செவ்வாய், 2 ஜூலை, 2013

'நிதாகத்' ---"நெய்வேலி"

இன்று "நிதாகத் "என்ற வார்த்தை இந்தியாவில் உள்ள பல குடும்பங்களின் வயிற்றில் கலக்கத்தை கொண்டு வந்துள்ளது.
துபாயில் பணம் சம்பாதிக்கும் கனவை சிதறடித்த இந்த நிதாகத் சட்டம்.70000 இந்தியர்களை மூட்டை கட்டி நாடு திரும்ப  வைத்து விட்டது.இந்த ஒற்றைவரி சட்டம் சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் 75 ஆயிரம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

 எண்ணை வளத்தால் செல்வசெழிப்பில் மிதக்கும் சவுதிஅரபியாவுக்கு இப்போது போதாத நேரம். வேளா வேளைக்கு சாப்பாடு... சொகுசான வாழ்க்கை என்று அலைந்த அரேபிய ஷேக்குகள் வாழ்க்கையிலும் ஒரு சின்ன 'ஷேக்'.
வேலையில்லா திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுள்ளது.

எனவே நாட்டு மக்களை காப்பாற்ற அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம்தான் நிதாகத். 
இந்த சட்டப்படி சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்களில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்தால் கண்டிப்பாக 10 சதவீதம் உள்நாட்டு அரபுக்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த சட்டம்.

நாளை முதல் அந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சவுதியில் 17 லட்சத்து 89 ஆயிரம் இந்தியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
சவுதி அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தினால் அங்குள்ள இந்தியர்களில் சுமார் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வேலையை தக்கவைத்து கொள்ள முடியாதவர்கள் விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த கால அவகாசம் நாளை முடிகிறது. அதன் பிறகு முறையான ஒர்க்பெர்மிட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். இவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒரு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலம் அவசர சான்றிதழ் பெற்று சவுதி அரசு மூலம் விசா வாங்கி உடனடியாக நாடு திரும்பலாம். இந்த கெடுபிடிகளால் 75 ஆயிரம் இந்தியர்கள் அவசர சான்றிதழ் கேட்டு இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏராளமான தொழிலாளர் குவிகிறார்கள். இதையடுத்து 4-ந்தேதி வரை இந்திய தூதரகம் விடுமுறை இல்லாமல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. பூகோள வரை படத்தில் இந்தியாவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறு நாடுதான் சவுதி. 5 மாதம் கடும் குளிர், 5 மாதம் கடும் வெயில், 2 மாதம் நம் நாட்டு சீதோஷ்ண நிலையையும் கொண்டுள்ளது.
நேரப்படி அந்த நாட்டுக்கும் நமக்கும் சுமார் 2 1/2 மணி நேரம்தான் வித்தியாசம். சவுதிக்கு சென்றால் சீக்கிரம் லட்சாதிபதிகளாகி விடலாம் என்ற நப்பாசையில் படையெடுக்கிறார்கள். குறிப்பாக கட்டிட வேலை, தச்சு வேலை, கடைகளில் வேலை பார்க்க என்று ஏராளமானோர் செல்கிறார்கள். சவுதிக்கு ஆட்களை அனுப்புவதற்காக ஏராளமான ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அம்மா அல்லது மனைவியின் தாலியை கூட விற்று பணம் கட்டி சவுதி செல்கிறார்கள். அங்கு அரபு ஷேக்குகளிடம் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்கள். எத்தனையோ கனவுகளுடன் விமானத்தில் பறந்து சவுதியில் கால்பதிக்கும் நம்மவர்கள் அங்கு சந்திப்பது பேரதிர்ச்சி.

ஒட்டகம், ஆடு மேய்த்தல், தோட்ட வேலை செய்தல், ரோடுகளை பெருக்குவது, நிறுவனங்களை சுத்தம் செய்வது போன்ற பணிகள்தான் வழங்குகிறார்கள். அவர்களை தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்க வைக்கிறார்கள். வெயிலில் காய்ந்தும், குளிரில் நடுங்கியும் வேறு வழியில்லாமல் அந்த வேலையையும் பார்க்கிறார்கள். மாத சம்பளமும் ரூ. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரைதான். ஊரில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டுமே, குடும்பமே நம்மை நம்பி இருக்கிறதே என்ற வேதனையோடு சுமை தாங்கிகளாக கண்ணுக்கு தெரியாத நாட்டில் உடலை வருத்தி உழைக்கிறார்கள்.
ஊருக்கு திரும்பினால் பாரின்ல இருந்து என்னடா வாங்கி வந்தே? என்று உற்றார் உறவினர் முதல் ஊரார் வரை மொய்த்து விடுகிறார்கள்.
 தனது சோகத்தை சொல்லி அவர்களது அன்பையும், எதிர்பார்ப்பையும் ஒரு நொடியில் தகர்க்க மனமில்லாமல், ஸ்பிரே, சோப்பு, துணிமணிகள் என்று ஏதாவது ஒரு பொருளை கொடுத்து மகிழ்விக்கிறார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பல இளைஞர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம் நாட்டில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் நல்ல ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில்லை. சிறு சிறு ஏஜெண்டுகள் மூலம் சவுதிக்கு சென்றால் போதும் என்ற அவசரத்தில் சென்று விடுகிறார்கள். அங்கு தனி நபர்களிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். வேலையில் சேர்ந்த ஒரு மாதத்தில் ஒர்க்பர்மிட் வழங்க வேண்டும்.
ஆனால் 6 மாதம் வரை அரபு ஷேக்குகள் பர்மிட் கொடுப்பதில்லை. இதனால் போலீஸ் கையில் சிக்குகிறார்கள். அதன் பிறகு ஒளிந்து ஒளிந்து வேலை பார்க்கிறார்கள்.

20 சதவீதம் பேர் இப்படி இருக்கிறார்கள். இன்னொரு 20 சதவீதம் பேர் அரபுக்களின் தொல்லை தாங்காமல், சரியான சம்பளம் கிடைக்காமல் வேறு வேறு இடங்களுக்கு சென்று வேலை பார்க்கிறார்கள். இவர்களிடம் முறையான ஒர்க் பர்மிட் இருக்காது. பெரிய பெரிய நிறுவனங்கள் மூலம் சென்று அங்குள்ள நிறுவனங்களில் வேலைக்கு சேர்பவர்களுக்கும், சட்டப்படி உரிய அனுமதியுடன் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.
பொதுவாக அரேபியர்கள் கடினமான வேலை செய்யமாட்டார்கள். கொத்தனார், தச்சர், முடி திருத்துதல், காய்கறி கடைகளில் வேலை பார்ப்பது, சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை பார்ப்பது போன்ற வேலைக்கு செல்கிறார்கள்.
கொத்தனார்கள் எல்லாம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் ஓய்வின்றி உழைக்கிறார்கள். 
அங்கு வேலை பார்ப்பது போல் நம் நாட்டில் வேலை பார்த்தால் போதும் பல மடங்கு சம்பாதிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் செல்கிறார்கள்.
இனிமேல் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு குறைவுதான்.
நுணுக்கமான வேலை தெரிந்தவர்கள், டாக்டர்கள், கப்பல் என்ஜினீயர்கள் போன்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.
சட்டப்படி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இல்லை.
இதையடுத்து, 90 ஆயிரம்  இந்தியர்கள் விசா நீட்டிப்புக்காக விண்ணப்பித்தனர். அவர்களில் 65 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் சட்டப்பூர்வமாக சவுதியில் தங்கவும், கம்பெனிகளில் வேலை தேடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 25 ஆயிரம் இந்தியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்நிலையில் சவுதி அரசு விதித்துள்ள காலக்கெடு நாளையுடன் முடிவதால் தொடர்ந்து அங்கேயே அவர்கள் தங்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், இதுகுறித்து சவுதி அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி 
                                                                                                                                                                                      - ஜி.சுகுமாறன்
நிறு வனத்தின் 5 சதமானம் பங்கு விற்பனைக்கு மத்திய அமைச்சர வை ஒப்புதல் வழங்கி விட்டது. நெய்வேலி நிறுவன அதிபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் 5 சதமானம் பங்கு விற்பனை மூலம் ரூ. 700 கோடி க்கு மேல் பணம் வரும் என்றார்.
 தற்போது ரூ.466 கோடி மட்டுமே வரும் என்கிறார்.
 மத்தி ஆட்சிபொதுத்துறைகளை சீரழிக்கவே முயற்சிக் கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பி.ஜே.பி. ஆட்சிகாலத்தில் நெய்வேலியின் 10 சதமானம் பங்குகளை விற்கவேண்டும் என முயற்சித்தது. பின் கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் தற்போதைய அரசு நெய்வேலி யின் 10 சதமானம் பங்குகளை விற்க முயற் சித்தது.
ஆனால் இந்த இரண்டு முயற்சி களும் நெய்வேலி தொழிலாளர்களின் ஒன்று பட்ட போராட்டத்தால் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் மத்திய அரசு 5 சதமானம் பங்கு களை விற்க முயற்சிக்கின்றன. இதையும் நெய்வேலி தொழிலாளர்கள் ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைந்து போராடி முறியடிப்பார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை.
மத்திய ஆட்சியாளர்கள் இம் முடிவை தொழிற்சங்கங்களோடு பேசித்தான் எடுத்தது என பொய்யைப் பரப்பி வருகின்றனர்.
அங் குள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், அதி காரிகள் சங்கங்களும் ஒன்றிணைந்து மாவட்ட மக்களை திரட்டி தமிழக தொழிலாளி வர்க்கத்தின் துணையோடு வலுவான போராட்டங்களுக்குச் செல்வது என முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்படின் காலவரை யற்ற வேலை நிறுத்தத்திற்கும் தயாராகிவிட் டனர்.
 அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் மத்திய அரசின் இம்முடிவை வன்மையாக கண்டித்துள்ளன.
நெய்வேலி உருவான வரலாறு :
நெய்வேலி நிறுவனம் உருவாகியிருக்கும் இடம் முன்காலத்தில் சிறுசிறு கிராமங் களைக்கொண்டது.
 இங்கு ஜெம்புலிங்க முத லியார் என்கிற நிலக்கிழாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டபோது கறுப்பாக வித்தி யாசமாக வரும் மண்ணைக் கண்டறிந்த முத லியார் இதை தமிழக அரசுக்கு அனுப்பி வைத் தார்.
 தமிழக அரசு இது பழுப்பு நிலக்கரி என கண்டறிந்தது. அதன் உபயோகங்களையும் ஆய்வு செய்தது. பின் மத்திய அரசும் தமிழக அரசும் பல ஆய்வுகள் செய்து மிக ஆழத்திலிருக்கும் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வது இலாபகரமாக இருக் காது என இத்திட்டத்தை கைவிடப்பட்டது.
அக்காலத்தில் பழுப்பு நிலக்கரியை பயன் படுத்தி மின் உற்பத்தியில் மிகப்பெரிய முன் னேற்றத்தை கண்ட நாடு கிழக்கு ஜெர்மன்.
வேறு சில பணிகளுக்காக கிழக்கு ஜெர்மன் செல்லவேண்டியிருந்த தோழர் பி. ராமமூர்த்தி அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் சிறப்பு அனுமதிபெற்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி கட்டியை கிழக்கு ஜெர்மன் எடுத்து சென்று அங்குள்ள நிபுணர்களுடன் விவாதித் ததில் நிலக்கரியை பயன்படுத்தி மின் உற் பத்தி செய்யலாம் எனவும் இத்திட்டம் இலாபகரமாக இயங்க வாய்ப்புள்ளது எனவும் கண்டறிந்து அதை அன்றைய காங்கிரஸ் அரசை ஏற்கவைத்தார்.
 இத்திட்ட முதலீட்டிற்கு பெரும் நிதி தேவைப்பட்டது. இன்று நான் நீ என்று முந்திக் கொண்டு கபளீகரம் செய்யத் துடிக்கும் முதலாளிகளோ அல்லது நாடுகளோ இத் திட்ட உருவாக்கத்திற்கு நிதி வழங்க மறுத் தனர்.
நேரு அரசு முதலில் அமெரிக்காவை நாடியது.அமெரிக்கா இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்தது.
பின் அன்றைய கம்யூனிஸ்ட்  சோவியத் யூனியனை நாடியது.
சோவியத் யூனியன் முக மலர்ச்சி யுடன் முன் வந்து நிதி உதவி அளித்தது மட்டு மல்ல மின் உற்பத்தி நிலையத்தை தானே முன்வந்து நிர்மாணித்துத் தருவதற்கும் முன் வந்தது. அந்த அடிப்படையில்தான் நெய் வேலி நிறுவனம் உருவானது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1467 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. ஆண்டுதோறும் இலாபம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 600 மெகாவாட் உற்பத்தியில் துவங்கி தற்போது இங்கு மட்டும் 2470 மெகாவாட் உற்பத்தி செய்யும் வல்லமை பெற்றுள்ளது.
 இதுமட்டுமல்ல குஜராத், உத்தரப்பிரதேசம், போன்ற மாநிலங்களில் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி துவங்க நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தூத்துக்குடியில் தமிழக மின் திட்டத்தோடு இணைந்து மின் உற்பத்தி துவங்கவும், சீர்காழி போன்ற இடங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கவும் திட்டங்கள் உள்ளன. மேலும் தென் இந்தியா வின் மின்சார தேவையின் பெரும் பகுதியை இந் நிறுவனம் செய்துவருகிறது.
 வளர்ந்து வருகின்ற இந்நிறுவனத்தின் 5 சதமானம் பங்குகளை விற்க ஏன் மத்திய அரசு துடிக் கிறது. இதன்மூலம் வெறும் ரூ.466/- கோடியே கிடைக்க வாய்ப்புள்ளது.
 பொதுத்துறை பங்கு விற்பனை என்பது இந்திய நாட்டின் இறையான்மையை விற்ப தாக மாறிவிடும். அண்மைக்காலமாக உலக பொருளாதார மீட்சியில் வளர்ந்த/வளரும் நாடுகள் தத்தளிக்கின்ற நிலையில் இந்தியா சற்று தாக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் இங்குள்ள உற்பத்தி முறையில் உள்ள விகிதாச்சாரமே.
தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ், வங்கி கள், மின் உற்பத்தி, நிலக்கரி சுரங்கங்கள் இன் னும் மக்கள் சொத்தாகவே உள்ளதால் இந்திய பொருளாதாரம் இதர நாடுகளைப்போல் பெரும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டது.
 கடந்த பட்ஜெட்டில் ரூ.30,000 கோடிக்கு மேல் பொதுத்துறை பங்குகளை விற்கவேண் டும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இப்படி விற்றுவரும் பணத்தை வைத்து பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையை சரி செய்ய போகிறார்களாம்.பற்றாக்குறை ஏன் வந்தது? கடந்த பட் ஜெட்டில் பற்றாக்குறை ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம். இது தொகையாக பார்த்தால் ரூ.5,20,000 கோடி. இதே பட்ஜெட் டில் கார்ப்பரேட்டு நிறுவனங்களுக்கு பெரும் பண முதலைகளுக்கு வரி இனங்களில், வட்டி சலுகைகளில், வராக்கடன் தள்ளுபடி என, ஏற்றுமதி/ இறக்குமதி சலுகைகள் என பல்வேறு இனங்களில் இவர்களுக்கு ரூ.5,73,000 கோடி வழங்கியுள்ளனர்.
உண் மையிலேயே மத்திய அரசு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு இச்சலுகை வழங்கவில்லை எனில் ரூ.53,000 கோடி உபரி பட்ஜெட்டாக மாறியிருக்கும்.
முதலாளிகளுக்கு மீண்டும் பணக்குவியல் : பங்குவிற்பனையை ஊக்குவிப்பதற்கு இரண்டுகாரணங்கள் உள்ளன.
ஒன்று இலா பத்தில் இயங்கும் பொதுத்துறை பங்குகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்பதும், பங்கு விற்பனை மூலம் வரும் பணம் முத லாளிகளுக்கு சலுகைகள் என்கிற பெயரில் மீண்டும் முதலாளிகள் கைகளுக்கே இப் பணம் சென்று விடுகின்ற ஒரு செப்படி வித்தையும் இதற்குள் மறைந்திருக்கிறது.
எனவே பங்கு விற்பனை எந்த விதத்திலும் நாட்டுக்கு உகந்ததல்ல.
 பொதுத்துறைகள் நாட்டு பொருளா தாரத்தை பாதுகாப்பது மட்டுமல்ல, பேரிடர் கள் ஏற்படும் போது அவைகளிலிருந்து மக்களை பாதுகாக்கவும் இந்நிறுவனங்கள் முன் வருகின்றன என்பது அனுபவ ரீதியான உண்மை. தமிழகத்தை தானே புயல் தாக்கிய போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் தொடர்பு கொள்ள பிஎஸ்என்எல் சேவை மட்டுமே இயங்கியதே தவிர வேறு எந்த தனியார் செல் சேவையும் இயங்கவில்லை.
 காரணம் பிஎஸ்என்எல் செல் சேவையை தவிற மற்ற அனைத்து தனியார் செல் சேவை களும் தங்களது செல் சேவை இயந்திரங்கள் பழுதாகிவிடக்கூடாது என்பதால் அனைத் தையும் நிறுத்திவிட்டன.
 இவர்களுக்கு இலாபம் தான் குறிக்கோள் மக்கள் சேவை அல்ல.
 அண்மையில் உத்தரகாண்டில் ஏற் பட்ட நிலச்சரிவு வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாக்க அங்கு மாட்டிக் கொண்ட மக்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் தனது டிக்கெட் கட்டணத்தை 50 சதவீதமாக குறைத்து சேவை செய்கிறது. மற்ற அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது இலாபம் மட்டுமே குறிக்கோள். மக்கள் உயிர் அல்ல என்பதை சொல்லாமல் சொல்லிவிட் டனர். இப்படி மக்கள் சேவை யில், பேரிடரின் போது மக்களைப் பாதுகாக்க, கிடைக்கும் இலாபம் அனைத்து நாட்டு நலனுக்காக பயன்படுத்தும் பொதுத்துறையை பாதுகாக்க முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையை பேணுவோம்.
 அரசின் கொள்கைகளை முறியடிப்போம். தேச நலனை பாதுகாப்போம்.

கட்டுரையாளர் : சிஐடியு தமிழ் மாநிலக்குழு பொதுச்செயலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எப்படி கையாளப் போகிறோம் ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை உ ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.  சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டு...