bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

ஞாநி

பிரபல எழுத்தாளர் ஞாநி  சங்கரன் உடல் நல குறைவால் காலமானார்.

சிறந்த எழுத்தாளர் ஞாநி சங்கரன். பத்திரிகையாளர், நாடகஆசிரியர் , என பன்முகதன்மை கொண்டவாராக திகழ்ந்தார்.முரசொலி,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார்.தினமணி நாளிதழ் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனந்த விகடனின் ஜூயூனியர் போஸ்ட்,சுட்டி விகடன்,தினமலர் பட்டம்,போன்றவை இவரது தயாரிப்புகள்தான்.
அலைகள்,தீம்தரிகிட போன்ற இதழ்களையும் நடத்தியுள்ளார்.
இவரின் பரிட்ஷா நாடகக்குழுவின் "பலூன்"நாடகம் மிகப் பரபரப்பான அதிர்வலைகளை உண்டாக்கியது.இடதுசாரி,பகுத்தறிவு சார்ந்தே இவரது எண்ணங்கள் வடிவுறும்.
“கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம்” என்று 35 வருடங்களுக்கு முன்பே  கணித்திருக்கிறார்.  எழுத்தாளர் ஞாநி.
அவர் எழுதியிருக்கும் முகநூல் பதிவு:
 “கமல் அரசியலுக்கு வரக் கூடும் என்பது 35 வருடங்கள் முன்னர் தீம்தரிகிட இதழுக்கு நான் அவரிடம் பேட்டி எடுத்தபோதே தோன்றியது.
( அந்த பேட்டி அன்னம் வெளியிட்டுள்ள என் கேள்விகள் தொகுப்பில் உள்ளது.) கமலுடன்பேசிய ஒரு மேடையில் நான் கமல் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று இப்போது சொன்னாலும் பின்னால் வரும் வாய்ப்பு உள்ளது என்று 30 வருடங்கள் முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அண்மையில் 6 மாதங்கள் முன்னர் கூட ரஜினியை விட கமல் அரசியலுக்கு வரும் வாய்ப்பே அதிகம் என்று புதிய தலைமுறை டிவி விவாதத்தில் சொன்னேன். 
இப்போதும் அவர் வராமல் போகலாம். 
எனினும் வரும் வாய்ப்பும் தேவையும் இருப்பதாகவே இன்னமும் தோன்றுகிறது!”
இவரது "ஓ "பக்கங்கள் எல்லா வகை நாட்டு நடப்புகளையும் அலசி எழுதப்பட்டவை.சிலரைப்போல் இவரது கட்டுரைகளில் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலையுடன் எழுதப்படுவது ஞாநி யின் நம்பகத்தன்மையை அதிகரித்ததது.பலர் அவர் கட்டுரையை படித்து தெளிவு பெற வைத்தது.

சில வாரமாக "ஓபக்கங்கள்" என்ற யூடியுப் சானலை ஆரம்பித்து நாட்டு  நிகழ்வுகளை நேரடியாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீம்தரிகிட இனைய இதழையும் நடத்தி வந்தார்.
 கண்கள்,மீசை மட்டும் உள்ள பாரதி சின்னம் இவரே வரைந்தது.மிகவும் பிரபல்யம் .

 சில மாதமாக  சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி க்கு திடீர் முச்சுத்திணறல் ஏற்பட்டது. 
இந்நிலையில் இன்று (15.01.2018)அதிகாலை காலமானார். 
அவருக்கு வயது 63 தான் ஆகிறது .

அவரது உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. பின்னர் அவரது உடல் மருத்துவ கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

உங்களுடன் ஒரு நிமிடம்....

என்னதான் புரட்சிக் கவிஞன் பாரதியைத் துணைக்கு வைத்துக்கொண்டாலும் தமிழில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை, அனுபவங்களை, நான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை மற்றும் இந்த சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள சிரமங்களை நினைத்தால், சற்று தயக்கமாகவே உள்ளது.

ஏன்? சொல்கிறேன். நடிகனுக்கு கைத்தட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு படைப்பாளிக்கு வரும் விமரிசனங்கள். என்னவோ எழுதுகிறான் பொழுது போகாமல், எதோ படித்துவிட்டு போவோம் அப்பால் என நினைக்காமல் சில நிமிடங்களை ஒதுக்கி எனக்கு நீங்கள் தரப்போகும் Horlicks தான் உங்களுடைய விமரிசனங்கள்.

ஏதேனும் நல்ல, சுவையான விஷயங்கள் எங்கேயிருந்தாலும் தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என் ஒரு எண்ணம், இந்த விஷயத்தில் நீங்களும் எனக்கு உதவலாம்.

பாரதி, நீயே துணை. ஜெய்ஹிந்த்!                                                                                   "தீம்தரிகிட"வில் ஞாநி

கடைசி முகநூல் இடுகை.?
                                                                
துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்.

4 கருத்துகள்
 
152 முறை பகிரப்பட்டது
Dinesha Ravichandran, Karkki Vijay மற்றும் 920 பேர்

விரும்பு
                                                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...