ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஓய்வு பெற்ற
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவருகின்றனர்.
அங்குதான் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து அப்பலோ மருத்துவமனையின் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஊடகங்களுக்கு வெளியானது.
அதில், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஒட்டு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கையில்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்றால் சுயநினைவின்றி அல்லது சந்தேகத்துக்கிடமான முறையில் அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததுக்கும் அளவுக்கு அதிகமாக அரசுப்பணம் இறைக்கப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா ஒரு இட்லி தின்றார்,அல்வா சாப்பிட்டார் என்றும் அவர் சுய நினைவே இல்லாமல் இருந்து உயிர் பிரிந்தார்.
அல்லது இறந்த பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு வந்து வைத்து படம் போட்டார்கள் என்று விசாரணை ஆணையம் வைத்து உண்மைக்காக விசாரிக்கையில் அப்பலோ தந்துள்ள ஜெயலலிதா உணவுக்கான செலவு விபரம் தலை சுற்ற வைக்கிறது.
75 நாட்களுக்கு ஜெயலலிதாவின் உணவு செலவு 1கோடியே 17 லட்சம் ரூபாய்களாம்.
ஜெயலலிதா உணர்வுடன் இருந்து பத்து வேலை 5 நட்சத்திர ஓட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் கூட இவ்வளவு செலவாகுமா?
இது போல் கணக்கு காட்டத்தான் அப்போலோவில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் அகற்றப்பட்டது போல் தெரிகிறது.
லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே
வரவழைத்து சிகிச்சையளித்த செலவு 92 லட்ச ரூபாய்,
சில உயிர்காக்கும் மருந்துக்கள் வாங்கியவகைக்கு சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 29 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது.
தனி விமானத்தில் ஜெயலலிதாவை சிங்கப்பூர் கொண்டு சென்றால் கூட இவ்வளவு செலவாகாது என்பதே பல மருத்துவர்களின் கருத்து.
இன்னும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்து பரிசோதித்து,சிகிசை அளித்த செலவும் இருக்கிறது.அது தனிக்கணக்கு.இது அப்பலோ காலங்கள் கணக்கு மட்டும்.
75 நாட்கள் உணவுக்காக மட்டும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதுதான் தற்போதைய அதிரடி செய்தியாக வளம் வருகிறது.
அவரைப்பார்க்கவந்தவர்கள் சாப்பிட்டாலும் மருத்துவமனைக்குள் முக்கியத்துவர்களைத்தவிர யாரையும் விடவில்லை.
வந்தவர்களும் ஆளுநர்,பிரதமர் உட்பட அரை மணிநேரத்துக்கு மேல் தாங்கவில்லை.தண்ணீர் கூட குடித்ததாக தெரியவில்லை.
அங்கேயே இருந்தது சில அமைச்சர்கள்தான் அவர்கள்தான் ஒருகோடி 17 லட்சத்துக்கு தின்று தீர்த்தார்களா?
அவர்களானால் தங்கள் தலைவி மரணப்படுக்கையில் இருக்கையில் பச்சைத் தண்ணீரை கூட பல்லில் படவிடவில்லை என்றார்களே?
இவ்வளவு பணம் செலவிட்டு ஜெயலலிதா உயிரைக்காப்பாற்ற முடியாமல் என்ன சிக்கிசை
இவ்வளவு செலவும் ஜெயலலிதா உயிரை காப்பாற்றவா?
அல்லது உடலை பாதுகாக்கவா என்று ஐயத்திற்கும் , விமர்சனத்திற்கும் -கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.
மக்கள் நலத்திட்டங்களில்தான் புகுந்து விளையாடினார்கள் என்றால்.தங்கள் தலைவி உயிர் காக்கும் கடமையில் கூட இப்படியா என்று விமர்சிகின்றனர்.
என்ன செய்ய அவர்கள் வளர்ந்தவிதம் அப்படி!
இந்த ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்துவருகின்றனர்.
அங்குதான் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானது என்பது குறித்து அப்பலோ மருத்துவமனையின் சார்பில் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஊடகங்களுக்கு வெளியானது.
அதில், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்கு ஒட்டு மொத்தமாக ஆறு கோடியே எண்பத்து ஐந்து லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருக்கையில்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்றால் சுயநினைவின்றி அல்லது சந்தேகத்துக்கிடமான முறையில் அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததுக்கும் அளவுக்கு அதிகமாக அரசுப்பணம் இறைக்கப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது.
ஜெயலலிதா ஒரு இட்லி தின்றார்,அல்வா சாப்பிட்டார் என்றும் அவர் சுய நினைவே இல்லாமல் இருந்து உயிர் பிரிந்தார்.
அல்லது இறந்த பின்னரே மருத்துவமனைக்கு கொண்டு வந்து வைத்து படம் போட்டார்கள் என்று விசாரணை ஆணையம் வைத்து உண்மைக்காக விசாரிக்கையில் அப்பலோ தந்துள்ள ஜெயலலிதா உணவுக்கான செலவு விபரம் தலை சுற்ற வைக்கிறது.
75 நாட்களுக்கு ஜெயலலிதாவின் உணவு செலவு 1கோடியே 17 லட்சம் ரூபாய்களாம்.
ரிச்சர்ட் பீலே ஜெ 'உடலம் |
இது போல் கணக்கு காட்டத்தான் அப்போலோவில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் அகற்றப்பட்டது போல் தெரிகிறது.
அதுமட்டுமின்றி ஜெயலலிதா உடல்
நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு மட்டும் ஆறு கோடியே எண்பத்து ஐந்து
லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாக அப்பலோ தெரிவித்திருக்கிறது.
இதில்
இன்னும் 44 லட்ச ரூபாய் வராமல் பாக்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக காசோலை மூலம் 41 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும் ,
இரண்டாவது
கட்டமாக அவரது மறைவுக்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம்
தேதி ஆறு கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என்றும்
பாக்கி 44 லட்சத்து 56
ஆயிரம் ரூபாய் இன்னும் தரப்படவே இல்லை என்றும் அப்பலோ சார்பில் கூறப்பட்டுள்ளது.
சில உயிர்காக்கும் மருந்துக்கள் வாங்கியவகைக்கு சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஒரு கோடியே 29 லட்ச ரூபாயும் செலுத்தப்பட்டிருக்கிறது.
தனி விமானத்தில் ஜெயலலிதாவை சிங்கப்பூர் கொண்டு சென்றால் கூட இவ்வளவு செலவாகாது என்பதே பல மருத்துவர்களின் கருத்து.
இன்னும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வந்து பரிசோதித்து,சிகிசை அளித்த செலவும் இருக்கிறது.அது தனிக்கணக்கு.இது அப்பலோ காலங்கள் கணக்கு மட்டும்.
75 நாட்கள் உணவுக்காக மட்டும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதுதான் தற்போதைய அதிரடி செய்தியாக வளம் வருகிறது.
அவரைப்பார்க்கவந்தவர்கள் சாப்பிட்டாலும் மருத்துவமனைக்குள் முக்கியத்துவர்களைத்தவிர யாரையும் விடவில்லை.
வந்தவர்களும் ஆளுநர்,பிரதமர் உட்பட அரை மணிநேரத்துக்கு மேல் தாங்கவில்லை.தண்ணீர் கூட குடித்ததாக தெரியவில்லை.
அங்கேயே இருந்தது சில அமைச்சர்கள்தான் அவர்கள்தான் ஒருகோடி 17 லட்சத்துக்கு தின்று தீர்த்தார்களா?
அவர்களானால் தங்கள் தலைவி மரணப்படுக்கையில் இருக்கையில் பச்சைத் தண்ணீரை கூட பல்லில் படவிடவில்லை என்றார்களே?
இவ்வளவு பணம் செலவிட்டு ஜெயலலிதா உயிரைக்காப்பாற்ற முடியாமல் என்ன சிக்கிசை
இவ்வளவு செலவும் ஜெயலலிதா உயிரை காப்பாற்றவா?
அல்லது உடலை பாதுகாக்கவா என்று ஐயத்திற்கும் , விமர்சனத்திற்கும் -கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது.
மக்கள் நலத்திட்டங்களில்தான் புகுந்து விளையாடினார்கள் என்றால்.தங்கள் தலைவி உயிர் காக்கும் கடமையில் கூட இப்படியா என்று விமர்சிகின்றனர்.
என்ன செய்ய அவர்கள் வளர்ந்தவிதம் அப்படி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக