bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 16 ஏப்ரல், 2011

கணணியில் இணைய இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.

பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர்.

இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இணைய இணைப்பையும் பல கணணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.

Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இணைய இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம்.

இதற்கு உங்கள் கணணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கு முதலில்

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

2. நிறுவியதும் உங்கள் கணணியின் டாஸ்க்பாரின் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name: உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password: மற்ற கணணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet: இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறீர்களோ அதைத் தேர்வு செய்யவும்.

6. Wi-Fi: இதில் உங்கள் கணணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும்.

7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும். இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீடு, கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...