bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 20 மே, 2015

ஷியா-சன்னி ,,,,,,.

மே 13ம் நாளன்று பாகிஸ்தானில் ஷியா இஸ்மாயிலி பிரிவைச்சேர்ந்த அப்பாவி மக்கள் 16 பெண்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர். 
ஓடும் பேருந்தைநிறுத்தி அதனுள் புகுந்த தீவிரவாதிகள் “அனைவரையும் கொல்லுங்கள்” என்று கத்திக்கொண்டே கண்மூடித்தனமாக சுட்டனர். 
இந்த படுகொலைக்கு தலிபான் போன்ற சன்னி பிரிவைச்சார்ந்த தீவிரவாத இயக்கங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன.
 இப்படுகொலைகள் உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஐ.நா.சபை பொதுச்செயலர் பான்-கி-மூன் உட்பட பலரும் கண்டித்துள்ளனர்.
ஷியா என்பது இசுலாத்தின் ஒரு உட்பிரிவு ஆகும். 
இசுலாத்தினுள் சன்னி, ஷியா, சுஃபி என பல பிரிவுகள் உள்ளன. ஷியா பிரிவில் இஸ்மாயிலி, அகமதி எனும் உட்பிரிவுகளும் உள்ளன.
உலகில் உள்ளஇசுலாமியர்களில் 80 சதவீதம் பேர் சன்னி பிரிவினர்தான். எனினும் ஷியா பிரிவினர் 13 முதல் 15 சதவீதம் பேர் உள்ளனர். 
ஈரான், ஏமன், பக்ரைன் போன்ற நாடுகளில் ஷியா பிரிவினர்தான் அதிகமாக உள்ளனர். 
ஷியா பிரிவு மக்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஈரானுக்கு அடுத்த படியாக பாகிஸ்தானும், மூன்றாவதாக இந்தியாவும் உள்ளன. 
பாகிஸ்தானில் உள்ள இசுலாமியர்களில் சுமார் 20 சதவீதம் அதாவது 3 கோடி பேர் ஷியா பிரிவினர் ஆவர். இந்தியாவிலும் சுமார் 2.5 கோடி பேர் ஷியா பிரிவினர் உள்ளனர்.

பிரச்சனை என்னவெனில் சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா பிரிவினரை இசுலாமியர்களாக ஏற்றுக்கொள்வது இல்லை.
 எனவேதான் இந்த தாக்குதல். ஷியா பிரிவினரும் ஒரே கடவுள் அல்லாதான் என ஏற்றுக்கொள்கின்றனர். 
குர்-ஆன்தான் அவர்களுக்கும் புனித நூல்! மசூதிகளில் ஷியா பிரிவினரும் ஐந்து வேளை தொழுகின்றனர். 
இரு பிரிவினருக்கும் நபிகள் தான் இறைதூதர்! 
எனினும் ஷியா பிரிவினரை சன்னி பிரிவு தீவிரவாதிகள் நிராகரிப்பது பல நூற்றாண்டுகளாக தொடர்கிறது.11ம் நூற்றாண்டில் கஜனிவாடி சுல்தான் முகம்மது சோமநாதர் கோவிலை கொள்ளை அடித்ததும் அங்கு நடந்த போரில் ஏராளமான இந்துக்கள் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று! ஆனால் மன்சூரா மற்றும் முல்தான் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஷியா இஸ்மாயிலி பிரிவினரை கஜனி முகம்மது கொன்றான் என்பதும் அங்குள்ள பல மசூதிகளை முடக்கினான் அல்லது அழித்தான் என்பதும் பலர் அறிந்திராத உண்மை!
சோமநாதர் கோவிலுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதுதான் முல்தான் மற்றும் மன்சூரா மசூதிகளுக்கும் ஏற்பட்டது. 
கஜனி முகம்மது சன்னி பிரிவு இசுலாமை ஆதரித்தவன். ஷியா பிரிவை அழிப்பதை தனது கடமையாக கருதினான்.சன்னி- ஷியா முரண்பாடுகள் பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றன.
 நபிகள் நாயகம் மறைவிற்கு பிறகு இசுலாத்தின் தலைமை பீடத்திற்கு போட்டி உருவானது. நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷாவின் தந்தையான அபுபக்கரின் தலைமை ஏற்றுக்கொண்டவர்கள் சன்னி பிரிவினர் எனவும் நபிகளாரின் இன்னொரு மனைவியான கதீஜாவின் மகள் பாத்திமாவின் கணவர் அலி-இபின்-அபி-தாலிப்அவர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் ஷியா பிரிவினர் எனவும் கருதப்படுகின்றனர்.
தலைமை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காலப்போக்கில் இசுலாமியர்களின் வாழ்வு விதிகள், சட்டப்பிரச்சனைகள் என அனைத்து அம்சங்களிலும் வெளிப்பட்டது.
 இன்றுசிரியா, ஏமன் என அனைத்துப் போர் களிலும் இந்த முரண்பாடு கோரமாக வெளிப்படுகிறது.மதச்சார்பின்மை பற்றிய விவாதம்பாகிஸ்தானில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 2000 ஷியா பிரிவினர்கொல்லப்பட்டுள்ளனர். 
சன்னி பிரிவு தீவிரவாதிகள்தான் இந்த படுபாதகச் செயல்களில் ஈடுபடுகின்றனர். 
கடந்த10 நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் பாகிஸ்தானில் மதச்சார்பின்மை கொள்கை நடைமுறைப் படுத்துவது பற்றி விவாதித்தது. 
மதம் ஆட்சியாளர்களின் கருவியாகவே பயன்பட்டு வந்துள்ளது.
இது தவறு என பாகிஸ்தான் மக்களின் ஒரு பிரிவினர் கருத ஆரம்பித்துள்ளனர். எனினும் இது வலுவான கருத்தாக இன்னும் உருவாக வில்லை. மதச்சார்புள்ள தேசமாக இருப்பதில் பாகிஸ்தான் எவ்வித சமூக நன்மையும் அடையவில்லை என்பதே அனுபவம்.பாகிஸ்தானில் அகமதி எனும் இசுலாத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் உள்ளனர். 
அவர்கள் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு. சன்னி பிரிவு தீவிரவாதிகள் அகமது பிரிவினரை இசுலாமியர்கள் அல்ல என அறிவிக்கக் கோரி அதில் வெற்றியும் பெற்றனர். இதற்கு ஷியா பிரிவினரும் ஆதரவு தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்று ஷியா பிரிவினரும் கூட இசுலாமியர்கள் அல்ல என சன்னி பிரிவு தீவிரவாதிகள் கூறுகின்றனர்.
பல நூற்றாண்டுகளாக தாக்கப்பட்டாலும் ஷியா பிரிவினர் முற்போக்கு இயக்கங்கள் அல்லது இசுலாத்தில் முற்போக் கான மாற்றங்களுக்கு ஆதரவாக குரல் தந்தது இல்லை. 
ஆப்கனில் நஜிபுல்லா வின் முற்போக்கு ஆட்சியை வீழ்த்திட சன்னி பிரிவு தீவிரவாத அமைப்பான அல்-கொய்தாவை அமெரிக்கா உருவாக்கியது. அவர்களுடன் சேர்ந்து ஷியா பிரிவினரும் நஜிபுல்லாவின் ஆட்சிக்கு எதிராக போரிட்டனர். நஜிபுல்லா ஆட்சி வீழ்ந்த உடன் சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஷியா மக்களுக்கு எதிராகவே திரும்பினர்.
ஈராக், லிபியா, சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் தலையீடு சன்னி தீவிரவாதத்தை வலுப்படுத்தியுள்ளது. அது ஷியா மக்க ளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
இதன் ஒரு பகுதியாகவே பாகிஸ்தானிலும் ஷியா பிரிவு மக்கள் கொல்லப்படுகின்றனர். சில நாடுகளில் சன்னி பிரிவு அப்பாவி மக்கள் ஷியா தீவிரவாதி களால் தாக்கப்படுவதும் நடக்கிறது.
உலகின் பெரிய மதங்களான இந்துமதம், கிறிஸ்தவம், இசுலாம்,பவுத்தம் ஆகியவை பன்முகம் கொண்டவை யாகவே திகழ்கின்றன. பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் அவற்றில் தவிர்க்க இயலாதது.
உலக அளவில் அவை பரவியுள்ள நிலையில் தேசங்களின் சூழலுக்கு ஏற்ப பன்முகம் உருவாவது நடைமுறை உண்மை!
 எந்த ஒரு பிரிவும் தனது கோட்பாடு மட்டுமே உள்ள ஒரே முகமாக மதத்தை மாற்ற முயல்வது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று. சங்பரிவாரம் இந்து மதத்தின் பன்முகத்தன்மையை அழிக்க முயல்வது போல சன்னி பிரிவு தீவிரவாதம் இசுலாத்தின் பன்முகத்தன்மையை அழிக்கப்பார்க் கிறது. 
இது ஷியா பிரிவினருக்கு எதிரானது மட்டுமல்ல; 
நபிகள் நாயகத்தின் நடைமுறை மற்றும் குர்-ஆனின் கூற்றுகளுக்கு கூட எதிரானது!மதத் தீவிரவாதத்திற்கு எதிரான சக்திகள் ஒன்றுபடுவதுதான் பாகிஸ்தானில் இத்தகைய படுகொலைகளை தடுக்க முடியும். 
சன்னி பிரிவில் ஒற்றுமையை விரும்பும் மக்களும் ஷியா, அகமதி மற்றும் இந்து, கிறிஸ்தவ சிறுபான்மை மக்களும் ஓரணியில் திரள்வதுதான் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

                                                                                                                               -அ.அன்வர் உசேன்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...