bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 18 ஜனவரி, 2019

கோலார் வைர வயல்


‘மன்மத ராசா’ பாடல் ரசித்துப்பார்த்தவர்களுக்கு அந்த அடுக்கடுக்கான மணல் மலை ஆச்சரியத்தை தந்திருக்கலாம்.
அப்பாட்டு எடுக்கபப்ட்ட இடம்தான் சுருக்கமாக கே.ஜி.எஃப் எனப்படும் கைவிடப்பட்ட கோலார் தங்க வயல்.

  கே.ஜி.எஃப்.  என்று கோலார் தங்க வயல் தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட படம்கூட வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது.

இந்த கே.ஜி.எஃபில் வேலைபார்த்தவர்களில் சுமார் 80% தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் மன்னர்கள் காலத்தில் கண்டறியப்பட்டிருந்தாலும், ஆங்கிலேயர் காலத்தில்தான் தங்க மண் தோண்டியெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

பல லட்சம் டன் தங்க மண் எடுக்கப்பட்டு, தாது பிரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள மண்குவியலை இன்றளவிலும் பார்க்கமுடியும். இந்த தங்க மண் மலைகளில்தான் 


சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் இங்கு பணிபுரிந்த தமிழர்கள், தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பிறகு பல்வேறு இடங்களுக்கு வேலைதேடி இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து, கடந்த 15 – 20 ஆண்டுகளாக கே.ஜி.எஃபிற்கு அருகிலுள்ள பெத்தபள்ளி என்ற இடத்தில் மத்திய கனிமவளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வினை கடந்த ஆறு மாதங்களாக தீவிரப் படுத்தியிருக்கிறது கர்நாடக அரசு.

பெத்தபள்ளி கிராம சர்வே எண் 15 – 17ல் விலைமதிப்பற்ற ஹிரினியம், வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஏழுவகை கனிமங்கள் அதிகளவு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது மத்திய, மாநில அரசுகளை ஆச்சர்யப்பட வைத்தது எது தெரியுமா?
இந்தக் கிராம சர்வே எண்களில் உள்ள சுமார் 15 - 20 ஏக்கர் பகுதியில் அதிகளவு கனிமங்கள் இருக்கின்றன.

அதேபோல், அங்குள்ள பாறைப் பகுதியில் சோழர்கால ஆட்சியின் குறியீடும், உரல்போன்ற குழிவான பகுதியும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான்.
 இந்தக் குறியீடுகளின் கீழ்ப்பகுதியில்தான் அதிகளவு ஹிரினியம் வைரம் குவிந்து கிடப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றனர்.

நீண்டகாலமாக தரிசாகக் கிடந்த இந்த நிலத்தை விவசாயி ஒருவர் லே-அவுட் போட முயற்சி செய்தபோது, மத்திய, மாநில கனிமவளத் துறையினர் தடுத்து நிறுத்தி இந்த நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாகக் கூறியபோதுதான் இந்த வைர வயல் பற்றிய செய்திகளே வெளியில் கசியத் தொடங்கின.
தற்போது, இந்தப் பகுதியில் ஏழுவகையான கனிம வளங்கள் பூமிக்கடியில் இருப்பதாக அறிவிப்புப் பலகையும் அரசு சார்பில் நிறுத்தப்பட்டுவிட்டது.

சோழர் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட புதையல் நிலத்தை, நவீன காலமான இன்று இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே வைத்திருக்கிறது அரசு.
ஒருவேளை இதற்கான திட்டப்பணிகளைத் தொடங்கினால், கே.ஜி.எஃப் என்ற கோலார் தங்க வயல் இனி கே.டி.எஃப் என்ற கோலார் வைர வயல் என பெயர் மாற்றப்படலாம்.
ஆனால் அங்கு கோலார் தங்க வயல் தொழிலாள தமிழர்களுக்கு  வேலை கிடைக்குமா?.
 அணில் அகர்வால் பாதுகாப்பு படை
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கனவு கண்டவர்களைக்கூட வீடு புகுந்து கைது செய்யும் அரசு, வாராவாரம் எல்லா நாளிதழ்களிலும் வரும்  ஸ்டெர்லைட் ஆதரவு விளம்பரங்களுக்கு மட்டும் அனுமதிப்பது ஏன்?
இந்த விளம்பரம் கொடுத்தவர்கள் தூதுக்குடியின் முன்னேற்றத்துக்கு என்ன செய்தார்கள்.இந்த சங்கங்கள் யாரால் உருவாக்கப்பட்டது,வரவு-செலவு கணக்கு என்ன?
இந்த விளம்பரம் கொடுக்க எவ்வளவு செலவு?
அந்தத்தொகை வந்த வழி என்ன?அரசு அனுமதித்த விதிகளின்படி பெறப்பட்டதா?
என்று அரசு கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும்.


ஸ்டெர்லைட் நாசகார பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்துக்களை ஆவணப்படம் எடுத்தவரை உடனே நாட்டை விட்டு வெளியேற்றி ஆணையிட்டு அவர் பேட்டி எடுத்தவர்கள் பட்டியல்படி அனைவரையும் மிரட்டிய காவல்துறை இவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.


அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் "ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவோ,எதிராகவோ யாரும் பேசக்கூடாது.மனுக்களை தரக்கூடாது,குறிப்பாக சுவரொட்டி போன்ற விளம்பரங்களையும் செய்யக் கூடாது "என்று ஆணை பிறப்பித்துள்ளார்.


அது ஸ்டெர்லை எதிர்ப்பாளர்களுக்கு மட்டுமேதானா?
ஸ்டெர்லை ஆதரவாளர்கள் கருத்தரங்கு,ஊர்வலம்,விழாக்கள்,விளம்பரங்கள் என்று நடத்துவது காவல்துறை கண்களுக்கு தெரியவில்லையா?

அவைகளை மட்டும் அனுமதிப்பது ஏன்?

அரசே மக்கள் நலனுக்காக ஸ்டெர்லைட்டை செயல்படவிடமாட்டோம் என்கிறபோது அதிகாரிகளும் ,காவல்துறையும் யாருக்கு துணையாக இருக்கவேண்டும்.

மக்களுக்கா?
ஸ்டெர்லைட்டுக்கா? 

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கும்-மக்களுக்கும் எதிராக செயல்படுகிறதா தமிழக காவல்துறை?
இது தமிழக காவல்துறையோ?
அணில் அகர்வால் பாதுகாப்பு படையா? 

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களின் குரல் இதுதான்.
", ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று எடப்பாடி பழனிசசாமி அரசு சொல்லுவதைத்தான்  நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சொல்லி வருகிறோம். 
இப்படி கூறுவது தவறு என்றால் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என கூறி வரும் தமிழக முதலமைச்சர் மீது 107 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரையும்  கைது செய்வார்களாஇந்த காவல்துறையினர்.?

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...