டுமானப் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், உணவுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டங்களின் விளைவாய் உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகளில் புழங்கும் பணத்தில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே உள்ளது. அதாவது இந்த வர்த்தக சூதாட்டம் உண்மைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தில் நடைபெறவில்லை.
அமெரிக்காவின் உள்நாட்டுச் சந்தை கவிழ்ந்து கிடக்கும் நிலையில் அதற்கான ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களின் தேக்கமும் அதைத் தொடர்ந்து இங்கே சம்பளக் குறைப்பு ஆட்குறைப்பு என்று ஒரு பக்கம் அடிவிழுகிறது என்றால், இன்னொரு பக்கம் பங்குச் சந்தையே பிரம்மாண்டமான சூதாட்டச் சந்தையாக மாற்றப்பட்டதால் ஊக பேர வணிகத்தில் பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களைக் கவ்வுகிறது.
இது வெறுமனே முதலாளித்துவ உலகின் ஒரு நெருக்கடியல்ல; இது முதலாளித்துவ கட்டமைவின் நெருக்கடி. முதலாளித்துவ உற்பத்தியின் மிக அடிப்படை நோக்கமே மூலதனத் திரட்சி தான். இந்த மூலதனத் திரட்சிக்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. தொழிலாளிகளைச் சுரண்டுவது, கூலியைக் குறைப்பது என்பதெல்லாம் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்தே எழுகிறது. அதனால் தான், தமது ஆலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு மாற்றினர். ஆலைகள் செல்லும் நாடுகளில் உள்ள உழைப்புச் சுரண்டல் காரணமாகவும், உள்நாட்டில் ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வேலையின்மையும் உற்பத்திப் பண்டங்களின் நுகர்வைத் தடுக்கிறது. அதாவது செல்வம் முதலாளித்து வர்க்கத்திடம் குவிய குவிய பிற மக்கள் தொடர்ந்து தங்களது வருமானத்தை இழந்து வருகிறார்கள். இது முதலாளித்துவ கட்டமைப்பின் ஒரு அடிப்படை முரண்பாடு.
இந்த அடிப்படையான முரண்பாட்டின் விளைவு தான், அமெரிக்கச் சந்தையின் சரிவு திருப்பூர் பனியன் தொழிலாளி வரையில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மூலதனத் திரட்சி என்பது ஒரு கட்டத்தில் உற்பத்தி – நுகர்வு என்கிற வட்டத்தின் சுழற்சியால் மட்டுமே நிகழ்வதில் சிக்கல்  ஏற்படும் போது முதலாளித்துவம் தவிர்க்கவியலாமல் ஊக பேர வர்த்தகத்தைச் சரணடைகிறது. ஒரு பண்டத்தின் உண்மையான மதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதன் மதிப்பு மிகையாக ஊதிப் பெருக்க வைக்கப்பட்டு நடக்கும் அந்தச் சூதாட்டக் குமிழ் ஒரு கட்டத்தில் வெடித்தே ஆகவேண்டியுள்ளது. சப் ப்ரைம் நெருக்கடி என்று சொல்லப்பட்ட சர்வதேசப் பொருளாதார நெருக்கடி இதற்கான ஒரு துலக்கமான சான்றாக நம்முன் நிற்கிறது.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?தமது சூதாட்டத்தைத் தொடரமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு நின்ற நிதிமூலதனச் சூதாடிகளைக் கைதூக்கி விட முதலில் 35 லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்தார் புஷ். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஒபாமா, பல்வேறு சந்தர்ப்பங்களில் வால் ஸ்ட்ரீட்டுக்குள் பாய்ச்சிய தொகையின் அளவு 8.5 ட்ரில்லியன் டாலர்கள். உழைக்கும் மக்களின் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட அரசாங்கம் செய்து கொடுக்கக் கூடாது என்று கட்டளையிடும் முதலாளித்துவம் அரசிடம் இருந்து ‘நிவாரணம்’ பெற கூச்சமே படவில்லை.
தாம் பெற்ற இந்த பிரம்மாண்டத் தொகையைத் தமது போட்டி நிறுவனங்களை வளைப்பதற்கும் இணைப்பதற்குமே பெருமளவு பயன்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை பெரும் தொகை சந்தைக்குள் பாய்ச்சப்படும் போதும் அது காற்றில் கரைந்த கற்பூரமாய் கரைந்து காணாமல் போயுள்ளது.
அமெரிக்க அரசு இவர்களுக்கு அளித்த இந்த பெரும் தொகையில் கணிசமான அளவு மக்களின் வரிப்பணம் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான தொகையிலிருந்து வெட்டப்பட்டது என்றாலும், பெருமளவிலான தொகை அமெரிக்கப் பொதுக் கடன்பத்திரங்களை விற்பதன் மூலமும் திரட்டப்பட்டது. சந்தையைச் சரிவிலிருந்து காப்பாற்றுவதற்கான நிவாரணத் தொகையாகச் சொல்லப்படும் இந்த 8.5 ட்ரில்லியன் டாலரில் ஒரு கணிசமான பங்கு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கப்பட்ட தொகை. இதை, அமெரிக்க அரசு மக்கள் மேல் விதிக்கும் வரிவருவாயிலிருந்தோ அல்லது கடன் பத்திரங்களை விற்பதன் மூலமோ திரட்டி வங்கிகளுக்கு அடைக்க வேண்டும்.
கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? வங்கித் துறையின் சரிவைக் காக்க வங்கிகளிடமிருந்தே பணம் பெறப்பட்டு அதை அடைக்க மக்களின் தலைமேல் கை வைப்பதோடு மட்டுமே இந்த முதலாளித்துவ அராஜகங்கள் முடிவுறவில்லை.
அமெரிக்காவில் டாலரை அச்சிடும் பொறுப்பை 12 பெடரல் ரிசர்வ் வங்கிகள் தான் கட்டுப்படுத்துகின்றன. இந்தப் 12 பெடரல் ரிசர்வ் வங்கிகளும் தனியாருக்கே சொந்தமானது. இதில் பங்குதாரர்களாக இருக்கும் நிதிமூலதன கும்பல் தான் அமெரிக்காவின் பணக் கொள்கைகளைத் (Monetory policies) தீர்மானிக்கின்றனர். மேலும், கணிசமான அளவுக்குக்  கடன்பத்திரங்களைத் தாமே ரிசர்வில் வைத்திருக்கின்றனர். அவற்றை வெளிச்சந்தையில் விநியோகிப்பதும் இதே தனியார் நிதிமூலதன வங்கிகள் தான். எனவே, எதார்த்தத்தில் அமெரிக்க அரசு கடன்பத்திரங்கள் மூலம் திரட்டும் தொகையையும் தனியார் வங்கிகள் தான் தீர்மானிக்கின்றன.
இது ஒரு விசித்திரமான சுழற்சி. அதாவது, அமெரிக்கக் கருவூலத்திற்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன; அப்படி வாங்கிய கடனைக் கொண்டு வங்கிகளுக்குக் கடன் கொடுத்து பெயில் அவுட் செய்யப்படுகின்றது. இதில் கடன் வாங்கியது யார் கொடுத்தது யார்?
இது ஒரு புறம் இருக்க, அமெரிக்க அரசு வெளியிடும் அரசுப் பொதுக்கடன் பத்திரங்களின் ‘கடன்பெறும் தகுதியை’ (credit worthiness) S&P, Moody’s, Fitch போன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் நிர்ணயம் செய்வதும்  இதே நிதிமூலதன வங்கிகள் தான்.
இது இவ்வாறு இருக்க, கடந்த வாரங்களில் சர்வதேச நாணய நிதியம் IMF தனது கடன் கொள்கைகளைத் திருத்தி அமைத்துள்ளதாகச் செய்தி வந்தது. அதன் படி, பொருளாதார சீர்குலைவுகளைச் சரிசெய்ய ஜி-20 நாடுகள் எனப்படும் வளர்முக நாடுகள் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. உடனே, தனது தலையங்கத்தில் இதைக் குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைந்த தினமணி, அமெரிக்காவுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு புனித பாரதம்  உயர்ந்து விட்டதாக சொறிந்து கொண்டது.
ஆனால், எதார்த்தம் என்னவென்பதை ஐ.எம்.எஃப் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “சர்வதேசப் பொருளாதார கட்டமைப்பில் ஏற்படும் திடீர் குழப்பங்களைக் களைந்து கொள்ளும் முகமாகவும் சர்வதேசப் பொருளாதாரத்தின் சமன்பாட்டை நிலைநாட்டவும்” இந்நாடுகளிடம் இருந்து இப்போதைக்கு 500 பில்லியன் டாலர்  அளவுக்கு நிதி திரட்டும் திட்டம் இருப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், எப்போதெல்லாம் சர்வதேச அளவில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆன்மாவாக இருக்கும் நிதிமூலதன சூதாட்ட கும்பல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறதோ அப்போதெல்லாம் இந்தியா போன்ற ஏழை நாடுகள் தண்டம் அழ வேண்டும் என்பதே.
ஏற்கனவே அமெரிக்கா தனது மக்களின் ஓய்வூதியம், சேமிப்பு என்று சகலத்தையும் வால் ஸ்ட்ரீட்டை நோக்கித் திருப்பி விட்டுள்ளது; அதுவும் போதாமல் தனது கடன்பத்திரங்களையும் விற்று படையல் வைத்துள்ளது. இப்போது, அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி தரம் இறக்கப்பட்டுள்ளதால், ‘சர்வதேச பொருளாதாரத்தை’ காக்கும் வேலை ஏழை நாடுகளின் தலைமேல் சுமத்தப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா ஒழுங்காக மாமூல் வந்து சேர்கிறதா என்று பார்த்துக் கொள்ளும் சண்டியர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்.
ஆக, இப்போது தரமிறக்கப்பட்டுள்ளதும் கூட அமெரிக்காவுக்கு பல்வேறு வகைகளில் சாதகமானது தான்.  இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணியாக தேங்கிக் கிடக்கும் பில்லியன் கணக்கான டாலர்களை சூதாட்டச் சந்தைக்கு இழுத்து வந்து சுழற்சிக்கு விடும் வேலையை ஐ.எம்.எஃப் கவனித்துக் கொள்ளும். முரண்டு பிடிக்கும் நாடுகள் என்று எதாவது இருந்தால் அதை அமெரிக்க இராணுவம் கவனித்துக் கொள்ளும்.
நிதி மூலதனம் என்பது ஏற்கனவே தேச எல்லைகளையும் அடையாளங்களையும் கடந்து உலகம் முழுவதும் விரவி நிற்கிறது. நவீன தொலைத் தொடர்பு, மற்றும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட இவர்களின் வலைப் பின்னலின் இயக்கம் நமது கற்பனைக்கும் அப்பாற்பட்டதொன்று. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் பெரும் மூலதனத்தை ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்குக் கடத்துவதும், ஒரு சூதாட்டத்திலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுவதும் தடையின்றி நடக்கிறது. முன்பொருமுறை சிதம்பரம் மும்பைப் பங்குச்சந்தையில் தங்குதடையின்றி இறங்கும் அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்திக் கண்காணிப்பது குறித்து லேசாக முணுமுணுத்ததற்கே சென்செக்ஸ் குறியீட்டை ஐந்தாயிரம் புள்ளிகள் இறக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். உடனே அவர் தனது கருத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
டபிள் டிப் ரிசஷன் : திவால் ஆனது அமெரிக்கா மட்டுமா?அமெரிக்காவின் கடன் இப்போது அதிகரித்து தான் உள்ளது. ஆனால், அமெரிக்காவின் கடனை அடைப்பது என்பது அவர்களிடம் இருக்கும் அச்சடிக்கும் இயந்திரம் எத்தனை வேகமாக டாலரை அச்சிடுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்கிற நிலையில், அந்த டாலரின் மதிப்பை நிலைநாட்டும் இராணுவ வலிமையும் அரசியல் வலிமையும் அதற்கு இன்னமும் இருக்கும் எதார்த்தமான் சூழ்நிலையில் S&Pஇன் அறிவிப்பிற்கான மெய்யான பொருள் வேறு.  இந்தச் சூதாட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பொத்தாம் பொதுவாக பொருளாதார நெருக்கடி என்று சொல்வதும், அதனைத் தீர்க்கும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது என்று சொல்லி நட்டத்தை நமது தலையில் கட்டுவதும் தான் இப்போது அமெரிக்காவின் ‘கடன் நெருக்கடி’ நாடகங்கள் அவர்களுக்குப் பயன்படுகிறது
அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதார நெருக்கடி சுட்டிக் காட்டும் விசயங்கள் இரண்டு. ஒன்று உலகாளவிய முதலாளித்துவ பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பது தற்போது வேறு வழியில்லாமல் வெளியே வருகிறது. அதுவும் வெறும் செய்தியாக இல்லாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைய பாதிக்கும் நடவடிக்கைகளோடு வருகிறது. இந்த நெருக்கடியின் ஊற்று மூலம் ஊக வணிகம் மூலம்தான் இலாபம் ஈட்ட முடியும் என்ற பகாசுர வெறி மற்றும் இழிவு நிலையில்தான் முதலாளித்துவம் வாழ முடியும் என்பது. இரண்டாவது இந்த நெருக்கடிக்கு காரணமாட முதலாளித்துவ நிறுவனங்களை தண்டிப்பதற்கு பதில் அந்த நெருக்கடியும் சுமையும் மூன்றாம் உலக நாடுகளின் மேல் தள்ளி விடப்படுகின்றன.
ஆகவே முதலாளித்துவத்திற்கு மரணக்குழி பறிக்காமல் உலக மக்கள் நிம்மதியான வாழ்வை வாழ முடியாது. அந்த வகையில் உலக முதலாளித்துவ கட்டமைப்பு தோற்றுவித்திருக்கும் இந்த அபாயத்தை உலக மக்கள் போராடுவதன் மூலமே வெல்ல முடியும். இன்று கிரீசிலும், இலண்டனிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தொடரும் அந்த போராட்டங்கள் சரியான அரசியல் தலைமைக்காக காத்திருக்கின்றன

புதன், 10 ஆகஸ்ட், 2011

இம்மாதப் புத்தகம்


அமெரிக்காவை கலக்கிய புதினம்
மயிலைபாலு
                                      http://www.estantedelivros.com/wp-content/uploads/2010/01/estante_ananunes_4.jpg                                           
2009 ஆண்டில் நாடெங்கும் இதே பேச்சு ‘பொருளாதார மந்தநிலை’ இதனால் அதிகம் அடிவாங்கியது பொருளாதார அடியாளான அமெ ரிக்காதான். வங்கிகள் திவால்; அற்ப விலைக்கு வீடுகள் ஏலம்; மந்தநிலை யிலிருந்து மீண்டுவர ஆண்டுகள் பல ஆகலாம் என்றெல்லாம் பேசப்பட் டது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இங்குள்ள வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட் டவை என்பதால் திவாலாகாமல் தப்பித்தன.

இப்படியான சமூக அரசியல் நிகழ்வுகள் இங்கே வெறும் செய்தி களாகத் தோன்றி மறைந்து விடுகின் றன. பொருளாதார மந்தநிலை என் பதே மகத்தானதாக இருந்தது. 1930 களில் இந்திய அரசியலில் - பொரு ளாதாரத்தில் இதனைக் குறிப்பிடாத வர்களே இல்லை. அந்த கிரேட் டிப்ர ஷன் மக்களை எப்படி வாட்டி வதைத்து; வீடுகளிலிருந்து விரட்டி அடித்தது; வெளியேற்றியது என் பதைப் பதிவு செய்திருக்கும் புதினம் “தி கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்”

1939 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புதினம் 70 ஆண்டுகளுக்குப்பின் ஏற் பட்ட பொருளாதார மந்தநிலைக் கும் பொருத்தமானதாக இருக்கிறது. இந்தப் புதினம் வெளிவந்த காலத்தில் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 2500 பிரதிகள் விற்றுத் தீர்ந்தனவாம். மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருந்த காலம் இது என்பதையும் ஒப் பிட்டுப் பார்த்தால் விற்பனையின் வீச்சு புரியும். 10 மாதங்களுக்குள் 5 லட்சம் பிரதிகள் விற்பனையாயின. இப்போதும் விற்பனையில் இருக் கும் இந்தப் புதினம் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பிரதிகள் விற் றுள்ளனவாம்.

அமெரிக்காவின் ஓக்ல ஹாமா நகரில் புழுதிப்புயல் வீசி விளை நிலங்கள் எல்லாம் நாசமடைகின் றன. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இய லாத நிலை ஏற்படுகிறது. வங்கிக ளோ நிலங்களை ஜப்தி செய்து கொள்கின்றன. அடுத்தவேளை உண வுக்கும் வழியில்லாத மக்கள் தங்க ளின் குடியிருப்புகளை காலி செய்து கொண்டு புறப்படுகிறார்கள்.

புலம் பெயர்ந்து செல்வோர் துன்ப துயரங்களோடு துணிமணி களையும் தட்டுமுட்டுச் சாமான் களையும் சுமந்து செல்ல இயலுமா? கால்நடைகளை ஓட்டிச் செல்ல இயலுமா? முதியவர்களை உடன ழைத்துச் செல்ல முடியுமா? இயன்ற வரை... இயன்றவரை.. தான் எல் லாமே.

இயன்றவரை கொண்டு செல்லப் பட்ட பின் கால்நடைகள் ஆதரிப் பாரின்றியும், உணவின்றியும் மடிகின் றனர். முதியவர்கள் பயணவழியி லேயே இறந்து மடிகின்றனர் பிழைப்பு தேடி ஊர் விட்டு ஊர் செல்லும் மக் களின் இன்றைய அவலங்கள் இந்தப் புதினத்தில் நிழலாடுகின்றன.

டாம் ஜோட் என்ற கதாபாத்தி ரத்தின் வழியாகவே கதை சொல்லப் படுகிறது. ஏற்கெனவே குற்றச் செயல் களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டு, பரோலில் வெளியே வந்தவன் டாம் ஜோட். இவன் முன்னாள் மதபோதகர் ஜிம் கேசியைச் சந்திக்கிறான். அவன் போதனைப்பணியை விட்டுவிட்ட தாகச் சொல்கிறான். புனித ஆவி என் பது அன்பில் தான் இருக்கிறது. கட வுளை - ஏசுவை நேசிப்பது அல்ல புனிதம் - அனைத்து மனிதர்களையும் நேசிப்பதுதான் புனிதம் என்ற மாற்று போதனையை முன்வைக்கி றான். அணியாகத் திரட்டப்படும் மதச் செல்பாடுகளை அவன் சாடு கிறான்.

இப்படியாக நாவலின் தொடக் கமே கருத்து மோதல்களோடு அமைகிறது. புதினத்தின் உள்ளேயும் இந்த மறைவாள் வீச்சு தொடர்கிறது.

டாம் ஜோடும் ஜிம் கேசியும் உறவினர்களைத் தேடிச்செல்வது; அவர்களை ஊரில் காணாததால் ஏமாற்றமடைவது; அடுத்து அவர் கள் செல்லக்கூடும் என்ற கணிப்பில் இன்னொரு ஊருக்குப் பயணப்படு வது; இந்தப் பயணத்துக்கு இடையே காணப்படும் சோகக்காட்சிகள் நாவலில் விரிகின்றன.

உண்ண உணவின்றி நோய்வாய்ப் பட்டு இறப்பதும்; பழையமாடல் கார் ஒன்றில் தட்டுமுட்டுச்சாமான் களை ஏற்றிச் செல்லும் போது அச்சு முறிவதும்; அடுத்து என்ன செய்வ தென்று புரியாமல் விழிப்பதும்.. கதை அமெரிக்காவில் நடப்பது போலவும் இல்லை 1940 ல் நடப்பது போலவும் இல்லை இன்றைக்கும் வறுமையில் புலம் பெயர்ந்து செல்வோரின் பாடு பெரும் பாடுதானே!

சோகக்காட்சிகளுக்கிடையே கருவுற்ற ஒரு பெண்ணும் வருகிறாள். அவளின் குழந்தை இறந்து பிறக் கிறது. அந்தத் துயரத்தோடு செல்லும் போது வழியிலே இன்னொரு துயரம். ஒரு சிறுவன் உடல் நலம் குன்றிய தன் தந்தையோடு இருக்கிறான். பல நாட்கள் பட்டினி கிடந்ததால் திட உணவை உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான். திரவ உண வுக்கு எங்கே போவது? குழந்தை யைப்பறி கொடுத்த அந்தத் தாய் முன் வருகிறாள். முதியவருக்கு மார்பு கொடுக்கிறாள்.

1930 களில்ஏற்பட்ட கிரேட் டிப்ர ஷன், அதனால் மக்கள் அனுபவித்த சோகத்தையெல்லாம் சாறு பிழிந் தாற் போல் கொடுத்த ‘தி கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்’ வழக்கம்போல் ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கு ஆளா னது. இந்தப் புதினத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூச்சலிட் டனர்; கம்யூனிசக் கருத்துகளை பிரச் சாரம் செய்வதாக கூப்பாடு போட்ட னர். கலிஃபோர்னியா மாகாண அவையிலே கூட இந்தப்புதினம் பற்றி விவாதிக்கப்பட்டது.

நோயால் பாதிக்கப்பட்டவனுக்கு ஏழைத்தாய் மார்பு கொடுத்ததை ஆபாசக் காட்சி என்று சாடியவர் களும் உண்டு. இதுபோன்ற காட்சிப் படுத்தல் களாலேயே நூல் விற்பனை அதிகரிக்கிறது என்றாரும் உண்டு.

ஒருபக்கம் இந்த நாவல் எரிக்கப் பட்டது; மறுபக்கமோ நூலகங்கள் இதனை வாங்க வரிசையில் காத்து நின்றன. இந்த முரண் ஆளும் வர்க்கத் துக்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான முரணாக வெளிப் பட்டது.

உண்மைகளை உரத்துப் பேசிய இந்த நாவலை எழுதிய ஜான் ஸ்டீன்பெக் ஒரே எட்டில் அமெரிக்க எழுத்தாளர்களில் புகழின் உச்சிக்குச் சென்றார். இவர் 1902 ஆம்ஆண்டு பிப்ரவரி 27 அன்று கலிஃபோர்னியா மகாணம் சாலினாசில் பிறந்தார். தந்தை ஒரு அரசு ஊழியர். தாயின் மூலமே கலை இலக்கியத்தில் ஆர்வம் பெற்றார் ஸ்டீன்பெக். எழுத்தாள ராக வேண்டும் என்று இளம் வயதி லேயே விரும்பினார். “கப் ஆஃப் கோல்ட்” என்ற இவரது முதல் புதி னம் முழுமை பெறாமல் போனது; எனினும் முயற்சியில் பின்வாங்காமல் கிராமப்புற விவசாயிகளை மையமா கக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதை கள் தொகுப்பைக் கொண்டு வந்தார். நிலத்துக்கும், மனிதர்களுக்கும் இடை யேயான உறவை வலுவாக எடுத் துரைப்பது “அறியப்படாத ஒரு கட வுளுக்கு” என்ற புதினம்.

இரண்டாவது உலகப்போரின் போது வெளிநாட்டு நிருபராகப் பணி புரிந்த ஸ்டீன் பெக், இந்த அனு பவங்களைத் தொகுத்தும் வெடி குண்டுகளுக்கும் எதிராகவும் 1942 ஆம்ஆண்டில் ஒரு புதினம் எழுதி னார். இலக்கியப் பணிகளுக்காக புலிட்சர் விருதும், நோபல் பரிசும் பெற்ற ஸ்டீன் பெக் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 20ல் காலமானார்.

சமூக அரசியல் நிகழ்வுகளை - இலக்கிய வடிவங்களில் பதிவு செய்து வைத்தால் பல ஆண்டுகள் ஆனபிற கும் அசைபோட முடியும்; கடந்து வந்த பாதையைக் கணிக்க இயலும் என்பதற்கு ஸ்டீன் பெக்கும் அவரது படைப்புகளும் சான்றுகளாக விளங்குகின்றன.
                               
 

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011


புற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம்


<i><span class="Apple-style-span" >புற்று நோய் எவ்வளவு கொடூரமானது என்பதை பலரும் அறிந்திருப்போம்.புற்று நோயை குணப் படுத்துவதற்க்கான சிகிச்சைகள் மிகவும் கடினமானதும் செலவு மிகுந்ததும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.இதற்க்கு மாறாக மிகவும் எளிதான பக்க விளைவற்ற ஓர் மூலிகை மருத்துவத்தை தெரிந்துகொள்வோம் .இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி

தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்

இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும்
ஒரு முறை தயாரித்த மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் இடைவெளி விட்டு மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும்
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

இதை வாசிப்பவர்கள் இயன்றவரையில் தங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்
.நன்றி:தாளம் உடல் நலம்


                  

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

தரவரிசையில்

பின்னுக்குச் சென்றது  அமெரிக்கா                                                 வர்த்தக கடன் தர வரிசையில் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா முதல் முறை யாக பெரும் சறுக்கலை சந்தித் துள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர் கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இது அந்நாட்டின் பொருளாதா ரத்தை மேலும் ஆழமான நெருக் கடிக்கு தள்ளும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
                                      
இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இது உண் மையே என்று ஒப்புக்கொள்ளும் விதமாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெ ரிக்காவில் ஏற்பட்டுள்ள சூழல் மிகவும் மோசமானதே என்று கூறியுள்ளார்.

2008ம் ஆண்டில் அமெரிக்கா வில்மையம் கொண்ட பொருளா தார நெருக்கடி அந்நாட்டை மட் டுமின்றி, அமெரிக்கா வரையறுத் துக்கொடுத்த நவீன தாராளமயக் கொள்கைகளை தங்குதடை யின்றி அமல்படுத்திய அனைத்து நாடுகளையும் தாக்கியது. சில நாடு கள் திவாலாகின. நூற்றுக்கணக் கான வங்கிகள் திவாலாகின. தொழில்கள் கடும் நெருக்கடிக் குள்ளாகின. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிக் கப்பட்டு வீதிக்கு விரட்டப்பட் டனர். இதன் தாக்கம் ஐரோப்பிய பொருளாதாரத்திலும் எதிரொ லித்தது. கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடு களும் கடுமையாக முயற்சித்தும், நெருக்கடியிலிருந்து மீள முடிய வில்லை.

இந்தப்பின்னணியில் மீண்டு மொரு கடும் நெருக்கடியை சந் திக்க வேண்டிய ஆபத்து அமெ ரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நாடாளுமன்றத் தில் குடியரசுக்கட்சியும் ஜனநாய கக்கட்சியும் இணைந்து, அமெ ரிக்கப்பொருளாதாரத்தில் பொதுச்செலவினங்களை கடுமை யாக குறைப்பதன்மூலம் நெருக் கடியிலிருந்து தப்பித்துக்கொள்ள தீர்மானித்தன. இதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன் பொருள், கல்வி, சுகாதாரம் உள் ளிட்ட பொதுச்செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கடுமை யாக வெட்டிக்குறைத்து, பெரும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டுவது என்பதே.

நாசகர தாராளமயக் கொள் கையை தீவிரமாக அமல்படுத்திய அமெரிக்க முதலாளித்துவ பொரு ளாதாரம், தனக்குத்தானே ஏற் படுத்திக்கொண்டுள்ள தவிர்க்க முடியாத இந்த நெருக்கடியால் உழைக்கும் வர்க்க மக்களே மிகக் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தப்பின்னணியில் சர்வதேச கடன் தர வரிசையில் அமெரிக்கா வுக்கு முதல் முறையாக குறைவான ரேட்டிங் மதிப்பீடு வழங்கப்பட் டுள்ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது அந்நாட் டிலுள்ள முதலீட்டாளர்கள் மட் டுமின்றி, உலகம் முழுவதிலுமுள்ள முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கத்துவங்கியுள்ளனர்.

பொருளாதாரக்கொள்கைகளை மதிப்பீடு செய்து தரச்சான்றிதழ் வழங்கும் ஸ்டாண்டர்டு & பூவர் எனும் நிறுவனம், அமெரிக்க அர சின் சமீபத்திய கடன் கொள் கைகளை ஆய்வு செய்து அறிக் கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர வரிசையில் அமெரிக் காவுக்கு குறைந்த மதிப்பீட்டை அளித்துள்ளது.

சர்வதேச அளவின் பிரபல மான இந்த நிறுவனம் அளித் துள்ள மதிப்பீட்டின்படி, ஹஹஹ தரத்தில் இருந்த அமெரிக்காவின் நீண்டகால பொருளாதாரக் கொள்கையை ஹஹ+ என தரம் குறைத்து நிர்ணயித்துள்ளது.

முதன்முதலாக தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கப் பொரு ளாதாரம் சரிவைச் சந்தித்திருப் பது பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. உலகம் முழுவதிலு முள்ள பங்குச்சந்தைகளில் அமெ ரிக்க நிறுவனங்களின் பங்குகள் மளமளவென சரிந்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள் ளது. இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக ஆழமான நெருக்கடிக்குள் வேகமாக பய ணித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இந்திய பங்குச்சந் தைகள் உட்பட ஆசியா, ஐரோப் பாவின் பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது.

அமெரிக்காவின் சரிவு, உலக நிதிக்கட்டமைப்பில் கடும் அதிர்வை ஏற்படுத்தும் என்று அந் நாட்டின் பிரபலமான பொரு ளாதார ஏடான ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கப்பொருளாதாரத்தின் தரக்குறைவு, உலக நிதிச்சந்தை களை திக்குத் தெரியாத எல்லையில் கொண்டுபோய் நிறுத்தும் என்றும், ஏற்கெனவே நீடிக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஐரோப்பிய நெருக்கடியால் தற்போதைய நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ‘வாஷிங் டன் போஸ்ட்’ ஏடு எழுதியுள்ளது.

  அமெரிக்கப் பொருளாதா ரத்தின் தரவரிசை தாழ்ந்திருப்பது குறித்து தில்லியில் சனிக்கிழமை கருத்து தெரிவித்த மத்திய நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி, இது மோசமான நிலைமையை சுட்டிக் காட்டுகிறது என்றும், இந்திய அரசு இதுகுறித்து உடனே ஆய்வு செய்யும் என்றும் கூறினார். எனினும் உள்நாட்டில் எந்த அச்ச மும் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

பிரணாப் முகர்ஜியின் கருத் தை, இந்திய பங்குச்சந்தை ஒழுங் காற்று அமைப்பான ‘செபி’யும் எதிரொலித்தது.

ஆனால்,இந்திய ரிசர்வ் வங்கி முரண்பட்ட கருத்தை வெளியிட் டுள்ளது. உலகப்பொருளாதாரம் ஒரு பயங்கரமான சூழலில் சிக்கி யிருக்கும் நிலையில், அதோடு இயைந்து வாழ்வதற்கு இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளது. (பிடிஐ).

  அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சறுக்கல் உலகளாவிய பொருளாதார மந்தத்தை நோக்கி மேலும் தீவிரமாக செல்லும் என்றும், இது இந்தியாவையும் கடுமையாக தாக்கக்கூடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கொல்கத்தாவில் சனிக்கிழமை துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், அமெரிக்கப்பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் சறுக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் நிதித்துறையில் மத்திய அரசின் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் தோல்வி இந்தியப்பொருளாதாரத்திலும் எதிரொலிக்கும் ஆபத்து உள்ளது என்றும், இது இந்திய வங்கிக்கட்டமைப்பில் பெரும் தாக்குதலை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது என்றும் பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
______________________________________________________________________________
ஜீவாவும் டொமினிக் ஜீவாவும்
-என்.மருத்துவமணி
கணேஷ் அவர்களைச் சந்தித்ததற்குப் பின்னால் அதே வீட்டில் அதே இடத்தில் இன்னொருவரையும் சந்திக்க முடிந்தது.

                 
அந்தச் சந்திப்பு என் வாழ்க் கையை - ஏன் என்னுடைய பெய ரையே மாற்றி அமைத்துவிடும் என அப்பொழுது நான் நினைக்க வில்லை. கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கவில்லை.

தோழர் கார்த்திகேசன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பக்கத்தே என்னை இலக் கியத் துறைக்கு அறிமுகப்படுத்திய ராஜகோபாலன் மாஸ்டரும் உடனி ருந்தார். இன்னும் சிலரும் இருந்தனர்.

பெரீய்.... ய மீசை.... ஸ்டாலின் மீசையைப் படங்களில் பார்த்திருப் பீர்கள் அல்லவா, அப்படிப்பட்ட மீசை. குறும்புத்தன்மை மிளிரும் கண்கள். புன்முறுவல் பூத்த உதடுகள். கதர் பைஜாமா. கதர்ச் சட்டை தோளில் ஒரு துண்டு. சிவப்புத் துண்டு. எளிமை என்றால், மகா எளிமை!

“தோழர் வாங்க .... வாங்க.. இருங்க....” நகர்ந்து இடம் தந்து, பக்கத்தே இருத்திக்கொண்டு, தோளில் கை போட்டபடி சுக சேமம் விசாரிக்கிறார். அவர் நிச்சய மாக யாழ்ப்பாணத்தாராக இருக்க முடியாது. காரணம் அவர் தமிழைப் பேசிய விதம். இருந்தும் அந்தத் தமிழ் கொஞ்சி விளையாடியது. உச்சரிப் பில் தனிப்பாசம் தொனித்தது. முன் னர் எங்கேயோ சந்தித்துப் பழகியிருக் கிறோமோ, என்ற நெருக்கத்தை ஏற் படுத்தியது. அன்பை வெளிப்படுத்தி யது. தோழமை என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது.

தோழர் எனச் சொல்லப் பயம். ஆனால் அவரே வார்த்தைக்கு வார்த்தை தோழர் என என்னை அழைத்தார். அவருடைய வய தென்ன? என்னுடைய வயதென்ன? நானோ ஒரு பொடியன். நான் மலைத்துப் போய் விட்டேன். அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டி ருந்தேன். சம்பாஷிப்பதே ஒரு கலை யாகத் தெரிந்து வைத்திருப்பவரைப் போல, சூழ்நிலையைச் செம்மைப் படுத்தும் விதமாகக் கதைத்துக் கொண்டிருந்தார் அவர். அதில் நகைச்சுவையும் இழையோடி இருந் தது.

“இவர் தமிழ் நாட்டுத் தோழர், ஜீவா. ப.ஜீவானந்தம் என்பவர் இவர் தான். இப்ப இவர் இலங்கை வந்தி ருக்கிறார்” எனக் கார்த்தி அறிமுகத் தைத் தொடங்கி வைத்தார். எங் களையெல்லாம் “பார்ப்பதற்காக இலங்கை வந்திருக்கிறார்”

உண்மையைச் சொல்லுகின் றேன். அந்த அறிமுகம் எனக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் பெரிசாகப் பட வில்லை. சும்மா ஒப்புக்கு எனக்கு இவரைப் பற்றித் தெரியும் என்ற விதத்தில் தலை ஆட்டி வைத்தேன்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் கல்கத்தாவில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மகாநாட்டில் எடுத்த தீர்மானத் தைச் சாட்டாகக் கொண்டு , நேரு அரசாங்கத்தால் கட்சி தடை செய் யப்பட்டுவிட்டது. தலைமறைவாகப் போன தலைவர்களில் ஒருவரான ஜீவானந்தம், கள்ளத் தோணி மூலம் வல்வெட்டித்துறையூடாக இலங் கைக்குத் தப்பி வந்துவிட்டார். இவ ரைப் பத்திரமாகக் கொண்டு வந்து , கொண்டு போக வழி சமைத்துத் தந் தவர் 1956இல் பருத்தித்துறை நாடாளு மன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய் யப்பட்டிருந்த தோழர் பொன். கந்தையா அவர்கள்.

அது யுத்த பிற்காலம். கெடுபிடி கள் அதிகம். பிரஜைகள், ஊர் விதா னைகள் மூலம் பதியப்பட்டு அரிசிக் கூப்பன்கள் வீடுவீடாகப் புழங்கப் பட்ட சமயம்.

அந்தக் கால கட்டத்தில் ஜயம் பிள்ளை என்ற பெயர் பதியப்பட்டு அவருக்கு அரிசிக் கூப்பனும் பெறப் பட்டிருந்தது. நமது தோழர்கள் சமயோஜித புத்தியுடன் இந்த நட வடிக்கைகளை எடுத்திருந்தனர். தோழர் ஜீவானந்தத்தினுடைய புலம் பெயர்ந்த கூப்பனரிசிப் பதிவுப் பெயர் ஜயம் பிள்ளை என்பதாகும்.

ஜீவா அவர்கள் சில நாட்கள் தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந் தார். அவர் போன இடம், கூட்டம் , வரவேற்பு அத்தனைக்கும் நான் செல்லத் தவறவில்லை. ஒரே நாம பஜனைதான் வழிபாடுதான்.

என்னுடைய இந்த ஏகலைவப் பக்தியைப் பார்த்து அதிசயித்த ராஜ கோபாலன் மாஸ்டர்தான் எனது இயற்பெயரை விடுத்து, ஜீவா என அழைக்கத் தொடங்கினார். எனக்கும் அது மனசுக்குச் சுகமாக இருந்தது. எனது இயற்பெயர், பதிவுப் பெயர், ஞானஸ்நானப் பெயர், ஜோசப் டொமினிக். டொமினிக் என்ற பெயருடன் ஜீவா என்ற பெயரையும் இணைத்துப் பார்த்தேன் டொமினிக் ஜீவா என ஒரு நாதம் பேசியது.

சட்டபூர்வமாகவும் நடவடிக் கையை மேற்கொண்டு பிறப்புப் பத்திரத்தில் பதிவு செய்து எனது முழுப் பெயராக ‘டொமினிக் ஜீவா’ என ஆவணப்படுத்திக் கொண்டேன். பத்திரப் பதிவு செய்து கொண் டேன்”

(ஜீவா: கலாசாரத்தின் அரசி யல் அரசியலின் கலாசாரம் நூலிலிருந்து)

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...