bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

"வைஃபை மூலம் வெடிகுண்டை கண்டுபிடிக்கலாம்"

வைஃபை இணைப்புகளில் வெளிப்படும் சிக்கனல்களை கொண்டு பள்ளி-கல்லூரி-அலுவலக வளாகங்கள், பேருந்து-ரயில் நிலையங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களுக்கு கொண்டுவரப்படும் பைகளிலுள்ள வெடிகுண்டுகள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களை கண்டறியலாம் என்று ரட்ஜர்ஸ்-நியூ பிரன்ஸ்விக் பல்கலைகழகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் முறைகளுக்கு மனிதர்களின் உதவி தேவைப்படுவதுடன் அதிக பொருட்செலவை ஏற்படுத்துவதாகவும், மக்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 
ஆனால் தாங்கள் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டளவில் எளிமையானதாகவும், செலவை பெருமளவில் குறைப்பதாக இருப்பதாகவும் கூறுகிறார் இந்த கண்டுபிடிப்பை உருவாக்கிய குழுவில் ஒருவரான நியூ பிரன்ஸ்விக் பல்கலைக்கழக பேராசிரியர் யின்யிங் சென்.
வைஃபை அல்லது கம்பியில்லா சிக்கனல்களை பயன்படுத்தி உலோகத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், அலுமினிய கேன்கள், மடிக்கணினிகள், பேட்டரிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றின் வடிவத்தை/ பரிமாணங்களை இனங்கண்டு, அபாயம் விளைவிக்கக்கூடிய பொருட்களை கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், தண்ணீர், அமிலம், ஆல்கஹால் மற்றும் மற்ற திரவ வடிவிலான இரசாயனங்களின் அளவையும் இந்த வைஃபை சிக்கனல்களை கொண்டு கண்டறியலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை நிறுவுவதற்கு இரண்டு முதல் மூன்று ஆன்டெனாக்களை கொண்ட வைஃபை சாதனம் தேவைப்படுமென்றும், சாதனத்திலிருந்து வெளிப்பட்டு பொருட்களின் மீது பட்டு அமைப்புக்கு திரும்ப வரும் அலைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் எதிர்கால திட்டங்களுக்கு தேவையான விண்கலத்தை அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்துள்ளது.
நிலவுக்கு மனிதனை முதலில் அனுப்பியது முதல், பல்வேறு கோள்களின் இயக்கத்தையும், இயல்புகளையும் கண்டறிந்தது வரை மட்டுமல்லாமல், சென்ற வாரம் சூரியனின் வெளியடுக்கான 'கிரோனாவுக்கு' முதல் முறையாக செயற்கைக்கோளை அனுப்பியது வரை விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த பல்வேறு முயற்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும், மற்ற விண்வெளி பயணத்திற்கும் தனது விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு தேவையான விண்கலத்தை "கம்மர்ஷியல் கிரியூ ப்ரோக்ராம்" என்னும் திட்டத்தின் கீழ் தயாரிக்கும் பணியினை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசா வழங்கியிருந்தது.
முழுவதும் தானியங்கி முறையில் இயங்கி வீரர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ள "கிரியூ ட்ராகன்" என்னும் இந்த விண்கலத்தை முழுவதும் தயாரித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவிடம் ஒப்படைத்துள்ளது. 
மேலும், அடுத்த சில மாதங்களுக்கு இந்த வாகனத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி நாசாவின் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி வாகனம் நான்கு கதவுகளை கொண்டுள்ளதாகவும், விண்வெளி வீரர்கள் அவர்களது இருக்கையில் அமர்ந்தவாரே பூமியையும், சந்திரனையும், சூரிய குடும்பத்தையும் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...