bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 2 மே, 2018

மோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா?

மோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா? 


சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56"பலூன் தற்போது கவர்சியைத்தவிர வேலைக்காகாது என்று மக்கள் தெரிந்து கொண்டதால் காற்று இறங்கிக்கொண்டு இருக்கிறது.
ஊடகங்கள் தொடர்ந்து மோடி மாயை பலூனை  காற்று ஊதி பெரிதாக்கிக்கொண்டிருந்தாலும் மக்கள் அவநம்பிக்கை போட்ட ஓட்டை வழியே காற்று ஊடங்களின் உழைப்பு வீணாகிக்கொண்டுதான் உள்ளது.
வரும் 2019 தேர்தலுக்கான செமி ஃபைனல் இது என்று பரபரப்பை கூட்டுகிறார்கள். மோடி டெல்லியை விட்டுக் கிளைம்பி விட்டார், பெங்களூர் அடைந்து விட்டார், இதோ விமானத்திலிருந்து இறங்குகிறார் என மோடியின் அசைவுகளை எல்லாம் மாற்றி மாற்றி காண்பிக்கிறார்கள். ஊடகங்கள் பச்சையாக காவி மயமாகி விட்டது. தனிநபர் வழிபாட்டை மக்களுக்குள் செலுத்துவதே அவைகளின் ஊடக தர்மமாய் இருக்கிறது.
 இப்படிபட்ட ஊடகங்கள் தூக்கிப்பிடித்தலில் பாஜகவின்  56 இஞ்ச் வேங்கை களத்தில் இறங்குகிறது.
மோடி என்ன பேசப் போகிறார், மக்களை தன் பேச்சால் எப்படி ஈர்க்கப் போகிறார், தேர்தல் முடிவுகளில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தப் போகிறர் என ஆள் ஆளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளில் மண்டை உடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 
கர்நாடகா முதல்வர் சீதாராமையா பெங்களூரில் மோடி கால் வைப்பதற்கு முன்பே அவருக்கான அஜெண்டாவைத் தீர்மானித்து விட்டார். 

“எங்கள் கர்நாடகா உங்களை வரவேற்கிறது. தேர்தல் பிரச்சாரம் செய்ய தாங்கள் வருவதாக அறிகிறேன் எனச் சொல்லி சில கேள்விகளை அவரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு மோடி தனது பிரச்சாரத்தில் பதில் சொல்வாரென எதிர்பார்ப்பதாக"
 சொல்லி இருக்கிறார்.
1. எல்லோருக்கும் 15 லட்சம் தருவதாக சொல்லி இருந்தீர்கள். 
பிறகு தேர்தலுக்காக சும்மா சொன்னது என்றீர்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள். பிறகு பக்கோடா விற்கச் சொன்னீர்கள். 
கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறோம் என்று நீங்கள் சாமானிய மக்கள் அனைவரையும் துன்புறுத்தினீர்கள். எதையும் பிடிக்கவில்லை. 
இப்போது இங்கு வந்து ‘வளர்ச்சி’ என்னும் லாலிபாப் கொடுக்கப் போகிறீர்களா?
2. கார்ப்பரேட்களுக்கு 2 லட்சத்து 71 ஆயிரம் கோடி தள்ளுபடி வழங்கி இருக்கிறீர்கள். 
விவசாயிகளுக்கு உங்கள் வெறும் பேச்சை மட்டுமே வழங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். 
விவசாயிகளின் பிரச்சினையை முக்கியமாகக் கருதி என்ன செய்து இருக்கிறீர்கள்?
3. ஊழல் கறை படிந்த எடியூரப்பாவோடு கர்நாடகாவில் பொதுக் கூட்டங்களில் நீங்கள் சேர்ந்து கலந்து கொள்ள விரும்பாததாக ஊடகங்களில் முன்பு சொல்லப்பட்டன. 
இப்போது அந்த எடியூரப்பாதான் கர்நாடகா பிஜேபியின் முகமாக இருக்கிறார்.
 பொதுக் கூட்டங்களில் அவர்தான் பிஜேபியின் முதல்வர் வேட்பளர் என அறிவிக்கப் போகிறீர்களா?
4. ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தாருக்கு தேர்தலில் 8 சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 
அவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக என்ன பேசப் போகிறீர்கள்?
5. கர்நாடகாவில் பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, சட்டசபையில் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு தேர்தலில் சீட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 
16 வயது பெண்ணை வல்லுறவு செய்த உங்கள் கட்சி எம்.எல்.ஏவை காப்பாற்ற உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முயற்சிக்கிறார். 
ஜம்மு கஷ்மீரில் 8 வயது பெண்குழந்தையை வல்லுறவு செய்து கொன்றவர்களை உங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். 
இதுதான் நிலைமைகளய் இருக்க கர்நாடாகவில் ‘பெண்களை வல்லுறவு செய்வதை’ அரசியலாக்க வேண்டாம் என உங்கள் கட்சிக்காரார்கள் ஆர்ப்பாட்டமாக விளம்பரம் செய்து கொண்டு இருப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்?

என்பதுதான் சித்தராமையாவின் மோடிக்கான கேள்விகள்.
இது அவரிடம் மட்டுமல்ல இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் உள்ளத்தில் இருக்கும் கேள்விகள்தான்.
இப்படி கேள்விகளை எழுப்பினால் தான் தேசவிரோத இந்தியனாகிவிடுவோம் என்றே வாய் திறக்காமல் இருக்கிறார்கள்.
புதுச்சேரி சபாநாயகரை(காங்கிரஸ்) கண்டிக்கலாம்,தமிழ்நாடு சபாநாயகரை (அடிமைகள்) மதித்துதான் தீர்ப்புகளை வழங்க முடியும் .அதுவும் ஒரே தலைமை நீதிபதியால்.
இங்கு கோவங்கள்தான் கைது செய்யப்படுவார்கள்.எச்சை களும் சேகர்களும் கண்டுகொள்ளப்படாமாட்டார்கள்.அதுதானே ராமராஜ்ஜிய நியதி.
இவைகளுக்கெல்லாம் மோடியின் வாய் ஒன்றும் திறக்கப் போவதில்லை. 
அவரது மனசாட்சி படுத்த படுக்கையாகி விடும்.சம்பந்தமில்லா விடயங்களை உரத்தக்குரலில் மக்கள் எழுப்பும் கேள்விகள் விழாவண்ணம் மோடி பேசுவார்.தன்னை தரக்குறைவாக விமர்சிப்பதாக அழுவார்,நாடகமாடுவார்.மக்கள் கோபத்தை திசை திரும்புவார்.
ஆனால் இந்தக் கேள்விகள் அனைத்தும் #GoBackModi என விடாமல் மோடியை விரட்டப் போகின்றன.
பா.ஜ.க. தனது பொய்ப்பிரச்சாரத்துக்காக உருவாக்கி வைத்திருக்கும் போலியான ட்விட்டர், முகநூல் கணக்குகளின் எண்ணிக்கை பாகிஸ்தான் ஜனத்தொகையைக் காட்டிலும் அதிகும் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது.

அப்படியானால், பாகிஸ்தான் ஜனத்தொகை எவ்வளவு இருக்கும் என்பது தெரிந்தால்தான் அதன் பிரமாண்டம் புரியும். பாகிஸ்தானின் மக்கள்தொகை 20 கோடியே 77 லட்சத்திற்கும் அதிகம். இவ்வளவு போலிக் கணக்குகளை வைத்துக்கொண்டு பா.ஜ.க.வின் ஐ.டி.விங் எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்ப முடியும் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

Modi

பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு வலுப்பெற்றுவரும்போது அதை திசைதிருப்ப போலியான செய்திகளை பரப்புவதே இந்த போலிக்கணக்குகளின் வேலை.

ஆனால், அத்தனை முயற்சிகளையும் முறியடித்து, பா.ஜ.க. மற்றும் மோடியின் பொய்முகத்தை அம்பலப்படுத்துவதில் எதிர்க்கட்சிகளின் உண்மையான கணக்குகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

சமீபகாலமாக பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளையும், பித்தலாட்டங்களையும் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் எதிர்க்கட்சியினரின் கணக்குகள் தீவிரம் காட்டுகின்றன. பா.ஜ.க.வால் உண்மைபோல பதியவைக்கப்பட்ட பொய்களை தோலுரிப்பதில் கவனமாக இருக்கின்றன.

இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்படா பல விஷயங்களை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பதிவாளர்கள் வரிசைப்படுத்துகிறார்கள். அந்த உண்மைகளை பா.ஜ.க.வால் மறுக்கவே முடியாது. சுடும் அந்த உண்மைகளை நாமும் இங்கே வரிசைப்படுத்துவோம்.

1.இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?



2.இந்திய வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?

3.இந்திய வரலாற்றில் பிரதமரின் கல்வித்தகுதியை எப்போதாவது ரகசியமாக மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
4.இந்திய வரலாற்றில் தலைமை நீதிபதியே தனது வழக்கில் நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?

5.இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

6.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

7.இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

8.இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

Yogi

9.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?

10.இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

11.இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?

12.இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?

13.இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?

14.இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கேள்விகள் நல்ல பலனைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சித்தராமய்யாவின் தேர்தல் பிரச்சார உத்திகள் பா.ஜ.க.வை திணறடிக்கின்றன என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...