வெள்ளி, 20 மார்ச், 2015

வேத கால இந்தியா
  மக்களவையில்  கேள்வி நேரத்தின் போது, பாஜக, எம்.பி. பிரபாத்சிங் சவுகான் எம்.பி பேசுகையில் மிக அறிவியல் பூர்வமான ", கங்கை நதியை யார் கொண்டு வந்தது?, ஏன் அந்த நதி கொண்டுவரப்பட்டது?, அதில் குளிப்ப தால் என்ன நன்மை?" என்று கேள்வி எழுப்பி சபையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆச்சர்யமடைந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘என்ன இது, இதெல்லாம் ஒரு கேள்வியாÕ என்று கேட்டு சிரித்தார்.
ஆனால் இக்கேள்வியை எதிர்பார்த்தது போல்    மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வார் லால் பதில் அளித்தார் ."கங்கை நதியை யார் கொண்டுவந்தது என்பது வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்.
 பகிரதன் மக்கள் நலனுக்காக கங்கை நதியை கொண்டு வந்தார் என்று புராணத்தில் கூறப்படுகிறது. அவருக்கு கங்கைகரையில் வழிபாடு நடந்து வருகிறது "என்று அவர் வரலாற்றுப் பூர்வமாக பதில் தெரிவித்தார்.
ஆயுள் காப்பீடு அன்னியமயமாக்கள்,ரெயில் துறை தனியார் மயமாக்கல்,விவசாய நிலங்கள் எடுப்பு சட்டம் போன்றவற்றை பற்றிய கேள்விகள் மக்களவையில் கேட்கப்படுவதில்லை.அம்மா புராணம்,காவிப் கதைகளும் தான் இன்றைய மக்களவை செயல்பாடுகள்.
அதிலும் பாஜக மோடி அரசு இந்தியாவை புராண பொற் காலத்துக்கு கொண்டு செல்வதில் முழு முனைப்பாக உள்ளது.
சேது கால்வாயில் ராமர் கட்டிய பாலம் உடைந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப் பட்டு விடும்.ராமர் இலங்கை சென்று சீதாவை காப்பாற்ற வழி இல்லாமல் போய் விடும் என்று சேது சமுத்திரத் திட்டத்தையே ஒழித்து விட்டார்கள்.மாற்றுப்பாதையில் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றிருக்கிறார்கள்.எங்கே கட்ச் கடற்கரை வழியாகவா?
விமானம்,ராக்கெட்களை நாங்கள்தான் திரேதாயுகத்திலேயே கண்டு பிடித்து ஒட்டி,ஒட்டி சலித்து கை விட்டு  விட்டோம் .
சீதாவை தீக்குளித்து ராமர் புனிதமாக்கியது போல் மற்றவர்களையும் தீக்குளிக்க வைத்தால் அவர்களை புனிதமாக்கி விடலாம்.போன்ற காவி அறிவியலை இந்தியாவில் மோடி அரசு தீவிரமாக இறங்கி வருகிறது.

எப்படி அரசு துறைகளை எல்லாம் தனியார,அந்நிய மயமாக்குவதில் தீவிரமாக உள்ளதோ அதே அளவில் காவி மயமாக்களிலும் உள்ளது.

 இந்திய வரலாற்று ஆய்வு மையம், லலித்கலா அகாடமி, நவீன ஓவிய தேசியக் கூடம், கலாச்சார உறவுகளுக்கான இந்திய மையம் போன்றவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மதவெறியர்கள், சட்டம் மரபுகளை மீறி, தலைவர்களாக, உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 குறிப்பாக கல்வித் துறை திட்ட மிட்டு காவிமயமாக்கப்பட்டு வரு கிறது.

தில்லி யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ்வரும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் க்கு நெருக்க மான 200 பேர் விரிவுரையாளர்களாகவும், 7 பேர்கல்லூரி முதல்வர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாகவே ஐஐடியின் பாட்னா, புவனேஸ்வர், ரோபார் ஆகிய கிளைகளுக்கு இயக்குநர்கள் நியமனம் நடைபெற விருக்கிறது.

இதற்கான கூட்டம் வரும் 22ம் தேதிநடைபெறவிருக்கிறது.
இந்த நியமன குழுவில் மும்பை ஐஐடி நிர்வாகிகள் குழுவின் தலை வரும்,
மூத்த அணுசக்தி விஞ்ஞானி அனில் ககோட்கரும் இருக்கிறார்.

 கூட்டத்திற்கு முன்பாக தான் சொல்லும் நபர்களைத்தான் இயக்குநர் களாக நியமிக்க வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிஅனில் ககோட்கரிடம் தெரிவித்ததாக கூறப்படு கிறது.
ஆனால் அமைச்சர் குறிப்பிடும் நபர்களை விதிமுறைகளுக்கு மாறாக நியமனம் செய்ய முடியாது என அனில் ககோட்கர் மறுத் திருக்கிறார். அவர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அனில் ககோட்கரிடம் ஸ்மிருதிஇரானி நிர்ப்பந்தித்ததாக கூறப்படுகிறது.

இதனை ஏற்க மறுத்த அனில் ககோட்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததோடு, ராஜினாமா கடிதத்தையும் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையடுத்து பிரச்சனை பூதாகரமாகி விடக்கூடாது என்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அனில் ககோட்கரை தொலை பேசியில் அழைத்து சமாதானம் செய்திருக்கிறார்.

 ஏற்கனவே இதே போன்ற நெருக்கடியை ஸ்மிருதி இரானி புதுதில்லி ஐஐடி இயக்குநர் ஆர்.ஷெவ்கோங்கருக்கு கொடுத்தார். அதனால் மனமுடைந்த ஷெவ்கோங்கர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து வெளியேறினார். இப்படி இந்திய உயர்கல்வியிலும் காவிமயத்தை புகுத்து வதற்கான அநாகரிகமான வேலையில் பாஜக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது.
 அதுமட்டுமல்ல, வரலாறுகளை திரிப்பதோடு வரலாற்று கோப்புகளையும் அழித்து வருகிறது. ஏற்கனவே  காந்தியை கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய முக்கியமான கோப்புகள் உட்பட 1.5 லட்சம் கோப்புகள் மோடி அரசு பதவியேற்ற பின்னர் அழிக்கப்பட்டிருக்கிறது.
 கடந்த காலங்களில் மறைமுகமாக பாஜக அரசுகளை வழிநடத்தி வந்த ஆர்எஸ்எஸ், தற்போது நேரடியாகவே அரசு நிர்வாகத்தை வழிநடத்த துவங்கியிருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான், மத்திய அமைச்சரவைக்கு வழி காட்டும் குழுவை ஆர்எஸ்எஸ் நியமித்திருக்கிறது. 
ஆக இந்தியாவின் உயிர் நாடியாக இருந்து வரும் மதச்சார்பற்ற பன்முகத்தன்மையை சிதைத்து, இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் வேலையில் மோடி அரசு இறங்கி யிருக்கிறது.
முற்றிலும் மன்னராட்சி,ஜமீன்தார் ஆட்சி முறை வருகிறது.ஏழைகள் ஒரு புறம் அதிகரிக்க கொஞ்ச நஞ்சம் உள்ள விவசாய நிலங்களும் பறிக்க சட்டம் வந்து விட்டது.மறு புறம் அதானி,அம்பானி வரிசையில் பெரும் பணக்காரர்கள் வரிசை ஏ றி வருகிறது.
10 மாதங்களில் 112 முறை வெளிநாடுகள் சுற்றுப்பயணத்தை நம் மத்திய அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர்.இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்?
புகைப்படங்களில் தெளிவாக தெரிவதிலும் - தன பெயர் எங்கும் ,எதிலும் இருக்க விரும்பும்  நிலையில் பிரதமர் மோடி வாய்த்துள்ளார்.இங்கு ஜெயா எப்படியோ அப்படி மத்தியில் மோடி என்றாகி வருகிறது.
 இந்தியா  காவியிருளில் தள்ளிடும் அபாயம் அதிகரித்து வருகிறது.வருகிறது என்ன வந்தே விட்டது.
இனி வேத கால இந்தியாவில்தான் நாம் வாழ வெண்டும்.வேறு வழியில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
இன்று
 உலக சிட்டு குருவிகள்  தினம்.
பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில் வாழுகின்றன. விவசாயம் செழித்து வளர்ந்த காலங்களில், கிராமப்புற வீடுகளில் தானியங்கள் சிதறி கிடக்கும். அவற்றை சிட்டுக்குருவிகள் உட்கொண்டன. இவை வயல்வெளிகளில் விவசாயிகளின் நண்பனாகவும் விளங்கின. மொபைல்போன் டவர் அலை வரிசை அதிர்வு காரணமாக, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுக்கும் சிலர், 'ரேடியோ அலைவரிசை அதிர்வுகள், மிக அதிகமாக இருந்த போதிலும், குருவிகள் அதிகம் உயிர்வாழ்ந்தன' என்கின்றனர்'
இந்தியாவிலுள்ள, 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன; இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க, அவற்றுக்கென ஒரு தினத்தை, சர்வதேச நாடுகள் அறிவித்துள்ளன. 
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எப்படி கையாளப் போகிறோம் ?

விக்கிபீடியா விஞ்ஞானிகளை உ ங்களுக்கு மதன் கவுரியைத் தெரிந்திருக்கலாம். யூ-டியூப் பிரபலம்.  சுமார் 1,574,885 சந்தாதாரர்களைக் கொண்டு...