வெள்ளி, 14 டிசம்பர், 2018

இதுதான் ஆன்மிக அரசியலா

ரஜினிகாந்துக்கு வயது  69 ஆகிறது.

 இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்து ஆடமுடியாமல் ஆடுகிறார்.

தனது பிறந்தநாளில் வழக்கமாக அவர் சென்னையில் இருப்பதில்லை.
இமயமலை வாசத்தை தேடி புறப்பட்டுவிடுவார். ஆனால்  இம்முறை மும்பை பறந்திருக்கிறார்.
ரசிகர்களை கூட சந்திக்க மறுத்து மும்பை பறந்தது ஏன்?
என்கிற கேள்வி ரிலையன்ஸ் நிறுவனத்தின் அழைப்பிதழில் ஒளிந்திருக்கிறது.
3மணி நேரமாக வேலைக்காரப்பெண்ணை நிற்கவைத்து 2.0படம் காண்பித்த ரஜினி.


ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவிற்கும், பிரமால் நிறுவனத் தலைவர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த்திற்கும் டிசம்பர் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, டிசம்பர் 8, 9ம் தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமண வீட்டாரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், உள்துறை செயலாளர் ஜான் கெர்ரியில் தொடங்கி, நமது ஊர் சல்மான், ஷாருக், அமீர் கான்கள் வரையில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் படையெடுத்தனர்.
 இரண்டு நாட்கள் உதய்பூரையே குலுக்கிய அம்பானி குடும்ப திருமண விழா, தற்போது மும்பையை மையம் கொண்டுள்ளது. மும்பையிலுள்ள அம்பானியின் ஆண்டிலியா வீட்டில் தான் இஷா – ஆனந்த் ஜோடியின் திருமணம் நடைபெறுகிறது.

மும்பையின் பெடார் சாலையிலுள்ள இந்த 27 மாடி வீடு, இங்கிலாந்து மகாராணி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக உலகின் மிக மதிப்புமிக்கதாகும்.
இதன் முதல் ஆறு தளங்கள் கார்கள் நிறுத்துவதற்காக மட்டுமே பயன்படுகின்றன.

 ஹெலிகாப்டர் இறங்கும் வசதி, தோட்டம், நீச்சல் குளங்கள் என சகல வசதிகளாலும் நிரம்பிய இவ்வீட்டை பராமரிக்க 600 பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்பிரம்மாண்ட வீட்டில் தான் அம்பானி குடும்ப திருமணம் நடைபெற்றது.

திருமண விழாவில் பங்கேற்க  பலருக்கு அம்பானி குடும்பத்தார் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர்.அழைப்பிதழ்  ஒன்றின் விலை 1,26,000/மட்டுமே.
இந்த முகேஷ் அம்பானி இந்திய வங்கிகளில் வராக்கடன் நிலையில் வைத்திருக்கும் கடன் தொகை 40,000/ கோடிகள் ஆகும்.

 அம்பானி விழாவில் பங்கேற்கத் தான்,காஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முடியாதவர், தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திப்பதையும் தவிர்த்துவிட்டு மும்பை பறந்துள்ளார்.

அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவிப்பாணை வெளியிட்டு ஒருவருடம் முடியும் தருவாயிலும், இதுவரை தீவிர அரசியலில் ரஜினி ஈடுபடவில்லை.
 டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளைமூன்று முறை கமல்ஹாசன்சுற்றி வந்துவிட்டார். தானே நேரடியாகவும்,ரசிகர்கள்,கட்சியினர் மூலம் இன்னும் நிவாரணப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்.


ஆனால், சென்னை நகர எல்லையை கூட ரஜினி தாண்டவில்லை. அவரது ரசிகர்கள் தான் ரஜினி படம் போட்டு தங்கள் கைக்காசில் வழங்கிவருகின்றனர்.

அரசியலுக்கு வந்து முதல்வர் பதவியை பிடிக்க திட்டமிடும் ரஜினி  பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வராதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

 கமல்ஹாசன்" கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்.கேரளா முதல்வர் பிராயி விஜயன், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
 இதனையேற்று கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் 10 கோடிகளை உடனே அனுப்பி வைத்தார்.
வீடியோ ஒன்றை வெளியிட்ட அமிதாப், கஜா புயல் சேதங்களை பட்டியலிட்டு, சகோதரத்துவத்தை உணர்த்த கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அவரும் ஒரு தொகையை முதல்வர் நிதிக்கு அனுப்பினார்.

அமிதாப் சொல்லி லட்சம் லட்சமாக குவியப் போவதில்லை என்றாலும், தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் ஒரு விஷயத்தை கூறும்போது, அவ்விஷயம் தேசிய அளவில் கவனம் பெறும்.
 கமல்ஹாசன் அதற்கான முயற்சியை தான் அமிதாப் மூலமாக செய்தார்.

இதே முயற்சியை ரஜினி ஏன் செய்யவில்லை? என்பது தான் கேள்வி.கமல்ஹாசனை விட அமிதாப்பச்சன் ரஜினிக்கு மிகவும் வேண்டியவர்.
ஆனால் கஜா கொடுமையில் தஞ்சை மக்கள் ஆதரவை தேடி தவிக்கையில் கமல்ஹாசன் உடனே சென்று மாறுதல்கள் கூறுகையில் நடிகர் ரஜினி கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் துக்க விசாரிக்க மனைவியடன் கர்நாடகா சென்று விட்டார்.

தன்னை வாழவைத்த தமிழக மக்கள் துயரத்தை விட தன சொந்த மாநில நடிகர் துயரமே அவருக்கு பெரிதாகி விட்டது.

“ஒரு சொட்டு வியர்வைக்கு, ஒருபவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா?”, என பாடி நடித்தவர், டெல்டா மாவட்டங்களில் ஒரு ரவுண்ட் அடித்திருந்தால்மோடி  அளவில் கஜாவின் பாதிப்புதெரிந்திருக்கும்.

 நிவாரண தொகையை உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும்.
அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால், மக்களிடம் இந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்காது.
அரசியல் களத்திற்கு வந்துவிட்டதாக அறிவித்துவிட்டு, என்ன? ஏது? என்று கூட எட்டிப்பார்க்காதது தான் மக்களிடையே விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

தற்போது, ‘2.0’ படத்திற்காக வீதிக்கு வீதி போஸ்டர் அடித்து, பேனர் கட்டிய தனது ரசிகர்களை தன் பிறந்தநாளன்று கூட சந்திக்காமல், அம்பானி வீட்டு விஷேசத்திற்காக ஓடியது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக கிளம்பியுள்ளது.

மக்கள் அல்லல்படும் போது வந்து நிற்காதவர், போர் வரும்போது வருவேன் என்பது எதற்காக?
அது ஓட்டு அரசியல் ஆகாதா?
இது முறையா ,இதுதான் ஆன்மிக அரசியலா என்பது ரஜினிக்கே வெளிச்சம்.
 
அதிகமில்லை மக்களே.
மொத்தமாக ₹ 2,000 கோடி 
ஆண்டுக்கு. ₹ 500 கோடி 
மாதத்திற்கு ₹41.66 கோடி 
நாளைக்கு ₹ 1.38 கோடி
 ஒருமணிக்கு₹ 5.75 லட்சம் 
ஒரு நிமிடத்திற்கு₹ 9,583 
ஒரு நொடிக்கு ₹ 160
 ஏழைத்தாயின் மகனின் வெளிநாட்டு பயணச் செலவு! 
யார் பணம் ? 
அம்பானிகள் பணம் அல்ல.
 நம்ம பணம்தான்.
 ஆனால் இந்த வெட்டி அளவில் நன்மை புறாவும் அம்பானிகளுக்கு மட்டும்தான்.
                                                  காலியாகிறதா காவி?

 ரெண்டு வருஷம் முன்னாடி “இந்தியா காவிமயமாகிறது!”ன்னு விவாதம் நடத்தின டிவி சேனல்கள்,

 இந்த விவாதத்தையும் நடத்தணும்!

செவ்வாய், 11 டிசம்பர், 2018

பதவி விலகல் ஏன்?

மோடியிடமிருந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தப்பினார் .!
இந்திய மக்கள்.?
மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்து வந்த மோதலின் விளைவாக, ரிசர்வ் வங்கியில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 
தன்னிச்சையான அமைப்பான ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் மோடி அரசு ஆதிக்கம் செலுத்த பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உர்ஜித் பட்டேல் பதவி விலகியிருக்கிறார்.

இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பட்டேல் தெரிவித்துள்ளார்.

உர்ஜித் பட்டேலின் பதவி விலகல் இந்தியாவின் நிதி கொள்கைகளை செயல்படுத்துவதில் ஆட்டத்தை காணவைக்கும் என்கிறது த வயர் இணைய தளம்.

வயர் போன்று பல ஊடகங்கள் சொல்லும் கருத்துக்களை பார்ப்போம்.

முதலாவதாக, இந்திய பங்குச்சந்தைகளில் இது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? அடுத்து, மத்திய வங்கியின் இடைக்கால கவர்னராக பொறுப்பேற்கப் போவது யார்? இறுதியாக, மோடி அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில்,  நடக்கவிருக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன நடக்கும்?


டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 72.50 ஆக சரிந்துள்ள நிலையில், பட்டேலின் ராஜினாமா தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது மெக்லாய் நிதி சேவை நிறுவனம். இந்த சரிவு செயல்பாட்டு அடிப்படையற்றது என்கிற அந்நிறுவனம், அரசியல் காரணங்களால்தான் இந்த சரிவு என்கிறது. 

அதுபோல பங்குச் சந்தைகளும் எதிர்மறையாக விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும் நிதி சேவை நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. சொன்னதுபோல இன்றைய பங்குச் சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 10400 கீழே சரிந்தும் உள்ளது.
ரூபாயின் மதிப்பு 1.5% சரிவைக் கண்டுள்ளது.

பட்டேலின் ராஜினாமா அறிவிப்பு மோடி அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்கின்றன ஊடகங்கள். வழக்கமாக, மத்திய அரசின் செய்தி நிறுவனத்தின் வாயிலாக கவர்னர் பதவி விலகல் அறிவிப்பு அறிக்கையாக வெளியிடப்படும்.
 பட்டேல் ராஜினாமா திடீரென்று எதிர்கொண்ட மோடி அரசு, தன்னுடைய அதிர்ச்சியை மறைக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து தெரிவிக்கிறது.

ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, “பட்டேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரும் இழப்பு” என்கிறார். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கிக்காக பட்டேல் செய்த பணிகளை பாராட்டுவதாக ட்விட்டரில் தெரிவிக்கிறார். 
ரிசர்வ் வங்கி இயக்குனராக உள்ள ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, பட்டேலின் ராஜினாமா அதிர்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்தை கையாளத்தெரியாமல் கீழ் நிலைக்குத் தள்ளியது காவி கும்பல். தன்னிச்சையான அமைப்புகளை சர்வாதிகாரத்தன்மையுடன் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பாஜக அரசு தீவிரமான முயன்றது.
அந்த வகையில் உர்ஜித் பட்டேலின் ராஜினாமாவை இவர்கள் எதிர்பார்த்தார்கள் எனலாம்.
 மோடி அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கும் மோடி அரசுக்கு ஐந்து விசயங்களில் மோதல் போக்கு நீடித்து வந்தது.

1. ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை மோடி அரசு கேட்டது. அதைத்தர பட்டேல் மறுத்ததாக கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய குழு அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

2. பலவீனமான நிலையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கச் சொன்னது மோடி அரசு. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் அல்ல என தெரிவித்தது.

3. வங்கிகளுக்கான மூலதன நெறிகள்: கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் இதற்கு ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. சர்வதேச மூலதன நெறிமுறைகளின் ஒரு பகுதியை தளர்த்த ஆர்.பி.ஐ. ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

4. சிறு, குறு தொழில்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு உதவும் விதமாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்கிற மத்திய அரசின் கோரிக்கையையும் ஆர்.பி. ஐ. நிராகரித்துவிட்டது.

5. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கட்டமைப்பு உடைக்க மோடி அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த நிர்வாகக்குழு கூட்டத்தில், மோடி அரசு ரிசர்வ் வங்கி, துணை கமிட்டிகளை அமைக்குமாறு வலியுறுத்தியது. இந்த கமிட்டியில் அரசு நியமிக்கும் உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை கவனிப்பார்கள் என கூறியது.

ரிசர்வ் வங்கி கவர்னரின் ராஜினாமா இந்த ஐந்து விசயங்களில் இருந்த முரண்பாட்டில் விளைவாக நடந்திருக்கிறது என ஊடகங்கள் பல கருத்துரைக்கின்றன.

ஆனால் இது வரை மோடி அரசின் தவறுகளுக்கு ரிசர்வ் வங்கி உடன்பட்டு போயிருப்பதை அவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. இது குறித்து மேலே உள்ள புதிய ஜனநாயகம் கட்டுரை இணைப்பில் நீங்கள் விரிவாக காணலாம். அதிலிருந்து சில பத்திகளை இங்கே நினைவுபடுத்துகிறோம்.


தனியார்மய-தாராளமய காலக் கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் என்பது பன்னாட்டு ஏகபோக முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது அன்றி வேறொன்றுமில்லை. 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பட்ஜெட் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்தச் சுதந்திரம் செயல்பட்டு வருகிறது. 

குறிப்பாக, மோடியின் ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் எந்த இலட்சணத்தில் இயங்கியது என்பதும் நாம் அறியாத இரகசியமல்ல.
உர்ஜித் படேல் குஜராத்தைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பதோடு, ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் என்ற காரணங்களுக்காகவே ரகுராம் ராஜனுக்கு அடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

அவர் மோடியின் ஆள் என நம்பப்பட்டதை நிரூபிக்கும் வண்ணம், மோடி அரசு இரவோடு இரவாக இந்திய மக்கள் மீது நடத்திய பணமதிப்பழிப்பு தாக்குதல் நடவடிக்கையை மறுபேச்சின்றி ஆதரித்தார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த குருமூர்த்தி, சதீஷ் மராத்தே, சச்சின் சதுர்வேதி ஆகியோர் நியமிக்கப்பட்டதையும், அக்கும்பல் மோடியின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்ததை எதிர்த்துவந்த காரணத்திற்காக நாச்சிகேட் மோர் இயக்குநர் குழுவிலிருந்து நீக்கப்பட்டதையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார்.

எனினும், வாராக் கடன்களை வசூலிப்பதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் புதிய கடன்களை வழங்குவதிலும் மோடி அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காகவே உர்ஜித் படேல் மீது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆத்திரம் கொண்டிருப்பதோடு, அவரை மாற்றிவிட்டு வேறொரு தலையாட்டி பொம்மையை ஆளுநராக நியமித்து, 
ரிசர்வ் வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் திட்டமிடுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், ரிசர்வ் வங்கியை, ரிலையன்ஸ் வங்கியாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். 
அத்திட்டம் நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகளும், அதிலுள்ள மக்களின் சேமிப்பும் கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக் களமாக மாற்றப்படும். 
 பொதுத்துறை வங்கிகளைச் சட்டபூர்வமாகத் தனியார்மயப்படுத்தாமலேயே, அவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் கைகளில் ஒப்படைத்துவிடும் சதி அரங்கேற்றப்படும்.

மோடி கும்பலால் முன்னிறுத்தப்பட்ட உர்ஜித் பட்டேல் இறுதியில் தனக்குப் பழி வரும் என்பதால் பதவி விலகியிருக்கிறார்.

 ஆனால் மோடியின் பொருளாதார்த் தாக்குதலில் இருந்து இந்திய நாட்டு மக்கள் தப்பிக்கதான் வழியே இல்லை.புதன், 5 டிசம்பர், 2018

12,2கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !

அனில் அம்பானிக்குச் சொந்தமான ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய கடற்படை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 
கடந்த 2011-ஆம் ஆண்டு 5 ரோந்துக் கப்பல்களை ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிக்கொடுக்க, ‘பிபாவவ்’ என்ற பாதுகாப்பு மற்றும் கடல்சார் பொறியியல் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருந்தது. 


 ஆனால், 2016-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தையே அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ விலைக்கு வாங்கியது. 
இதனால், கடற்படையின் ஒப்பந்தம் இயல்பாகவே ரிலையன்ஸ் டிபென்ஸ் வசம் வந்தது.

‘பிபாவவ்’ ஏற்படுத்தியிருந்த ஒப்பந்தப்படி, ரோந்துக் கப்பல்களை 2015-ஆம் ஆண்டின் துவக்கத்திலேயே கடற்படையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், நிறுவனம் ரிலையன்ஸ் வசம் சென்றபிறகும் பணிகள் முடிக்கப்படவில்லை.

இந்நிலையில், ரோந்துக் கப்பல் தயாரித்து அளிப்பதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியிருந்த வங்கி உத்தரவாதத்தொகையை ரொக்கமாக மாற்றி, இந்திய கடற்படை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. 

எனினும் ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ள கடற்படைத் தலைவர் அட்மிரல் லான்பா, அதுபற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு நெருக்கமான ரிலையன்ஸ் நிறுவனம் மீதான, கடற்படையின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
====================================================
 
பந்தளத்தில் 12 ஓட்டு ! 
போராட்டத்தில் 2 பேர் !
 கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !பரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் கேரளத்தில் காலூன்றலாம் என ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் பலமாக திட்டமிட்டு காய்களை நகர்த்தியது. 

பாஜக தாளம் போடும் ஊடகங்களின் மூலம் வெறுப்பைத் தூண்டும் போராட்டங்கள் ஊதிப் பெரிதாக்கப்பட்டன. சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி இடைத் தேர்தலில், சபரிமலை பகுதியில் உள்ள பந்தளம் பஞ்சாயத்தில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 12. 


 ஓட்டரசியலில் மண்ணைக் கவ்வினாலும் பாஜக தனது சபரிமலை அரசியலை விடுவதாகத் தெரியவில்லை. விடாமுயற்சியின் பலனாக சமூக ஊடகமான ட்விட்டரில் ‘பல்பு’ வாங்கியிருக்கிறது கேரள பாஜக!

 கடந்த ஞாயிறு (டிசம்பர் 2) அன்று கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனுக்கு எதிராக பாஜகவின் செங்கனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள பாஜகவின் டிவிட்டர் தளத்திலிருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. இது டிவிட்டரில் பலருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

 தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாகேரள பாஜகவின் ட்விட்டை ரீ-ட்விட் செய்து, “ கண்ணிமைக்கும் நேரத்தில் நான் எதையாவது பார்க்கத் தவறிவிட்டேனா?” என பதிவிட்டிருந்தார்.


 
Rabin @lazybanker
Replying to @yehlog
Im convinced Kerala keeps BJP around for its entertainment value.

Khushboo Singh. @khush_boozing
BJP keeps the Kerala's troll page high.They are the prime source for their content.😂😂🤣🤣
2
Twitter Ads info and privacy
See Khushboo Singh.'s other Tweets
 சிலர், இந்த ட்விட்டர் பதிவு உண்மையில் கேரள பாஜகவினர் பதிவிட்டதுதானா? எனவும் வினவினர்.
 பலர், கேரள பாஜக தன்னைத் தானே கேலி செய்துகொள்வதாகவும் எழுதினர்.

“கேலிக்குரிய கேரள பாஜகவின் வீடியோ, சங்கிகள் எத்தகைய கோழைகள் எனக் காட்டுகிறது. இதனால்தான் அவர்கள் பிரிட்டீசாரை எதிர்த்து போராடவில்லை. அமித் ஷாவின் வாகனத்தை வழிமறித்து கறுப்புக்கொடி காட்டிய நேஹா யாதவ்-விடம் சங்கிகள் தைரியத்தை கற்றுக்கொள்ளட்டும். தன்னுடைய தைரியமான அரசியல் செயல்பாட்டுக்காக நேஹா சிறைக்குச் சென்றார்” என்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர் ஸ்ரீவத்சவா.

 கேரளத்தில் ட்ரோல் செய்கிறவர்களுக்கு கேரள பாஜக தினமும் விசயங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

 லை வாழ்க்கையை பிரதிபலிக்கிறது
வாழ்க்கை கலையை பிரதிபலிக்கிறது
மேலும் ஒரு மலையாள கலைப்படம். அமைதியாக பார்க்கவும்.
BeeGee @joBeeGeorgeous
Art imitates life.
Life imitates art.

(Another Malayalam Art film. Watch silently) https://twitter.com/BJP4Keralam/status/1069165840879149056 
37
Twitter Ads info and privacy
See BeeGee's other Tweetsபலருடைய கேலியின் காரணமாக கேரள பாஜக, தனது ட்விட்டை நீக்கிவிட்டது. 12 வாக்கு வாங்கியது, தன்னைத் தானே கேலி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்டது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது கேரள பாஜக.
சபரிமலையில் போராடுகிறவர்கள் மீது பொய்யாக வழக்கு போடுவதாக வழக்கு தொடுத்த பாஜகவைச் சேர்ந்த சோபா சுரேந்திரனுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இப்படி செல்லுமிடமெல்லாம் ‘பலத்த அடி’ வாங்கினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என மிதப்பாகத் திரிகிறது காவி கும்பல்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

கும்பல் கொலைகள்


திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள புலந்த்ஷகர் மாவட்டத்திலுள்ள மஹாவ் கிராமத்தை சேர்ந்த மக்கள், குறைந்தது 5 டஜன் பசுக்களின் இறந்த உடல்கள் என்று கூறப்படுவதை கண்டறிந்ததாகக் கூறியதில் இருந்து இந்த பிரச்சனை தொடங்கியது.

"அந்நேரத்தில் 200 பேருக்கும் அதிகமான பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் ஆட்கள் கூடிவிட்டனர்.அவர்களுக்கும்  மஹாவ் மற்றும் பக்கத்து கிராமங்களின் தலைவர்களால் சூடான விவாதங்கள் எழுந்தன.


இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு நாளுக்கு பின்னர், இந்த கிரமத்திலுள்ள அனைவரும் வெளியேறிவிட்டனர்.

பசு வதை என்றும் முஸ்லிமகள்,தலித்துகள் அதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ள பின்னர், பின்விளைவுகளுக்கு பீதியடைந்து சிறுபான்மை முஸ்லிம்கள் தப்பியோடி விட்டனர்.

தலித் இந்துக்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் தப்பி ஓடியுள்ளனர்.

கால்நடைகளின் உடல்களை சுற்றி கூடிய அவர்கள் கோபத்தால் வெகுண்டெழுந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அவற்றை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
அப்போது மணி பத்தரை.
  பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் ஆட்கள் மொத்தமாக 300க்கு அதிகமானோர் கூடவே, அவர்கள் நெடுஞ்சாலையிலுள்ள சிங்காரவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள்,வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.

அந்த காவல் நிலையத்தில் இருந்த 6 காவல்துறையினரும் தலைமையகத்திற்கு தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்து இருந்தனர்.
பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய சுபோத் குமார் சிங் வாகனத்தில் ஏறி தனது ஓட்டுநரிடம், முடிந்த வரை வேகமாக செல்ல பணித்திருக்கிறார்.
சம்பவ இடத்தை அவர் முதலில் வந்தடைந்துள்ளார்.
11 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்த அவர், உடனடியாக இந்த கும்பலில் புகுந்து கோபடைந்தோரை அமைதியடைய செய்ய முயன்றார்.
தன்னுடைய சகாக்களை போல குண்டு துளைக்காத ஆடையை கூட சுபோத் குமார் சிங் அணிந்திருக்கவில்லை. தன்னுடைய துப்பாக்கியையும் அவர் கையில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நேரில் பார்த்தோர் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அந்த கும்பல் கூக்கிரலிட்டு, கேபத்தின் உச்சத்தில் கற்களால் காவல் நிலையத்தை ,காவலர்களை தக்க ஆரம்பித்த போது, அதிக காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை வந்தடைந்தனர்.


"போலீசாருக்கும், கோபமடைந்திருந்த கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற அரை மணிநேரத்திற்கு மேலான காரசாரமான விவாதங்களுக்கு பின் கற்கள்,வாள்களால் தாக்க ஆரம்பித்தது கலவர கும்பல் இதனால்  துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டது என்று இந்த காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் இடைநிலை பள்ளியில் வேலை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்தார்.

செல்பேசி இல்லாததால் பெண்களுக்கான கழிவறையில் அவர் பல மணிநேரம் அடைந்து கிடந்துள்ளார்.
நாட்டுப்புறத்து துப்பாக்கிகளை கொண்டிருந்த அந்த பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல், காவல்துறையினர் மீது சுடத் தொடங்கினர்.


ஆனால்   சுபோத் குமார் சிங் கை  பழிவாங்கும் நோக்குடன் இருந்த கும்பல் சூழ்ந்து கொண்டு, அந்த பகுதியில் பசு வதை செய்யப்படுவதாக கூறப்படுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

சில மூத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இருந்த சிறியதொரு அறையில் தங்களை பூட்டிக்கொண்ட நிலையில், போராட்டக்காரர் ஒருவர் வீசிய செங்கல் அதற்கு வெளியே நின்ற சுபோத் குமார் சிங்கை தாக்கியது.

சுபோத் குமார் சிங் செங்கல்லால் தாக்கப்பட்டு, சுவருக்கு அருகில் சுயநினைவிழந்து கிடைப்பதை உணர்ந்து உடனடியாக நாங்கள் அலுவலக வாகனத்தில் அவ்விடத்திற்கு சென்றோம். பின் இருக்கையில் அவரை தூக்கி கிடத்திவிட்டு ஜீப்பை வயலை நோக்கி திருப்பினோம் என்று ஓட்டுநர் ராம் அஸ்ரெ கூறினார்.

காவல் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை  பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல் ஆயுதங்களுடன் பின்தொடர்ந்து வந்ததாகவும், அந்த  வயலில் அவர்கள் இன்னொரு துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாகவும் அக்கிராமத்தினர் கூறுகின்றனர்.
அந்த வயலில் சமீபத்தில்தான் சீர்திருத்த வேலைகள் நடைபெற்றிருந்ததால், வாகனத்தின் முன்பக்க சக்கரங்கள் புதைந்தன. எங்களுடைய வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள ஓடுவதை தவிர வேறுவழி இருக்கவில்லை என்று ராம் அஸ்ரெ திங்கள்கிழமை மாலையில் காவல்துறையினரிடம் கூறினார்.
இயக்கமே இல்லாமல் கிடந்த காவல்துறை அதிகாரி, அவரது அலுவலக காரில் கிடப்பதையும், கோபமாக இருந்த கும்பல் அவர் இறந்து விட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கேள்வி கேட்பது போல பின்னணியில் ஒலியும் இருந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது.

அவர் தாக்குதலில் இறந்ததாக அரசு முதலில் தெரிவித்து.
ஆனால் அவரது இடது புருவத்திற்கு மேல் துப்பாக்கி குண்டு துளைத்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைமூலம் தெரியவந்த பின்னரே இந்துத்துவா பசு காப்பு கும்பல் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.

ஆனால், அது எவ்வளவு ஆழம் சென்றது என்று அரசு தெரிவிக்கவில்லை.
அவரது துப்பாக்கியை பறித்து, யாரவது அவரை சுட்டிருக்கலாம் என்றுஅரசு தெரிவிக்கிறது.ஆனால் அவர் துப்பாக்கி எடுத்துவர வில்லை,குண்டு துளைக்காத சட்டையை அவர் மற்ற காவலர்கள் போல் அணியவில்லை என்றும் அவரின் கார் ஓட்டுநர் உறுதியாக தெரிவிக்கிறார்.காவல் நிலையத்தில் வைத்திருந்த அவரது 3 செல்பேசிகளையும், .32 துப்பாக்கியும் காணவில்லை.மாயமாக மறைந்துள்ளது.

அருகிலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள், அவர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


2015ம் ஆண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முகமது அக்லாக் என்பவர் இந்தியாவில் நடைபெற்ற இந்துத்துவா பசு காப்பு கும்பல் கொலையின் முதல் வழக்கை விசாரித்த முதல் அதிகாரி இவர்தான்.
அதில்  சங் பரிவார் கும்பல் பொய் கூறி கொலை செய்ததாக சுபோத் சிங் அறிக்கை வெளியிட்டு குற்றவாளிகளை சிறையில் தள்ளினார்.

அந்த கோபத்திலேயே சுபோத்த்தை இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு கலவரம் உண்டாக்கி கொலை செய்துள்ளது தெரிய வருகிறது.

தத்ரி என்ற இடத்தில் முகமது அக்லாக் கொல்லப்பட்ட இடம் சுபோத் கொல்லப்பட்ட வயலில் இருந்து வெகுதொலைவில் இல்லை.

அந்த போராட்டக் கூட்டத்தில் இருந்த இளைஞர் சுமித்தும் சுடப்பட்டு இறந்துள்ளார்.இவர் தனது நண்பரை பேருந்து நிலையத்திற்கு வழியனுப்ப சென்றவர்.
 அவரும் மெர்ருட் நகர மருத்துவமனையில் இறந்துள்ளார்.

இந்த பகுதியில் தோன்றிய எதிர்பாராத, அறிவிக்கப்படாத வன்முறையில் இறந்த இரண்டாவது நபர் இவர்.
சுபோத் குமார் சிங்கின் இறப்பை பொறுத்தவரை, பசு வதை என்று கூறி போராட்டம் நடத்தி கொலை செய்தது பஜ்ரங் தல் ,சிவசேனா,சங் பரிவார் கும்பல்ஆள்வோரால் வளர்த்து விடுவதையே காட்டுகிறது.

கும்பலாக சென்று கலவரம் செய்து கள்ளத்துப்பாக்கியால் கொலைகளை செய்தால் குற்றவாளி தப்பிக்க வைக்கலாம் என்று எண்ணத்திலேயே இவ்வாறு நடந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 ====================================================
 ஜிசாட்-11 செயற்கைக்கோள் 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ.

இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.
இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.

பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

 செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


 

👉 அப்பட்டமாக தெரியும் இந்திய வரலாற்றிலேயே அதுவும் நாட்டின் பாதுகாப்பு துறையில் 1,60,000 கோடி ஊழல்(rafale) 1,60,000 கோடி.

👉பல்லாயிரக்கணக்காண கோடி உழலான நாட்டின் வங்கி துறையில் ஊழல் (PNB Scam)

👉பல உயிர்களைக்கொன்று நூற்றுகணக்கான கோடியை சுருட்டி மருத்துவத்துறையில் ஊழல் (வியாபம்).

👉பல்லாயிரக்கணக்காண கோடியை சுருட்டி மின்சாரத்துறையில் ஊழல் (Adani Power Scam).

👉 நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி பணமதிப்பிழப்பு என்ற பெயரில் அமித் ஷாஹ் மட்டும் சுருட்டிய தொகை 700+ கோடி.

👉இந்த நான்கு வருடங்களில் மட்டும் அமித் ஷாஹ்வின் மகன் ஜே ஷாஹ்வின் வருமானம் 16,000 தடவை அதிகமாகி இருக்கிறது. 16000 தடவை !


இப்படி மொத்தம் சரியாக 27 ஊழல் இந்த மோடியின் ஆட்சியில்.
👉ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி !

👉வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு !

இப்போ இது மேட்டர் இல்ல....


சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்... 2014 தேர்தலுக்கு வெறும் 6 மாதங்கள் இருந்தபொழுது சோசியல் மீடியாவில் ஊழலுக்கு எதிராக தையத்தக்க என்றும் நாடே அழிந்துவிட போகும் நிலையில் இருக்கிறது என்றும் யாரெல்லாம் குதித்தார்கள் என்று நினைவு இருக்கிறதா ?

குறிப்பாக NRIகள் அதுவும் மிக குறிப்பாக ப்ராஹ்மண NRIக்கள்... இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் ? என்ன வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ?
இவர்களின் அமைதி எதை குறிக்கிறது ?

இந்த நான்கரை ஆண்டுகள் வெறும் ஊழல்மட்டும் பிரச்சனை அல்ல...
RBIல் தொடங்கி சுப்ரீம் கோர்ட், CBI வரை நடுத்தெருவில் வந்து நிற்கிறது...
அதே நடுத்தெருவில் சாதாரண எளிய மனிதர்கள் கட்டி வைத்து அடித்தும், உயிரோடு எரித்தும், கூட்டமாக மிதித்தும் கொல்லப்படுகிறார்கள், அவர்களை கொன்ற கொலைகாரர்கள் இதை youtubeயிலும் பதிவேற்றுகிறார்கள்..

அந்த ஊழல் ஒழிப்பு போராளிகள் குறிப்பாக NRIக்கள்... இப்போது எங்கு இருக்கிறார்கள் ?
இப்போ புரிகிறதா ? ஊழலெல்லாம் இந்த வெறிநாய்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது...
ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் முழுக்க முழுக்க ஓர் ரத்த வெறி பிடித்த மதவெறி/ஜாதிவெறி ஆட்சியை அமைப்பதுதான் இந்த வெறிநாய்களின் முழுநேர வேலை அதைத்தான் அந்த வெறிநாய்கள் வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.  

அதற்கு இங்கு பல பேர் பலியானார்கள்...
முடிந்தால் அந்த வெறிநாய்களை டேக் செய்து கேள்வி எழுப்புங்கள்.. குலைக்குதான்னு பாப்போம்.
'அது எப்படி நாயுன்னு சொல்லலாம் நீங்க'ன்ணு கேட்டா...
நான் நாய்யுன்னு சொல்லவே இல்லையே... நல்ல பாரு ...
வெறி நாய்யுன்னு தான சொல்லிருக்கேன்.
நீ ஏன் வெறிநாயே டென்ஷன் ஆகுற ?
                                                                                                        -Thameem Tantra

திங்கள், 3 டிசம்பர், 2018

இந்தியாவின் வாரன் ஆண்டர்சன் , அணில் அகர்வால்


ராஜிவ் காந்தி வழியில் நரேந்திர மோடி.?

பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் ஆட்சியில் இருந்தது. போ​பால் யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தி​லி​ருந்து விஷ​வாயு கசிந்​த​தால் 20,000க்​கும் மேற்​பட்​டோர் பலி​யா​யி​னர்.​ 
இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட வாரன் ஆண்​டர்​சன் சில மணி நேரங்​க​ளில் விடு​விக்​கப்​பட்​டார்.​ 
இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கும் தப்பிவிட்டார்.
 அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் 1984ம் ஆண்டில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத்​துறை இயக்​கு​ந​ராக இருந்த ஆர்.எஸ்.​ சோதி,​​ தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:​-

"1984ம் ஆண்டு டிசம்​பர் 2, 3ம் தேதி​க​ளில் விஷ​வாயு கசிவு சம்​ப​வம் நடந்​தது.​

அதன் பின்​னர் 7ம் தேதி ஆன்​டர்​சன் கைது செய்​யப்​பட்​டார்.​

ஆனால் கைது செய்​யப்​பட்ட சில மணி நேரங்​க​ளில் அவர் விடு​விக்​கப்​பட்​டார்.​

வாரன் ஆன்​டர்​சனை
 போபாலி​லி​ருந்து டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு அப்போ​தைய முதல்​வர் அர்​ஜுன் சிங் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து எனக்கு உத்​த​ரவு வந்​தது.​

இ​தைத் தொடர்ந்து அவ​ருக்​காக போபால் விமான நிலை​யத்​தில் மத்​திய பிர​தேச முதல்​வ​ரின் அதி​கா​ரப்​பூர்வ அரசு விமா​னம் தயா​ராக வைக்​கப்​பட்​டது.​ அவ​ரு​டன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்​த​னர்.
​ இ​தை​ய​டுத்து தயா​ராக இருந்த விமா​னத்​தில் ஆன்​டர்​சன் ஏறி டெல்லி சென்​றார்.​

 விமா​னத்​தில் அவ​ரு​டன் வேறு யாரும் செல்​ல​வில்லை.​ கேப்​டன் எஸ்.எச்.​ அலி விமா​னத்தை ஓட்​டிச் சென்​றார்.​ ஆனால் விமா​னத்​தில் யார் இருக்​கி​றார்​கள் என்ற தக​வல் கேப்​டன் அலிக்கே தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ அது மிக மிக ரக​சி​ய​மா​கவே வைக்​கப்​பட்​டி​ருந்​தது என்​று கூறியுள்ளார்.

இது குறித்து விமான கேப்​டன் அலி கூறுகையில், விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருக்​கு​மாறு எனக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டது.​ இதை​ய​டுத்து ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கவே விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருந்​தேன்.​ வந்​த​வர் யார் என்​பதை என்​னி​டம் தெரி​விக்​க​வில்லை.​
 அதை ரக​சி​ய​மாக வைத்​தி​ருந்​த​னர்.​
1 மணி நேரம் 35 நிமி​டங்கள் பறந்து டெல்​லி​யில் தரையிறங்​கி​னோம்.​ விமா​னத்தி​லி​ருந்து அந்த நபர் இறங்​கி​ய​தும்,​​ ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்​துச் சென்​றார்.​
விமா​னத்​தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்​பட்​டார் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அலி அளித்த பதில்களும்: 
கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?
 பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர், எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.

கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்? 
பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.

 கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்? 
பதில்: ஒரே ஒருவர் மட்டுமே... அவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.
 கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?
பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது .

 மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:
இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.
 ஜெயில் சிங்கை சந்தித்த ஆண்டர்சன்: இந் நிலையில் ஆண்டர்சென் அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்காவுக்கு சென்ற அவர் தலைமறைவாகிவிட்டார்.

உளவுப் பிரிவுகள் 'ஆபரேஷன்'?: 
ஆண்டர்சனை தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வருவது, அவரை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பது, நாட்டை விட்டே தப்ப வைப்பது போன்ற செயல்களை மாநில அரசு மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை. இதை மத்திய உளவுப் பிரிவுகள் தான் ஒருங்கிணைத்து செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரை பத்திரமாக தப்ப விட்டதே அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது. 
 ஆன்​டர்​சனை டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு முதல்​வர் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து உத்​த​ர​வி​டப்​பட்​டது தொடர்​பாக அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வரான அர்​ஜுன் சிங் கடைசி வரை வாயே திறக்கவில்லை .
  அவர் தனது மெளனத்தைக் கலைக்கவேண்டும் என்று அப்போது பாஜக வற்புறுத்தி போராடியது . இன்று அதுதான் தூத்துக்குடி மக்களை கொன்று குவிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல் படுகிறது.

இது குறி்த்து மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் செளஹான் கூறுகையில், யூனி​யன் கார்​பைடு ஆலை​யின் முன்னாள் தலை​வர் வாரன் ஆன்​டர்​சனை விடு​தலை செய்​த​தின் பின்​ன​ணி​யில் உள்ள முக்​கி​யப் பிர​மு​கர் யார் என்​பதை நாட்டு மக்​க​ளுக்கு முன்​னாள் முதல்​வர் அர்​ஜுன் சிங்​கி தெரி​விக்க வேண்​டும். 
ஆன்​டர்​சனை விடு​தலை செய்​யத் தூண்​டி​யது யார் என்​பதை அறிய போபால் நகர மக்​க​ளும்,​​ மத்​திய பிர​தேச மக்​க​ளும் காத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இது​கு​றித்து அறிய அவர்​க​ளுக்கு உரிமை உள்​ளது.​ உண்​மையை நீண்ட நாட்​க​ளுக்கு மறைக்க முடி​யாது என்றார்.
 மத்திய பிரதேச அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ஆன்டர்சன் விவகாரத்தில் அர்ஜுன் சிங் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. 
எனவே அர்ஜுன் சிங் தனது மெளனத்தைக் கலைத்துவிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டிலிருந்து ஆன்டர்சன் வெளியேற மத்தியப் பிரதேச அரசு உதவியதா என்பதை அறிய உலகமே ஆவலாக உள்ளது. எனவே இதுதொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அர்ஜுன் சிங் போக்க வேண்டும் என்றார். 
சோனியாவுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு: இந் நிலையில் அர்ஜூன் சி்ங் திடீரென நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் அர்ஜூன் சிங் ஏதும் பேசிவிடாமல் இருக்க காங்கிரஸ் தலைமை முயல்கிறதோ என்னவோ.
 இந் நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, போபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவேதனையளிப்பதாகவே இந்திய மக்கள் உணர்ந்தனர்.
 நீதித்துறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்பது தான் இன்றுவரை போபால் மக்களுக்குமட்டுமல்ல,இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம்.போபால் விஷவாயு கசிவு இந்திய மக்களின் மனதி நீங்கா வடு. 
யூனியன் கார்பைடு வழியில் ஸ்டெர்லைட்.!

வரலாறு திரும்புவது போல் இன்று ஸ்டெர்லைட் மக்கள் உயிரை காவு வாங்க காத்திருக்கிறது.


 ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேட்டினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்
ஆலையில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றிலும் இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
மார்ச் 30 2013 ல் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்
அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.
2013 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

அதை இயக்கவைக்க ஆளும் பாஜக அரசும்,அதே நீதித்துறையும் பாடுபடுகிறது.
கேட்டால் தொழில் வளர்ச்சி ,இந்திய வளர்ச்சி என்று கதைக்கிறது.
ஸ்டெர்லைட்டை மூடியது நீதி இல்லை என்கிற தரும் அகர்வால்,பசுமைத்தீர்ப்பாயம் , ஸ்டெர்லைட் மக்களை தனது நாசகார செயல்பாடு  மூலம் கொன்று குவிப்பது நீதிதான் என்கிறதா?

இதுவரை மக்கள் நல்வாழ்வுக்காத்தான் சட்டம்-ஒழுங்கு,நீதித்துறை என்ற எண்ணத்தில் இந்திய மக்கள் வாழ்ந்தது தவறு என்கிறது அரசு,நீதித்துறைகள் .
 பாஜகவின் மோடி தயவால் இந்தியாவின் யூனியன் கார்பைடு வாரன் ஆண்டர்சனாக உருவாக்கியுள்ளார் ஸ்டெர்லைட் அணில் அகர்வால்


புதன், 28 நவம்பர், 2018

அகர்வால்களின் ஆய்(வு) அறிக்கை

 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது.
உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. ஆனால் அகர்வாள்களால் அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயக்குழு அறிக்கை மக்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும்,அது தங்கியுள்ள பசுமை க்கும் எதிரானது.

இதுவரை இந்தியா முழுக்க சுற்றுசுசுழல்,இயற்கை வழங்களைப்பதுக்காக்க அமைக்கப்பட்ட   பசுமை தீர்ப்பாயம் அறிக்கை,தீர்ப்பு என்பது நாசகார ஆலைகளுக்கு,முதலாளிகளுக்கும் மட்டுமே ஆதரவாகவுள்ளது.
எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி இயற்கை வளத்தை அழிக்கும்,சுற்று சுழலுக்கு கேட்டுவிளைவித்து காற்றையும்,நிலத்தடி நீரை விஷமாகும் ஆலைகளுக்கு அதன் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது.
ஒரு தீர்ப்பு கூட  வாழ்வதற்காகப்போராடும் மக்களுக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்ததாக வரலாறே இல்லை.
பின் எதற்கு இந்த பசுமைத் தீர்ப்பாயம் ?

போராடும் மக்களை அவர்களின் போராட்டக்குணம் நீர்த்துப்போகவும் மக்களை திசை திருப்பி விரக்தி மனப்பான்மைக்குத்தள்ளவுமே இந்த தீர்ப்பாயம் கார்ப்பரேட் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்டெர்லை அலை முதல் நீதிக்கு எதிரானது என்று வாய்க்கிழிய தீர்ப்பில் முழங்கியுள்ள கண்டித்துள்ள அணில் அகர்வால் நண்பர்  தருண் அகர்வால் "ஸ்டெர்லைட் ஆலை தனக்கு ஆணையிடப்பட்ட பசுமை வேலி ,கொதிகலன் மாசு வடிகட்டி,கழிவுகளை அப்பறப்படுத்தும் வழிகள்,தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் விதிகளை மீறி இயங்கியதையோ,மாத்தி வாங்கும் முன்னரே நாசகார ஆலையையும்,அதன் விரிவாக்கத்தையும் இயக்கியதை கண்டித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்க வில்லை.
மக்கள் விரோத முதலாளித்துவ (அகர்)வால்கள் .

ஆளை இயங்கலாம் என்ற தீர்ப்பில் அது விதிகள் படி ஏற்பாடுகளை செய்தபின்னர் இயங்கலாம் என்ற ஒரு அறிவுரையை கூட தருண் அகர்வால்,அணில் அகர்வாலுக்கு கொடுக்கவில்லை.


நீதி மீறப்பட்டுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் தருண் அகர்வால் ,தனது நீதி என்பதற்க்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.


மக்களுக்கு நன்மை உண்டாக்குவது நீதியா ,மக்கள் அழிந்தாலும் சரி எனது நாசகார ஆலையை இயக்கி கப்பல்,கப்பலாக பணத்தைக்கொள்ளையடிப்பேன் என்கினற தனி முதலாளி,

அதுவும் தஸ்ஒருசாலை ராபத்தி வரவு-செலவுகளை வரி ஏய்ப்பு செய்கினறவனுக்கு மேலும் செய்கினற நன்மை நீதியா?
இதை அணிலாகர்வால்,அம்பானிகள்,மோதிகள்,அதானிகள் உறவின் முறை குஜராத்தியும்  ,நரேந்திர மோடியால் ஸ்டெர்லைட்  ஆய்வுக்காக அந்தநேரம் பசுமைத் தீர்ப்பாய ஆணையராக நியமிக்கப்பட்டவருமான தருண் அகர்வால் தெளிவுபடுத்துவாரா?

அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூடுவதற்கு தீர்மா னித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

 சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது .
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மாநிலங்களவையில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம்மேற்கொண்ட ஆய்வில் நிலத்தடி நீர் மாசுபட்டுஇருப்பதும், ஈயம், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு , அர்சினிக் ஆகியவை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதுஉறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் தலைமையிலான குழு தமிழக அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் ஆலையைமூடியது இயற்கை நீதிக்கு மாறானது என கூறியிருக்கிறது.

முறையாக அனுமதி பெற்று இயங்கும் ஒரு நிறுவனத்தை மூட வேண்டும் என்றால்நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது இயற்கைநீதி. ஆனால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தையே புதுப்பிக்க அரசு மறுத்துவிட்ட நிலையிலும் ஆலை இயங்கி வந்தது.
அந்தநிலையில்தானே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீலிட்டது.


அது எப்படிஇயற்கை நீதிக்கு முரணாகும்.
 நீதிபதி தருண் அகர்வால் குழுவின் வாதம்தான் இயற்கை நீதிக்கு மாறானதாக இருக்கிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் குழுவின் அறிக்கை, ஆலையைமீண்டும் திறக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய்,தோல் வியாதிகள்,சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை,அரசே ஆலையி சுர்ருலுமுள்ள நிலத்தடி நீர் குடிக்க முடியாத நிலையில் ரசாயனக்கலப்பு ள்ளது என்று அறிக்கை கொடுத்துள்ளது,எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆண்டுகளாக மக்கள் ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பு போராட்டம் நடத்துவது,உச்சக்கட்டமாக 13 பேர்கள் ஆளை நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை சுட்டுக்கொன்றது போன்ற எதையுமே ஆய்வில் எட்த்துக்கொள்ளப்படவே இல்லை.முற்றிலும் ஸ்டெர்லைட்டை இயக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.அதற்க்கு அவர்கள் பயன்படுத்திய சொற்கள் அனைத்துமே மக்கள் விரோதமானதுதான்.


இது எப்படி ஆய்வறிக்கையாக இருக்க முடியும்?

இது முழுக்க முழுக்க ஒரு சார்பான அறிக்கையாகத்தானே இருக்க முடியும்.


தருண் அகர்வால் அறிக்கையை விடதேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி கோயலின் நிலைப்பாடு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.


தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்ஆய்வுக் குழுவில் இடம்பெற்றால் தமிழகத்திற்கு சாதகமாக ஆய்வு 

இருக்கும் என்ற வாதத்தை ஏற்று ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதியை இணைக்க மறுத்தது நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் செயல். 

அது மட்டுமல்ல அக்குழுவுக்கு  ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வால் மாநிலமான குஜராத்தை சேர்ந்த அவர் இனத்தைச் சேர்ந்த தருண் அகர்வால் என்றவரை தலைவராகவும் நியமித்தது 

இக்குழுவின் அறிக்கையை முன்னரே தமிழக மக்களுக்கு வெளிகாட்டிவிட்ட அநியாயம்.
இவர்கள்தான் வாய்கிழிய நியாயத்தைப்பேசுகிறார்கள்.
 
தற்போது ஆய்வுக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லியிருப்பது அதைவிட மோசம்.
.

இது ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு வெளிப்படையாக ,ஆதரவாக தருண் அகர்வால் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதரவு அறிக்கையே அன்றி ஆய்வறிக்கையல்ல.
எனவே இதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

'நாங்களும் காமெடி செய்வோம்'

மனிதர்களை புகைப்படம் எடுக்கையில் சிலர் செய்யும் செயல்கள் நகையாக இருக்கும்.அவற்றுக்கு சளைக்காமல் சில மிருகங்களை படம் எடுக்கையில் செய்த சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது.
அப்படி சில.

 Two embraced lizardsA rhino with peacock feathers behind it 
   Squirrel holding on to plants with its feet
 Bear holding a paw against its face

Polar bear looking at a camera on a tripod

 

Shocked squirrel 
 நன்றி:பிபிசி .


செவ்வாய், 27 நவம்பர், 2018

வரலாறு படைத்த ஐராவதம் மகாதேவன்

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் ஐராவதம். 

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பர்மாவில் அவர் பணியாற்றியபோது அவரது குடும்பமும் அங்கேதான் இருந்தது. 
அப்போது 1930ல் பிறந்தவர் மகாதேவன்.

சில ஆண்டுகளில் குடும்பம் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பு, திருச்சியில் பள்ளிப்படிப்பை முடித்த மகாதேவன் சென்னையில் விவேகானந்தா கல்லூரியில்இணைந்து இளங்கலை வேதியல் பட்டம் பெற்றார்.
 பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று சட்டஅறிஞரானார். 

அதன் பின் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றிபெற்று, 1953ல் அவ்வாண்டின் தமிழ்நாட்டுக் குழுவைச் சேர்ந்த இஆப அதிகாரியாக அறிவிக்கப் பட்டார். 

மத்திய அளவிலும் மாநிலத்திலும் கடமைப் பொறுப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகச் செயலாற்றினார். 

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறையில் ஒரு அதிகாரியாக 1958 முதல் 1961 வரையில் பணியாற்றிய போது அவருக்கு, அலுவலகத்திற்கு அருகில் இருந்த இந்திய அருங்காட்சியகத்திற்கு அடிக்கடி சென்றார்.
 அங்கிருந்த தொன்மை சார் தகவல்களும் தடயங்களும் அவரை ஈர்த்தன. 

அதன் தலைமைக் காப்பாளராக இருந்தகல்வெட்டு ஆய்வாளர் சி. சிவராமமூர்த்தி அவரது ஆர்வத்தைக் கண்டு, தென்னிந்திய எழுத்தியல் வரலாறுபற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவித்தார்.

பின்னர், அதிகாரம் மிக்க ஆட்சிப் பணி பொறுப்பி லிருந்து 1980ல் தன் விருப்ப ஓய்வு பெற்றார் ஐராவதம் மகாதேவன். நெடுங்கால லட்சியமான எழுத்தியல் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இவ்வாறு பதவி விலகினார்.

1987ல் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. 
அவரது பன்முகக் கல்வியறிவும் சமூக அக்கறையும் தமிழ் நாட்டமும் இதழியல் பணியை நான்காண்டு காலம் சிறப்பாக நிறைவேற்றத் துணையாக அமைந்தன.

 தினமணியில் அதுவரையில் இருந்த எழுத்து நடையில் நல்ல தமிழ்ச்சொற்களைக் கொண்டுவரச் செய்ததில் அவர் காட்டிய ஈடுபாடு பிற பத்திரிகைகளுக்கும் ஒரு ஈர்ப்பாக அமைந்தது என்றால் மிகையில்லை. பத்திரிகைப் பணிக்குப் பிறகு தனது ஆராய்ச்சிகளிலேயே முழுமையாக ஈடுபட்டார். 

அவரது ஆயுளின் பிந்தைய முப்பதாண்டு காலம் இந்திய எழுத்தியல் தொன்மைகள் பற்றிய அர்ப்பணிப்பு மிக்க ஆராய்ச்சிகளிலேயே கடந்தன. 


 உலக அளவில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துப் படிவங்கள் பற்றி ஆராய்ந்து புகழ்பெற்ற சிலரது வரிசையில் மகாதேவனும் இடம்பெற்றார், நுட்பமான, கடுமையான உழைப்பின் அடிப்படையில் அன்றைய அந்த எழுத்துரு திராவிட எழுத்துருவே என்று நிறுவினார்.

இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் நிதியுதவியோடு நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர் ஆக்கிய‘சிந்து பதிவுகள் – எழுத்தாக்கங்கள், பொருளாக்கங்கள், பட்டியல்கள்’ என்ற நூல் விரிவான ஆராய்ச்சிகளுக்குத் தூண்டுகோலாக அமைந்தது என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள். 
இந்தியத் தொல்லியல் துறை 1977ல் அந்தப் புத்தகத்தை வெளியிட்டது. 

அவருடைய கட்டுரைகள் வாய்மொழி வழியிலான ரிக் வேதப் பதிவுகளுக்கும் எழுத்துப்பூர்வமான சிந்துசமவெளி பதிவுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது சாமானியமான பணியல்ல. 


குறிப்பாக அவர், அறிவியல் கண்ணோட்டத்தோடு வரலாற்றை அணுகிய இந்தியாவின் ரொமிலா தாப்பர், பின்லாந்து நாட்டின் அஸ்கோ பார்ப்போலோ போன்ற முன்னணி ஆய்வாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்கினார்.

தமிழ் எழுத்து, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மையை நிறுவிட முயலும் சக்திகளுக்கு அவரது ஆராய்ச்சிகள் பெருந்துணையாக அமைந்துள்ளன என்று இளம் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அவர் ‘பண்டைய தமிழ் எழுத்தியல்’ பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

 2003ல் அந்த நூல் வெளியிடப்பட்டது. 

பின்னர் 2014ல் மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனம் அதனை மறுவெளியீடு செய்தது. 
கரூர் அருகில் உள்ள புகளூர் பகுதியில் கிடைத்த தமிழ் பிரம்மி எழுத்துகள் பற்றிய அவரது ஆய்வு சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுகளில் புதிய ஆர்வத்தைத் தூண்டியது என்கிறார் மூத்த எழுத்திய லாளர் முனைவர் நாகசாமி. 

மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் எழுத்துரு தொடர்பான ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டார். 
1961ல் வர லாற்றாய்வாளர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவர் சில. குகைகளில் உள்ள எழுத்துகள் பற்றிக்கூறியதுதான் தனக்கு இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தைக் கொடுத்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் ஐராவதம் மகாதேவன்.

 எழுத்தியல் போலவே அவர் பண்டைய நாணயங்கள் பற்றிய ஆராய்ச்சியிலும் அக்கறை காட்டினார். 
அதே அளவுக்கு ஆராய்ச்சியும் முக்கியமானது என்று இந்திய தொல்லியல் துறை முன்னாள் கண்காணிப்பாளரும், ஊரகக் கல்வி மற்றும் மரபுப் பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான டி.சத்தியமூர்த்தி கூறுகிறார்.
இத்தகைய பணிகள் அவருக்கு 1970ல் ஜவஹர்லால் நேரு ஃபெல்லோஷிப் விருதையும், 1992ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஃபெல்லோஷிப் விருதையும், 2009ல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுத்தந்தன. 
1998ல் அவர் இந்திய எழுத்தியல் அமைப்பின் மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2001ல் இந்திய வரலாற்று பேராயத்தின் பொதுத் தலைவரானார்.

தமிழ் பிரம்மி குறிப்புகள் தொகுப்பு (1966), அகம் புறம்– சிந்து எழுத்துரு அறிகுறிகள் (2010), ரிக் வேத வழி சிந்து பதிவுகளுக்கான திராவிட ஆதாரம் (2014) ஆகிய நூல்களும் அவரது முக்கியப் பங்களிப்புகளாகும்.
                                                                                                                                                                                                                                                   -அ.குமரேசன்

இதுதான் ஆன்மிக அரசியலா

ரஜினிகாந்துக்கு வயது  69 ஆகிறது.  இந்த வயதில் நடிகர் அமிதாப்பச்சனெல்லாம் தாத்தா வேடம் ஏற்ற நிலையில், இன்றும்இளம் நடிகைகளை கட்டிப்பிடித்த...