புதன், 26 ஜனவரி, 2011

சூடு குறைந்த பழசுகள்


எல்லாவற்றிலும் பழசாக,பழசாக கொஞ்சம் மவுசு குறைவுதான்.
சினிமாவும் அதற்கு விலக்கல்ல.
உள்ளே வரும் போது முழுசாக சாவிகொடுக்கப் பட்ட பொம்மைபோல்
வரும் இளசுகள் இரண்டு படம் செய்த உடனே சாவிகுறைந்த பொம்மை
யாகி விடுகின்றனர். பிறகு பழைய மாதிரி திறமையுடன் செய்ய இயலா
விட்டாலும் துணை இயக்குனர்கள் துணையுடன் கொஞ்சம் ஒப்பேற்றிவிடு
கின்றனர்.
         அதன் பின்னர் கொஞ்சம் காசு ,வசதிகள் வந்து விடுகிறது.மக்களுடன்
இறங்கிவந்து பழகவும் இயலவில்லை. பெரிய தொடர்பு இடைவெளி.
கற்பனையும் கைகொடுப்பது ல்லை. பசித்தவயிறுக்கு இருக்கும்
கற்பனை இப்போது இங்கு இருப்பது இல்லை.
           சூடு குறைந்து வேறு வழியின்றி பெருங்காய டப்பாவாகிவிடுகின்றனர்.
இன்றைய பெரிய இயக்குனர்கள்,சில நடிகர்கள் கதை மறுத்தாலும்
இதுதான்.
        ஏதோ சிலர் திறமையான துணைகள்[?] மூலம் காலத்தை ஓட்டி வருகின்றனர்.
மன்மதன் அம்பு குறி தவறி, சொல்லப்போனால் குறியே இல்லாமல் பாய்ந்து
காணாமல் போனதும் இந்தக்கதையால்தான்.
     கமல் பழைய மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி போன்று தருவதாய்
நினைத்து  ஏ.சி. அறையில் உட்கார்ந்து எய்த அம்பு  அதிகமாக குளிரெடுத்ததால்
முக்காடு போட்டு தூங்கிவிட்டது.
     கமல் இனி ரஜினியைப்போல்  ஓடும் குதிரை மீது பணம் கட்டட்டும்.
புதுசுகள்  கதை,இயக்கதில் நடிக்கட்டும். அவர் திறமையானவர்.அதில் 
சந்தேகமே இல்லை. தேவை இன்றி துன்பப்படவேண்டாம்.அவர் துண்பப்
படுவதுடன்,தயாரிப்பாளர்களையும் துயரத்தில் ஆழ்த்தவேண்டாம்.
      அது மட்டுமின்றி ரசிகர்களும் கவலைப்படமாட்டார்கள் அல்லவா.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

மீண்டும் இலங்கைப் படுகொலை

Blogger: டாஷ்போர்டு: "- Sent using Google Toolbar"

கவிதை செய்வோம்

இன்று நல்ல கவிதை கிடைப்பது மிக  அரிது.
அதை எழுதுபவர்கள் அருகிவிட்டனர். இன்று தமிழா வேறு எந்த மொழியா
 என்று தெரியாத வார்த்தைகளே கவிதை என்று எழுதுபவர்கள் உபயோகம் செய்கின்றனர்.
                 முன்புள்ள செய்யுள்கள்தான் பொழிப்புரை,விளக்கவுரை வைத்துப்
 படிக்கவேண்டும்.இப்போது இவர்கள் எழுதும் வார்த்தைகளுக்கும் அவர்களிடமே
 விளக்கம் கேட்கவேண்டிய நிலை.
                  அவர்களிடம் சென்றாலோ ரசனையற்ற முட்டாள் என்று திட்டி
 விடுவார்களோ என்ற பயம் .
               கவிதையை படிக்க ஆவல்.ஆனால் இவர்கள் கவிதையை பார்த்துப்
  பயம்.என்ன செய்ய,,  
           முன்பு ஒருவர் கூறியது ஞாபகம் வருகிறது.சம்பந்தமில்லாமல் நண்பர்கள்
 ஒவ்வொருவர்த்தைகளைக்கூற அதை எழுதி குலுக்கள் முறையில் அதைத்
தேர்ந்தெடுத்து ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதி அதை ஒரு இலக்கியப்
 பத்திரிக்கை என்று பிரபலமான [பெயர் வெண்டாம்]இதழிற்கு அனுப்பிவைத்
து விட்டு மறந்தும் விட்டனராம்.
          ஆனால் அடுத்த மாத இதழில் அவர்கள் கவிதை[?] ஒரு அட்டகாசமான
 தலைப்பில் வெளியாகி அதிர்ச்சியை தந்ததாம்.
         இதை விடக்   கே  வலம் அதை பாராட்டி அடுத்த இதழில் சிலர் எழுதியிருந்
 தனராம்.
          எமக்குத்தொழில் கவிதை என்று இதைப்படித்த கவிகள் இவ்வளவு எளிதா
 கவிதை எழுதுவது என்று குலுக்களில் இறங்கிவிட வேண்டாம்.அப்படி எழுதினாலும்
 எமக்கு அனுப்பி விட வேண்டாம்.வெள்ளி, 21 ஜனவரி, 2011

சாரு,,,,,,

    அண்ணன் சாரு தனது தேகம் நாவல் பற்றி மிக உயர்ந்த கருத்து வைத்துள்ளார்.அதில் தப்பே இல்லை.அவரவர் படைப்பு அவர்களுக்கு
பொன் குஞ்சு.
      ஜிரோ டிகிரி போன்ற காமக்கதை எழுதிவிட்டு அதைஉலகமகாக்காவியமாக
புலம்பியவரின்,அடுத்தப்படைப்புதான்தேகம்.
      அவரே அதை ஜீரோ டிகிரி யின் அடுத்தக்கட்டமாகத்தான் பார்க்கிறார்.அதைமிக உயர்வாகப்பார்க்கிறார்.ஆனால் அடுத்தவர்கள் விமர்சித்தால் மிகக்கொடுமையாக அவர்களை சாரு விமர்சிப்பதுதான் சரியல்ல.காளிதாசன் போன்ற மகாக்காவியம் படைத்தவர்களே சமகாலத்தில்
விமர்சன அம்புகளைத்தாங்கியவர்கள்தானே.[நீ பார்த்தாயா?எனக்கேட்கக்கூடாது.கேள்வி ஞானம்தான்.]
           கமல் முதல் கருணாநிதிவரை அவர் கொடுமையாக விமர்சிக்காதவர்கள்  மிச்சம் கிடையாது.கடைசியாக மாட்டியவர் நம்ம மிஸ்கின். அதுபோல் தானும்விமர்சிக்கப்படுவதில் அவர் சமரசம் செய்துகொள்ளவேண்டும்.
           காமக்கதை ஸ்பெசலிஸ்ட் தான் என்பதையும் உணரவேண்டும்.அதை யாராவது சுட்டிக்காட்டினால் பொறுத்துக்கொள்ளப்பழகிக்கொள்ளவெண்டும்.          ஆனால் கடைசியாக ஒன்று.எதை எழுதினாலும் படிப்பவர்கள் சுவாரசியமாகப் படிக்கும்படி எழுதுவதில் சாரு திறமையானவர்என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

சனி, 15 ஜனவரி, 2011

அனைவருக்கும்


னைவருக்கும் கலாரசிகனுடைய பொங்கல்,தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.இன்றும் இனிஎன்றும் வளம்,நலம் பெற வாழ்த்துக்கள்.
          கலாரசிகன் எப்படியிருக்கவேண்டும் என்று நீங்களும் கருத்துக்களை தெரிவிக்கக்கேட்டுக்களும்.
                                                                                         என்றும் அன்புடன்,,
                                                                                         கலாரசிகன்,,,,,,,,.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...