bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 4 ஜூன், 2015

ஸ்டாலின்

ஒவ்வொரு முறை நெருக்கடியில் சிக்கும்போதும் ரஷ்ய மக்களின் நினைவு ஜோசப் ஸ்டாலினையே நோக்கிச் செல்கிறது என்று அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தாலும், அல்ஜசீரா செய்தி நிறுவனம் கம்யூனிச எதிர்ப்பு செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவது வழக்கம். 
இந்த ஆய்வையும் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்கு பயன்படுத்தும் முயற்சியாகவே அந்த நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், ஆய்வு விபரங்கள் ஸ்டாலின் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதைத்தான் காட்டியது.
குறிப்பாக, விளாடிமிர் புடின் ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரல் பெருகியுள்ளது, வலுவாகியுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.லட்சக்கணக்கான ரஷ்ய மக்களின் ஆதரவு மட்டுமின்றி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்தபொதுப்பணியில் ஈடுபட்ட தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும்கிறித்தவ தேவாலயக் குருமார்கள் சிலர் கூடஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
ஸ்டாலினைப் பற்றி மேற்கத்திய ஊடகங்களில் வெளியான ஏராளமான புரட்டுச் செய்திகளைக் கூட மேற்கோள்காட்டி, அப்படிப்பட்ட நபரையே மக்கள் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்று அல்ஜசீரா செய்தி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளது.
ஆனால், இதேபோன்ற ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பாகவும் வெளியானது. அதிலும் லெனினையும், ஸ்டாலினையும் உயர்த்திப் பிடிப்பது ரஷ்யாவில் அதிகரித்திருக்கிறது என்றுதான் தெரிய வந்தது. 
தற்போது மேலும் அதிகரித்துள்ளது.மக்களிடம் ஸ்டாலினுக்குக் கிடைத்து வரும் ஆதரவு ஆளும் விளாடிமிர் புடின் அரசு மீதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் மே 9 ஆம் தேதியன்று நாஜி ஜெர்மனி மீதான சோவியத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் 70வது ஆண்டு நிறைவு விழாவை அரசு நடத்தியது. 
அப்போது, அரசு ஊடகங்களில் வெற்றியைக் கொண்டாடும் செய்திகள், கட்டுரைகளோடு, அதை சாத்தியமாக்கிய ஸ்டாலின் பற்றியும் ஏராளமான செய்திகள் வெளி யிடப்பட்டன.
கடந்த ஆண்டு உக்ரைனிலிருந்து கிரீமியாவை ரஷ்யாவோடு இணைத்த நிகழ்வை, நாஜிகளுக்கு எதிரான வெற்றியோடு ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டது விளாடிமிர் புடினின் நிர்வாகம். அரசு ஊடகங்கள் ஸ்டாலினோடு, விளாடிமிர் புடினை பொருத்தி பல செய்திகளை வெளியிட்டுக் கொண்டன.
கிரீமியாவில் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் சிலையொன்றையும் அமைத்து பிப்ரவரி மாதத்தில் திறந்தனர். சோவியத் யூனியன் சிதறுண்டபிறகு, ஸ்டாலின் சிலையை வைப்பதற்கு இங்குதான் முதன்முறையாக அனுமதி அளித்துள்ளனர். 
அந்த சிலையில் ஸ்டாலினோடு அமெரிக்க அதிபர் ரூஸ் வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய இருவரும் அமர்ந்திருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிரீமியாவின் யால்டா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு கிரீமிய மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் நடந்த நிகழ்வுகளை யால்டாவில் இந்த மூன்று தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைதான் தீர்மானித்தது. 
அதை நினைவுகூரும் வகையில்தான் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
எங்கும் ஸ்டாலின்
மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டாலினின் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், புடினின் அரசோ மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று கருதி அனுமதி வழங்கியது. கடந்த சில மாதங்களாக, சுவரொட்டிகள், பதாகைகள், பேருந்துகள் மற்றும் ரஷ்யாவின் பல நகரங்களில் ஸ்டாலினின் முகங்கள் பளிச்சென்று தெரிகின்றன. 
ஸ்டாலின் பற்றிப் பேசுவதற்கு இருந்த தயக்கத்தைப் பலர் உதறிவிட்டதை பேருந்துகளில், ஓட்டல்களில், ரயில்களில், அலுவலகங்களில் நடைபெறும் உரையாடல்கள் காட்டுகின்றன.கருத்துக் கணிப்புகளில் ஸ்டாலின் மதிப்பு பெருமளவில் உயர்ந்திருப்பது தெரிய வருகிறது.
ஸ்டாலினைப் பற்றி எப்போதும் எதிர்மறையான ஆய்வுகளை மேற்கொள்ளும் லெவாடா மையத்தின் ஆய்வில் கூட, 2008 ஆம் ஆண்டில்ஸ்டாலினுக்கு 27 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித் தனர் என்றும், தற்போது அது 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினின் தவறுகளை விட, அவரது சாதனைகள் அளப்பரியது என்று ஐந்தில் மூன்று பேர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள்தான், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிப் பேரணியைக் கொண்டாடுவதில் போய் நிறுத்தியிருக்கிறது. 
அதில் ஸ்டாலினின் பங்களிப்பை மறுக்க முடியவில்லை.
                                                                                                                                                                                                  -கணேஷ்
========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...