bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,

கே.முத்தையா
புரட்சிக் கலை - இலக்கியம் என்றவுட னேயே மருட்சிகொள்ளுவோர் பலர் உண்டு.

புரட்சி என்ற சொல் சமுதாய மாறுதலைக் குறிக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கும் ஒரு சமுதாய அமைப்பினை நிராகரித்து விட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் புதியதொரு அமைப்பை உருவாக்குவதே புரட்சி. இத்தகைய சமுதாய மாறுதலுக்கு உதவிய கலை-இலக்கியமே நாம் குறிப்பிடும் புரட்சிக் கலை இலக்கியம்.

சென்ற நூறாண்டு காலத்திய கலை, இலக் கியங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றில் மிகச் சிறந்தவையாக திகழ்பவை யாவை? மக்க ளால் போற்றப்படுபவை யாவை? வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா? அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா? அவைகள் பழைய பாணியிலே நின் றவை. மக்கள் உள்ளத்திலே ஒரு புதிய எழுச் சியை ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, பண்டைய நிலப்பிரபுத்துவ ஜாதிய எண்ணங்களைச் சாடி, சமத்துவ நீதிகளைப் போதித்த இராமலிங்க வள்ள லாருக்கும் கோபாலகிருஷ்ண பாரதிக்கும் அன்று பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், புதிய வர்க்க உறவு முறைகள் தோன்றின. ஏகாதிபத்தியச் சுரண்டலில் நிலப் பிரபுத்துவ சமுதாயமும் நமது சிறு கைத்தொழில் களும் சீரழிந்து சின்னாபின்னமாயின. பழைய அமைப்பு சிதைந்தபோதிலும் மக்களுக்கான புதிய அமைப்புத் தோன்றவில்லை. அக்காலத் தில் நாட்டு விடுதலை இயக்கம் எதுவும் தோன்ற வில்லை.

மக்களிடையே குமுறிக்கொண்டிருந்த எண் ணங்களையும், முன்னேற்ற வேட்கையையும் பிரதிபலித்த ஒரு சில சீர்திருத்தவாதிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். வங்காளத் தில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர், பாஞ்சாலத்தில் லாலாகங்காராம், தெலுங்கு நாட்டிலே வீரேச லிங்கம் பந்துலு போன்றோர் தோன்றி சமூக சீர் திருத்தக் கருத்துக்களைப் போதித்தனர். அதே போல் தமிழ்நாட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமண்ய ஐயர் போன்றோர் பண்டைய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினர். இவர்களுக் கெல்லாம் முன்பே வள்ளலார்,


“ நால்வருண ஆச்சிரமம்

ஆசாரம் முதலாம்,

நவின்றகலைச் சரிதமெலாம்

பிள்ளை விளையாட்டே”

என்று முழங்கினார்.

வட்டிமேல் வட்டிகொள்

மார்க்கத்தில் நின்றீர்

வட்டியை வளர்க்கின்ற,

மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டி வைத்து

ஆள்கின்றீர் வயிற்றுப்

பெட்டியை நிரப்பிக்கொண்டு

ஒட்டி உள்ளி நந்தீர்

பட்டினி கிடப்பாரை

பார்க்கவும் நேரீர்

பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்”

என முழங்கி அன்றைய சமுதாய வாழ்வில் சீர்குலைந்து நின்ற மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் வள்ளலார்.

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக!

அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க!”

என்றார். வரப்போகும் மக்களின் சீர்திருத்த விடுதலை இயக்கத்தின் முதல் குரலாக ஒலித் தார் வள்ளலார்.

தேசிய விடுதலை இயக்கமும் தோன்றியது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந் தெழுந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய இலக் கியங்களெல்லாம், கலைகளெல்லாம் ஆதிக்க வர்க்கமான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத் தான கலை இலக்கியங்களாகும்.

பண்டைய வைதீக எண்ணங்களை சாடி, நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்திற்கு ஊக் கமளித்த தாகூரின் படையல்கள், பக்கிம் சந்தி ரரின் நாவல்கள், இக்பாலின் பாடல்கள், பாரதி யின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாமக் கல் கவிஞரின் பாடல்கள், கல்கியின் எழுத் தோவியங்கள் ஆகியவை ஒரு சில உதாரணங்கள்.

மதங்களையும், சாமிகளையும் போற்றிய கலை-இலக்கியங்களுக்கோ, பண்டைய பிற் போக்கு நியதிகளை நியாயப்படுத்திய புராணங் களுக்கோ இக்காலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்த, விடுதலை இயக்கத்தை பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு மகத் தான ஆதரவு கிடைத்தது. அவைகளே இன்று ஒப்பற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. கார ணமென்ன? இந்த இலக்கியங்களுக்கோர் குறிக் கோள் உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறிக்கோள் அது. ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டின் சகல வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த கலை - இலக்கியங்கள் அவை.

சமுதாய வாழ்விற்கு அப்பாற்பட்ட கலை- இலக்கியமென்பதே கிடையாது. இதுதான் வர லாறு. ஒரு நாட்டின் கலைகளும், இலக்கியங் களும், அவை உண்டான காலத்திலிருந்த சமு தாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கங் களுக்கோ அல்லது அந்த ஆதிக்க வர்க்கங் களை எதிர்த்துப் புரட்சி செய்து புதிய சமுதாய அமைப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுக்கோ பயன்பட்ட கலைகளாகவே, இலக்கி யங்களாகவே இருந்தன.

ஆதிக்கத்திலிருந்த ஒரு வர்க்கம் தனது ஆதிக்கம் நியாயமானது, புனிதமானது. கடவுளின் சிருஷ்டி என்றெல்லாம் பறைசாற்றுகிறது. அதை நியாயப்படுத்திய கலைகளெல்லாம் அந்த வர்க் கத்திற்குப் பயன்பட்ட கலைகள். உதாரணமாக சென்ற 200 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் மேலோங்கியிருந்த கலை - இலக்கியங்கள் யாவை? வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அமைப் பைப் பெற்றிருந்த ஆங்கிலேய நாட்டின் சில நல்ல கலைகளும் இலக்கியங்களும் இங்கு வந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் நம் மக்கள் மீது திணிக்கப்பட்டு மேலா திக்கம் செலுத்திய கலை-இலக்கியங்கள் பெரும் பாலும் ஏகாதிபத்திய அமைப்பையும் காலனி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்திய கலை- இலக்கியங்களாலும். அவர்களது மொழியை நம்மீது திணித்தனர். “மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் வாழ்க” என முழங்க வைத்தனர். நம் நாட் டைச் சூரையாடி அடிமைப்படுத்திய கிளைவ் களையும், மிண்டோ பிரபுக்களையும் வெலிங்டன் பிரபுக்களையும் பற்றிப் புகழ்பாடும் எழுத்துக் களை திணித்தனர். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் புகுந்து மக்களை சுட்டுப்பொசுக்கி ஆதிக்கஞ் செலுத்திய, காலனி ஆதிக்க வெறியர்களை, “மேனாட்டுப் புதிய நாகரிகத்தின் தூதுவர்கள்” என்று துதி பாடிய, கலை-இலக்கியங்களை இங்கு பரப்பினர்.

எனவே, ஆதிக்கம் புரியும் வர்க்கம் தன் ஆட்சியை நியாயப்படுத்த உண்டாக்கிய கலை- இலக்கியங்களெல்லாம் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. பிற்போக்கான இவை களை எதிர்த்த கலை - இலக்கியங்கள் முற் போக்கானவை. புரட்சித்தன்மை வாய்ந்தவை.

இந்திய வரலாற்றின் படிப்பினையும் இதுவே. வால்மீகியின் இராமகாதையும், வியாசரின் பார தமும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் வர்க்க இலக்கியங்களே!
அம்பும் வில்லுமே வாழ்வதற்குப் பயன்பட்ட கருவிகளாகக் கொண்டு, மிருகங்களை மட்டு மல்ல, தங்கள் எதிரிகளையும் நரவேட்டையாடிப் புசித்துக் கூட்டாக காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த “ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தினர்” என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் ஆதி வாசிகளை எதிர்த்து, முறியடித்து, அடிமைகளாக ஆக்கி, மாடுங் கலப்பையுங்கொண்டு, நிலத்தை உழுது, பண்படுத்தி, அதை உடமையாக்கி, புதிய தொரு நாகரிகத்தை உருவாக்கிய, அடிமை - நிலப்பிரபுத்துவ, சமுதாய அமைப்பை உருவாக் கிய மாபெரும் சமுதாயப் புரட்சியைச் சித்தரிக் கிறது வால்மீகியின் இராமகாதை. சமுதாய வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற பண்டைய அமைப்பை ஒழித்துக்கட்டி புதியதொரு அமைப்பை உருவாக்கிய வரலாற்றைக் கூறும் ஒரு இலக்கியம் அது. அது அன்று - இன்றல்ல - மகத்தான ஓர் புரட்சி இலக்கியமாகும்.

அதேபோல், அடிமை நிலப்பிரபுத்துவ சமு தாய அமைப்பிலேயே உடமையின் புனிதத் தன் மையையும் அதில் ஓர் ஒழுங்கு முறையையும், நியதியையும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய இலக்கியமே வியாசரின் பாரதக் கதை. ஒருவருடைய உடமையை மற்றவர் அபகரிக் கக்கூடாது. யார் எந்த வரைமுறையின் அடிப்ப டையில் நிலத்தின் அதிபதியாவது என்ற நியதி களை வகுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இலக்கியமது, வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற, காட்டுமிராண்டித்தனமான போக்குகளை (துரி யோதனன்) களைந்தெறிந்து, நிலவுடைமைக்கு புதிய நியதிகளை வகுத்த இலக்கியமது.

அன்றைய நிலையில் அது சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த துணைபுரிந்தது. மாறி விட்ட இன்றைய சூழ்நிலைக்கு அது பயன்படுமா?

அழியும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் ளேயே புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. கைத் தொழில்கள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் இவ் விதம் உற்பத்தியான பொருட்களை பரிவர்த்தனம் செய்துகொள்ளும் தேவை எழுகின்றது. ஒரு ஊரி லிருந்து நெடுந்தூரத்திலுள்ள மற்றொரு ஊருக்கு தாம் உற்பத்தி செய்த பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தச் சமுதாயக் கடமையை நிறைவேற்றத் தோன்றிய பிரிவினரே வணிகர்கள், இவர்கள் பயமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தம் கடமையை நிறை வேற்ற அவசியம் ஏற்படுகின்றது. ஆனால், அன் றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அதிபதியான மன்னனும், அவனது அரசாங்க அமைப்பும் மேலாதிக்கங்கொண்டவை. எந்த உடமையை யும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பறித்துக் கொள்ளலாம். எது வேண்டுமானாலும் செய்ய லாம். இதுவே நிலப்பிரபுத்துவ நியதி.
நன்றி:தீக்கதிர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...