bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

அழைப்பது எமனாக இருக்கலாம்




எத்தனையோ முறை எத்தனையோ பேர்கள் சொன்னாலும் எனக்கு அலைபேசியை சார்ஜ் போடும்போது அழைப்புகள் வந்தால் அப்படியே எடுத்து பேசும் கெட்டப் பழக்கம் இருந்து வந்தது.

அதற்கு உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான்.
பின்னே?

மின் இணைப்பை துண்டித்து விட்டு சார்ஜரில் இருந்து தனியே அலைபேசியை எடுத்து பேசி விட்டு மீண்டும் இணைப்பு கொடுக்க சோம்பேறித்தனம் பட்டுத்தானே இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளுவதற்கு பேர் என்ன?

. பெரும்பாலும் இது போன்ற செயல்கள் விபரீதத்தில் தான் முடிகின்றன. ஆனால் கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் நடந்தேறிய ஒரு விபரீதத்தை யும் அதில் மாட்டிக்கொண்ட வாலிபர் படத்தையும் பார்த்ததும் அலைபேசியை சும்மா எடுத்து பேசவே பயமாக இருக்கிறது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை தேடி மைசூர் நகருக்கு வந்துள்ளார். இங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.

இவரது செல்போன் ஒரு அழைப்பு வந்தது.

சார்ஜர் மூலம் செல்போன் பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போனை விடுவிக்காமலேயே ஆன் செய்து அவர் ஹலோ சொல்ல முயன்ற போது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது.

இதில் சீதாராமின்  முகம் சிதைந்தது.

அ வரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு அளிக்கப்பட்ட அவசரச் சிகிச்சையில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம் என தெரியவந்துள்ளது.

இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பதிலாக ஒரு நிமிடம் யோசித்து, சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போன் துண்டித்து விட்டு வந்த அழைப்புக்கு பதில் அளித்திருந்தால் அந்த நபருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இந்த துயரம் அந்த நபருடன் முடிந்துப் போகவும், உலகில் வேறு யாருக்கும் இந்த விபத்து நடைபெறாமல் இருக்க இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நீங்களும் சார்ஜரில் செல்போன் இணைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் இணைப்பை துண்டித்து விட்டு பேசுங்கள்.

அல்லது சோம்பேறித்தனமாக இருந்தால் எடுக்கவே வேண்டாம் சார்ஜ் முடிந்த பின்னர் பேசிக்கொள்ளுங்கள்.

வாகனம் ஓட்டும் போது மட்டுமல்ல சார்ஜ் ஏற்றும் போது கூட அழைப்பது எமனாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.

==========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...